Showing posts with label சித்திரம்அனுபவம். Show all posts
Showing posts with label சித்திரம்அனுபவம். Show all posts

17 Jun 2011

தூரம்,,,,,,,.


                 

இரவுகள் நீண்டும் பகல்கள்
சுருங்கிப்போயுமாய் தெரிகின்றன,
நீயும் பிள்ளைகளும் அற்ற நாட்களில்/
இந்நேரம் நீ வாசல்தெளித்து
கோலமிட்டுக் கொண்டிருக்கலாம்.
பிள்ளைகள் பள்ளிசெல்ல
ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம்.
பால்காரர்வந்து
பால்ஊற்றிச்சென்றிருப்பார்
பற்ற வைத்தகேஸ்டவ்வில்
பொங்கும் பாலின் நினைவும்
குக்கரின்ஒற்றை
விசில்சப்தமும்கேட்க
கோலத்தை பாதியில் நிறுத்தி
நீஅடுப்படிக்குவிரைந்திருக்கலாம்.
பெரியவனின்முகப்பரு
எந்தஅளவுவற்றியிருக்கிறது
தெரியவில்லை.
சின்னவன் ஒழுங்காக சாப்புடுகிறானா?
உங்களதுதுணைக்கு
எனதுமாமியாரைவரச்சொல்லியிருந்தேனே
வந்திருக்கிறார்களா?
என்கிற விசாரணை எழுவதை
தவிர்க்க முடியவில்லை கண்ணே/
இரவு தூக்கம்வர மறுக்கிறது.
சாப்பாடு இறங்கவில்லை.
டீ கூட கசக்கிறது.
சுத்தமாய் குளிக்கக்கூடபிடிக்கவில்லை.
பல் துலக்குவது,துணிதுவைப்பது
மற்ற,மற்றதெல்லாம் அப்படியப்படியேதான்.
ஏன் என்று விளங்கவில்லை.
ஆனால் உண்மை
அப்படித்தான் இருக்கிறது.
நான் பணிமாற்றலாக்கி
மூன்று மாவட்டங்கள் தாண்டி
இங்கு வந்த நாட்களிலிருந்து
இப்படித்தான்
ஆகிப்போகிறது அன்பே/
காண்கிற கனவுகளிலெல்லாம்
நீயும்,பபிள்ளைகளுமாய்?
பார்க்கிற முகங்களெல்லாம்
உனதுமுகமாகவே/
சாலைகளில் பள்ளிக்கு விரைகிற
பிள்ளைகளின்முகங்களில்
நமது பிள்ளைகளின் முகங்கள்/
பார்க்கிற,பேசுகிற,பழகுகிற
எல்லோரிடத்திலும்
இதுவே பிரதிபலிக்கிறது.
நான் என்ன செய்யட்டும் கண்ணே/
இருந்தாலும்
இதோ ஓரிரு நாட்களில்
உன்னை பார்க்க வந்துவிடுகிறேன்
என் பிரிய மனைவியே?

24 May 2011

விதைப்பு உழவு,,,,,,,


                              

       முன்இரவுவரும்நேரம்மறைந்தசூரியன்ஒவ்வொன்றாய் காட்சிப்
படுத்துக்கிறான் சைக்கிளில்விரைந்துகொண்டிருந்தவனின்முன்னே.
       காட்சிகள்வீதிகளாக,கடைகளாக,அலுவகங்களாக கோயில்களாக,
டீக்கடைகளாக,ஹோட்டல்களாக நகர்ந்து, நகர்ந்து கொண்டு வந்து சேர்த்த
இடம் டுடோரியல் கல்லூரியாய் இருந்தது.இடதுபுறம் நூலகம், வலதுபுறம்
அலுவலகம் உறவினர்கள்,தோழர்கள்,நண்பர்கள் என நெசவோடியிருந்த கட்டிடத்தில் கே.பியும், நானும்,பின்மணியனுமாய் பேசிக்கொண்டிருந்தோம்.
      தச்சரும்,கொல்லரும்,கொத்தனாரும்,சித்தாளுமாய்வியர்வையைவழியவிட்ட
ஆயிரத்து சொச்சசதுர அடிகட்டிடத்தில் ரொம்பவே நாள் கழித்த எங்களது பேச்சின் பதிவில் வேறொன்றும் பிரமாதமாய் இடம் பெற்று விடவில்லை என்ற
போதும் கூட வாழ்வின் அடிப்படை பற்றியும் அங்கலாய்ப்பு பற்றியும் பேச தவறவில்லை.
      வீடு,வாசல்,அலுவலகம்பிள்ளைகள்,சேலைதுணிமணிகள்,பட்ஜெட்,
தொழிற்சங்கம்,சகஊழியர்கள் அக்கம்பக்கம்,கல்லூரி கல்லூரி படிப்பு,விலைவாசி
வீட்டுவாடகை,1ரூபாய் அரிசி என இதரஇதரவாய் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.
     இறந்து போன நண்பனின் நினைவாக பெயர் வைத்திருந்த மகனை அழைத்து வந்திருந்த கே.பி இரவு தான் வர நேரமாகும் என சொல்லி அனுப்பி வைத்தான்.
     கருப்புபேண்ட்,வெள்ளைச்சட்டை அணிந்திருந்த அவன் ஐந்தடிக்குள்ளான உயரத்திற்கு உட்பட்டவனாய் காட்சியளித்தான்.
    கருப்பு,வெள்ளை திரும்பவுமாய் ஒரு ரவுண்ட் வருகிறது.கோடுபோட்ட சட்டைகளும்,எம்ப்ராய்டரி,பூவேலைப்பாடுசேலைகளும்,சட்டைகளுமாய் திரும்பவும் வலம் வருவதைபார்க்க முடிகிறது.இந்த பண்டிகைக்கு இதுதான் முன்னனியில் நின்றது..இடையில் காணாமல் போயிருந்த சதுர டைப் கண்கண்ணாடிப்ரேமும்திரும்பவும்வருகிறது.பாபிக்காலர்சட்டையும்,­_
பெல்பாட்டம் ஃபேண்டும் அகல பெல்ட்டும்,கர்லிங் கட்டிங்குமாய் அலைந்த காலங்களிலும்,அடுத்தடுத்துமாய் வந்த நாட்களும் இருந்த ஆடை வடிவமைப்பின் வேகமும்,உடைநாகரீகத்தில் ஏற்பட்ட மாற்றமும் காணாமல் போய்விட்டதே இந்த கம்யூட்டர் காலத்தில்.
     ப்ள்ஸ் ஒன் படிக்கிறனாம் அவன்.பத்தாவது வரை படித்த பள்ளி சரியில்லை எனஅங்கிருந்து பெயர்த்தெடுத்து வேறொருபள்ளியில் சேர்த்திருந்தார்கள்.எங்கு படித்தால்என்ன?படிக்கும்இடமும்,சூழ்நிலையும்கல்வியும்தானே_
முக்கியமாகிறது.அந்த மனோ நிலை வந்து விட்டதா இந்த பள்ளியில்சேர்த்ததும்
என கேட்டதற்கு கொஞ்சம் வெடிப்பாகவே பேசிய “ப்ளஸ் ஒன்”முன்னிலிருந்து இப்பொழுது கொஞ்சம் மாறியிருப்பதாய் சொன்னான்.ஒரு மனிதனை
தீர்மானிப்பது வாழ்நிலை சூழல்தானே?அதில் சின்னவன் என்ன,பெரியவர் என்ன?
    “நீங்கள் கர்நாடகக்காரரா?என கர்நாடகாவில் வசிக்கும் ஒருவரை பார்த்து கேட்கப் போக அவர் வைத வசவும், கோபித்துக் கொண்ட கோபமும்,
பட்டுக் கொண்ட வருத்தமும் ஜென்மத்துக்கும் தீராது  போலிருக்கிறது.
அதையெல்லாம் எப்படி மறக்க,என்ன செய்து சாதானம் சொல்ல? நாலாம் பேருக்குத் தெரியாமல் என்னை நானே செருப்பால் நாலு போட்டுக்கொண்டு விட்டுவிட்டேன் பேசாமல்.
    “தீதும் நன்றும் பிறர் தர வாரா”அவரை பார்த்ததும் தவறு, கேட்டதும் தவறு.பேசியஅன்றுஇரவுசற்று கூட இமை மூடவில்லை.அவர்மாதிரியானவர்கள் நீந்தி வந்த தூரமும் கடந்து வந்த பாதையும்,அவர்களின் வாழ்பனுபவமும் மிகவும் கடினமானதன்றோ?அப்படியிருக்கையில் அவரது இந்த கோபம் சரிதானா என்பதுவும் புரியவில்லை.
     எதையாவது ஒன்றை கேட்டால் எதையாவது ஒன்றை பேசும்  “அதி மேதாவிகள்” லிஸ்டில் உள்ளவர் போலும்.இதுதான் இப்படியென்றால் தன் உயரம் காட்டவும், தன்னை முன்னிலை படுத்தவுமாய் வேண்டி ஒன்றாய் கூடி,பேசி,உறவாடித்திரிந்த நண்பனை பலர் பார்க்க மன நோயாளி என கத்தி கூக்குரலிட்டு பெருமைபட்டுக்கொள்கிற கேடுகெட்ட தனமும் ந்ம்மில் இல்லாமல் இல்லை என்கிற பேச்சின் ஊடாக நண்பர் தினேஷீம் கலந்து கொள்கிறார்.
     மனைவிக்கு மாறுதலானதால் அவர்கள் சென்று விட்ட பெரு நகரத்தைபற்றி சொன்னார். வீடு வாடைக்கு கிடைப்பதும்,வீடு கிடைக்கும் தெருவில் பார்க்கும்,கேட்கும்,ஊடுருவும் ஜாதி வித்தியாசமும் இன்னும் கூட அமலில் இருக்கிறது என்றார்.பார்க்கும்,பேசும் ,எதிர்படும் மனிதரிகள் யாவரும் அவ்விதமே உள்ள கொடுமை ஒருபக்கம் என்றால் வீட்டின் வாடைகையும் அதற்கான அட்வான்ஸீம் யப்பாப்பா,,,,,,சாதாரண ஜனங்கள் அந்த ஊரில் நடத்துவது கஷ்ட ஜீவனமே/
      வீடு,வீடு கடந்த தெரு,தெரு கடந்த ஊர்,ஊரினது  படர்ந்து பரந்தவிலாசம்,
யாவிலும் வேலைநிமித்தமாய் பிழைப்பின் அவசியம் கருதி குடியேறுபவர்களது அவலம்வார்த்தைகளில்அடங்கமறுக்கிறசோகம்என்றும் சொன்னார்.அந்த_
சோகம்எழுந்துபற்றிபடர்ந்துஊரைபோர்த்திய விதமாய்.
   திருநெல்வேலி பக்கமிருந்து டாக்சி ஓட்டி பிழைப்பு நடத்த வந்த டிரைவர்களின் பிழைப்பு இதைவிட மோசம் என்றார்.இரவு நேரங்களில் அவர்கள் டாக்சியிலேயே தூங்குவதும்,காலை நேரங்களில் கட்டணக்கழிப்பறைகளில் தங்களதுகாலைகடன்களைமுடித்துகுளித்துவிட்டுதங்களதுஅன்றாடபிழைப்பை
ஆரம்பிக்கும் அவலமும் தொடர்கதையாகவே இருக்கிறது என்கிறார். 5000 ஐ
தாண்டாத அவர்களது மாத வருமானம் எவ்வளவுதான் தாங்கும் என்கிறார் மேலும்.
     




      






          இப்படியெல்லாமுமாகவும்,இன்னும்பலவற்றையும் பற்றி பேசிக்கொண்டிருந்த நண்பர் தினேஷ் “கரண்ட் போகிற நேரமிது,அதற்குள்ளாக நான் வீடு போக வேண்டும்” என எழுந்து விட்டார்.அவர் எழுந்த சிறிது நேரத்தில் கரண்ட் போய்விடுகிறது.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களின் பேச்சு தொடர்கிறது. 

சாரக்காத்து,,,,,,,,


                                      


       சைக்கிளை பற்றிய எனது கனவின் முடிவு பல சமயங்களில் கீழ்கண்டவாறுதான் பதிவாகிறது.
     கிட்டத்தட்டஎன்போன்றஎல்லோருக்கும்அப்படித்தான் போலும்.மண்பிளந்து வளர்ந்து துளிர்த்து கிளை பரப்பி மணம் பரப்பும் மலர் மரத்தின் ஆகுருதியாய் மனதில் ஆக்ரமித்துக்கொண்ட நினைவு சில சமயம் பாரமாயும்,சிலசமயம் பாரமற்றும்.
     மத்தியதரவர்க்கத்தினரின் ஆசைகளும்கனவுகளும்தள்ளி,தள்ளிப்போவதும்,
கரைந்து சமாதியாகிப்போவதும் இயல்பாகவே ஆகிப்போகையில் அதுபற்றி
பேசுவது கூட தவறுதானோ என்று படுகிறது.   இருந்தாலும் பாழாய் போன
உள்மன ஆசைகளும் நினைவுகளும்,,,,,,,,,, /
    “இருபது இஞ்சில் இரட்டை பார்வைத்த சைக்கிள்தான் வாங்க வேண்டும்.கருப்பு இளஞ்சிவப்பு, வயலட் என எந்த கலரும் இல்லாமல் பச்சை கலரில்தான் வாங்கவேண்டும்.நினைத்து,நினைத்து பிசைந்தெடுத்து உருவம் கொடுத்து உருவாக்கிய குயவனின் உருவாக்கமாய்,ஓவியரின் கைவண்ணமாய் சிற்பியின் செய்நேர்த்தியாய் இருக்க வேண்டும்.”
     பரந்து விரிந்து கிடந்த நகராட்சி எல்லைக்குள் இருந்த கண்ணபிரான் கடை,என்.எஸ்.என் சைக்கிள் மார்ட், மனோரஞ்சிதம் சைக்கிள் பிட்டர்ஸ்,,,, என பெயர் தாங்கிய பல கடைகளில் சைக்கிளை மாட்டியேதான் வைத்திருப்பார்கள் என்றாலும் நான் வழக்கமாக சைக்கிளை வேலைக்கு விடும் பாய் கடையில் சொல்லித்தான் மாட்டச்சொல்லவேண்டும்.
      கடைக்காரரிடம் முன்பே சொல்லி விட வேண்டும். “நீங்கள் மாட்டப்போகும் சைக்கிள் என்னிடம் பேசவேண்டும்,,,,,,,” என/
     பத்து,ஐந்து கூட செலவாகிப்போனாலும் பரவாயில்லை.அப்புறம் “இல்லை மாமா அது இப்படி,இது அப்படி” என கதைத்துக் கொண்டிருக்கக்கூடாது.
     தந்தை,மகன் இருவருமாய் சேர்ந்து தங்களது உணர்வையும்,உழைப்பையும் கலந்துஓடவிட்டிருந்தகடை.
இருபத்தைந்துவருட பழக்கத்தின் விளைவுதானோ என்னவோ?என்னைபார்த்தபின்தான் சைக்கிளைபார்ப்பார்.
     நான்+சைக்கிள்+ரிப்பேர்+குடும்பம்+உடல்நலம் என்கிற ப்ளஸ்,ப்ளஸான விசாரிப்புகளினூடாகவே எனது சைக்கிளை பற்றியும் கேட்டறிந்து என்னை அனுப்பி வைப்பார்.
     அவர்சொன்னயோசனைதான்இது.வருடமெல்லாம் இதற்கு செலவழிப்பதற்கு புது சைக்கிள் வாங்கி விடலாம் என்றார். அவர் சொன்ன நாளிலிருந்து நன் வைத்திருந்த சைக்கிள் பெருபாரமாய் ஆகிபோனது எனக்கு.
   ஒரு ஜே.சி.பி இயந்திரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த எனது  சைக்கிளை நாள் முழுவதுமாய் ஓட்டி அலுத்துப்போனது போலவும் இறகு முளைத்திருந்த சைக்கிள் கடை பாய் தலையில் குல்லாயுடன் பறந்து வந்து புது சைக்கிளை தந்து விட்டு பழசை தூக்கிக்கொண்டு பறந்ததாயும் கனவு கண்டேன்.
    அன்றிலிருந்து புது சைக்கிள் ஓட்டுபவர்களையும்,சைக்கிள் கடை பாயையும் வெறித்து,வெறித்துபார்ப்பவனாயும்,பித்துபிடித்தவன்போலவும் ஆகிப்போனேன்.
     அன்றாடஉடற்பயிற்சிக்குவாக்கிங்,ரன்னிங்,எக்சர்சைஸ்,யோகா,சைக்கிளிங்,
இவற்றில் எது பெஸ்ட் என்பதில் ஆரம்பித்து  “சைக்கிளிங்கே” நல்லது முடிவுக்கு வரும்போது அதற்கும் புது சைக்கிளே ஏற்றது என்கிற மன ஏற்புடனும்,சமாதானத்துடனுமாய் இருந்த நாட்களின் நகர்வுகளில்தான் எனது மகன் சொல்கிறான்.ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு செல்பவன்.
    “எனக்கு புது சைக்கிள் வேண்டும்.எனது உயரத்திற்கேற்றவாறு நீங்கள் வாங்கித்தரும் சைக்கிளை இந்த முழு பரிட்சை லீவு நாட்களில் நன்றாக ஓட்டிப்பழகிக்கொள்வேன்.
சைக்கிளின் சாரதியாயும்,பராமரிப்பாளனாயும் நானே இருப்பேன்.அதன் ஓட்டத்திலும்,அதன் ஒவ்வொரு சுழற்சியிலும்,அதன் அழகிலும் அதன் ஒவ்வொரு உதிரிப்பாகத்தின் மீதும் எனது பார்வையை ஓடவிட்டு மனம் கலக்கவிட்டு கரைந்துருகி ஆனந்தமாகிப்போவேன்.
பக்கத்தூரிலுள்ள எனது பாட்டி வீடும்,அடுத்த தெருவிலுள்ள அத்தை வீடும் தூரம் அதிகமற்றுப்போகும் எனக்கு” என எக்ஸட்ரா,எக்ஸட்ராவாய் ஆசைகளை விரிக்கிறான். முகமெல்லாம் பூரிப்பாக.
     அதுமாதிரியெல்லாம்நான்யாரிடமும் போய் சொல்ல முடியாது.மிஞ்சி,மிஞ்சிப் போனால் எனது மனைவியிடம் சொல்லலாம். “அட பைத்தியகார மனுசா”என அவளும் அதற்காக சிரிக்கக்கூடும்.அதற்காகத்தான் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்து பூட்டி சாவியை எங்கோ தொலைத்து விட்டேன்.அனைத்து வீட்டிலும் நிறைவேறாத ஆசைகளுடன் திரியும் பெற்றோர்களின் கணக்கில்தற்காலிகமாகநானும்.
     நான் சென்ற பதினோரு மணி இரவிற்கெல்லாம் எனது சைக்கிள் அப்படி நிற்கும் என நினைக்கவில்லை.
      அன்று அப்படி ஒரு நினைப்பு.தலை பெருத்தும்,கைகால்கள் சூம்பிப்போன குழந்தையாய் பின்புறம் காட்டி அழுக்கடைந்து நின்றது.
அதிகம்அழுக்குப்படாமலும்,ஒருசின்ன ரிப்பேர் ஆனாலும் அதை சரிபார்த்து சைக்கிளுக்கும்,எனக்குமாய்சந்தோஷம்ஏற்படுத்திபராமரித்த நாட்கள்.
    அப்படியெல்லாம் பொத்தி,பொத்தி பாதுகாத்த சைக்கிள் இப்படி நின்றதை பார்த்ததும் வாய் உலர்ந்து நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள உடல் சுருங்கி ஏதோ அன்னிய தேசத்தில் நிற்கும் மனோநிலையினனாய் ஆகிபோகிறேன்.
     என்னை சுற்றி வரிசை கிரமத்தில் நின்ற சைக்கிள்கள்,அதை எடுக்க வந்த ஒன்றிரண்டு மனிதர்கள்,சைக்கிள் ஸ்டாண்டினுள் எரிந்த மின் விளக்குகளின் வெளிச்சம்,ஸ்டாண்டை ஒட்டிய சாலையில் செல்லும் ஆட்டோவின் ஹாரன் ஒலி, “ணங்க,,,,,ணங்க,,,,என்கிற அடுப்படி சத்தம், “கண்ணதாசன் காரைக்குடி” என அறிவிக்கிற பாடல் எல்லாம் என்னை சுற்றி வந்தன.
     நீள,நீளமாக எதிரெதிரே வகுந்து  போடப்பட்டிருந்தவைகளில் எட்டாவது வரிசையில்தான் நிறுத்தியிருந்தேன் இடதுபுறமாக.எப்போதும் பதிவாக நிறுத்தும் வரிசை.
      இடது என்றால் உனக்கு அப்படி ஒரு மயக்கம் என்கிறான் நண்பன். “இல்லை நண்பா,நீ நினைத்து அழுத்தம் கொடுத்து பேசுகிற இடது எல்லாம் இல்லை இதில்.நேராகப்போய் இடதுபக்கம்திருப்பி நிறுத்துவதில் உள்ள ஒரு சின்ன  செளகரியம்தான் என்னை அப்படி செய்யத்தூண்டுகிறது.வீணாக உனதுசெளகரியப்படிஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே என்கிற சொல்லை
ஊதித்தள்ளியவனாக, “என்னமோபோ,பார்ப்பவையும்,கேள்விப்படுபவையும்,                          
நீசொல்பவையும்ஏகத்துக்குஇடிக்கிறதே”எனசிரித்தவனாய்கிளம்பிப்போய்
விடுவான்,என்கிற அவனது நினைவை சுமந்தபடி எனது சைக்கிளை சுற்றி,சுற்றி
வருகிறேன்.
      அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப  உறுப்பினராக  இன்றளவும்  காட்சி   தருகிற  ஒரு   பொருளாயும்,
பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,,
மீசைக்கும், உருவத்திற்கும், குரலுக்கும் சம்பந்தமற்றவராய் உட்கார்ந்திருந்த சைக்கிள் ஸ்டாண்ட்க்காரரிடம் சொல்லமுடியாது, வருத்தப்பட்டும் ஏதும் பிரயோஜனமில்லை   என்கிற     நோக்கம்     மேலோங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அனாதையாய் அழுதுகொண்டு நிற்கும் குழந்தை போல நின்ற எனது  சைக்கிளைஎடுத்துக்கொண்டுகிளம்புகிறேன்மேலும்  பரிதாபத்திற்குரியவனாக/.        
 











17 Apr 2011

சாயம்,,,,,,,,









கோபம் இருக்கிற
இடத்தில்தான்
குணம் இருக்கிறது
என்கிறார்கள்.
ஆனால் கோபத்தையே
குணமாகக் கொண்டிருக்கிற
பலருள்அவரும்
ஒருவராகவே தெரிகிறார்.
கள்ளம்,கபடம்,
நயவஞ்சகம்,சூழ்ச்சி,
குரோதம்............,,
போன்ற மிக
நல்ல குணங்களை
மட்டுமே
அடிப்படைபண்பாககொண்ட
அந்த நல்ல மனிதர்
தான் ஒரு தலைவர்,
தான் ஒரு பெரியவர்
தான் ஒரு சமூகப் பிரமுகர்.
தான்ஒரு ...........,,,,,,,,,,,,
என்கிறதையே
அடித்தளமாக்கி
அதன் மேல் ஏறி நின்று
அனுதினமும் கூவுகிறார்.
தான் ஒரு சுயம்பு
எனவும்,தான்
ஒரு முற்போக்கு சக்தி எனவும்/

கருப்பு வெள்ளை,,,,,,,,,,


  

















சப்தம் கூட்டி வைத்தால்
அதன் அதிர்வலைகள்
தாங்காமல் யாரும்
அதிகமாய்கூட்டம்கூடி
பேசமாட்டார்கள்.
வெட்டிப்பேச்சு தவிர்க்கப்படும்
தொழில் நடக்கிற
இடத்தில் எதற்கு வீணாய்?/
ஏதேனும் பிரச்சனை
 என்றால் யார் தாங்குவது?
என எப்.எம் வானொலியில்
ஒலி அதிகம் வைத்ததற்கான
காரணத்தை சொல்கிறார்
நான் முடி வெட்டச்
சென்ற சலூன் கடைக்காரர்.
ஞாயம்தான் எனத் தெரிகிற
அவரது கூற்று
அங்கு வந்து அமர்கிறவர்களுக்கு
ஞாயமில்லை எனப் படுகிறது.

16 Apr 2011

அச்சமாய்,,,,,,,



     
  

அவள் என்றா,அவர்கள்என்றா?
அவளைப்பற்றிஎப்படிசொல்வது
எனத்தெரியவில்லை.
ஆஸ்பத்திரி
சென்று வந்து கொண்டிருந்த
நாளது இரவில்  
எதிர்பட்ட நண்பன் கேட்கிறான்.  
“யாருக்கு என்ன” என?
எனது பின்னால்
இருசக்கர வாகனத்தில்
அமர்ந்து கொண்டிருந்த
மனைவியை காண்பித்து
இவர்களுக்குத்தான்
உடல் நலமில்லை
என்கிறேன்.
எனது அந்த வார்த்தைகள்
சரியா,தவறா தெரியவில்லை,
ஆயினும்
இன்னும் அப்படித்தான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எதிர்படுகிற எல்லோரிடமும்
கேட்கிற அனைவரிடமும்/

10 Apr 2011

கனமற்றது,,,,,,,,,


   























எறிந்த வடை விழுந்த
சத்தம் கேட்கவில்லை.
காலையில் வாங்கியது.
இரண்டுபருப்புவடைகள்,
மூன்று உருண்டை வடைகள்.
அலுவலக வேலையாக
சென்று விட்டு திரும்பும் போது
ஆடுகாலி கடையில் வாங்கியது.
சேட்டைக்காரமுத்துதான்
அப்படி ஒரு பெயரை
அந்தகடைக்குசூட்டினான்.
காசு இருக்கிற நேரம்
கொடுத்துவாங்குவேன்.
இல்லையெனில் கடன்தான்.
ஏதோ ஒரு நம்பிக்கையில்
கடைக்காரனும் தருகிறான்,
நானும் வாங்கிக்கொள்கிறேன்.
அப்படி வாங்கி வந்த
வடைகளில் ஒன்று
சாப்பிடுவார்இல்லாமல்
எஞ்சி மறந்து போக
இரவு நேரம் பாத்திரம்
விளக்கும் போது
கையில் கிடைக்கிறது.
இந்நேரம்
இதை சாப்பிடமுடியாது.
நூல் வேண்டுமானால்
நூற்கலாம் என்பவனாய்
வீட்டின் எதிரிலுள்ள
வெற்று புல்வெளியில்
தூக்கி எறிகிறேன்.
எறிந்த வடை விழுந்த
சத்தம்வெகு நேரமாகியும்
கேட்கவில்லை.
எறிந்த பண்டமும்
விழுந்த இடமும்
கணமற்றதாய்
ஆகிப்போன பின்
எங்கு எது விழுந்தாழும்
இதுவாகத்தானே?

திருப்புமுனை


                         

        நல்லதொரு வேளை நாளின் காலை நேரம் என்பதாக நினைவு.முதல் நாள் இரவு வெகுநேரம் விழித்துவிட்டதால் மறுநாள் காலை ஏழு மணிக்குதான் எழுந்தேன்.
வெகுநேரம் விழுப்பு என்றால் இரவு 11.30 அல்லது பணிரெண்டு மணிவரைதான். ஏதோ ஒரு வேலை அல்லது “உட்கார நேரமில்லாத” கதையாக ஓடிக்கொண்டிருந்த கணங்களாய் இருந்திருக்கும்.
      காலைஎழுந்தவுடன்முகம்கழுவிதேநீர்குடிக்கையில் தொலைக்காட்சி
பெட்டியை இயக்க ஆரம்பித்துவிடுவேன்.அந்நேரத்திலிருந்து அலுவலகம் செல்லும் வரை தொலைகாட்சியில் குறிப்பிட்ட சேனல்களில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
     கேட்கஇனிமையாகவும்,இதமாகவும் சந்தோசம் தருகிற மாதிரியாகவும் இருக்கிற பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டு போய் எங்கோ வைத்து விடுகிற ரசவாத வித்தையை செய்து விடுகிறது அந்த கணத்தில்.
     ஏழுகடல், ஏழுமலை தாண்டி நடு கடலுக்குள் இருக்கிற பொக்கிஷத்தை காட்டுகிறதோற்றுவிக்கிறமாதிரியானசெய்கையைசெய்துமனதை கட்டிப்போட்டு விடுகிறதனம் அதற்கு இருந்தது.
அம்மாதிரியான மனக் கிறக்கத்தை இழக்க விரும்பாமல் அன்றும் அதைதான் செய்துகொண்டிருந்தேன்.கையில்டீடம்ளர்.எதிரில் தொலைகாட்டிபெட்டி.
      தரையில்தான்உட்கார்ந்திருந்தேன்சேர்வெற்றுடம்புடன்தரையில் அமர்ந்திருந்தது.அதன் உடம்பில் கையூன்றி சாய்ந்துதான் உட்கார்ந்திருந்தேன்.
    ட்யூப் லைட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.மாட்டி ஒரு வருடத்திற்கும் மேலாகப் போகிறது.இத்தனை வருடமும் உழைத்து உடல் தேய்ந்ததுபோகமிச்சமிருக்கிறசக்தியைமட்டுமேவெளிபடுத்திக்கொண்டிருந்தது.
     இவ்வளவு வெளிக்கு இந்த வெளிச்சம் சற்று குறைவுதான்.பதினைந்துக்கு பத்து செவ்வக ஹால்.மின் விசிறி ஓடிக்கொண்டிருந்தது.ட்யூப் லைட் எரிந்து கொண்டிருந்தது.பழகிப் போன அலுவலக சூழல் வீட்டிலும் கேட்கிறது.
அதிலும் வீட்டில் நான் இருந்தால் கண்டிப்பாக் லைட் எரியும்.மின்விசிறி சுழன்று கொண்டிருக்கும்.
    தொலைக்காட்சி, அதன் அருகிலிருந்த தையல் மிஷின் மேஜையில் தைப்பதைற்காய் காத்திருந்த துணிகள்,மடிக்கப்பட்டும் கலைந்து போயுமாய்/
அதிலும்அந்தசிவப்புநிறதுணிஇருக்கிறதே?அடேயப்பா,உயர தலைதூக்கவும்,
காற்றில் அசைந்து கொடுக்கவுமாய் தனது இருப்பை காட்ட ஏதேதோ செய்தது  நண்பர் சொன்னதை ஞாபகபடுத்தியது.”எங்கு பள்ளம் இருக்கிறதோ அங்குதான் சிவப்பு உயர்ந்து தெரியும்” என.
     தையல் மேஜையின் அருகிலிருந்த  மூன்று ப்ளாஸ்டிக் சேர்களும், ஒரு வயர் சேரும் காலியாக கிடந்தது.இன்னம் நான்கு சேர்கள் வாங்க வேண்டும் அல்லது சோபா இது போல ஏதாவது வாங்கினால் தேவலாம் போல படுகிறது.யாராவது வந்தால் போனால் அமர்வதற்கு தோதாக வேண்டுமே.
     நாங்கள் நான்குபேர்.கணவன் மனைவி பிள்ளைகள் இரண்டு பேர்.இது போக யாராவது வீட்டிற்கு வந்து விட்டால்  அனைவரும் நிற்க வேண்டியதாகவே உள்ளது.அதற்காகவாவது வாங்க வேண்டும்.
கைக்கும் வாய்க்குமாய் சரியாகப் போகிற வாழ்க்கையில் எங்கே மிச்சம் பிடித்து எதை வாங்க.......?என்கிற எண்ணமே துரத்துவதாக/
    துரத்தலிலிருந்து தப்பிக்க எங்காவது அதல பாதாளத்தில் விழுந்து அடையாளம் தெரியாமல் எழுந்து உருச்சிதைந்து போன மத்தியமர்களுள் ஒருவனாகிப் போய்விடக்கூடாது என்கிற பயம் என்னுள் எப்பொழுதும் உண்டு.கடன்,வட்டி,சொத்து அடமானம் அதுஇது என எதுவும் இல்லாமல் கெளரவமாக ஓட்டி விட்டேன் இதுவரை.இனியும் அப்படியே இருப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது.அந்த நம்பிக்கை கூடிய விரைவில் சேரை வாங்க வைத்து விடும்.
     தரைக்கு வேறோர் கலரில் டைல்ஸ் ஒட்டியிருக்கலாம் என சொன்னார்கள் வீட்டிற்கு வந்திருந்த நான்கைந்து பேர். டைல்ஸ் வெள்ளை கலர் என்பது அவர்களது வாதம்.இல்லை அரை வெள்ளை என்பது எனது மேன்மையான எனதுவாதம்.
     ஹால் அரைவெள்ளையுமாக,வராண்டா லேசான சிவப்பு பிரதிபலித்த கலருமாகஇருந்தது.அதைஇங்கிலீஸ் கலர் என்றார்கள்  கடைக்காரர்கள்.
    டைல்ஸ் எடுக்க நானும்,எனது மனைவியும்தான் போயிருந்தோம்.இங்கிலீஸ் கலர் என சொல்லப்பட்ட டைல்ஸின் நிறமும்,அவள் உடுத்தியிருந்த சேலையின் நிறமும்ஒன்றுபோலஇருந்தது.
கடைக்காரர்தான்சொன்னார்நல்லாயிருக்கும்,எடுத்துட்டு போங்க என.அப்படி எடுத்து வந்து ஒட்டிய டைல்ஸின் மீது அமர்ந்துதான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.ஹாலிருந்தஷெல்ப்,ஷெல்பிலிருந்த புத்தகங்கள்,
பேப்பர்,டீ.வீ.டீ ப்ளேயர் அதைத்தாண்டி நிலைக் கண்ணாடி,காலண்டர்,சுவிட்ச் போர்ட்,அகல் வாய் திறந்திருந்த ஜன்னல் ட்யூப் லைட் வெளிச்சத்தில் ஓர நிழல் காட்டிய வாசல் கதவு,மின் விசிறியின் காற்று பட்டு தரையில் படபடத்த பேப்பர்,பேப்பரின் அசையும் நிழல்,அதனடியில் தங்கியிருந்த சிறு,சிறு தூசி துகள்கள் என ஒட்டு மொத்த ஹாலும் என்னையே உற்றுப் பார்த்து கொண்டிருந்ததாய் பிரமை எனக்கு.
போதாதற்கு சுவரும் அதிலிருந்த வர்ணமும்,வர்ணம் உதிர்ந்துபோய் அது   காட்டிய உருவங்களும் உடன் சேர்ந்து கொண்டதாய் நினைக்கிறேன்.     சுவரின் உருவங்களும்,தொலைக்காட்சியில் தெரிந்த உருவங்களும் ஒத்துப் போனதாய் தெரிந்தார்கள் எனக்கு.
    

       நல்ல அழகான வரம்பு மீறாத காதல் பாடல் அது. தொலைக் காட்சியில்
ஓடிக்கொண்டிருந்தது.
கதாநாயகனும்,கதாநாயகியும் கைகோர்த்து ஓடிகொண்டிருக்கிறார்கள். நாயகி கண்ணை உறுத்தாத கலரில் சேலை உடுத்தியிருந்தார்.அதற்கு மேட்சிங்காக சட்டை அணிந்திருந்தார்.
அவர் சேலையைஇடுப்பில்கட்டியிருந்தாரா அல்லது நடு வயிற்றிலா......?என்பது இப்பொழுது வரை புரியாத புதிராகவே. நாயகனும் இப்பொழுது பேஷன் அல்லது மாடல் என சொல்லக்கூடிய விதத்தில் இருந்த பேண்ட்,சட்டை அணிந்திருந்தார் நல்லதொரு கலரில்.
     இருவருமாய்அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்ட காதல் ஜோடி.பிண்ணனி குரல் கொடுத்த பாடகர்கள் குரலில் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இசை பிரவாகமெடுத்து செவியை நுழைத்து,மனதை நிரப்பி ஆளை இழுத்துக் கொண்டுபோகிறது.
காடு, மலை தாண்டியவனாக நானும் மனமிழந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அவர்களின் பின்னாலேயே/  ஏற்கனவே சிலிர்த்தெழுந்து நின்ற புல்வெளி மீது கால்பட்டதும் மீண்டும் சிலிர்தெழுந்ததாய் நினைவும்,பூரிப்பும்/
   காதை அடைந்து மனதை இழைத்த பாடலின் வரிகள் காற்றில் மிதக்க நாயகனும்,நாயகியும் சந்தோஷித்து பாடி வாயசைத்து காதலில் மேம்பட்டு நடித்துக் கொண்டிக்க நானும் சுண்டி இழுக்கபட்டவனாய் பின்னால் சென்று கொண்டிருக்கிறேன்.
    பாடல்,நாயகன்,நாயகி அவர்களது நடிப்பு,பாடகர்களது குரல்,மனம் மயக்கிய இசை அவர்கள் ஓடிக்கொண்டிருந்த புல்வெளி,பின்னாலேயே சென்று கொண்டிருந்தநான்என்பதுமாயும்  உடலும்,மனதும்,உணர்வுகளும்,
புலன்களனைத்துமாய் ஒரேபுள்ளியில் இணைந்துபணியாற்றிக்கொண்டிருந்த பதிவை தவிர பார்வையிலோ,புத்தியிலோ வேறெதுவும் புலப்டாத நேரமது.
    குடித்து முடித்த டீ டம்ளர் கையில் இருக்கிறது.திறந்திருந்த வாயை மூடத்தோனவில்லை.சொரிந்து கொண்டிருந்த கை தாவங்கட்டை தாடிமுடிகளிலினூடேயிருந்து விடுபடவில்லை.
வீடு மறக்கிறது,மனைவியை மறந்து போகிறேன்,பிள்ளைகள் ஞாபகத்திற்கு வரவில்லை. டாக்டரம்மா சுத்தமாக மறந்து போகிறாள். பூப்போட்ட கைலியும்,
வெற்றுடம்பில் போட்ட துண்டுடனுமாய் முழங்காலைக்கட்டிகொண்டு அமர்ந்து இருக்கிறேன்.அப்பொழுதான் அந்த போன் வருகிறது.
     “இப்பிடியெல்லாம் பேசாதப்பா நீயி” சரி என்று நானும் வைத்து விடுகிறேன்.
கதாநாயகனும்,கதாநாயகியும் கொண்ட கூட்டணி என்னை லேசாகதிரும்பிப்  பார்த்து ‘ஒன்று போனில் பேசுங்கள் அல்லது பாடலை ரசியுங்கள்” என்கிறார்கள்.நானும் இல்லை............என சமாளித்து சிரித்து வருத்தப்பட்டவனாக “நீங்கள் தொடருங்கள்” என்கிறேன்.
     திரும்பவும் பாடல் போய்கொண்டிருக்கிறது.புல்வெளி கடந்து வேறு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.நானும் பின் தொடர்கிறேன்.வெகுசில கணங்களில் திரும்பவும் போன். “அவர்ட்ட என்னசொன்ன நீ?” என எதிர்முனையில் கேட்ட பேச்சு அவசியம் குறித்து   கொஞ்சம் நீள்கிறது.
      இந்தநேரத்தில்பாட்டுச்சத்தம்படக்கெனநின்றுவிட்டது.நாயகனும்,நாயகியும்
கொண்ட குழு என்னருகில் வருகிறது.
“நிறுத்துங்கள்சார்,ஒன்றுபாடலைகேளுங்கள்,அல்லதுஒங்கசொந்த காரங்ககிட்ட பேசுங்க’,என்கிறது.
இல்லை எங்களது மிகமுக்கிய சொந்தக்காரர் அவர்.அவரிடம் பேசுவதை எங்களால் தவிர்க்க முடியாது.நீங்கள் பாடலை தொடருங்கள் என்கிறேன்.                   
      “இல்லைஅப்படியெல்லாம்தொடரமுடியாது.நீங்கள்உங்களது
சொந்தக்காரருடனேயேபேசுங்கள்.நாங்கள்போய்வருகிறோம்உங்களது ரசனையை பாரட்டி மீண்டும் வருகிறோம் பாடுவதற்கும்,ஆடுவதற்கும்,
நடிப்பதற்கும்.”
எனபோய் விட்டார்கள்.நானும் வருத்தத்துடன் அவர்களிலிருந்து விடுபட்டு வந்து விடுகிறேன்.  
(பி:கு ; பாடலைகேட்டுக் கொண்டிருந்த காலை நேரத்தில் அந்த போன் வந்திருக்காவிட்டால் நான் இந்த எழுத்தை எழுதியிருக்கமாட்டேன்,ஆகவே  போன் பண்ணியவருக்கு எனது கோடான ,கோடி வணக்கங்கள்.)