20 Sept 2010

" முன்பு போல் இல்லை "

                                                                                                      

முன்புபோலெல்லாம்  இல்லை
 இப்போது,
என்கிற  மனச்சமாதானத்துடன்தான் 
மத்தியான கஞ்சியை
குடித்து  எழுந்திருக்கிறார்
ராசு அண்ணன் ,
யார் காட்டுக்கு   உழவுக்குப்போனாலும்/
அம்மா சாப்பாடு,அம்மா சாப்பாடு  என 
அடிவயிறு  கூச்சலிட,கூச்சலிட
அம்மாவின் பரிதாப  பார்வையையும்
அழுதமுகத்தையும் பார்த்து
பச்சைத்தண்ணீரை  அள்ளிக் குடித்து
வயிறுநிரப்பிய சிறு  பிராயம்
மனதில் நிழலாட ........
அப்படியெல்லாம் இல்லை இப்போது ,
என் மனைவி ஏதாவது ஒரு கூலிவேலை
நான் மண்கீறிய  உழைப்பு
என  நகர்கின்ற நாட்கள்
முன்பு  போல்  பட்டினி  சுமந்துஇல்லை .
என்கிறமனசமதானதுடனும்
தெம்புடனுமாய்
மதியானக் கஞ்சியை
குடித்து எழுந்திருக்கிறஅவர்
தனது வாரிசுகளைப் பற்றி
நினைத்து வருந்தாமல் இல்லை.

                                                     
                                                                             



 

        

No comments: