கோழிகள் மேயும் பெருவெளி
எப்பொழுதும் பரபரப்பாகவே/
பச்சைவிரித்தும்
குப்பை குளங்களுடனுமாய்
தெரியும் வெளியில்
முட்கள் முளைத்தும்,
கொடிகள்தளைத்துமாய்.
மண் வாசனையும், ஈரத்தன்மையுமாய்
இருக்கிற வெளியில்எப்போதும்
கொண்டைச்சேவல்களும் ,
கோழிகளும்,குஞ்சுகளுமாய்/
தலையில்சிகப்பு கொண்டை
வைத்த சேவலும்,
குனிந்த தலை நிமிராமல்
மேய்ச்சலில் கவனம் காட்டுகிற
போந்தாக் கோழியும்
அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம்
ஆஜராகி விடுகிறதுண்டு.
மேய்ச்சலில்கவனம் காட்டுகிற
அவைகள் குஞ்சுகளுடனும்,
குடும்பத்துடனுமாய்
சமயங்களில் என்னை ஏறிட்டும் பார்க்கிறது,
சில நேரம் சிரிக்கிறது,
சில நேரம் பேசுகிறது,
சில நேரம் என்னருகில்
வருவது போல நடிப்புக்காட்டி
நகர்ந்து விடுகிறது.
கிடைத்ததை பொறுக்கித் தின்றும்,
கிடைக்காததை
கிண்டித்தின்று விட்டுமாய்
நகர்ந்து விடுகிற
அந்த உறவுகளைதரிசிக்க
தினசரி அதிகாலையில்
எழுகிறேன் நான்.
8 comments:
நல்ல கவிதை.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?நன்றி உங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
அருமையாக இருக்கிறது நண்பரே
வாழ்த்துக்கள்
விஜய்
வணக்கம் விஜய் சார் நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
கொடிகள்தளைத்துமாய்.
மண் வாசனையும், ஈரத்தன்மையுமாய்
இருக்கிற வெளியில்எப்போதும்//
வணக்கம் சகோதரம், எப்படி நலமா?
கொடிகள் தளைத்தது என்று இடை வெளி விட்டு வந்தால் சிறப்பாக இருக்குமே.
கோழிகளினதும், கொண்டைச் சேவல்களினதும் இயல்பான நடவடிக்கைகளில் அழகினைத் தரிசித்திருக்கிறீர்கள். அவற்றினைக் கொண்டு உங்கள் கவியினையும் அழகாக்கியுள்ளீர்கள்.
கோழிகள் மேயும் பெருவெளி
எப்பொழுதும் பரபரப்பாகவே/
பச்சைவிரித்தும்
குப்பை குளங்களுடனுமாய்
தெரியும் வெளியில்
முட்கள் முளைத்தும்,
கொடிகள்தளைத்துமாய்.
மண் வாசனையும், ஈரத்தன்மையுமாய்
இருக்கிற வெளியில்எப்போதும்
கொண்டைச்சேவல்களும் ,
கோழிகளும்,குஞ்சுகளுமாய்/
தலையில்சிகப்பு கொண்டை
வைத்த சேவலும்,
குனிந்த தலை நிமிராமல்
மேய்ச்சலில் கவனம் காட்டுகிற
போந்தாக் கோழியும்
அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம்
ஆஜராகி விடுகிறதுண்டு.//
மூச்சு விடாமல் சொல்லும் உணர்வினைக் கொஞ்சம் குறைத்து, பந்தி பிரித்துப் பகிர்ந்திருந்தால் இன்னும் இன்னும் அழகாக இருக்கும்.
அதிகாலைப் பெருவெளி, உங்களிற்கு பிராணிகள் மீதுள்ள அளவு கடந்த அன்பினையும், அவற்றின் செயற்பாட்டின் மீதான விருப்புக்களையும் காட்டி நிற்கிறது.
வணக்கம் நிரூபன் சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment