10 Nov 2010

சுபப்படும் தருணங்களாய்,,,,,,,,,,,

                          


        ள்ளி செல்லும் பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கூறும் காரணத்தைதான் அவர்களது மகனும் கூறினான்.
“வயிறு வலிக்குது”
     காலையில் எல்லாம் முடித்துக் கிளம்பும் போதுதான் காரணத்தின் முனையை மெல்ல வெளிக் காண்பித்தான். பிறகு அழுகை,அடம்,பாவமாய் எல்லாமும் எல்லாமுமாய்./
       பள்ளிக்கு லீவு போட காரணம் ஒன்றும் பெரிதாக கிடைக்காத போது அதை கடைசி அஸ்திரமாய் பயன்படுத்துகிறார்கள் பிள்ளைகள்.
     தாய் முகம் பார்த்தபடி இருத்தல், தாய்மடி அன்பு,தாயின் அரவணைப்பு, தாயின் கையினாலேயே மதியச் சாப்பாடு,,,,,,,,,,,,,,இன்னும் இன்னுமான விஷயங்களுக்காகக் கூட “வயிற்று வலி அஸ்திரம் பலமாக பிரயோகிக்கப் பட்டிருக்கலாம்.
     ஒண்ணாம் வகுப்புப் படிக்கும் பையனை என்ன செய்ய?(இந்த விஷயத்தில் எத்தனாம் வகுப்புப் படிக்கும் பையனையும் ஒன்றும் செய்வதற்கில்லை.) “சரி டாக்டர்கிட்ட காட்டீட்டு மதியம் பள்ளிகூடத்துக்கு போயிரணும்.”கோபமும் இல்லை சிரிப்பும் இல்லை சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் பையனின் தகப்பனார்.
     அடேயப்பா அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவனுக்கிருந்த சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே./அவன் போட்டிருந்த ஸ்கூல் யூனிபார்மைத் தாண்டி அவனது மனது வெளியே தெரிந்தது.
கோடி சந்தோசம் அவனது ஜோடிக் கண்களில்.டாக்டரிடம் போயிருக்கிறார்கள்.
மாத்திரை,மருந்து வாங்கியிருக்கிறார்கள்.மதியத்திற்கு மேல் ஸ்கூலுக்கு போகவில்லையாம். டீ.வி பார்த்திருக்கிறான்.சிறிது நேரம்
விளையாண்டிருக்கிறான். சிறிது நேரம் அம்மாவுடன் வம்பு வளர்த்திருக்கிறான்      ஆனந்த விகடன்,குமுதம் ,,,,,,,இதுமாதிரி இதழ்களை எடுத்து படம் பார்த்திருக்கிறான்.
    எல்லாம் முடித்து ஒரு அடி நீள மரஸ்கேலை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் கிளம்பிவிட்டிருக்கிறான்.
வீட்டின் பின்னாலுள்ள சிமெண்ட் மேடையின் ஒருமுனையில் லேசாக் மணல்பரப்பி அரிவாளை தீட்டுவது போல ஸ்கேலை அவ்வளவு அழகாக இழுத்திருக்கிறான்.
    சர்ர்ரக்,சர்ர்ர்ரக்,,,,என்கிற சத்தம் அவன் அம்மாவின் காதை குத்த போய் எட்டிப் பார்த்திருக்கிறாள்.
      சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாளாம்.பிறகுதான் கவனித்திருக்கிறான் பையன்.
வெட்கப்பட்ட சின்ன வானவில்லாக நாணிக்கோணி எழுந்து வீட்டினுள் ஒடிவந்து விட்டானாம். பிள்ளைகள் தூங்கி விட்ட இரவில் சொல்லியிருக்கிறாள் கணவனிடம்.
     இவனை எல்லாம் ஏதாவது தொழிற்கல்வியில் சேர்த்துவிட்டால் நன்றாகப் படிப்பான்.    ஓவியம்,சிற்பம் இதுமாதிரியான படிப்புகளில் இவனது தேர்ச்சி உறுதி.சிறப்பும் பெறுவான் எனவும்,,,,,,,,,,
     மேலும் இதுமாதிரியான  படிப்புகள் பற்றியும்,அதற்கான கல்லூரிகள் பற்றியும்,மேற்கண்ட படிப்பை வேலைவாய்ப்புள்ள படிப்பாக யாரும் கருதுவதில்லை என்பதைப் பற்றியுமாக ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
     அந்நேரம் ஓவியக்கல்லூரி மாணவன் ஒருவன் சொன்னது இவர்களது பேச்சினுடாக வந்து போகிறது.
       “தமிழ்நாட்டிலுள்ள ஓவிய,நுண்கலை கல்லூரியில் இருந்து வருடத்திற்கு     
       100 ஐ எட்டிய எண்ணிக்கையில் மாணவகள் வெளியேறுகிறார்கள்.
       அப்படியென்றால் கடந்த 30 வருடத்தில் எவ்வளவு பேர் வெளியே   
       வந்திருக்கிறார்கள் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
       கடுமையான உழைப்பாளிகள் அவர்கள்.ஆனால் இவர்கள் அனைவருக்கும்
       ஓவியம் விற்றால்தான் பிழைப்புநடக்கும்.
       ஒரு ஓவியகண்காட்சி நடத்துவதென்றால் கல்யாணம் நடத்துவது  
       போல.
       ஆனால் ஓவியம் விற்கும் பணம் கண்காட்சி ஏற்பாடுகளுக்கே   
       சரியாகிவிடும்.பின் கலைஞன் எப்படி பிழைப்பது”?/
என்கிற மெகாசைஸ் கேள்வியைமுன் வைக்கிறார்.முந்தையவர்கள் இப்பொழுது உள்ளவர்கள் மேல் குறைசொல்லவும்,இப்பொழுது உள்ளவர்கள் முந்தையவர்களின் மீது குறைசொல்லவுமாக எடுத்துக் கொண்ட அக்கறையில் ஒரு கால் பகுதியாவது இம்மாதிரியான ஓவிய,நுண்கலைமாணவர்களின்  முன்னேற்றத்தைப் பற்றி யோசித்திருப்பார்களேயானால்,,,,,,,,,,
       அந்த ஓவிய நுண்கலைமாணவனின் ஆதங்கமும்,வயிற்று வலிக்காக லீவுபோட்டு விட்டு வீட்டின் பின்புறம் ஸ்கேல் தீட்டிய மாணவனைப் பற்றி பெற்றோர்கள் பட்ட ஆசையும் நிறைவேறும்,அவர்களது நம்பிக்கையும் சுபப்படும்.     

4 comments:

காமராஜ் said...

ஒரு சிறுகதைக்கான பாதையில் தொடங்குகிற இந்த எழுத்து சித்திரமாய் சுருங்கிவிடுகிறது. உவமானங்கள் எப்போதுமே நல்லா வருது மூர்த்தி.

vimalanperali said...

நன்றி காம்ஸ்,இது பதிவுதானே,கதையென்றால் விளையாடலாம்.

nakkeeran said...

kadhi aanithum sugam village life i miss saithavarkalukum midle classs peoppelkalukum pedeikum enva ennku megavum pedthithullathu NAPUDAN NAKKEERAN

vimalanperali said...

வணக்கம் நக்கீரன் சார்.நலம்தானே,நன்றி உங்களது கருத்துரைக்கும்,வருகைக்கும்.