Showing posts with label பதிவுசமூகம். Show all posts
Showing posts with label பதிவுசமூகம். Show all posts

6 Jun 2011

ப்ளாங்கி,,,,,,,




                 




  


தரையை பெருக்கும்போது அவர்களை பற்றியதான நினைப்பு வருகிறது எனக்கு.
வீட்டின்பக்கவாட்டாகஇருந்தவெட்டவெளியில்நின்ற வேப்பமரம்,
புளியமரம்,பன்னீர்மரம், அசோகமரம் என வகைக்கொன்றாய் இருந்த இடத்தைதோட்டம்என்றோம்.
     மரங்களின் இலைகள் பச்சையாயும், மஞ்சளாயும், பழுத்தும்
காணப்படுகிறது.மண்பிளந்து,துளிர்த்து,வளர்ந்து,கிளைபரப்பி பூத்து
காய்க்கிற சமயங்களில் இப்படியான உதிர்வுகளை அவை
எதிர்பார்த்திருக்குமா தெரியவில்லை.
    மண்ணும் ,கல்லும், இலைகளும்,பூவும் தூசியுமான வெளி எதை சொல்லி அழுத்துகிறதெனவும் பிடிபடவில்லை.
    நாற்பது பவுன் நகை,நாற்பதினாயிரம் ரொக்கம் என்றார்கள்.அந்த காலத்தில்அதுபெரியவிஷயம்தான்..வீட்டின் ஒரே பெண் வாரிசு .
வழி வழியாக கொண்டுவந்த நகைகளை வைத்து பணத்தை எப்படியோ புரட்டிகட்டிக்கொடுத்தார்கள்.
        “கா காசுன்னாலும் கவர்மெண்ட் உத்தியோகம்” என்கிற    

    சொல்லாடல் மயக்கத்திலும்,அழுத்ததிலுமாய் செய்துவித்த திருமணம்    
    இப்போது பஞ்சாயத்தில் நிற்கிறது.
        கூட்டிஅள்ளும்உதிர்ந்தபூக்காளாய்,இளைகளாய் தூசியாய்,கல்லாய்,
    மண்ணாய் அவளது வாழ்க்கை சிதறுண்டு.

       அவள்,அவள்எனச் சொன்னது அவளது தங்கையைப் பற்றி.
   
          சொன்னவளுக்குவயதிருக்கலாம்முப்பதிலிருந்துமுப்பத்தி
   இரண்டிற்குள்ளாக.
        சிவந்த  நிறம்,களையான முகம்,ஆளை அடிக்கிற அழகு என      
   இல்லையென்றாலும்பார்க்கபாந்தமாகத்தெரிந்தாள்.அணிந்திருந்த  
   சேலையும், ஜாக்கெட்டும் மேட்சிங்கற்று குப்கலர்களில் சாதாரணமாக.  
   எண்ணை வழிந்திருந்த முகத்தில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட
   வைத்திருந்தாள்.அரைகுறையாக இருந்த கூந்தலை அவசரகோலத்தில்
   அள்ளிமுடிந்திருந்தாள்.
   பேச்சிற்குதக்கவாறு கைகளின்அசைவும், முகபாவனையும்.
  ”அவளுக்கு ஒரு வழிபண்ணனுமில்ல” என்றவாறு  உள்ளே
   நுழைகிறாள்.
        அவள் எங்களது வங்கியின் வாடிக்கையாளர்.
   கட்டிடத்தின் முகப்பில் நின்ற கம்பிகேட்,அதைதாண்டிய மரக்கதவு,  
அதையும் தாண்டி வந்தால் கண்ணாடி கிளாஸ் போட்ட நீளமான மரக்கவுண்டர்.அது வங்கிகளுக்கேயென கண்டுபிடிக்கப்பட்டது போலும்.
     அதன் பின்னே அமர்ந்திருக்கும் நான்.கிளார்க்,மேலாளர் என நீண்டிருந்த  சின்னதான வரிசை.
    அவள் என்னை நோக்கிதான் வந்தாள்.நான் பொதுவாகவே நான்,எனது என மட்டும் இல்லாமல் பதினைந்து அடி நீள கவுண்டரில் இருக்கும் மூன்று கம்யூட்டர்களிலும் மாறி,மாறி வேலைபார்ப்பவனாக இருப்பதால் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னை நோக்கியே.
      அவளும் அது மாதிரிதான். அவளது எண்ணம்,அதன் மீதான் படர்வு அவதானிப்பு எல்லாம் சுமந்தவளாய் வந்திருக்க வேண்டும்.
     வீடு,வீடு தாண்டி நடை,நடை தாண்டி நீண்டு கிடந்த தெரு,தெருவில் கால் பதித்த மனிதர்கள்,மனிதர்களின் தடம் வாங்கிக்கிடந்த மண்,மண்கீறி ஓரங்களில் முளைத்துக்கிடந்த பச்சைகள் என எல்லாவற்றின் மீதிலும் தனது எண்ணப் படர்வுகளை படரவிட்டவாறும்,போர்த்தி எடுத்தவாறும் வந்திருக்க வேண்டும்.
      துருவேறியகம்பிக்கிராதிகளும்,அழுக்கேறி நின்ற மரக்கதவும்,எனக்கு முன்னாலிருந்த மரக்கவுண்டரும் அதையே முன் மொழிந்தது.
     எத்தனைநாள்நினைவோ,எத்தனை நாள் சுமத்தலோ?அதையெல்லாம் ஒன்று திரட்டி ஒற்றை சொல்லாக இறக்கி பிரயோகித்து விட்டாள்.
     எல்லாம்பூபதிசம்பந்தப்பட்ட பிரச்சனையாய்த்தான் இருந்தது.அவளது தங்கை மாப்பிள்ளைதான் பூபதி.

   
     








         பூபதிநேற்றுகூடபேசினான்.அண்ணேஎங்கஇருக்கீங்க,
ஆஸ்பத்திரியிலயாஎன்றான் செல்போனில்.
“என்னது இது ஆரம்பப்பேச்சே அபசகுணமாக இருக்கிறதே”?என்கிற சலிப்பில் “என்னண்ணே,என்னவிஷயம்”? என்கிறேன்.”ஹார்ட் ரொம்ப வலிக்குதண்ணே.விருதுநகர் பஸ்டாண்டுல இருக்கேன்.இனிமேதான்   ஆஸ்பத்திரிக்கு போகணும்னே”, என்கிறான். முழுதண்ணியில் இருந்தான்.
அவனதுஅளவுக்கு“முழு”என்பது எவ்வளவு எனத் தெரியவில்லை.அது எப்படி என தண்ணியில் கற்று தெளிந்தவர்களிடம்தான் கேட்க வேண்டும்.எண்ணனே,என்ன சொல்றீங்க?என்கிற அதட்டலான  குரலோடு  போனை கட் பண்ண சொல்லிவிட்டு ராமராஜீக்கு போன் பண்ணினால் அவனைப்பற்றிய அவரது பேச்சின் பதிவு வேறுமாதிரியாக இருந்தது.
   “அவனுக்கு நெஞ்சு வலியும் இருக்காது,.........இருக்காது.எவனாவது கடன் குடுத்தவன் தேடி வந்திருப்பான்,தொந்தரவுக்கு ஆத்தமாட்டாம இங்கிட்டுதப்பிச்சுவந்திருப்பான்.தண்ணியை போட்டிருப்பான்.
    ஆபிசுலயிருந்துதப்பிச்சுவந்ததுக்குஏதாவதுசாக்கு வேணுமில்ல.
அதான் ஓங்கிட்ட இப்படி பேசியிருப்பான்” என்றார்.
    “அதுசரிஒனக்குஎதுக்காகபோன் பண்ணுனான்,நெஞ்சுவலின்னா நேரா ஆஸ்பத்திரிக்கு போறத விட்டுட்டு,க்ளாஸ் போர் எம்ப்ளாயி பூராம் இப்படித்தானப்பா இருக்கீங்க.மொதல்ல அவன் பொண்டாட்டிய
விட்டு நாலு மிதி மிதிக்கச் சொல்லணும் அவன அப்பத்தான்
உருப்படுவான் ராஸ்கல்”
“இல்ல அவனப் பத்தி முழுசாஒனக்குத் தெரியாது.வாங்குற சம்பளத்தப்
பூராவும்தண்ணியடிச்சு தொலைச்சிட்டு வெளியிலகடன் கப்புன்னு
அலைஞ்சா?அவன்அலையிறதுமட்டுமில்லாமஅவன் வீட்டுக்காரிய
விட்டு என்னையமாதிரி ஆள்கள்ட்ட கேட்க விடுறது,அது பாவம்
அப்புராணி.வாய்திறந்தா நாலு வார்த்தைக்கு மேல பேசமாட்டேங்குது
அது அவனுக்கு ரொம்ப செளகரியமாப்போச்சு”என்றார்.
    ராமராஜ் பூபதியுடன் வேலைபார்க்கும் கிளார்க்.
பூபதிக்கு போன் பண்ணினேன் மனசு கேட்காமல்.எதிர்முனையில் அவன் போதை கலையாமல் பேசினான்.இப்ப ஒண்ணுமில்லண்ணே,
ஆஸ்பத்திரிக்குப்போயி ஊசிபோட்டுட்டு கிளம்பீட்டு இருக்கேன்.ஒங்கள “ட்ஸ்ட்ரப்” பண்ணுனதுக்கு  சாரிண்ணே என முடித்தான்.
அவன்பேச்சினது முடிவின் தொடர்ச்சியாகஅவள் வந்திருக்க வேண்டும் இப்பொழுது.
நேத்து இங்க வந்திருந்தாராமில்ல?,என பேச்சை மாற்றும் விதமாக கேட்டேன்.ஆமாம் வந்திருந்தாரு,வந்திருந்தாரு,அவரு வந்த வரவப் பாத்தா நாய் கூட என்னானுகேட்டிருக்காது.அப்படி ஒரு மணத்தோடவந்தாரு,
நெற தண்ணியோட ரோட்ல கெடந்தவர எங்க வீட்டுக்காரருதான் தூக்கீட்டு வந்தாரு.வந்த கோவத்துல செருப்புட்டு நாலுபோட்டு படுக்க வச்சாரு,அன்னைக்கு பூராம் புள்ளைங்க சாப்புடல, தூங்கல,வெளையாடல இவரையேவெறிச்சு,வெறிச்சு பாத்துட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சுக,
    நல்ல அழகு வாஞ்ச புள்ள,அப்புராணி புள்ள,சீரழிச்சுட்டாரு,இனியும் அவருகூட வாழனுமா அவன்னு பேசிமுடிக்கப் போறம் இன்னைக்கு.
   
   “வருசமெல்லாம் சோத்துக்கும்,துணிமணிக்கும்,கைசெலவுக்கும்,இவன்ட்ட லோல்பட்டு,புடுங்குப் பெத்து,சீரழிஞ்சு,சின்னாபின்னபட்டு,கருமாயப்பட்டு அலையுறதுக்கு ஒரேயடியா எங்க வீட்ல வந்து இருந்துட்டு போகட்டும்னு பேசலாம்ன்னு இருக்கோம்”.என முடித்தாள்.













17 May 2011

சூன்யம்,,,,,


                                     

        அந்த பஸ்ஸில் சேவுக்கூடை வரவில்லை எனத்தெரிந்ததும் மிகவும் அதிர்ந்துதான் போனார் சேவுக்காரர்.
       வருகிற பஸ்ஸை ஆவலுடன் எதிர்பார்த்து,பஸ் வந்து நின்றவுடன் நிதானித்து தோளில் போட்ட துண்டுடன் பஸ்ஸில் பின் கட்டு அருகே போனார்.
       இறங்குபவர்கள் ஒவ்வொருவரையும் ஏறிட்டார்.தெரிந்தவராய் இருந்தால் சிரித்தார். “என்ன ஊருக்கு போயிட்டு வர்றீங்களா”? என்றார். பெண்கள் இறங்கும்போதுபாந்தமாகபார்வையைவேறுபக்கம் திருப்பிக்கொண்டார்.
கைகுழந்தையுடனும்,மூட்டைமுடிச்சுகளுடனும்இறங்குபவர்களைபார்த்து,
பார்த்து மெல்ல,,,,மெல்ல,,,,என்று உஷார் படுத்தினார்.
       சராசரிஉயரம்தான்.நன்றாகசதைதிரண்டிருந்தார்.சட்டையில்லாத வெற்றுடம்பில் ஒருகுற்றாலத்துண்டு மாத்திரம்.கணுக்காலுக்கு தூக்கிக்கட்டிய மூட்டாத கைலியின் இறுக்கிக்கட்டிய தடம் இடுப்பில் எப்பொழுதும் நிரந்தரமாய்.
       கைலியின் மேல் பிடிப்புக்காக கட்டியிருந்த அரணாக்கயிரில் முள்வாங்கி தொங்கியது. சதா வெற்றிலையில் சிவந்து போன உதடுகளும்,முடி அடர்ந்த வெற்றுடம்புடனும்,  சிரிப்புடனுமாய் அவர்/
       கடந்த போன இருபது நாட்களாகத்தான் இந்த ஏற்பாடு.பக்கத்து டவுனில் மகன் சேவுக்கடை வைத்திருந்தான்.அங்கிருந்துதான் சேவுக்கூடை வரும்.அதை பாக்கெட் போட்டு விற்பார் கடைகளுக்கு.
       வயசாகிப்போன காலத்தில் தனி ஆளாக மாவு பிசைந்து தேய்த்து,சேவுபோட்டு வீட்டு வேலைகளையும் சமையலையும் கவனித்து,,,,, முடியவில்லை.சமயத்தில்“கிடக்கிறதுகழுத”எனபேசாமல் டீக்கடை,டீக்கடையாக  உட்கார்ந்து  விடுவார்.
      இந்த ஐம்பத்திஇரண்டில் முடியவும் இல்லை அவரால்.முழங்கால் வலி,கை வலி,கால் வலி இடுப்பு வலி எல்லாம் சேர்ந்து கொண்டது.கூடவே இந்த வாயு பிரச்சனை.உடலில் எங்காவது உட்கார்ந்து கொண்டு உயிரை வாங்கி விடுகிறது.சைக்கிளில்மிதித்து,சேவுவியாபாரம்பார்த்து ,,,,,கஷ்டமாயிருக்கிறது.
      முடியாத நாட்களில் சேவும் போடாமல்,லயனுக்கும் போகாமல் விட்டு விட்டால் வாடிக்கை கடைகளை வேறு ஒருவர் பிடித்துக் கொள்ளும் அபாயம்.அலைச்சல் இல்லாமல் வீட்டிலேயே வைத்து வெங்காய வியாபாரம் பார்த்து வந்தார்.அதில் ஒன்றும் பிரமாதமான லாபம் இல்லை.விட்டு விட்டார்.
       கடைசிமகள் போனதிலிருந்து இப்படித்தான்.அவள் இருந்த போது கவலை இல்லை.சேவு போடுவதும் வியாபாரத்திற்குப் போவதும் மட்டுமே அவரது வேலையாய் இருந்தது.
      காலையில் எழுந்ததும் இறக்கைகட்டிக்கொள்வார்.எட்டு மணிக்கெல்லாம் சேவு ரெடியாகி விடும்.முப்பது கிலோ கொண்ட கூடையை சைக்கிளில் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்.எந்த எதிர்காற்று காலமானாலும் சரி.
      பழைய கால சைக்கிள் இன்னும் புதுசு போலவே பராமரிக்கிறார். “எதையுமே பராமரிப்பதில்தான் உள்ளது” என்றும் சொல்கிறார்.
      மகளும், மருமகனும் போனபிறகுதான் வீட்டு வேலையின் விஸ்வரூபம் தெரிந்து.முன்பெல்லாம் குளிக்கும்போது தலைதுவட்டிய  துண்டைக்கூட எடுத்து காயப்  போடமாட்டார்.நடு வீட்டில் அவர் சாப்பிட்ட தட்டு கைகழுவிய நீரோடு தளும்பிஅவரின் துணிகளெல்லாம் கொடியில் கசங்கலாய் தொங்கும்.வீட்டில் எது எப்படி இரைந்து கிடந்தாலும் தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் போல போய்விடுவார்.
      சேவுக்காரரின்மருமகன்அங்கிருந்துதான்வேலைக்கு போய்வந்தான்.பக்கத்து டவுனில் காட்டன் மில்லில் வேலை.மருமகன் வீடும் அவ்வளவாக சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.இவருக்கும் வயது போன காலத்தில் பக்கதுணைவேண்டியிருந்தது.கல்யாணம்முடிந்ததும் மகளையும்,மருமகனையும் இங்கேயே இருக்கச்சொல்லி விட்டார்.
மகளின்மேல்கொள்ளைபிரியம் அவருக்கு.கடைசிப்பெண். தன்னைபார்த்துக்-
கொள்கிறவள்.கடைசிவரைவைத்துபராமரிக்கப்போகிறவள்.”என்னம்மா,,,,,,,,,,,,
சொல்லுமா ,சொல்லுமா,,,,,,,,என்றுதான்திரிவார்.அவள் கடிந்து கொண்டாலும் அவர் கோபித்துக் கொண்டதில்லை. பிறக்கப்போவது பெண்குழந்தையானால் அம்மாவின் பெயர்தான் வைக்க வேண்டும் என்றார்.
      மூன்றுபெண்களையும்,இரண்டுபையன்களையும்வளர்த்து ஆளாக்கியபோது வராத எண்ணம் இப்பொழுது வந்திருந்தது அவருக்கு.ஒழுங்காய்த்தான் இருந்தான் மருமகன்.ஏதோ புத்தி பிசகு. வேலை முடிந்து இரவு  வீட்டிற்கு வந்தவன் எதிர்த்த வீட்டுதிண்ணையில் படுத்திருந்தவளை தட்டிக் கூப்பிடிருக்கிறான்.அவள் அதாட்டியான பெண்.எழுந்து அதட்டி சத்தம் போட்டு ஊரைக்கூட்டி விட்டாள்.
     வெயில்காலம்.புழுக்கம்தாளாமல்திண்ணையில்படுத்திருந்தவர்கள் கூடிவிட்டார்கள்.கோ,கொல்லேஎன்கிறசப்தங்களின்கலவை,வசவு,சண்டை
சத்தம்நாரசப்பேச்சு.
       துணிந்தபெண்கள் விளக்குமாரை தூக்கிவிட்டார்கள்.விஷயம் கேட்டு எழுந்து வந்த சேவுக்கடைகாரர் அதிர்ந்து போனார்.அதுவரை மருமகனின் எதிரே சப்தம் போட்டுக்கூட பேசியறியாத அவர் திண்ணையின் எதிரேகிடந்த விறகுக்குச்சியை  எடுத்து மருமகனை விளாசிவிட்டார் விளாசி.
      ஒரு வழியாககூட்டம் சமாதானமாகி கலைந்ததும் உடலெங்கும் கன்னிப்போனரத்தக்காயங்களுடன்இருந்த மருமகனை வீட்ற்குள்கூட்டிப்போய் திட்டிக்கொண்டும் அழுது கொண்டும் இவர்தான் மருந்து போட்டார்.அந்த அடியும்,அவமானமும் சேவுகாரரின் யோசனையும் ,,,,,மறுநாள் காலையிலேயே மகளையும்,மருமகனையும் ஊரைவிட்டு கிளம்ப வைத்தது.
     போனவர்களைப் பார்க்க இவர்தான் போய்விட்டு வந்தார்.பிறந்திருந்த பேரனைபார்க்கவும்தான். “இனிமேலாவது கையக்கால, வச்சிட்டு ஒழுங்கா இருங்க”மருமகனைப்பார்த்துசொல்லிவிட்டுகொண்டுபோயிருந்தபுதுத்துணியை
பேரனுக்கும்,குட்டிச்சாக்கில் இருந்த அரிசியையும்,துணிப்பை நிறைய இருந்த காய்கறி,மளிகைச்சாமான்கள் இவர் போட்டிருந்த சேவு கொஞ்சத்தையும் கொடுத்துவிட்டு வந்தார்.
     இவரிடமிருந்து போனதிலிருந்து மருமகனுக்கு நிரந்தரமான வேலை இல்லை.மில் வேலையும் போய்விட்டது. யாராவது அறிந்தவர் தெரிந்தவர் வைத்து திரும்பவும் மில் வேலையில் சேர்த்து விடலாம் என்றால் மருமகன் ஒரே பிடிவாதமாய் மாட்டேன் என்கிறார்.
     அந்த ஊரிலும் கூட கூலி வேலை கிடைக்கவில்லை.மருமகனின் சொந்த ஊர்.ஒருநாளானால் மரம் வெட்டப்போய்விட்டு உள்ளங்கையெல்லாம் கொப்புளமாகி வேதனைப் பட்டிருக்கிறார். கிடைத்த நாளில் கிடைத்த வேலை கால்வயிறு,அரைவயிறுஎனஅவர்கள் அந்த ஊரில் ஒட்டிக்கிடந்தார்கள்.
      “கொஞ்ச நாள் இங்கன வந்து இருங்க,திரும்பவும் ஒங்க சொந்த ஊருக்கு போயிருவீங்க” என்றிருக்கிறார் சேவுகாரர்.மருமகன் சரி என்றாலும் மகள் ஒரே பிடிவாதமாய் இருந்தாள். “இனி அந்த ஊருக்கு குடிவருவதில்லை,அவ்வளவு அவமானப்பட்டபிறகு.”அவரின் பேச்சிலிருந்த அவரது சாப்பாட்டிற்கான  சுய நலத்தை  அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.     
      வரும்போதேமுடிவுபண்ணிக்கொண்டுதான்வருகிறார்.
“எத்தனைநாளைக்குத்தான்இப்படி,சாப்பாட்டுக்கும், வெளுத்த துணிமணிக்கும் சிரமப்பட? இப்படி நிம்மதிகெட்டு அத்து, அலைந்து பொழைக்கிற பொழைப்புக்கு பேசாம சொத்துப்போகலாம்”
       எந்த பிடிப்பும் இல்லாமல் நிலைகுலைந்து போன தன் வாழ்க்கைஇனிசீர்படுமா?என்கிற கேள்விகள் அவருக்கு ஒரு விடையை தருகிறது.
      அனாதையாகிப்போன சேவுக்காரர் தன்னை பார்த்துக்கொள்வதற்காகக்கூட அல்ல,தனக்கு சோறு,தண்ணி ஆக்கிபோட ஒரு பெண்துணைவேண்டும் என முடிவுஎடுக்கிறார்.
     விஷயம்கேள்விப்பட்டுஓடி வந்துவிட்டார்கள் பிள்ளைகள்.ஆளுக்கொன்றாய் பேசினார்கள்.”இத்தனை வயசுக்கப்புறம் இது தேவையா?என்றான் மகன். “ஐயா வேணாம்யா.சொத்துப்போயிரும்”என்றாள் மூத்த மகள்.கடைசிப்பெண்ணானால் அவரின் காலிலேயே விழுந்து விட்டாள். “அம்மா இருந்த யெடத்துல இன்னொரு பொம்பளையா”பாதங்களை நனைத்து விட்டாள்.
      ஐந்து பிள்ளைகளையும் விட்டு விட்டு அவரது மனைவி மஞ்சள் காமாலையில் இறந்து போனபோது மாமனார்தான் சொன்னார்.”ஏங் மூத்த பொண்ணு யெடத்துல யெளைய பொண்ணு இருக்கட்டும்”என.இவருக்குத்தான் மனது ஐம்பது ஐம்பதாக நின்றது. “இளையவ வந்தா மூத்தவ பிள்ளைகளுக்கு சனிதான்”என்றார்கள் நன்றாகப் பழகிய அக்கம் பக்கத்தவர்கள். “ஒங்க அப்பா காலத்துல இருந்து இந்த ஊர்ல இருக்கீங்க,ஒத்த வீட்டுக்காரங்கன்னாலும் தாயா புள்ளையா பழகீட்டோம்.இனி ஒங்க புள்ளைங்க தெருவுல திரியிரத பாத்துட்டு நின்னா நாங்கெள்ளாம்மனுச சென்மங்களா எப்படி”?
      நனைந்து,நடுநடுங்கி விக்கித்து நின்றவரை தலை துவட்டி ஆறுதல் படுத்தி தோளில் சாய்த்துகொண்டன இந்த வார்த்தைகள். மழையில் நனைந்து,வெயிலில் காய்ந்து பாறையை கீறிய பயிராய் வளர்ந்தார்கள் பிள்ளைகள்.அக்கம்,பக்கத்தவர்களின் உதவிக்கு சேவுக்காரர் தனது உடம்பை செருப்பாய் தைத்துப் போட்டார்.பிள்ளைகள் ஒவ்வொன்றும் தலை எடுத்து நின்றபோது நல்ல இடம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்.இங்கு விரித்திருந்த சிறகுகளை வேறு ஊரில் போய் மடக்கிக்கொண்டார்கள் பிள்ளைகள்.இன்று பெற்றவன் ஓரிடமும், பிள்ளைகள் வேறோரிடமுமாக/.
      பிள்ளைகளின்அழுகைக்காகவும்,வேண்டுதலுக்காகவும்தான்நினைத்து வைத்திருந்த பெண்ணையும் சேர்த்துக்கொள்ளவில்லை.
      நீளஅகலமானவீதி,இரண்டுபக்கமும்சிறியதும்,பெரியதுமாய்அடுக்கி
வைக்கபட்டவீடுகள்.காரைவீடு,ஓட்டுவீடுமொட்டைமாடிஓரடுக்கு,
இரண்டடுக்குஎனமுளைத்திருந்தன.
     தெருவின்திருப்பத்தில்தான்சேவுக்காரர்வீடு.இடுப்பில் கைலியடனும்,
கழுத்தில் துண்டுடனுமான அவருக்கான அடையாளங்களுடன் கையில் ஈயத்தட்டேந்தி நகர்கிறார் வீடு நோக்கி. தெருவின் இரண்டு பக்கமும் குவித்து வைக்கப்பட்டிருந்த சோற்றுகுவியல்.பக்கத்திலிருந்த பெரிய,பெரிய குழிகளில் சாம்பார்,ரசம்,மோர்,அப்பளம் ,கூட்டு,பாயாசம் என ஒவ்வொரு குழிகளிலும் ஆவி பறந்து கொண்டிருந்தது.சேவுக்காரர் தனது கையிலிருந்த தட்டை நீட்டியவாறு சோற்று குவியலை நோக்கி நகர்கிறார்.
     தெருவில் புகையும் பனியுமாய் சுழன்று வந்த காற்று சேவுக்காரர் முகத்தில் மோதி மூச்சை அடைத்தது.பலமாய் எதிர் மூச்சு விட்டவாறு இவர் சோற்றுக்குவியலை நோக்கி நகர,நகர சோற்றுகுவியலும் நகன்று கொண்டேசெல்கிறது. இவரும் வேகவேகமாக அடியெடுத்து வைக்கிறார். சோற்றுக்குவியலும் வேகவேகமாக நகர்கிறது.
     சேவுக்காரருக்கு தோள்களில் இரண்டு பக்கமும் சிறியதாக முளைத்த இறக்கைகள் இரண்டையும் படபடவென தட்டியவாறு  வேக வேகமெடுத்து பறக்கிறார்.மேலே,மேலே,மேலே எனப்பறந்தவர் சோற்றுக்குவியலை நோக்கி தலைகீழாக சர்ரென விரந்து வருகிறார்.இவர் தரை நோக்கி வரும்பொழுது சோற்றுக்குவியல் இரண்டாக பிளந்து விடுகிறது.பிளந்து விட்ட அந்த வெற்று வெளியில் விழுந்தவர் சட்டென தூக்கி எறியப்படுகிறார் ஈயத்தட்டுடன்.
   எழுந்துபார்த்தபொழுதுசோற்றுகுவியலைச்சுற்றி மகன்களும்,மருமள்களுமாய்.
ஆளுக்கொரு மண்வெட்டி கொண்டு சோற்றை வாரி சாக்குகளில் அமுக்குகிறார்கள்.எஞ்சிய சோற்றை சேலையின் முந்தியிலும்,வேஷ்டியிலுமாய் வாரிகட்டிக்கொண்டார்கள்.அங்கேயேவும்கொஞ்சம் சாப்பிட்டார்கள்.
     சந்தோஷமாய் சிரித்து மகிழ்ந்த அவர்கள் சோற்று மூட்டைகளுடனும், அவரவர் கணவன்,மனைவிமார்களுடனும் விரிந்து பறந்த வான் வெளியில் திசைக்கொன்றாய் பறந்து போனார்கள்.
     கனவு கலைந்து எழுந்து தண்ணீர் குடித்த சேவுக்காரரின் கண்களில் யதேச்சையாகப்பட்டது அடுப்பு அருகில் இருந்த சாப்பாட்டுத்தட்டு.
“இனி என்ன தூங்க?”
      எழுந்து டீக்கடைப்பக்கம் போனார்.அதிகாலையில் வந்த முதல் பால் அடுப்படியில்கொதித்துக் கொண்டிருந்தது.மடியை தொட்டுப்பார்த்துக்கொண்டு டீக்கு சொல்லி விட்டு அமர்ந்தவர் இன்றைக்கு வருகிற பஸ்ஸில் சேவுக்கூடையை எதிர்பார்க்கும் மனோநிலைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்./      

3 Apr 2011

அதிகாலைப் பெருவெளி


    

கோழிகள் மேயும் பெருவெளி
எப்பொழுதும் பரபரப்பாகவே/
பச்சைவிரித்தும்
குப்பை குளங்களுடனுமாய்
தெரியும் வெளியில்
முட்கள் முளைத்தும்,
கொடிகள்தளைத்துமாய்.
மண் வாசனையும், ஈரத்தன்மையுமாய்
இருக்கிற வெளியில்எப்போதும்
கொண்டைச்சேவல்களும் ,
கோழிகளும்,குஞ்சுகளுமாய்/
தலையில்சிகப்பு கொண்டை
வைத்த சேவலும்,
குனிந்த தலை நிமிராமல்
மேய்ச்சலில் கவனம் காட்டுகிற  
போந்தாக் கோழியும்
அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம்
ஆஜராகி விடுகிறதுண்டு.
மேய்ச்சலில்கவனம் காட்டுகிற
அவைகள் குஞ்சுகளுடனும்,
குடும்பத்துடனுமாய்
சமயங்களில் என்னை ஏறிட்டும் பார்க்கிறது,
சில நேரம் சிரிக்கிறது,
சில நேரம் பேசுகிறது,
சில நேரம் என்னருகில்
வருவது போல நடிப்புக்காட்டி
நகர்ந்து விடுகிறது.
கிடைத்ததை பொறுக்கித் தின்றும்,
கிடைக்காததை
கிண்டித்தின்று விட்டுமாய்
நகர்ந்து விடுகிற
அந்த உறவுகளைதரிசிக்க
தினசரி அதிகாலையில்
எழுகிறேன் நான். 

2 Apr 2011

வேப்பஞ்ச்சிரிப்பு


                                
     


       




       அரவமற்ற தோட்டத்தில் நீண்டு கிடந்த பிலிம் சுருளில் சிரித்த கதாநாயகி யாரை நோக்கிச் சிரித்தாள், எதற்காக்ச் சிரித்தாள் என்பது இன்னும் பிடிபடாமலேயே/
      புகை போல் போர்த்தியிருந்த மந்தகாச இருளை வெகுநாள் கழித்து அன்றுதான் பார்க்கிறேன். “மனம் சொக்கச்செய்கிற அழகை இத்தனை நாட்களாக பார்க்கத்தவறிப் போனோமே,” நினைக்கவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
     தினசரி இரவு படுக்கையில் மறுநாள் காலை சீக்கிரம் எழ வேண்டும் என நினைப்பதுதான்.ஆனால் முடியாமல் போய்விடுகிறது.நினைத்து முடியாமல் போய் விடுகிற எத்தனையோ வைராக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்றாய் ஆகிப் போகிறது.அது குறித்து வருத்தப் பட நிறைய இல்லாவிட்டாலும் கூட சமயங்களில் வருத்தம் கூட மேலிடுவதுண்டு.
      ஆ............சூப்பர்.முகத்தை கழுவிவிட்டு கால் தூக்கத்துடன் கண்களை இடுக்கிச்சொருகியவாறும்,கொட்டாவிவிட்டவாறுமாய் வீட்டின் நடையிலிருந்து பார்க்கிறேன்.
எனக்கும், நான் நின்றிருந்த நடைக்குமாய் இருந்த உறவு ஈரமிக்காதாய் அந்நேரம்.
     தரையின் சில்லிப்பு காலில் ஏறி உடல் முழுவதுமாய் பரவி சிலிர்க்கச் செய்தது. “ஏய் எப்படியிருக்கிறாய்.நலம்தானே?,நலம் நலமறிய ஆவல்”என இருளும் வெளுப்புமாக தெரிந்த அந்த இடத்தின் காட்சிகள் என்னோடு பேசியவாறு.
    ஆழ்ந்து மூச்சிழுத்தவனாய் எதிர்த்தாற்ப் போல் தெரிந்த வெற்றுவெளியில் நின்றிருந்த முள்மரத்தைப் பார்க்கிறேன். மரங்களின் முனைகளிலும்,
கிளைகளுமாய் தெரிந்த இலைகள் பச்சை பசேலென கறுமைபடர்ந்து/
    வழக்கத்தைவிடஇன்று சீக்கிரமாகவே எழுந்து விட்டேன்.வெயில் காலமாதலால்சரியாகதூங்கமுடிவதில்லை.உடல்ரொம்பவே வியர்க்கிறது.
இரவெல்லாம் உடலின் வியர்வை பிசுபிசுப்பு படுத்திருக்கிற பாயில் ஒட்டிக் கொள்கிறது.தூக்கம் வரமாட்டேன்கிறது.அதன் காரணமாகக் கூட இருக்கலாம் எனது அதிகாலை விழிப்பு.
    வீதி,எதிர் சாரி முள்வெளி என நகண்டபார்வை எங்களது தோட்டத்தில் நின்றபோதுதான் கவனித்தேன் நீண்டு தரையில் கிடந்த பிலிம் சுருளை.
    கடந்த இரண்டு நாட்களாக தோட்டம் பெருக்கி சுத்தபடுத்தபடாமல் வேப்பமர இலைகளும் பன்னீர்மர பூக்களுமாய்.
காற்றுக்கு பரந்து கிடந்த இலைகளும்,பூக்களும் சிலது பழுத்தும்,நிறம் மங்கியும்,கண்விழித்துச் சிரித்தவாறும்/
சிரித்த பூக்களது இலைகளின் அடியில் ஒட்டியிருந்த மண்துகள்கள் வெயிலேற,ஏற உதிர்ந்து போகலாம்.
    இப்படிப்பார்க்கையிலும் நன்றாகத்தான் இருந்தது. வீடு கட்டியது போக மீதமிருந்த இடத்தை சும்மா போடக்கூடாது என்பதற்காக அதை தோட்டம்  என அறிவித்துவிட்டிருந்தோம்  நானும்,எனதுகுடும்பத்தாருமாகச் சேர்ந்து.   ரோஜா,முல்லை,தஞ்சாவூருகதம்பம்என்றெல்லாம் இல்லை.மா,பலா,வாழை,
தென்னை என்றும் கிடையாது.
    காக்கை,குருவிகள்வந்தமரவும்,நிழல்வேண்டியுமாய்மூன்று வேப்பமரங்களும்,
இரண்டு பன்னீர் மரங்களுமாக நின்றன.மரங்கள் வளர்ந்ததும்,பறவைகள் வந்து கூடு கட்டியதா அல்லது அவைகள் கூடு கட்டிய ராசியால் மரங்கள் வளர்ந்ததா தெரியவில்லை.அதனால் என்ன,எதனால் ஏதெது,என்கிற விபரமெல்லாம் தயவுசெய்து வேண்டாமே இப்பொழுது.
மரங்கள் அதன் இலைகள்,கிளைகள்,பசுமை,நிழல் இலையுதிர்வு,பறவைகளின் கூடு,தங்கல்இதுமட்டும்போதுமே இப்பொழுது.மற்றதெல்லாம்வேண்டாமே.
தேவையில்லாத இடத்தில் தேவையெல்லாததையெல்லாம் யாரும் பேசாதீர்கள்,உங்களையும்தான் சார் என்கிறது அந்த குண்டுக்குருவி.
   அது எங்கிருந்து வந்தது.யார் சொல்லி அழைத்து வந்தார்கள்.ஏன் இங்குவந்தது எதுவும் தெரியவில்லை.


     சேட்டைக்கார முத்துதான் கேட்டான். சங்கரபாண்டியலிங்கபுரத்திற்கு
வெளிநாட்டுபறவைகளெல்லாம் வருமாமே?
ஆஸ்திரேலிய பறவைகளெல்லாம் கூட வந்து தங்குமாமே சீசனுக்கு,அது எப்படிஅங்குவந்து தங்கியது,எங்கிருந்தோ வரும் பறவைகளுக்கு அந்த இடம் எப்படித்தெரியும் என அது சம்பந்தமாக நீண்டு விரிகிறது அவனது கேள்வி. என்னால் பதில் சரியாக சொல்ல முடியவில்லை.சமாளித்து சிரித்தேன்.
     நிறைந்த அடைமழைமாதத்தின் ஓரிரவில் பெய்த பலத்த மழையில் அந்த ஊரின்  கண்மாய் கரையில் நின்றிருந்த ஆலமரம் சாய்ந்ததையும்,அதன் கிளைகளில் தங்கியிருந்த  வெளி நாட்டு பறவைகள் இறந்து ரோட்டில் கிடந்ததையும் கூறினேன்.
   மூன்றரையடி உயரமும்,ஒருபாகம் நீளமும் இருந்த பறவைகள் கால் விரித்து வாய் திறந்து,இறக்கைகள் கலைந்து ஒழுங்கற்று இறந்து கிடந்ததை பார்க்க ஊரே திரண்டு வந்திருந்தது.ஒரு மூதாட்டி இதைப் பார்த்து அழுதே விட்டாள்.
   ஊருக்குள் வளைந்து நுழைந்த தார்சாலையின் இடதுபுறமாய் உயர்ந்து நின்ற கண்மாய்க்கரைமேட்டின்மீதுதான் அந்த ஆலமரம் நின்றிருந்தது.பரந்து,விரிந்து பழுத்த ஆலமரம் இளம் பச்சையும்,பழுப்புமாய் இலைகளுடனும்,ஒங்கி உயர்ந்து நீட்டிக் கொண்டிருந்த கிளைகளுடனும், முதிர்ந்துநின்ற பட்டைகளுடனுமாய் உருவகம் தந்தது.
     அந்த உருவகம் போலவும், வெளிநாட்டு பறவைகள் போலவும்தானா நமது நிலை?என கேட்டவனை நோக்கி சிரித்து வைத்தார் அவர்.அந்த சிரித்தலும்,எள்ளலும்,எகத்தாளமும்அவனைமிகவும்புண்படுத்திவிட “எண்ணன்ணே என என்னைப்பார்க்கிறான்.
     அப்படியான தர்ம சங்கடங்கள் வரும் நேரம் என்னைத்தான் பார்ப்பான்.நானும் பேசாமல் இருக்கும்படி சைகை காட்டிவிடுவேன்.அப்படியான் சைகைகளுக்குகட்டுபடுகிற மனோநிலை கொண்டவனின் நினைப்புபறவைகள் பற்றியும் இருந்தது.
ஆஸ்திரேலியபறவைகள்,சங்கரபாண்டியலிங்கபுரம்,அகன்றுவிரிந்த கண்மாய்,
அதன் உயர்ந்த கரைகள்,கரைமேல் நின்ற ஒற்றை ஆலமரம் எல்லாமுமாக எப்படி கேள்விப்பட்டான் எனத்தெரியவில்லை. அவனது உள்ளகிடைக்கையில் அது பற்றியதான நினைவுகளுக்கும் இடம் ஒதுக்கி வைத்திருப்பான் போல்த்தெரிகிறது.
    அப்படியானஎந்தகேள்விப்படுதலுக்கும்,சர்சைகளுக்கும் உட்படாத இந்த குண்டுப்பறவைகள் கொஞ்சமாய் எங்கள் வீட்டு வேப்பமரத்தில் அடைவது கண்டு சந்தோஷம் எனக்கு.
    ஏன் அப்படி என தெரியாவிட்டாலும் கூட அப்படித்தான்.குண்டு,குண்டாய் குட்டையாய் உருட்டிச் செய்தது போல் ஒரே மாதிரியான் உடல் வாகிலும்,கலரிலும்,குட்டிக்குட்டியாய் கத்தித்திரிகிற பறவைகளை கண்டால் உள்ளம் பூரித்து விரிந்து விடுகிறது.அந்த மயக்கத்தில் இருக்கின்ற என்னை சரிபோய் வா பார்த்தது போதும் என அவைகளும் சொன்னது இல்லை.நானும் போய்வருகிறேன்எனஅவைகளிடம்உத்தரவுகேட்டதில்லை.இருக்கும்வரை
பார்ப்பேன்.அவைகள் போய் விட்டால் நானும் வந்து விடுவேன்.அவ்வளவுதான். அப்படியானகுருவிகளைபார்த்துஒன்றுசொல்லத் தோனுகிறது.
“குருவிகளே,குருவிகளே நீங்கள் கொத்தித்தின்ன நெளியும் புளுக்களும்,பறந்து திரியும் வண்டுகளும்,சிதறிக்கிடக்கிற தானியங்களும்,சோற்று பருக்கைகளும் தவிர்த்து வேறில்லை.நீங்கள் குதித்து விளையாடவும்,நீந்தி திரியவுமாய் நீர்நிலை எதுவும் கிடையாது.பரந்த பெருவெளி எதுவும் இல்லை இங்கு.ஆனாலும் எது உங்களை இங்கு கூடு கட்ட,அடைகாக்க,பறந்து திரிய அழைக்கிறது”என.
     அவைகள்கூட்டிலிருந்து வெளியேறி,மரமிறங்கி,தரைதொட்டு இரைதேட இரைஎடுக்க ஆரம்பிக்கிற நேரம் எனது பார்வையும் ரசனையுமாய் போய்விழுவதாய் கணக்கெணக்கு.
அந்த கணக்கை சீர்செய்கிறவனாக அல்லது சீர் செய்கிற முனைப்புடனானவனாக அந்த இடத்தை நோக்கி நகர்கிறேன்.பொழுதின் இருள் பிரிந்து வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருந்தது.
    வேப்பமரத்தடி இலைகளின் உதிர்வுகளுக்கு ஊடாக பிலிம் சுருளில் கிடந்த கதாநாயகியை அள்ளி எடுக்கிறேன் .அவளுக்கு என்னின் அந்த செய்கை சம்மதமா, இல்லையா என தெரியாவிட்டாலும் கூட கீழே கிடப்பவளைகண் கொண்டு பார்த்த பின்பு எப்படி விட்டு,விட்டுப்போவது.
நீண்டு கிடந்த பிலிம் சுருளில் சிரித்த கதாநாயகியின் தலையின் மீது பன்னீர்ப்பூ ஒன்று தெரிந்தது.சற்று தள்ளி வேப்பம்பூ கிடக்கிறது.அருகில் அமர்ந்து பார்க்கிறேன்.   
கீழேகிடந்தஇரண்டடிநீளபிலிமில் சிரிக்கிறகதாநாயகியும்,வேப்பம்பூக்களும்
பன்னீர் பூவுமாய் மாறி,மாறித்தெரிந்தது. 

18 Mar 2011

விலாசம்,,,,,,,,,,,,,


                    
     வர்களதுவீட்டைகண்டுபிடிப்பதுஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.
நாராயணாஸ்டோர்ஸீக்குஎதிர்சந்தில்இருக்கிறதுஎன்றார்கள்.போய் விட்டேன்.
      நீண்ட அகலமான தெரு.ஸ்டோரிலிருந்து பார்த்தால் குறுக்காகப் போன மெயின் ரோட்டைத்தாண்டி நீண்டு தெரிந்தது.
     இரண்டு பக்கமும் முளைத்திருந்த வீடுகள் வரிசையாகவும்,வரிசை தப்பியுமாய் தெரிந்தன.வாசலில் போடப்பட்டிருந்த கோலங்கள் அழிந்தும் வெள்ளை பாவியுமாய் தெரிந்தது அலசலாக.அருகில்போய்தான் பார்க்க வேண்டும்.
    மண் பாதையாக இருந்த தெருக்கள் எல்லாம் இப்போது சிமெண்ட் அல்லது தார் சாலையாக பூத்திருந்தது.    
  சரி தெருவிற்குள் போய் தேடிப்பார்க்கலாம்.தெருமுக்கில் வலது பக்கம் தச்சுப் பட்டறையும்,மரஅறுவை மில்லும் இருந்தது.நான்கைந்து பேர் எந்த நேரமும் தேவைகேற்ப வேலைபார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.இரண்டு பக்கமும் சட்டமடித்து எங்கோ ஒரு ஓரமாய் மோட்டார் பொருத்தப்பட்டிருந்த அறுவை மிஷினின் ஒரு முனையில் மரசக்கையை கொடுக்க அது நகன்று,நகன்று அறுபட்டு எதிர் முனையில் இருப்பவரின் கைகளில் செதுக்கப்பட்ட வழவழப்பான கட்டையாக உருமாறி வருகிறது.
     அடைக்கப்பட்ட சதுரமான கட்டிடத்தில் முன் வாசல் மட்டும் தப்பை வைத்துகட்டப்பட்டிருந்தது.பக்கவாட்டில்தகரம்வைத்துமூடப்பட்டிருந்த வெளியில்தான் சொர,சொரப்பு வழவழப்பாய் மாறிய நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.
      வீட்டுக் கொல்லை வாசலுக்கு வலைக்கதவு அடிக்க வாங்கிய மரச்சக்கையை இங்குதான் செதுக்கக் கொண்டு போயிருந்தேன். செதுக்கவும் நன்றாக இருந்தது.
சொர,சொரப்பெல்லாம்போய்வழவழப்பாய்.மஞ்சள்பூசிக்குளித்தபுதுப்பெண்ணின்
பொலிவு போல/
     கண்களும்,உதடும் உதிர்க்கும் வார்த்தைகள் மனதிற்குள்ளாய் நுழைய புதுப் பெண்ணின் பொலிவு  நிறைய இடங்களில் அவசியப்படுகிற மாதிரி அல்லது அது மனதை கிறக்கி விடுகிற மாதிரி கட்டை வழவழப்பில் நான் லயித்துவிட பேசாமல் அவர்கள் கேட்ட கூலியை நான் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன்.
     ஸ்டோரிலிருந்து ரோட்டை கடந்த நேரம் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கட்டிய பெண் என்னை திரும்பித் திரும்பி பார்த்தவாறு செல்கிறாள்.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவளின் பார்டருக்குள் சிரித்த பூக்களும்,வடிவங்களும் என்னைப் பார்த்து கண் சிமிட்டின.
    அவளது தோளில் தொங்கியகைப்பை அவளது அலங்காரம்,தலையில் சிரித்த மல்லிகைப்பூ,சேலையில் பொதிந்திருந்த பொடி,பொடி பூக்கள் ,மெதுவான வேகத்தில் விரைந்த அவர்களது இரு சக்கர வாகனம் எல்லாமும் என்னை சற்று நிதானித்து சாலையை கடக்கச் செய்தது.
    கடந்த வேகமும்,அவர்களின் இருசக்கர வாகன அமர்வும் தரையில்பட்டு அவர்களின்நிழலை இழுத்துச் சென்றது. இழுபட்ட நிழல் பள்ளம்,மேடு,கல்,மண்,
கழிவு என அனைத்தின் மீதும் பட்டுப்பட்டு பயணிக்கிறதாய்,,,,,,,,./
யாரவது சொந்தமாய் இருக்க வேண்டும் அல்லது தோழமை பூத்திருந்த நட்பின் மூலமாய் கிடைத்திருந்த பழக்கமாய் இருக்க வேண்டும்.அதுதான் அப்படி திரும்பித்திரும்பிப் பார்த்துச் செல்கிறாளோ,என்னவோ...........?
சொந்தங்களின்முகம்மறந்துரொம்பநாட்களாகிப் போனது.அலுவலகம்,யூனியன்,
ஆர்வம் காரணமாக அனைத்துக் கொண்ட பழக்கங்கள் எல்லாம் செக்கு மாடாய் சுழல வைக்க சொந்தம்,பந்தம்,கோவில்,குளம்,சுற்றம் மறந்து ரொம்ப நாட்களாகிப் போனது.
    லீவு கிடைக்கிற நாட்களில் “அக்காடா”என ஓய்வெடுக்கவும் முரண்களை யோசிக்கவுமே நேரம் சரியாகிப் போகிறது.பின் எங்கிட்டு சொந்தம்,பந்தம் அவர்களதுமுகங்கள்,அவர்களோடானஉறவு...............?வெளியில் சொல்லமுடியாத கனவாய் ஆகிப் போகிற இம்மாதிரி கொடுமைகளையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது என தெரியவில்லை.அதிலும் என் போன்ற கீழ் மட்ட ஊழியனுக்கு இந்த சமூகம் தருகிற மரியாதை இருக்கிறதே,அடேயப்பா அதை......................ம் போய்தான் சரிபண்ணிக் கொள்ள வேண்டும்.
     அந்நேரத்திற்கு கூட்டம் அதிகமில்லாத சாலையில்  சென்றவர்களின்,
விரைந்தவர்களின்எண்ணங்களும்,செயல்களும்அப்படித்தானே இருந்திருக்கும்?
     எண்ணங்களை ஒட்டிய செயல் பாடுகளை தடுக்க யாரால் முடியும்?என எனது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வர அதை அசை போட்டானாய் தெருவிற்குள் செல்கிறேன்.
காலையில் போட்டிருந்த கோலத்தின் அழிந்து போன அடையாளங்கள் தெருவின் இருபக்க வீடுகளின் முன்பும் தெரிந்தது.
ரோடு,ரோடு தாண்டி நடை,நடை தாண்டி வீட்டின் உள்புறம்..,,..,,என விரிந்த வீடுகளின்வரைவில்ஒன்றுக்கொன்றுமாறுபட்டும் வேறுபட்டும்,வித்தியாசித்துத்
தெரிந்தது.
     இத்தனைக்கும் மத்தியில்தான் அவர்களது வீட்டை பார்க்க வேண்டும்பழைய காவல்நிலையத்தைஒட்டியதெருவில்தான்அவர்களதுவீடு எனச்சொன்னார்கள்.இப்போது வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்டார்கள்.காவல்நிலையம் இருந்ததற்கான அறிகுறிகளே அங்கு இல்லை.கட்டிடமே உருமாறிப் போயிருந்தது.
நல்லதுதான் எத்தனை,எத்தனை மனிதர்களை எப்படியெல்லாம் சந்தேகப்பட்டு,எப்படியெல்லாம் வழக்குப் போட்டு விசாரித்த  இடமாக இது இருந்திருக்கிறது.எத்தனை பேரின் வாழ்கையின் திசையை திருப்பிப் போட்டதோ இந்த இடம் என தெரியாத முடிவுடன் நான் நின்று கொண்டு.
     அந்த இடத்தின் எஞ்சிய அடையாளமாய் தெருமுனையில் இருந்த அடி குழாய்இன்னும்அப்படியே தண்ணீரோடு.
     ஆண்களும்,பெண்களும்,பெரியவர்களும் எப்போதும் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.சண்டை,சச்சரவு இல்லாமல்.எந்த வேலையானாலும் சரி,எந்த மழை குளிரானாலும் சரி எப்போதும் அந்தக்குழாய் அடி பட்டுக்கொண்டேயிருக்கும் போல.
பூமியிலிருந்து தண்ணீர் வருகிறதா,அல்லது கைபிடித்து தண்ணீர் அடிக்கிறவர்களின்ராசியா?தெரியவில்லை.அந்த தெருக்காரர்களுக்கும்,அந்த அடி  குழாய்க்கும் அப்படி ஒரு உறவு பூத்திருந்தது.




        இந்த அழகர்நகர் தோன்றியகாலத்தில்போட்டதுஎனசொல்லியிருந்தார்
அந்த வாழைப்பழக்கடைகாரர்.
   முப்பதிலிருந்து முப்பத்தியிரண்டு இருக்கலாம் வயது.நாற்பத்தியிரண்டு வயதுக்காரனான நான் அவரை பற்றி குறிப்பிடுகையில் அவர்,இவர் என்றுதான் குறிப்பிடுகிறேன்.
    ஏன் அப்படி என கேட்டால் தெரியவில்லை என சொல்வதற்கில்லை.அப்படியே பழகிப் போனேன். என்னை விட குறைந்த வயதினர் ,குறைந்த வருவாய் பிரிவினர் குறைந்த வேலை பார்ப்பவர் அனைவரிடமும் எந்த பேதமுமில்லாமலும், மரியாதையுடனும் பேசவும்,பழகவும் கற்றுக் கொண்டதன் விளைவுதான் இந்த மனது.  
     நான் வேலை பார்க்கிற வங்கிக்கு வருகிற வாடிக்கையாளர்களிடமும்,சக உழியர்களிடமும் எப்போதும் மரியாதையாகவே நடந்து கொள்கிற பழக்கம் என்னிடம் எப்பொழுதும் உண்டு.வாங்கம்மா,வாங்கசார்,வாங்க மேடம்,வாங்க தம்பி.வாங்கஅண்ணே,,,,,,,,என்றுதான்சொல்லி பழகியிருந்தேன்.
     முள்ளு, முள்ளான தாடி முகத்தில் குத்திக் கொண்டு நிற்க பார்வை சரியாக
தெரியாமல் வரும் கந்தவேலிடமும்,நகைக்கடன் கேட்டு வருபவரிடம், நகை எத்தனை உருப்படி எனக்கேட்டால் தான் மேய்க்கும் ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் பாண்டி வேலனிடமும் தராதரம் பார்க்காத பழக்கம்தான் என்னை அப்படியெல்லாம் சொல்ல வைத்திருக்கிறது.
   ஒரே ஊரிலேயே பிறந்து,ஒரே ஊரிலேயே வளர்ந்து அதே ஊரிலேயே வாழ்ந்து முடித்து விடுகிற பாக்கியம்தான் பெரும்பாலானோரைப் போலவே எனக்கும் வாய்த்திருக்கிறது என்றார் அந்த வாழைப்பழகடைக்காரர்.
கடையின் பேர் என்னவோ வாழைப்பழகடைதான்.ஆனால் அங்கு சாந்திப் பாக்கு,பீடி,சிகரெட் வெற்றிலை,பாக்கு,பான்பராக் என எல்லாம் இருந்தது.அவர் சொன்ன அடையாளத்துடனான வீட்டிற்கு செல்ல இன்னும் கொஞ்சம் தூரமிருக்கிறது.
நேராகப்போய் ஒரு தெரு திரும்ப வேண்டுமாம் கூறினார்கள்.நான் போய்க் கொண்டிருந்த தெருவின் முனையில்சாக்கடை கழிவை வாரி ஓரத்தில் குவித்திருந்தார்கள்.
சின்னதான அந்த குவியலின் உள்ளேயிருந்து அழுக்கும்,சாக்கடை கரையுமாக குச்சி ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.பார்க்க அருவருப்பாக தோன்றினாலும் குச்சியின் நீட்டத்தை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.ஏன் இப்படி என சாக்கடை அள்ளியவர்களை கேட்பதா அல்லது அள்ளியதை போடுவதற்கு உரிய ஏற்பாடை செய்து கொடுக்காதவர்களைப்பற்றி பேசுவதா?எது எப்படியாயினும்உடனடியானதவறுக்குஅவர்கள்தான் ஆட்பட்டுப்போகிறார்கள்.
    குவியலுக்குஎதிர்த்தவீட்டில்இருந்தவயதானமூதாட்டியை பார்க்கிறேன்.
அவர்தான் சொல்கிறார் ,என்ன செய்யச் சொல்றீங்க தம்பி,அப்பிடித்தான் கெடக்கு,அவுங்கள கேட்டா இவுங்கன்றாங்க,இவுங்களக் கேட்டா அவுங்கள கையக் காட்டுறாங்க.இப்பிடியே மாறி,மாறி நடக்குது தம்பி.இது எங்க போயி எப்பிடி முட்டிக்கிட்டு நிக்கும்னுதான் தெரியல.
       நீங்க தேடி வந்த வீடு அதோ அதுதான் தம்பி.ரெண்டு பேரு வாசலுக்கு முன்னால நிப்பாங்க, ,அவுங்கதான் நீங்க தேடி வந்த ஆளுங்க,அண்ணன்,தம்பி ரெண்டு பேரும் சேந்து தொழில் பண்றாங்க, வருமானம் சில சமயம் அள்ளிக்கிட்டு வரும் சில சமயம் ஈயாடும்.சமாளிச்சு ஓட்றாங்க,என்னோட சொந்தக் காரங்கதான் தம்பி.பேச்சு வார்த்தை கெடையாது இப்ப.
    அவுங்கதான் என்னைய இங்க வீடுபாத்து குடி வச்சாங்க,அதுக்கு பாத்திங்கீன்னா எத்தன தடை,எத்தன எதிர்ப்பு,எத்தன வசச்சொல்லு,எவ்வளவு குரோதம்,யப்பா,,,,,,,,,,,,,,,,மனசுவிட்டுப்போச்சு தம்பி.ஏன் பேரன் மார்கதான் என்னானாலும் பரவாயில்லைன்னு சொல்லி எதுதவுங்க கூடயல்லாம் பேசி சண்டபோட்டு என்னயஉக்கார வச்சாங்க.இப்பஅவுங்ககுடியிருக்கநெலையான
வீடில்லாமஅலையுறாங்க தம்பி.
வீட்டுக்காரரு காலி பண்ணச் சொல்றாராம்.திடீர்னு இப்பிடிச் சொன்னா எங்க போவாங்க அவுங்க,புள்ள,குட்டிகள வச்சிக்கிட்டு.ஒரே ஆள்க இருக்குற தெரு அதான் இப்பிடி.
      எங்கள மாதிரி ஆள்கள இருக்க விடமாட்டங்க.நொரண்டு இழுத்துக்கிட்டே இருப்பாங்க தம்பி.நாங்க பொழப்பப் பாக்குறதா,இல்ல இவுங்களோட சண்ட போட்டுகிட்டுஇருக்குறதா?சொல்லுங்க,பாத்தா படிச்சவரு மாதிரி இருக்கீங்க,
ஏதாவது கரைக்ட்டா சொல்லுங்க தம்பி என்றாள்.
      வீடு தேடிய அலுப்பை விட மூதாட்டியின் பேச்சு என்னை அசைத்து விட அண்ணன்,தம்பி இருவரையும் நோக்கி கிளம்புகிறேன்.அவர்கள் என்னை பார்க்க, நான் அவர்களைப் பார்க்க மெளனமாய் கரைகிறது நிமிடங்கள்.
      நான் பேச வாய் எடுத்த சமயத்தில் அவர்கள் துண்டுச்சீட்டு ஒன்றை நீட்டினார்கள்.அதில் அவர்கள் குடிபுகப்போகும் புது வீட்டின் முகவரி இருந்தது.

10 Nov 2010

சுபப்படும் தருணங்களாய்,,,,,,,,,,,

                          


        ள்ளி செல்லும் பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கூறும் காரணத்தைதான் அவர்களது மகனும் கூறினான்.
“வயிறு வலிக்குது”
     காலையில் எல்லாம் முடித்துக் கிளம்பும் போதுதான் காரணத்தின் முனையை மெல்ல வெளிக் காண்பித்தான். பிறகு அழுகை,அடம்,பாவமாய் எல்லாமும் எல்லாமுமாய்./
       பள்ளிக்கு லீவு போட காரணம் ஒன்றும் பெரிதாக கிடைக்காத போது அதை கடைசி அஸ்திரமாய் பயன்படுத்துகிறார்கள் பிள்ளைகள்.
     தாய் முகம் பார்த்தபடி இருத்தல், தாய்மடி அன்பு,தாயின் அரவணைப்பு, தாயின் கையினாலேயே மதியச் சாப்பாடு,,,,,,,,,,,,,,இன்னும் இன்னுமான விஷயங்களுக்காகக் கூட “வயிற்று வலி அஸ்திரம் பலமாக பிரயோகிக்கப் பட்டிருக்கலாம்.
     ஒண்ணாம் வகுப்புப் படிக்கும் பையனை என்ன செய்ய?(இந்த விஷயத்தில் எத்தனாம் வகுப்புப் படிக்கும் பையனையும் ஒன்றும் செய்வதற்கில்லை.) “சரி டாக்டர்கிட்ட காட்டீட்டு மதியம் பள்ளிகூடத்துக்கு போயிரணும்.”கோபமும் இல்லை சிரிப்பும் இல்லை சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் பையனின் தகப்பனார்.
     அடேயப்பா அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவனுக்கிருந்த சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே./அவன் போட்டிருந்த ஸ்கூல் யூனிபார்மைத் தாண்டி அவனது மனது வெளியே தெரிந்தது.
கோடி சந்தோசம் அவனது ஜோடிக் கண்களில்.டாக்டரிடம் போயிருக்கிறார்கள்.
மாத்திரை,மருந்து வாங்கியிருக்கிறார்கள்.மதியத்திற்கு மேல் ஸ்கூலுக்கு போகவில்லையாம். டீ.வி பார்த்திருக்கிறான்.சிறிது நேரம்
விளையாண்டிருக்கிறான். சிறிது நேரம் அம்மாவுடன் வம்பு வளர்த்திருக்கிறான்      ஆனந்த விகடன்,குமுதம் ,,,,,,,இதுமாதிரி இதழ்களை எடுத்து படம் பார்த்திருக்கிறான்.
    எல்லாம் முடித்து ஒரு அடி நீள மரஸ்கேலை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் கிளம்பிவிட்டிருக்கிறான்.
வீட்டின் பின்னாலுள்ள சிமெண்ட் மேடையின் ஒருமுனையில் லேசாக் மணல்பரப்பி அரிவாளை தீட்டுவது போல ஸ்கேலை அவ்வளவு அழகாக இழுத்திருக்கிறான்.
    சர்ர்ரக்,சர்ர்ர்ரக்,,,,என்கிற சத்தம் அவன் அம்மாவின் காதை குத்த போய் எட்டிப் பார்த்திருக்கிறாள்.
      சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாளாம்.பிறகுதான் கவனித்திருக்கிறான் பையன்.
வெட்கப்பட்ட சின்ன வானவில்லாக நாணிக்கோணி எழுந்து வீட்டினுள் ஒடிவந்து விட்டானாம். பிள்ளைகள் தூங்கி விட்ட இரவில் சொல்லியிருக்கிறாள் கணவனிடம்.
     இவனை எல்லாம் ஏதாவது தொழிற்கல்வியில் சேர்த்துவிட்டால் நன்றாகப் படிப்பான்.    ஓவியம்,சிற்பம் இதுமாதிரியான படிப்புகளில் இவனது தேர்ச்சி உறுதி.சிறப்பும் பெறுவான் எனவும்,,,,,,,,,,
     மேலும் இதுமாதிரியான  படிப்புகள் பற்றியும்,அதற்கான கல்லூரிகள் பற்றியும்,மேற்கண்ட படிப்பை வேலைவாய்ப்புள்ள படிப்பாக யாரும் கருதுவதில்லை என்பதைப் பற்றியுமாக ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
     அந்நேரம் ஓவியக்கல்லூரி மாணவன் ஒருவன் சொன்னது இவர்களது பேச்சினுடாக வந்து போகிறது.
       “தமிழ்நாட்டிலுள்ள ஓவிய,நுண்கலை கல்லூரியில் இருந்து வருடத்திற்கு     
       100 ஐ எட்டிய எண்ணிக்கையில் மாணவகள் வெளியேறுகிறார்கள்.
       அப்படியென்றால் கடந்த 30 வருடத்தில் எவ்வளவு பேர் வெளியே   
       வந்திருக்கிறார்கள் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
       கடுமையான உழைப்பாளிகள் அவர்கள்.ஆனால் இவர்கள் அனைவருக்கும்
       ஓவியம் விற்றால்தான் பிழைப்புநடக்கும்.
       ஒரு ஓவியகண்காட்சி நடத்துவதென்றால் கல்யாணம் நடத்துவது  
       போல.
       ஆனால் ஓவியம் விற்கும் பணம் கண்காட்சி ஏற்பாடுகளுக்கே   
       சரியாகிவிடும்.பின் கலைஞன் எப்படி பிழைப்பது”?/
என்கிற மெகாசைஸ் கேள்வியைமுன் வைக்கிறார்.முந்தையவர்கள் இப்பொழுது உள்ளவர்கள் மேல் குறைசொல்லவும்,இப்பொழுது உள்ளவர்கள் முந்தையவர்களின் மீது குறைசொல்லவுமாக எடுத்துக் கொண்ட அக்கறையில் ஒரு கால் பகுதியாவது இம்மாதிரியான ஓவிய,நுண்கலைமாணவர்களின்  முன்னேற்றத்தைப் பற்றி யோசித்திருப்பார்களேயானால்,,,,,,,,,,
       அந்த ஓவிய நுண்கலைமாணவனின் ஆதங்கமும்,வயிற்று வலிக்காக லீவுபோட்டு விட்டு வீட்டின் பின்புறம் ஸ்கேல் தீட்டிய மாணவனைப் பற்றி பெற்றோர்கள் பட்ட ஆசையும் நிறைவேறும்,அவர்களது நம்பிக்கையும் சுபப்படும்.