19 Sept 2010

ஆனாலும் ....,



ஆனாலும் போயிருக்கலாம்
என்றே  என்னத் தோனுகிறது .
திட்ட மிட்டபடியே சென்றிருக்கலாம் .
சிறப்பு  நிகழ்ச்சியை ஒலி பரப்பி
தொலைக்காட்சியில் மனது  லயித்து  விட
அமர்ந்து  விடுகிறேன்  .
பச்சைக்கலர்  புடவையும்
கருப்புக்கலர் ரவிக்கையும் அணிந்திருந்த
மனைவி ஒருபக்கமும் ,
பெர்முடாசும் வெள்ளை பனியனுமாய்
இருந்த மகன் மறு  பக்கமுமாய்
நைட்டி  அணிந்திருந்த இளைய மகள்
கழுத்தைக்கட்டியபடிசுற்றிலுமாய்
காலைச்சாப்பாட்டின்இனிய  நேரமும்
தொலைகாட்சி  நிகழ்ச்சிகளும்
எங்களது பேச்சுபரிமாறல்களும்
திட்ட்டமிட்டதை 
மறக்கடிக்க செய்துவிடுகிறதுதான் .
ஆனாலும்     போயிருக்கலாம்
என்றே  இந்தக்கணம் வரை நினைக்க தோனுகிறது .    

                                                                                        
  
           

14 comments:

skamaraj said...

அன்பிற்கினிய மூர்த்தி. ரொம்ப சந்தோசம்மாக்க இருக்கிறது. எங்களை கிண்டலடித்துக்கொண்டே நீயும் வலை மாந்தர்களில் ஒருவனாகிவிட்டாய்.உனது தளராத முயற்சி பெருமிதத்தையும் கொஞ்சம் குற்ற உணர்வையும் தருகிறது. இருந்தாலும் வாழ்த்தி வரவேற்கிறேன். வலம் வா.

க ரா said...

வலையுலகிற்கு வரவேற்கிறேன்... வணக்கம்... கவிதை அருமையா இருக்கு.. இன்னும் நிரைய எழுதுங்க :)

vinthaimanithan said...

ஆனாலும் போயிருக்கலாம்தான்... இப்ப பாருங்க.. மனக்கொரங்கு இங்கிட்டும் அங்கிட்டுமா அல்லாடுது....

நல்லாருக்குங்க கவிதை!

cheena (சீனா) said...

அன்பின் விமலன்

அருமையான கவிதை - நல்ல சிந்தனை. போயிருக்கலாம் என்னும் எண்ணம் இன்னும் தோன்றும். பல நல்ல நிகழ்வுகளை - தற்காலிக மற்ற நிகழ்வுகளினால் - தவற விட்டு விடுகிறோம். என்ன செய்வது ....

நல்வாழ்த்துகள் விமலன்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் விமலன்

மறுமொழிகள் மட்டுறுத்தல் இருக்கும் போது, சொல் சரிபார்ப்பு ( வேர்ட் வெரிஃபிகேஷன் ) தேவையற்ற ஒன்றென நினைக்கிறேன். பரிசீலனை செய்யவும்.

நல்வாழ்த்துகள் விமலன்
நட்புடன் சீனா

நிலாமதி said...

வளைத் தள உலகின் வருகைக்கு என் வாழ்த்துக்கள். மென் மேலும்பல் பதிவுகள் இட்டு மேன்மை பெறுக.
சகோதரி நிலாமதி

நேசமித்ரன் said...

வருக நண்பரே.கவிதை யதார்த்த அழகு
தொடர்க!

vasu balaji said...

ம்ம். நல்லாருக்குங்க. நல்வரவு:)

vasu balaji said...

ithu pinnoottamalla. word verification eduththu vidunga sir. porumaiya pinnoottam podamattanga.:)

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன் சிட்டுக்குருவி என்ற தங்களின் பதிவுலக வலைத்தளம் கண்டேன். கவிதையும் ரசித்தேன். வாழ்த்துக்கள் என்றென்றும்,
திலிப் நாராயணன்.

'பரிவை' சே.குமார் said...

Thiru VIMALAN avarkalukku...
muthalil vazhththukkal.

nalla kavithai.... thodarungal.

Unknown said...

வலையுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ...

ஆனாலும் போயிருக்கலாம் என்று நானும் நிறைய விழாக்களை தவிர்த்துவிட்டு பின் வருந்தியிருக்கிறேன் ,,,
எதார்த்தம் நிரம்பிய கவிதை ... பாராட்டுக்கள் விமலன் ...

மாதவராஜ் said...

இன்றுதான் பர்க்கிறேன். வாழ்த்துக்கள் மூர்த்தி. தொடருங்கள்.

vimalanperali said...

கை பிடித்து நடை பழக்கிய விதமாயும்,
தோள் கொடுத்து தூக்கி நிறுத்திய
தன்மையாயும்,
உங்களது உதவி.
நன்றி காம்ஸ்,நன்றி