29 Apr 2012

சருகு,,,,,,,,,


                    
  வணக்கம் மனைவியே,நலம்தானே?நீசொன்ன மாதிரியே குளித்து முடித்து வந்து விட்டேன்.
   மென் நீரின் குளிர்ச்சி உச்சந்தலை தொட்டு முகம் தடவி, உடல் படர்ந்து காலை நனைத்து தரையில் வழிகிற வரை அள்ளி, அள்ளி ஊற்றிக் கொண்டு வந்திருக்கிறேன்.
ஆசைதீர/
  இப்போதுதான் சமீபத்தில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்த போது குளியலறைக்கும் சேர்த்துபூசியமெல்லியகலர்இந்தகரண்ட்இல்லாத நேரத்திலும் பாத்ரூமை வெளிச்சமாகக்
காட்டுகிறது.
  இந்தக்கலரைதேர்ந்தெடுத்தவரும்பெயிண்டைசிறப்பாகபூசியவரும்நீடூடி வாழ்க/
  அந்தநல்லமனங்கள்வேறுயாருமில்லை.நானும்,சார்லஸும்தான்.நான்தேர்வு செய்தவன்,
சார்லஸ் பெயிண்டர்.
   நட்பும்,தோழமையும் மனதில் ஒட்டிப் படர்ந்த நாட்களின் நகர்வுகளை பரஸ்பரம் 25 வருடங்களாகஇருவர்மனதிலுமாகபடரவிட்டுவளர்ந்தவர்கள்.
  இத்தனை இடர்களிலும், வளர்ச்சியிலும், காலமாற்றத்திலும் கூட ஒருவரை ஒருவர் மறக்காமலும்,வெறுக்காமலும், புறந்தள்ளிவிடாமலும் அன்போடும்,நட்போடும், தோழமை
-யோடும்,  பாசத்தோடும்  இருக்கிறவர்களாய்  இதுநாள்வரை  எங்களை  பதிவு செய்து
கொண்டோம்.
   அவரதுபேச்சில்எப்போதும் ஒரு வாஞ்ச்சையும்,வெளிர் தன்மையும் தெரியும்.அதை கருப்புவெள்ளை என்றார்கள்.
  எனது நண்பரும் தோழருமான ஒருவர் கடந்து போன தினங்களில் ஒருநாள் என்னை அப்படித்தான் சொன்னார். “பரவாயில்லை இருந்து விட்டுப்போகிறேன் இப்பொழுது என்ன”?என அப்போதைக்கு அவரது பேச்சின் நீளத்தை கடந்து வந்து விட்ட போதிலும் அவ்வப்போது ஞாபகம் வராமல் இல்லை.
  அப்படி வந்த ஞாபகத்தின் உருவை இப்போது சார்லஸின் மீது இறக்கி வைப்பவனாக நான் இருக்கிறேன்.மெலிதான் பூச்சுமை ஒன்றை இறக்கிவைப்பது போல/     
  ஏன்அப்படிஇறக்கிவைத்தேன்அல்லதுஎதற்குஅப்படிஇறக்கிவைப்பவனாகிப்போனேன்
என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த நிமிடம் வரை விடை இல்லை என்னிடம். அந்த  விடையைத்தேடியும்அலையவில்லைஇதுநாள் வரை.
   அதை ஒருநாள் தர்மசங்கடத்துடன் அவரிடம் சொன்ன போது “நீங்கள் மிகவும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை.
நீங்களும் வருந்த வேண்டாம் விட்டு விடுங்கள்.வாருங்கள் கோல்ட் கடையில் ஒரு டீ சாப்பிட்டு விட்டு கிளம்புவோம்” என்றார்.
ஒருடீ,ஒருவடை,  எண்ணெய்  மினுங்கலுடன்  பளபளத்த வடையை கடைகாரர்சுடுவதில்லை.
வாங்கித்தான் விற்கிறார்.
 “என்னதோழர்இப்படிஎன்றால்இந்தவிலைக்குவேறுஎப்படியிருக்கும் என்பார்.
 நன்றாகவும் ருசியாகவும்தான் இருக்கும்சாப்புடுகிற நேரத்தில்.உளுந்த வடையில் கண் காணாமல் போயிருக்கும் உளுந்து போலவும் பதிலுக்கு ஏதேதோ மாவால் செய்த உருண்டை போலவுமாய்இருக்கிறஅதைஎடுத்துஒருகடிஒருகுடிஎன்கிறரீதியில் டீயும்,வடையும் மாறி மாறி
தவணைமுறையில் உள்ளே போய்க்கொண்டிருக்கும்.
  சமயத்தில்பேச்சு,பராக்கில்வடையின் எண்ணிக்கைஇரண்டு மூன்றாகிக்கூடப்போகும்.
  “நல்லாயில்லையின்னா  எடுத்து  தின்பாங்களா?”  என்கிற  டீக்கடைக்காரரின்  அந்த
நேரத்தைய எதிர்கேள்விக்கும் கிண்டலுக்குமாய் அந்நேரம் விடையளிக்கமுடிவதில்லை.
  குடித்த டீக்கும்,கடித்த வடைக்குமாய் காசு கொடுத்து விட்டு பெயிண்டர் சார்லஸை விட்டு நகரும் போது ஏதோ ஒரு மோனம் என்னை போர்த்திக்கொள்ளும்தான்.
  இது அவரை சந்திக்கிற அனேக கணங்களில் நடக்கிற நிகழ்வாகவே இருக்கிறது என்னுள்/
   அப்படியான மோனத்தை எந்த லோட் ஆட்டோவிலும்,மினி வேனிலுமாய் ஏற்றாமல் மனதில் ஏற்றிக்கொண்டு வந்து விடுவேன் பல்லை கடித்தவாறும்,எனது இரு சக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை இறுகப்பற்றி திருகியவாறுமாய்/
   இரண்டுடப்பாக்களிலும்பச்சைநிறசோப்புகளேதேய்ந்த கட்டிகளாய் காட்சியளித்ததால் எனது சோப் எது,உனது சோப் எது என தெரியவில்லை.எடுத்துப்போட்டு தேய்த்து குளித்து விட்டு வந்துவிட்டேன்.
  உடலில்தேய்க்கும்போதேவழக்கமாகஅடிக்கிறவாசனையைவிடஇதுமாறுதல் பட்டுத்
தெரிந்தது.அப்போதேதட்டியலேசானசந்தேகம்இப்பொழுதுஊர்ஜிதப்பட்டுப்போனது உனது பேச்சில்.
  “வலதுபுறடப்பாவில் இருந்தது எனது சோப் என எத்தனைதடைவை சொன்ன போதிலும் கூடமறந்து போகிறீர்கள் நீங்கள் அப்படி என்னதான் நினைப்போ”?,என்கிற பேச்சுடன் நீ பொய் கோபம் காட்டி நிற்கிற  போது கூட அழகாய்த்தான் இருந்தாய் பார்ப்பதற்கு.
    அப்படியான  பொய்கோபமும்,  சிணுங்கலும்  எப்போதும்  உன்னை  வாஞ்சை
மிகுந்தவளாகவே  காட்டிக்கொண்டிருக்கும் .   சமயத்தில் கருப்பு வெள்ளையாகவும்/
  குடும்பமே கறுப்பு வெள்ளையாக ஆகிப்போன அதிசயமும்,மாயமும் ஒரு சேர நிகழ்கிற அதிசயத்தை நிகழ்த்துபவளாக/
  இப்படியேஊருக்குள்போய்சின்னதாகஒருசர்வவேஎடுத்தால்கறுப்பு வெள்ளைக்
குடும்பங்கள் நிறைந்து காணப்படும்தான் போலத்தெரிகிறது.அப்படி காணப்படுவதால் யாருக்குஎன்னநஷ்டமெனதெரியவில்லை,அப்படிப்பட்டவர்களை இகழ்ச்சியாகப்
பார்ப்பதும்,பிழைக்கத்தெரியாதவர்கள்,இழித்தவாயர்கள்,அப்புராணிகள்,அம்மாஞ்சிகள்,,,,,,,,,,எனவுமாய் சிறப்புப்பட்டங்கள் கட்டிபழித்து  நேர்ந்து விட்டு விடுவதும் இந்த இந்த சமூக வெளியில் நடக்கும் கொடூர நிகழ்வாக/
   இப்படியான வெளியை நிறைத்திருந்தவர்களின் கூடுதலாகிப்போன எண்ணிக்கை இந்தவெளியை  நிறைக்க,,,,,,  நிறைத்த  வெளியில்  நின்றவர்களது மனோநிலையும்,
நில்லாதவர்களின்மனோநிலையும்ஒன்றோடுஒன்றுஒட்டிதராசுதட்டில்வைத்துப்பார்க்க முரண்
சரிபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
கறுப்பு  வெள்ளையாக  சொல்லப்படுபவர்கள்  கீழ்த்தட்டாகவும்,  அப்படியல்லாதவர்கள்  மேல்
தட்டாகவும் பார்க்கப்படுகிறார்கள்.
 அது அப்படியல்ல.தவிரவும் தராசுகள் எப்போதும் மேலே தூக்கியும், கீழே இறக்கியுமாய் மட்டும் காண்பித்துக்கொண்டிருப்பதில்லை.
 நீ சொன்ன மாதிரியே காலையிலிருந்து சொல்லிச்சொல்லிச்சொல்லி பிடித்து  பாத்ரூமிற்குள் தள்ளி விடாதகுறையாக அனுப்பிய பின் இப்போது குளித்து முடித்து விட்டு வந்திருக்கிறேன் எனது அருமை மனைவியே/

17 comments:

 1. வித்தியாசமான சிந்தனை
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் சிந்தனையும் தலைப்பும் எப்போதும் மனம்கவரும் விதமாகவே அமைகிறது. அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் தலைப்பு அமைவது அருமை.

  ReplyDelete
 3. வணக்கம் விச்சு சார்.நலம்தானே?தலைப்பு மட்டுமல்ல.எல்லாமே சமூகம் சொல்லிக்கொடுக்க எழுதுகிறவர்களாய் நாம்/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும்/எல்லாமே சமூகம் காட்டுகிற வித்தியாசங்களே/

  ReplyDelete
 5. நலம் தானே..நிறைய நாள் கழித்து சந்திக்கிறோம்...
  மாறுபட்ட கோணம்..வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நலம் தானே..நிறைய நாள் கழித்து சந்திக்கிறோம்...
  மாறுபட்ட கோணம்..வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?சந்திப்பின் இடைவெளிகளில் கடந்துப்போன நிமிடங்கள் நிறையவே.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. முதல் தடவை படித்தபோது என்னால் சரியாக உணர முடியவில்லை.மீண்டும் படித்தேன். பலவிஷயங்களை உள்ளடக்கியதாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். கருப்பு வெள்ளை எனக்கும் தொடர்புடையது போல் தோன்றுகிறது. நன்றி.நல்ல பதிவு.

  ReplyDelete
 9. தொடர்ந்து பார்த்ததை,கேட்டதை எழுத்தாக்கி படிப்பரை மகிழச்செய்யும் சிட்டுகருவி விமலன் சார்க்கு மே தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வணக்கம் வேல் முருகன் சார்.நலம்தானே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. வணக்கம் முரளிதரன் சார்.நல்ம்தானே?கருப்பு வெள்ளைகளாக காட்சிப்படுபவர்கள் இந்த சமுதாயத்தில் ஏதும் தீங்கு விளைவித்து விடப்போவதில்லை.நன்றி தங்களாது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 12. வாழ்வில் நடு நடுவில் வந்துபோகும் கருப்பு வெள்லையும் ஒரு அழகுதான் !

  ReplyDelete
 13. வணக்கம் ஹேமா மேடம்.கறுப்பு வெள்ளையை ஏற்றுக் கொள்ளாத மனோநிலையே இங்கு பேசு பொருளாய் தெரிகிறது.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. வணக்கம்.இளமதி மூலம் உங்களின் வலைத்தளம் அறிந்தேன் .மிகவும் அருமை.கண்களுக்கு குளிர்ச்சியாக இன்னமும் மழைத்தோரணம்.வாழ்த்துக்கள் .நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா அவர்களே,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 15. அன்புள்ள அய்யா திரு.Vimalan Perali அவர்களுக்கு,

  வணக்கம். சருகு
  சமயத்தில் கருப்பு வெள்ளையாகவும்
  குடும்பமே கறுப்பு வெள்ளையாக ஆகிப்போன அதிசயமும்,மாயமும் ஒரு சேர நிகழ்கிற அதிசயத்தை நிகழ்த்துபவளாக
  இப்படியேஊருக்குள்போய்சின்னதாகஒருசர்வவேஎடுத்தால்கறுப்பு வெள்ளைக்
  குடும்பங்கள் நிறைந்து காணப்படும்தான் போலத்தெரிகிறது.அப்படி காணப்படுவதால் யாருக்குஎன்னநஷ்டமெனதெரியவில்லை,அப்படிப்பட்டவர்களை இகழ்ச்சியாகப்
  பார்ப்பதும்,பிழைக்கத்தெரியாதவர்கள்,இழித்தவாயர்கள்,அப்புராணிகள்,அம்மாஞ்சிகள்,,,,,,,,,,எனவுமாய் சிறப்புப்பட்டங்கள் கட்டிபழித்து நேர்ந்து விட்டு விடுவதும் இந்த இந்த சமூக வெளியில் நடக்கும் கொடூர நிகழ்வாக.....
  சித்தரரித்து இருப்பது அருமை. பாராட்டுகள்.
  எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
  -மாறத அன்வுடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மணவை ஜேம்ஸ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   இதோ புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்
   தங்களது பக்கத்திற்கு/

   Delete