2 Apr 2012

சிதறல்,,,,,,,,,



பிய்த்துப் போடப் பட்டிருந்த
தோசையின் விள்ளல்கள்
வீட்டின் பக்கவாட்டு வெளியெங்கும்
சிதறித்தெரிந்ததாய்/
கொத்தித் தின்ன வந்த காகங்களையும்
இதர பறவைகளையும்
கைநீட்டியும், கை கூப்பியும் நேசத்துடனுமாய் 
வரவேற்ற நாட்களின் நகர்வுகள்
அடர்ந்தும்,நீண்டும் தெரிபவையாக/
அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்
மகனுக்கும்,மகளுக்கும்,
தாத்தாவுக்கும்,பாட்டிக்கும்
என நிர்ணயித்து வைத்திருந்த
அளவை காலன் மாற்றிக்காண்பித்தவாறு/
தீப்பெட்டி அளவே இருந்த
சமையலறையில்  பெண்கள்
அன்றாடம் தோசைகள் சுட்டு
அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நாள்,வாரம், மாதம் என
தோசைகளின் வடுக்கள்
நிறைந்த சமையலறைகள்
ஊர் முழுக்கவுமாய் பரவி காட்சியளிக்கிறதாய்/
பிய்த்து போடப்பட்டிருந்த
தோசையின் விள்ளல்கள் வீடுகளின்
பக்கவாட்டு வெளிகளெங்கும் சிதறித்தெரிந்ததாய்/

4 comments:

மகேந்திரன் said...

நேர்த்தியான சிந்தனை நண்பரே...
காகங்களை நம் பித்ருக்கள் என எண்ணி
தோசையின் விள்ளல்களை
சிதறி விட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்.....

vimalanperali said...

வணக்கம் மகேந்த்ரன் சார்,நலம்தானே?சிதறிய விள்ளல்கள் நிறைய சொல்லிச்செல்பவையாக/
தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/

ஹேமா said...

”விள்ளல்கள்” புதுச்சொல் எனக்கு.கவிதையின் முழுப்பொருளே இந்தச் சொல்லுக்குள்தான் என உணர்கிறேன் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,
ஒற்றைச்சொல்லுக்குள்
அடங்கி விடுகிற விஷயமும்,
அர்த்தங்களும் நிறையவே/