10 Nov 2010

சுஷ்யத்தினுள்ளே,,,,,,,,,,,,

                              



         அன்று சனிக் கிழமை.சனிக் கிழமை என்றாலே சந்தோஷம் தொற்றிக் கொள்கிறது.
      முதல் நாள் வெள்ளி இரவு அதிகம் கண் விழிக்கலாம்.டீ.வி பார்க்கலாம்,பிடித்த புத்தகங்கள் படிக்கலாம்.இல்லையென்றால் ஆசை மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கலாம்.லேட்டாகத் தூங்கி மறுநாள் லேட்டாக எழுந்து (பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம்.)சாவகாசமாய் அலுவலகம் கிளம்பி, மதியம் வீடு வந்து நேற்றிரவு விட்டுப் போன தூக்கத்தின் மிச்சம்,மீதியை தொடரலாம்.(சாப்பாட்டை ஃபுல் கட்டு கட்டிவிட்டு.)
       இது மாதிரியான செளகரியமான சனிக் கிழமைகளின் ஒரு நாளில் தான் நானும், எனது நண்பனும் வேலை முடிந்து வேளியே வருகிறோம்.
          அவன் வெளியூர், நான் உள்ளூர் .அவனது வீட்டில் மனைவி, மக்கள் ஊரில் இல்லை எனவும் மாலை ஆறு மணிக்கு மேல் பஸ் ஏறினால் போதும் என்றும் கூறினான். சரி என கிளம்பினோம்.
        அப்போதுதான் சாப்பிட்டிருந்ததால் வயிறு தனி கனத்துடன்.கழட்டி கீழே வைப்பதென்பதெல்லாம் முடியாத காரியம்.தூக்கிக் கொண்டுதான் நடந்தோம்.
       கடலை மிட்டாய் தின்பது,சிகரெட் பிடிப்பது என எல்லா படலங்களும் முடிந்தது.
       பஜார் பக்கம் சென்றோம். மாரியம்மன் கோவில், தெப்பக் குளம்,காய்கறி மார்கெட்,தேசபந்து மைதானம் எல்லாம்  சுற்றி விட்டு மணியைப் பார்த்தால் ஆறரை.
       இன்னும் பல மைல் போக வேண்டியிருக்கிறது.என் அருமை நண்பன் சொன்னான். “சுஷ்யம்சாப்பிட வேண்டும் என.
     நான்கைந்து டீக்கடைகளில் அலைந்து கேட்ட போதுஅப்படீன்னா?” என்றார்கள்.
       உருளைக்கிழங்கு சைஸில் உருண்டையாக சுடப் பட்ட அந்த பண்டத்தினுள் வேகவைக்கப்பட்ட பாசிப் பருப்பு,(அல்லது தட்டைப் பயராக இருக்கும்.)அதன் பூர்வீகம் அநேகமாய் கிராமமாகத்தான் இருக்கும் என நாங்கள் கூறியதை கேட்ட ஒருவர் மீதி டீயையும் குடித்து விட்டு சொன்னார். சுஷ்யம் சுடும் இடத்தின் அடையாளத்தை./
    வேகு,வேகென சைக்கிள் மிதித்தோம்.அவர் சொன்ன இடம் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.
      வாயிலிருந்து நீர் ஒழுகவெல்லாம் இல்லை.ஏதோ ஒரு வித ஆவலோடு சென்றோம்.அங்கு சென்று பார்த்ததில் சுஷ்யம் மட்டும் என இல்லை. பணியாரம்,அதிரசம்,முறுக்கு,போளி,சுண்டல்,தட்டாம்பயறு,வடை,குழாய்ப் புட்டு ,,,,,,,ஒரு சின்ன தொழிற்சாலையாய் சுறுசுறுப்புடன் அந்த இடம்.
    இத்தனைகளையும் சுட்டு எடுக்க,விற்று வாங்க,,,,,,நான்கு பேர்  இருந்தார்கள் அங்கேயே.
    வாங்கிய சுஷ்யத்தை அங்கேயே இரண்டு, மூன்று என உள்ளே தள்ளிவிட்டு ஆளுக்கொரு பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
       ஆத்ம திருப்தி என்பது இதுதானோ?அப்புறமென்ன சுஷ்யத்தைப் பற்றி மிகவும் கவலை தோய்ந்த முகங்களுடன் பேசியவாறே வந்தோம். “முன்ன மாதிரி இல்லை சுஷ்யம்.”,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்பது போன்ற வார்த்தைகளை பகிர்ந்தவாறே.
          அவன் வழியில் அவனும்,எனது வழியில் நானும் செவ்வனே பிரயாணித்தோம் அவரவர் வீடுகளுக்கு.
      கையில் கொண்டுவந்திருந்த பார்சல்  பேப்பரை பிரித்துப் பார்த்த போதுதான் பார்த்தேன் அந்த விளம்பரத்தைடீவியில்”./
     ஒருவர் வீட்டிலிருந்து போன் பண்ணுகிறார்.அரை மணி நேரத்தில் பீட்ஸா வருகிறது. அதை வட்டமான சுழல் கத்தி கொண்டு அறுக்கிறார். சாப்பிடுகிறார்.கையை துணியில் துடைத்து விட்டு மற்ற வேலைகளை பார்க்கப் போய்விடுகிறார்.
     அன்று இரவே  பீட்ஸா தயாரிப்பை பற்றி பார்க்க நேர்கிறது ஒரு ஆங்கில சேனலில்.
      அதில் என்னென்னவோ அயிட்டங்களையெல்லாம் சேர்க்கிறார்கள். எல்லாம் புரதம்,முந்திரி,,,,,,,,இதுமாதிரிதான்.
      இது போக ஒருகடல் வாழ் உயிரினத்தின் உடலில் உள்ள ஜெல்லியை மட்டும் எடுத்து அதிலும் ஏதேதோ சேர்த்து அதை கலர்,கலராக்கி பீட்ஸாவில் சேர்க்கிறார்கள்.அது ஒரு ரகம் எனவும் சொல்கிறார்கள் .
     பின்னர் அதை சைஸ் பண்ணி (மந்திரித்து?/,,,,,,,) தட்டில் வைத்து காண்பித்தார்கள்.
      அப்புறம்சாண்ட்விச், அடைக்கப்பட்ட டின் உணவு இத்தியாதி,இத்தியாதி
அதன் செய்முறை  என நிறைய காண்பித்தார்கள்.நிறையச் சொன்னார்கள்.   இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனது உறவினன் சொன்னான்.
   நமது தாய்மார்களின்,பாட்டிகளின்,சகோதரிகளின் கைமணம் கமதயாராகும்
நம்மண்ணின்வாசனைமிகுந்ததயாரிப்பானசுஷ்யம்,அதிரசம்,,,,,,,,,இத்தியாதி,
இத்தியாதிகளை கிலோ மீட்டர் கணக்கில் பயணம் பண்ணி வாங்க வேண்டியுள்ளது.
   ஆனால் பீட்ஸாக்களும் ,குடல் கெடுக்கும் பானங்களும் ,சாண்ட்விட்சுகளும் நமது கைக்கு எட்டும் தூரத்தில்.
     இந்த நாகரீக நூற்றாண்டில் எதற்கு முதலிடம் கொடுக்கப் போகிறோம் நாம்?” எனவும் கேட்கிறான். பதில் சொல்லுங்களேன்.

4 comments:

அழகிய நாட்கள் said...

சுஷியம் என்ற பலகாரத்தை (வெல்லம் கலந்த பாசிப்பருப்பு பூரணம் உள்ளே வைக்கப்பட்ட வடைதான் அது) வெள்ளைக்காரன் சாப்பிட்டு விட்டு சொன்னானாம் " வெளியில் உள்ளது உப்புச்சுவையோடும் உள்ளே இருப்பது இனிப்புச்சுவையோடும் இருக்கிறது. ஆனால் இந்தப்பூரணத்தை எப்படி உள்ளே வைத்தீர்கள்" என்று. அதே போல நாட்பட்ட உளுந்த வடையிலிருந்து வெளி வந்த நூலைப்பார்த்தும் பிரமித்திருக்கிறான் அவன்.

vimalanperali said...

நன்றி தோழர்.பிரமிப்புகளை தொடரவைக்க நம்மாலும் மட்டுமே முடிகிறது.சுஷ்யம் என்பது ஒரு குறியீடு மட்டுமே.,,,,,

R. Gopi said...

சிறுகதை மாதிரி இருக்கு.

\\கிலோ மீட்டர் கணக்கில் பயணம் பண்ணி வாங்க வேண்டியுள்ளது\\

நல்ல விஷயங்களைத் தேடித்தான் போய் வாங்கணும்:))

vimalanperali said...

வணக்கம்.கோபி ராமமூர்த்தி சார்.நன்றி உங்களது கருத்துரைக்கும் வருகைக்கும்.