11 Jul 2011

நானும்,மற்றவர்களும்,,,,,,,,,,,,,




எங்களது அலுவலகத்தின்                      
எதிரே ஒரு டீக்கடை இருந்தது.
                             டீ 5ரூபாய், காபி7ரூபாய்,
                             பால்......ஹார்லிக்ஸ்.....
                             பூஸ்ட்......என தனித்தனியாக
                             விலைப்பட்டியலை
                             அறிவித்த கடையில்
பச்சைபனியனும்,
அடர் வண்ணத்தில் லுங்கியும்
கட்டிய ஒருவரும்,
ரோஸ் வண்ண சட்டையும்,
கருப்புக்கலர் பேண்ட்டும்
அணிந்த இளைஞரும்  டீமாஸ்டர்களாய்/
இது தவிர வடை போட ஒருவரும்,
கல்லாவை கவனிக்க இருவரும்
கடையை மேற்பார்க்க ஒருவருமாய்
மாற்றி,மாற்றி இருந்தார்கள்.
சகல வசதிகளும் நிறைந்த கடை
என இல்லாவிட்டாலும்,
எந்த வசதியும்
அற்ற கடையாகவும் இல்லை.
கடையின் உள்ளே
செவ்வக சைஸில் ஒரு
முகம் பார்க்கும்கண்ணாடி இருந்தது.
கடைக்கு வருபவர்களில்பாதிபேர்
அதில் முகம் பார்த்துக் கொண்டார்கள்.
கொஞ்சம் பேர்
அதைபார்த்துக் கொண்டே
டீசாப்பிட்டார்கள்.
அருகிலிருந்த
வண்ண மீன் தொட்டியில்
நீந்திய நான்கு  மீன்களில்
இரண்டு பெரியதாயும்,
இரண்டு சிறியதாயும்/
தொட்டியின் நடுவில்
நின்று கொண்டிருந்த
சிறுவன் ஒண்ணுக்கு
இருந்து கொண்டிருந்தான்.
அவன் இருந்த நீர்
முட்டை,முட்டையாக
மேல்நோக்கி வருகிறது.
தொட்டியின் அடிப்பரப்பெங்கும்
பரப்பப்பட்டிருந்த ஊதாநிற
கண்ணாடிகற்களில்
நீர் முட்டைகளின் ஒலி பிரதிபலித்தது.
அருகிலிருந்த நீர் குழாய்
கடையின் தேவையை
பூர்த்திசெய்து கொண்டிருந்தது.
கடையின் இடது ஓர மூலையில்
உயரத்தில் இருந்த
வண்ணத்தொலைகாட்சி
பெட்டியில் ஏதாவது நிகழ்ச்சி
ஒடிக்கொண்டிருந்தது.
பிங்க் கலரில் இருந்த
வர்ணப்பூச்சு கண்ணுக்கு இதமாய் இருந்தது.
டீ அருந்த, பேப்பர் படிக்க,
விஷயம் பேச,தொலைகாட்சி பார்க்க,
அசைபோட.......,,
என எந்நேரமும்பிஸியாகவே
இருக்கிற கடையில்
எனது அன்றாடம்
இன்னும் கொஞ்சம் விரிகிறதாய் நினைக்கிறேன்.
நானும்,என்னைப்போன்றவர்களுமாய்/




  

6 comments:

சென்னை பித்தன் said...

யதார்த்தம்!

arasan said...

சார் கலக்கல் ..

vimalanperali said...

வணக்கம் சென்னை பித்தன் சார்.நலம்தானே?யதார்த்தங்கள் சொல்லிச் செல்கிற வரிகள் வாழ்க்கை முழுவதுமாய் விரவிக்கிடக்கிறது.அதை சொல்ல நினைக்கும் எனக்கு உங்கள் போன்றோரின் வாழ்த்துக்களே மிகப்பெரிய உந்துதலாக,,,,,,/நன்றி

vimalanperali said...

வணக்கம் அரசன் சார்.கலக்கலில் இதுவும் ஒரு ரகம்தானே?என்ன ந்ன் சொல்றது?

vidivelli said...

ஆகா கலக்குங்க
பதிவிற்கு வாழ்த்துக்கள்....


உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ...
http://sempakam.blogspot.com/

vimalanperali said...

வணக்கம் விடிவெள்ளிசார்,நலம்தானே?நல்ல பதிவைபார்த்ததும் வாழ்த்தும் உங்களது உயரிய எண்ணம் சீர்பட வாழ்த்துக்கள்.உங்களது வைதளமும் விரிவடைய வாழ்த்துக்கள்.