அடிக்கடி தொட்டுக்கும்பிட
இதுஎன்ன தெய்வபிரகாரமா?
அல்லது தெரு ஓரகோயிலா?
ஒன்றுமில்லை.
வேலைபார்க்கிற அலுவலகம்தானே?
அப்படித்தான் ஆகிபோகிறது.
நான் பணியில் சேர்ந்த
நாளிலிருந்து இன்றுவரை
எனது பணியிடத்தை
தொட்டுக் கும்பிட்டுவிட்டே
வேலையை ஆரம்பிக்கிறேன்.
அதுதொழில் பக்தியா?
அல்லது நேசமா?
வழக்கில் உள்ள பழக்கமா?
பயமா,,,,,,,,,,,?
ஏதென்ன சரியாக தெரியவில்லை.
ஆனாலும் தினசரி
அப்படித்தான் செய்கிறேன்.
சமயங்களில் அந்த பழக்கம்
கூடிப்போகிறது.
கும்பிடுகிற எண்ணிக்கையும்
அதிகரித்துவிடுகிறது.
அது சரியா,தவறா,,,,,,,,
என சரியாக தெரியாவிட்டாலும்
அன்றாடம் அப்பழக்கத்தைத்
தொட்டுத்தொடர்பவனாகவே/
6 comments:
அசத்தலான அனுபவங்கள்..
காங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
வணக்கம் கருன்சார்.நலம்தானே?அனுபவங்களைபகிர்ந்து கொள்ளத்தோன்றியது.சொன்னேன்.வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
அருமை அருமை
செய்யும் தொழிலே தெய்வம் எனில்
அலுவலகம் ஆலயம்தானே
அன்றாடம் செய்கிற மதிக்கத் தக்க நிகழ்வினை
அழகான கவியாக்கித் தந்துள்ளீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அது நல்ல பழக்கம் தனே....
ஒரு பணிவு எமக்குள்ளே,ஓர் நம்பிக்கை எமக்குள்ளே,,,
உங்க பகிர்விற்கு வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்குங்க!!
பணியிடத்தை வணங்குகிறீர்கள், பணியே தெயவென்று!
நன்று!
எனதுவலைதளத்திற்க்குவந்து கருத்துரை வழங்கிய அனைவருக்கும்நன்றி.
Post a Comment