10 Apr 2011

திருப்புமுனை


                         

        நல்லதொரு வேளை நாளின் காலை நேரம் என்பதாக நினைவு.முதல் நாள் இரவு வெகுநேரம் விழித்துவிட்டதால் மறுநாள் காலை ஏழு மணிக்குதான் எழுந்தேன்.
வெகுநேரம் விழுப்பு என்றால் இரவு 11.30 அல்லது பணிரெண்டு மணிவரைதான். ஏதோ ஒரு வேலை அல்லது “உட்கார நேரமில்லாத” கதையாக ஓடிக்கொண்டிருந்த கணங்களாய் இருந்திருக்கும்.
      காலைஎழுந்தவுடன்முகம்கழுவிதேநீர்குடிக்கையில் தொலைக்காட்சி
பெட்டியை இயக்க ஆரம்பித்துவிடுவேன்.அந்நேரத்திலிருந்து அலுவலகம் செல்லும் வரை தொலைகாட்சியில் குறிப்பிட்ட சேனல்களில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
     கேட்கஇனிமையாகவும்,இதமாகவும் சந்தோசம் தருகிற மாதிரியாகவும் இருக்கிற பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டு போய் எங்கோ வைத்து விடுகிற ரசவாத வித்தையை செய்து விடுகிறது அந்த கணத்தில்.
     ஏழுகடல், ஏழுமலை தாண்டி நடு கடலுக்குள் இருக்கிற பொக்கிஷத்தை காட்டுகிறதோற்றுவிக்கிறமாதிரியானசெய்கையைசெய்துமனதை கட்டிப்போட்டு விடுகிறதனம் அதற்கு இருந்தது.
அம்மாதிரியான மனக் கிறக்கத்தை இழக்க விரும்பாமல் அன்றும் அதைதான் செய்துகொண்டிருந்தேன்.கையில்டீடம்ளர்.எதிரில் தொலைகாட்டிபெட்டி.
      தரையில்தான்உட்கார்ந்திருந்தேன்சேர்வெற்றுடம்புடன்தரையில் அமர்ந்திருந்தது.அதன் உடம்பில் கையூன்றி சாய்ந்துதான் உட்கார்ந்திருந்தேன்.
    ட்யூப் லைட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.மாட்டி ஒரு வருடத்திற்கும் மேலாகப் போகிறது.இத்தனை வருடமும் உழைத்து உடல் தேய்ந்ததுபோகமிச்சமிருக்கிறசக்தியைமட்டுமேவெளிபடுத்திக்கொண்டிருந்தது.
     இவ்வளவு வெளிக்கு இந்த வெளிச்சம் சற்று குறைவுதான்.பதினைந்துக்கு பத்து செவ்வக ஹால்.மின் விசிறி ஓடிக்கொண்டிருந்தது.ட்யூப் லைட் எரிந்து கொண்டிருந்தது.பழகிப் போன அலுவலக சூழல் வீட்டிலும் கேட்கிறது.
அதிலும் வீட்டில் நான் இருந்தால் கண்டிப்பாக் லைட் எரியும்.மின்விசிறி சுழன்று கொண்டிருக்கும்.
    தொலைக்காட்சி, அதன் அருகிலிருந்த தையல் மிஷின் மேஜையில் தைப்பதைற்காய் காத்திருந்த துணிகள்,மடிக்கப்பட்டும் கலைந்து போயுமாய்/
அதிலும்அந்தசிவப்புநிறதுணிஇருக்கிறதே?அடேயப்பா,உயர தலைதூக்கவும்,
காற்றில் அசைந்து கொடுக்கவுமாய் தனது இருப்பை காட்ட ஏதேதோ செய்தது  நண்பர் சொன்னதை ஞாபகபடுத்தியது.”எங்கு பள்ளம் இருக்கிறதோ அங்குதான் சிவப்பு உயர்ந்து தெரியும்” என.
     தையல் மேஜையின் அருகிலிருந்த  மூன்று ப்ளாஸ்டிக் சேர்களும், ஒரு வயர் சேரும் காலியாக கிடந்தது.இன்னம் நான்கு சேர்கள் வாங்க வேண்டும் அல்லது சோபா இது போல ஏதாவது வாங்கினால் தேவலாம் போல படுகிறது.யாராவது வந்தால் போனால் அமர்வதற்கு தோதாக வேண்டுமே.
     நாங்கள் நான்குபேர்.கணவன் மனைவி பிள்ளைகள் இரண்டு பேர்.இது போக யாராவது வீட்டிற்கு வந்து விட்டால்  அனைவரும் நிற்க வேண்டியதாகவே உள்ளது.அதற்காகவாவது வாங்க வேண்டும்.
கைக்கும் வாய்க்குமாய் சரியாகப் போகிற வாழ்க்கையில் எங்கே மிச்சம் பிடித்து எதை வாங்க.......?என்கிற எண்ணமே துரத்துவதாக/
    துரத்தலிலிருந்து தப்பிக்க எங்காவது அதல பாதாளத்தில் விழுந்து அடையாளம் தெரியாமல் எழுந்து உருச்சிதைந்து போன மத்தியமர்களுள் ஒருவனாகிப் போய்விடக்கூடாது என்கிற பயம் என்னுள் எப்பொழுதும் உண்டு.கடன்,வட்டி,சொத்து அடமானம் அதுஇது என எதுவும் இல்லாமல் கெளரவமாக ஓட்டி விட்டேன் இதுவரை.இனியும் அப்படியே இருப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது.அந்த நம்பிக்கை கூடிய விரைவில் சேரை வாங்க வைத்து விடும்.
     தரைக்கு வேறோர் கலரில் டைல்ஸ் ஒட்டியிருக்கலாம் என சொன்னார்கள் வீட்டிற்கு வந்திருந்த நான்கைந்து பேர். டைல்ஸ் வெள்ளை கலர் என்பது அவர்களது வாதம்.இல்லை அரை வெள்ளை என்பது எனது மேன்மையான எனதுவாதம்.
     ஹால் அரைவெள்ளையுமாக,வராண்டா லேசான சிவப்பு பிரதிபலித்த கலருமாகஇருந்தது.அதைஇங்கிலீஸ் கலர் என்றார்கள்  கடைக்காரர்கள்.
    டைல்ஸ் எடுக்க நானும்,எனது மனைவியும்தான் போயிருந்தோம்.இங்கிலீஸ் கலர் என சொல்லப்பட்ட டைல்ஸின் நிறமும்,அவள் உடுத்தியிருந்த சேலையின் நிறமும்ஒன்றுபோலஇருந்தது.
கடைக்காரர்தான்சொன்னார்நல்லாயிருக்கும்,எடுத்துட்டு போங்க என.அப்படி எடுத்து வந்து ஒட்டிய டைல்ஸின் மீது அமர்ந்துதான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.ஹாலிருந்தஷெல்ப்,ஷெல்பிலிருந்த புத்தகங்கள்,
பேப்பர்,டீ.வீ.டீ ப்ளேயர் அதைத்தாண்டி நிலைக் கண்ணாடி,காலண்டர்,சுவிட்ச் போர்ட்,அகல் வாய் திறந்திருந்த ஜன்னல் ட்யூப் லைட் வெளிச்சத்தில் ஓர நிழல் காட்டிய வாசல் கதவு,மின் விசிறியின் காற்று பட்டு தரையில் படபடத்த பேப்பர்,பேப்பரின் அசையும் நிழல்,அதனடியில் தங்கியிருந்த சிறு,சிறு தூசி துகள்கள் என ஒட்டு மொத்த ஹாலும் என்னையே உற்றுப் பார்த்து கொண்டிருந்ததாய் பிரமை எனக்கு.
போதாதற்கு சுவரும் அதிலிருந்த வர்ணமும்,வர்ணம் உதிர்ந்துபோய் அது   காட்டிய உருவங்களும் உடன் சேர்ந்து கொண்டதாய் நினைக்கிறேன்.     சுவரின் உருவங்களும்,தொலைக்காட்சியில் தெரிந்த உருவங்களும் ஒத்துப் போனதாய் தெரிந்தார்கள் எனக்கு.
    

       நல்ல அழகான வரம்பு மீறாத காதல் பாடல் அது. தொலைக் காட்சியில்
ஓடிக்கொண்டிருந்தது.
கதாநாயகனும்,கதாநாயகியும் கைகோர்த்து ஓடிகொண்டிருக்கிறார்கள். நாயகி கண்ணை உறுத்தாத கலரில் சேலை உடுத்தியிருந்தார்.அதற்கு மேட்சிங்காக சட்டை அணிந்திருந்தார்.
அவர் சேலையைஇடுப்பில்கட்டியிருந்தாரா அல்லது நடு வயிற்றிலா......?என்பது இப்பொழுது வரை புரியாத புதிராகவே. நாயகனும் இப்பொழுது பேஷன் அல்லது மாடல் என சொல்லக்கூடிய விதத்தில் இருந்த பேண்ட்,சட்டை அணிந்திருந்தார் நல்லதொரு கலரில்.
     இருவருமாய்அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்ட காதல் ஜோடி.பிண்ணனி குரல் கொடுத்த பாடகர்கள் குரலில் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இசை பிரவாகமெடுத்து செவியை நுழைத்து,மனதை நிரப்பி ஆளை இழுத்துக் கொண்டுபோகிறது.
காடு, மலை தாண்டியவனாக நானும் மனமிழந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அவர்களின் பின்னாலேயே/  ஏற்கனவே சிலிர்த்தெழுந்து நின்ற புல்வெளி மீது கால்பட்டதும் மீண்டும் சிலிர்தெழுந்ததாய் நினைவும்,பூரிப்பும்/
   காதை அடைந்து மனதை இழைத்த பாடலின் வரிகள் காற்றில் மிதக்க நாயகனும்,நாயகியும் சந்தோஷித்து பாடி வாயசைத்து காதலில் மேம்பட்டு நடித்துக் கொண்டிக்க நானும் சுண்டி இழுக்கபட்டவனாய் பின்னால் சென்று கொண்டிருக்கிறேன்.
    பாடல்,நாயகன்,நாயகி அவர்களது நடிப்பு,பாடகர்களது குரல்,மனம் மயக்கிய இசை அவர்கள் ஓடிக்கொண்டிருந்த புல்வெளி,பின்னாலேயே சென்று கொண்டிருந்தநான்என்பதுமாயும்  உடலும்,மனதும்,உணர்வுகளும்,
புலன்களனைத்துமாய் ஒரேபுள்ளியில் இணைந்துபணியாற்றிக்கொண்டிருந்த பதிவை தவிர பார்வையிலோ,புத்தியிலோ வேறெதுவும் புலப்டாத நேரமது.
    குடித்து முடித்த டீ டம்ளர் கையில் இருக்கிறது.திறந்திருந்த வாயை மூடத்தோனவில்லை.சொரிந்து கொண்டிருந்த கை தாவங்கட்டை தாடிமுடிகளிலினூடேயிருந்து விடுபடவில்லை.
வீடு மறக்கிறது,மனைவியை மறந்து போகிறேன்,பிள்ளைகள் ஞாபகத்திற்கு வரவில்லை. டாக்டரம்மா சுத்தமாக மறந்து போகிறாள். பூப்போட்ட கைலியும்,
வெற்றுடம்பில் போட்ட துண்டுடனுமாய் முழங்காலைக்கட்டிகொண்டு அமர்ந்து இருக்கிறேன்.அப்பொழுதான் அந்த போன் வருகிறது.
     “இப்பிடியெல்லாம் பேசாதப்பா நீயி” சரி என்று நானும் வைத்து விடுகிறேன்.
கதாநாயகனும்,கதாநாயகியும் கொண்ட கூட்டணி என்னை லேசாகதிரும்பிப்  பார்த்து ‘ஒன்று போனில் பேசுங்கள் அல்லது பாடலை ரசியுங்கள்” என்கிறார்கள்.நானும் இல்லை............என சமாளித்து சிரித்து வருத்தப்பட்டவனாக “நீங்கள் தொடருங்கள்” என்கிறேன்.
     திரும்பவும் பாடல் போய்கொண்டிருக்கிறது.புல்வெளி கடந்து வேறு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.நானும் பின் தொடர்கிறேன்.வெகுசில கணங்களில் திரும்பவும் போன். “அவர்ட்ட என்னசொன்ன நீ?” என எதிர்முனையில் கேட்ட பேச்சு அவசியம் குறித்து   கொஞ்சம் நீள்கிறது.
      இந்தநேரத்தில்பாட்டுச்சத்தம்படக்கெனநின்றுவிட்டது.நாயகனும்,நாயகியும்
கொண்ட குழு என்னருகில் வருகிறது.
“நிறுத்துங்கள்சார்,ஒன்றுபாடலைகேளுங்கள்,அல்லதுஒங்கசொந்த காரங்ககிட்ட பேசுங்க’,என்கிறது.
இல்லை எங்களது மிகமுக்கிய சொந்தக்காரர் அவர்.அவரிடம் பேசுவதை எங்களால் தவிர்க்க முடியாது.நீங்கள் பாடலை தொடருங்கள் என்கிறேன்.                   
      “இல்லைஅப்படியெல்லாம்தொடரமுடியாது.நீங்கள்உங்களது
சொந்தக்காரருடனேயேபேசுங்கள்.நாங்கள்போய்வருகிறோம்உங்களது ரசனையை பாரட்டி மீண்டும் வருகிறோம் பாடுவதற்கும்,ஆடுவதற்கும்,
நடிப்பதற்கும்.”
எனபோய் விட்டார்கள்.நானும் வருத்தத்துடன் அவர்களிலிருந்து விடுபட்டு வந்து விடுகிறேன்.  
(பி:கு ; பாடலைகேட்டுக் கொண்டிருந்த காலை நேரத்தில் அந்த போன் வந்திருக்காவிட்டால் நான் இந்த எழுத்தை எழுதியிருக்கமாட்டேன்,ஆகவே  போன் பண்ணியவருக்கு எனது கோடான ,கோடி வணக்கங்கள்.)

9 comments:

நிரூபன் said...

கேட்கஇனிமையாகவும்,இதமாகவும் சந்தோசம் தருகிற மாதிரியாகவும் இருக்கிற பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டு போய் எங்கோ வைத்து விடுகிற ரசவாத வித்தையை செய்து விடுகிறது//

ஆமாம்....சகோதரா, எனக்கும் இப்படியான அனுபவங்கள் இருந்திருக்கின்றன...

நிரூபன் said...

ஏழுகடல், ஏழுமலை தாண்டி நடு கடலுக்குள் இருக்கிற பொக்கிஷத்தை காட்டுகிறதோற்றுவிக்கிறமாதிரியானசெய்கையைசெய்துமனதை கட்டிப்போட்டு விடுகிறதனம் அதற்கு இருந்தது.//

ஆட்காட்டிப் பறவையினை மனதிற்கு ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள். ரசிக்கிறேன்.

vimalanperali said...

வணக்கம் நிரூபன் சார்.
நன்றி உங்களது கருத்துரைக்கும் வருகைக்குமாக.
பொக்கிஷங்கள் எல்லாஇடத்திலும் இருக்கிறதுதானே?
அதை பொக்கிஷமாக பார்க்கிற, எடுத்துக்கொள்கிற மனோநிலையும்,பக்குவமும்தான் அவசியம் எனப்படுகிறது.

நிரூபன் said...

ட்யூப் லைட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.மாட்டி ஒரு வருடத்திற்கும் மேலாகப் போகிறது.இத்தனை வருடமும் உழைத்து உடல் தேய்ந்ததுபோகமிச்சமிருக்கிறசக்தியைமட்டுமேவெளிபடுத்திக்கொண்டிருந்தது.//

டியூப் லைட் வர்ணணை கூட அழகாக இருக்கிறது.

நிரூபன் said...

எங்கு பள்ளம் இருக்கிறதோ அங்குதான் சிவப்பு உயர்ந்து தெரியும்”/

வர்ணனைகள், தத்துவம் என ஒரு வித்தியாசமான மொழி நடைக் கூடாக உங்களின் இப் பதிவை நகர்த்துகிறீர்கள்.

நிரூபன் said...

கைக்கும் வாய்க்குமாய் சரியாகப் போகிற வாழ்க்கையில் எங்கே மிச்சம் பிடித்து எதை வாங்க.......?//

இவை நிஜமான வரிகள்.. வாழ்க்கையின் அர்த்தம் தொனிக்கிறது.

நிரூபன் said...

விமலன் said...
வணக்கம் நிரூபன் சார்.
நன்றி உங்களது கருத்துரைக்கும் வருகைக்குமாக.
பொக்கிஷங்கள் எல்லாஇடத்திலும் இருக்கிறதுதானே?
அதை பொக்கிஷமாக பார்க்கிற, எடுத்துக்கொள்கிற மனோநிலையும்,பக்குவமும்தான் அவசியம் எனப்படுகிறது//

உங்களது பதிவினைப் படிக்கையில் என் அனுபவங்களும், நினைவுகளாக வந்து போயின எனும் அர்த்தத்தில் தான் சொன்னேன்.
பொக்கிஷமாகப் பார்ப்பதற்கு, மனோ நிலையோ, பக்குவமோ அவசியம் என்றால் என் போன்றவர்களால் அதனைப் பார்க்க முடியாது எனச் சொல்கிறீர்களா?

Yaathoramani.blogspot.com said...

சில நொடிகள் ஆயினும் நினைவு விட்டு
கனவுக்குளியல் குளித்து வருவதில்தான்
எத்தனை சுகம்
நினைவுக்கும் அந்தக் கனவுக் குளியல்
அவசியத் தேவையாய் உள்ளது
ஏனெனில் அதுதானே நினைவுகளுக்கும் உத்வேகம் தருகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

உங்களது வாழ்த்துக்களுக்கு எனது வணக்கங்கள்.கனவும்,அதுசார்ந்த நினைவுகளும் பல சமயங்களில் கைகோர்க்கும் வாழ்கையில் இனிமை எப்பொழுதும் உண்டு.