13 Nov 2010

ஞாயிறுகழிதல்,,,,,,,,,,

ஞாயிறுகளின் காலைத் தூக்கம் மிகவும் இனிமையானதுதான்.நைந்து போன அழுக்குப் பாயில் தலையணை இல்லாமல் கசலையாய் படுத்துக் கிடந்தாலும் ஞாயிற்று கிழமைகளின் காலைத் தூக்கம் ,,,,,,,,,

மலர்கள் செரிந்து நிறைந்து கிடக்கும் பூந்தோட்டத்தினுள்ளும்,கலர் கலரான கண்ணாடிகள்,அழகழகான வேலைப் பாடுகள் நிறைந்த வீட்டினுள் ளும்,தலை நிறைந்த சிந்தனையும்,உடல் நிறைந்த உழைப்பும்,கண் நிறைந்த பார்வையும்,வாய் நிறைந்த பேச்சுமாய்,செவி நிறைந்த கேட்டலும்,புலங்கள் நிறைந்தவிழிப்போடுஇருத்தலுமான உழைப்பாளியின்,தொழிலாளியின்,
சாதனையாளரின் அயர்ந்த தூக்கமாய்,,,,,ஞாயிறுகளின் காலை தூக்கம் மிக இனிமையானதுதான்.

எந்தஅவசரமும்இல்லை.எந்தபதட்டமும் இல்லை.காலை எழுந்தவுடன் காபி, டிபன்,சாப்பாடுஎனமனைவியும்,பிள்ளைகளின்பள்ளி புறப்பாடு,எனது அலுவ லகப் புறப்பாடு என நானும் அற்று வருகிற ஞாயிறுகளும், ஞாயிறுகளின் காலைத் தூக்கமும் மிகவும் இனிமையானதுதான்.

 வழக்கமில்லாத வழக்கமாய் அந்த ஞாயிறு காலை வெகு சீக்கிரமாய் எழுந்து விட்டேன்.அதிகாலைஐந்துமணி.வீடேஅமைதியாய்.மனைவியும்,பிள்ளைகளும் கலைந்து படுத்திருந்தார்கள்.பாயிலும்,போர்வையிலுமாக/

முகம் கழுவி துடைத்து விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன் . ரோட்டோரக் கடையில் டீக் குடித்து விட்டு வீடு போகும் போது எனது மனைவி விழித்திருந்தாள்.

“அதிசயம்,இன்னிக்கு பெய்யிறமழை எல்லாம் ஒங்க தலையிலதான்.”என நீட் டி முறித்தாள். அந்த அதிகாலை நேரத்திலும்,கலைந்திருந்த பொழுதிலும் அவள் அழகாகத் தெரிந்தாள்.

சொன்னபோது வெட்கப்பட்டாள்.முன் வராண்டா,ஹால்,கிச்சன் பெட்ரூம், பாத்ரூமென 550 சதுரஅடி கொண்ட வீட்டில் ஒவ்வொரு அடியாக பார்வை யை நகர்த்துகிறேன்.புதுசாக பார்பது போல.

வராண்டாவிலுள்ளசெருப்புகள்,சைக்கிள்,பெட்ரூமிலுள்ளகட்டில்,பீரோ,தலையணை,சேர்,டேபிள்,படுத்துறங்கும்பிள்ளைகள்,அடுப்படிஎல்லாம்கடந்து கொல்லைப்புற வழியாகப் போனால் பின் பக்கத்தோட்டம்.

பதினைந்து குழி நிலத்தில் ரோட்டடி, வீடு கட்டியது போக மீதி இடம் தோட் டமாக முளைத்துக் கிடந்தது.

வேப்பமரம்,தென்னை மரம்,பன்னீர் மரம்,பூச்செடி,பூமரம்,,,,,,(பின்னே பப்பாளி மரம் இல்லாமலா?) எல்லாம் விரிந்து குளுமையாய் கிடந்தது.

சுத்தமான காற்றும் சுகாதாரமான இடமுமாய் காட்சியளித்த அந்த இடம் எனக்கு ரம்யமாய் காட்சியளித்ததில் ஆச்சரியம் இல்லை.இப்படியான அழகு ததும்பும் ஆச்சரியங்களை காணக் கிடைக்கும் போது நீங்களும்,நானும்,நாம் எல்லோருமே மிகவும் ரசித்து மகிழ்ந்துதான் போகிறோம்.

ரம்யங்களை ரசித்தலும்,வீட்டின் அழகில் கரைந்து  போவதுமான பாக்கியம் எனக்கும்,உங்களுக்கும்,நம்மில்பெரும்பாலானோருக்குவாய்க்கப்பெற்றிருக்கிறதுதான்.

அப்படிவாய்க்கப்பெற்றிருக்கிறநாம்பாக்கியவான்களாய்,புண்ணியம்செய்தவர்க ளாய்  ஆகிப் போனோம்.

வாய்க்கப் பெறாதவர்கள்????????/

6 comments:

 1. இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

  ReplyDelete
 2. மிக பெரும் ரசனை உங்களுக்கு, மிகுந்ந அதிர்ஷ்டசாலி நீங்கள்.

  ReplyDelete
 3. வணக்கம் பிளாஸாபி பிரபாகரன் ஸார்.உங்களது வருகையை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 4. நன்றி தமிழ்உதயம் சார்.உங்களது கருத்துக்கும்,சொல்லலுக்கும்/

  ReplyDelete
 5. இருந்தும் இரசிக்க முடியாதவர்களாகத்தானிருப்பர்...

  ReplyDelete
 6. நன்றி பழமைபேசி சார்.உங்களது கருத்துரைக்கு.

  ReplyDelete