1 Apr 2012

மேடுபள்ளம்,,,,


     
வீட்டின் முன் விரிந்து கிடந்த
வெற்று வெளி சமமற்று
காட்சியளிப்பதாகவே எப்போதும்.
அதில் சேர்க்கையாய்
வீடு கட்டுவதற்காய்
தட்டி வைக்கப்பட்டிருந்த மணலும்,
அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களும்,
குழைத்து சதுரம் கட்டி
காண்பிக்கப்பட்டிருந்த சுண்ணாம்பும்,
வானம் தோண்டி கொட்டப்பட்டிருந்த
மண்ணுடனுமாய்/
வெள்ளை நிறத்தில்
கரும்புள்ளிகள் வைத்தும்,
பிரிதொருநிறத்தில் இரண்டுமாக
துள்ளி ஓடியும், விளையாடியவாறுமாய்/
இதில் கழுத்து பட்டை கட்டியது
இரண்டு தரையிலும்,
பட்டைகட்டாத நாய்
மணலின் உச்சியிலுமாய்/
மாறி மாறி ஓடியும்,தாவியும்,
படுத்தும்,புரண்டும்,
ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டியவாறுமாய்
விளையாடிய அவைகளில் இரண்டு
எத்தனை முயன்றும்
மணல் மேட்டின் மீதுநின்ற நாயின்
அருகில் செல்ல முடியவில்லை./
அவைகளின் விளையாட்டெல்லாம்
தரையின் மீதுதான் போலும் எப்பொழுதும்/ 

16 comments:

ரிஷபன் said...

அவைகளின் விளையாட்டெல்லாம்
தரையின் மீதுதான் போலும் எப்பொழுதும்/


காட்சி கண்ணில் விரியும்போதே பூடகமாய் சொல்லிப் போகும் தகவலும் தெரிகிறது.

வலையுகம் said...

அருமையான கவிதை
////பட்டைகட்டாத நாய்
மணலின் உச்சியிலுமாய்/
மாறி மாறி ஓடியும்,தாவியும்,
படுத்தும்,புரண்டும்,
ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டியவாறுமாய்
விளையாடிய அவைகளில் இரண்டு
எத்தனை முயன்றும்
மணல் மேட்டின் மீதுநின்ற நாயின்
அருகில் செல்ல முடியவில்லை./
அவைகளின் விளையாட்டெல்லாம்///
தரையின் மீதுதான் போலும் எப்பொழுதும்/////

சுதந்திரத்தின் மகிமையை அடைபட்டவனின் வலியை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

மகேந்திரன் said...

சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது
கவிதையில் ...
வாழ்த்துக்கள் நண்பரே...

பாலா said...

நிறைய அர்த்தங்கள் கொண்டுள்ள வரிகள்

மாலதி said...

பூடகமாக சொல்லி இருக்கும் விதம் அருமை ஒரு படைப்பு படிப்பவருக்கும் படைப்பாளிக்கும் இடைவெளியை உண்டாக்க கூடாது சிறப்பான இடுகை பாராட்டுகள்

சசிகலா said...

மணலின் உச்சியிலுமாய்/
மாறி மாறி ஓடியும்,தாவியும்,
படுத்தும்,புரண்டும்,
ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டியவாறுமாய்
விளையாடிய // சிறு பிள்ளைகள் சிறு மேட்டைக் கண்டாலும் ஏறி குதித்துச் செல்வதைப் போல பதிவை படித்து முடித்ததும் அந்த மேட்டின் சரிவுகளில் என் நினைவுகளும் .

ananthu said...

#எத்தனை முயன்றும்
மணல் மேட்டின் மீதுநின்ற நாயின்
அருகில் செல்ல முடியவில்லை./ ! # நிதர்சனத்தை மூன்றே வரிகளில் விளக்கிவிட்ட விதம் அருமை !

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்,நல்ம்தானே.
பேசவும்,சொல்லவும் ஏதுமற்றதாய் ஆகிப்போன உலகத்தினைனைப்போல இத்தனை நாட்கள் உங்களோடு பேசாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி நிறைய பேசலாம்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் ஹைதர் அலி சார்,நலம்தானே?வலியை சுமந்தவனின் கற்றுக்கொள்ளல் ஏராளமாக இந்த மண்ணில்,அது பெரும்பகுதி வலி மிகுந்தும்,அது அல்லாதுமாகிப்போகிற நேரங்களில் இது மாதிரி எழுத்துக்களில் அடைபட்டு தெரிகிறார்கள்.தங்களது வருகைக்கும்,கருத்துரைகுமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் மாலதி மேடம்.
படிப்பவருக்கும்,படைப்பாளிக்கும் ஏன் இடைவெளியை உண்டாக்க வேண்டும்?இடைவெளிகள வெளிப்படுத்துகிற படைப்புகள் சலிப்புக்குள்ளாகிப் போகின்றன.பின் அந்த சலிப்பே பெரிதாகி
படிப்பவரை இடறி விழச்செய்து விடுகிறதுண்டு.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வனக்கம் அனந்து சார்.நலம்தானே?கண்முன்னே காண்கிற நிதர்சங்களைஎப்படிப்படி சொல்லாமல் விட்டுப்போக?தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,நலம்தானே?அர்த்தங்களை சுமந்து சூழ்கொண்டுள்ள
வரிகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கிற எழுத்துஎப்போதுமே நல்லதையே நினைக்கும்.ந்ன்றி வணக்கம்.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.தங்களது வருகைக்கும்,அக்ருத்துரைக்குமாக மிக்க நன்றி.

ஹேமா said...

கவிதையை எங்கு பொருத்திப் பார்த்தாலும் இணைந்துகொள்கிறது விமலன் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/