1 May 2012

கொழுந்து,,,,,,,,, படக்கெனவோ, அவக்தொவக்கெனவோ எடுத்த முடிவோ அல்லது நின்று நிதானித்து யோசித்து நீ என்ன சொல்கிறாய்,நான் என்ன சொல்கிறாய்,நான் இது சொல்கிறேன்,நீ இது சொல்.நான் அது சொல்கிறன்.நீ அரிசி போடு, நான் உமி போடுகிறேன்.இப்படி செய்தால் அப்படி விரியும்,அப்படி செய்தால் இப்படி விரியும் என எடுக்கிற செயலின் படப்பிடிப்பை யாரிடம் போட்டுக்காட்டினாலும் நாம் பதிவு செய்து காட்டியது ஒன்றாகவும்,அதை பற்றிய கருத்து வேறொன்றாகவுமே  வருகிறது பெரும்பாலும்.
   22 வயது பெண்ணிடம் இரண்டாம் தாரம் வைத்துக்கொள்வதைப்பற்றி பேசும் அதிகாரிகள் சூழ்ந்த அலுவலககங்கள் சூழ்கொண்ட இடத்தில் நம் விரிக்கிற கருத்துகளுக்கு இது மாதிரியான புஸ்வாண கருத்துக்கள் வெளிப்பட்டு தெரிவது தவிர்க்கவியலாததாகவும்,சகஜமானதாகவுமேபடுகிறது.
   நான் ஒன்று சொல்லி ,நீ ஒன்று கேட்டு ,அவர் ஒன்று சொல்லி ,,,,,,யப்பப்பா போதும்,போதும் என முடியைபிய்த்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல், பலரிடம் கேட்டு உழப்பாமல் எடுத்த முடிவே அது.
 வீட்டு கொல்லைப்புரத்தில் உள்ள மரத்தை வெட்டி விடலாம் என்கிற மிகப்புனிதமான முடிவே அது.மரம் வளர்க்கச்சொல்லி அரசும்,இதர அமைப்புகளும் சொல்லி வலியிறுத்துகிற நேரத்தில் மரம் வெட்டுவதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
 ஒரு நாள் காலையில் விடிந்தெழுந்து முகம் கழுவும் போது அண்ணாந்து மரத்தை பார்க்கையில் அது தன் ஆகுருதி காட்டி என் கண்ணில் பட்டு சிரிக்கிறது.
 கிட்டத்தட்ட 5 வருட வளர்ச்சியை தன்னில் ஒட்ட வைத்துக்கொண்டு சிரித்து நிற்கிற மரமாய் அதுதெரிகிறது.
 முதலில் ஒரு மரம் என்று மட்டும் பட்டியலிலிருந்தது மரங்களாக மாறிப்போகிறது காலப்போக்கில்/
 “இது எதற்கு அதை வைத்துக் கொண்டு சுத்தம் செய்து முடியவில்லை.அது செரிகிற பூக்களும்,இலைகளும்,இன்னபிறவையும்கொஞ்சம் தொந்தரவு பண்ணுகிறது,சமயத்தில் அதிகமாவே/கூட்டிஅள்ளிக்கொட்டிமுடியவில்லை”என எனது மனைவி புலம்புவதையும் இந்த நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
   இதுஎன்மனைவியின்புலம்பல்மட்டுமில்லை.பெருபாலானவீடுகளில்இருக்கிற பெரும்
-பாலான மனைவிகள்தங்களதுகணவரிடமும்,பிள்ளைகளிடமும்புலம்புகிறபுலம்பல்தான்.
   நன்றி.வணக்கம்.இந்தஇடத்தில்இதையும்கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது.
கணகில் கொள்ளாவிட்டால் நிலைமைகள் அவ்வளவு சீராக இருக்காது.
  நட்டு வளர்த்து,துளிர்த்து,கிளை விரித்து தன் உயரம் காட்டி நிற்கிற மரங்கள் அவைகள்.
 பூவும்,பிஞ்சும் காயுமாய் தன் பரப்பும்,உயரமும் காட்ட்டி அண்ணாந்து பார்க்கச்செய்த மரங்களில்இரண்டுவேம்பு,இரண்டுபன்னீர்மரங்கள்எனபட்டியலிட்டு நின்றது.
  சின்னவள்குழிபறித்தாள்.பெரிய மகள்நட்டாள்.எனதுமனைவிதண்ணீர் ஊற்றினாள்.
நான்அதைஒழுங்குசெய்துவட்டக்குழிபறித்துஉரமிட்டேன்என்கிற வார்த்தைகளையும்,
சொற்கட்டுகளையும்தன்னகத்தே உள்ளிழுத்து வளர்ந்து நிற்கிறது அவைகளும்/
  “பிறந்து வளர்ந்து தவழ்ந்து சுவர் பிடித்து எழுந்து நிற்கிற மனிதனைப்போலதானே நாங்களும்” என அவைகள் எங்களைப்பார்த்துபேசுவது போலவும்,இறைஞ்சுவது போலவுமாய் தெரிகிறது.
 இரண்டு வேம்பு,இரண்டு பன்னீர்மரங்கள்.வேம்பில் ஒன்று பருத்து உருண்டு திரண்டு தெரிந்தது.அதுவேகிளைபரப்பிமேல்வெளியைஅடைத்தும்,வேரோடி தரையைப்
பிளந்துமாய் தெரிந்தது
   இன்னொன்றுநறுங்கிவளர்ச்சிகாட்டாமல்அப்படியேதரையில்உள்ளிழுத்துக்கொண்டு
 நின்றது.
 பன்னீர் மரங்கள் இரண்டும் பூப்பூத்து புதிதாய் இலைதுளிர்த்து புது வாசத்துடன் தன்னை அடையாளம் காட்டி நின்றது.
 ஆனால் நான்கும் தன்நிலை காண்பித்து தன்னகத்தே அடைய வரும் பறவைகளையும்  ஊர்ந்து திரிந்த  எறும்புகளையும்  புழுப்பூச்சிகளையும்  அடைகாத்துக்
கொண்டும் உள்ளிழுத்துக்கொண்டுமாய் நின்ற மரங்கள் அவைகள்.
   அவைகளை  வெட்டிவிடலாம். இனிமேலும் வைத்திருந்தால் தரை துளைத்து பலம் காட்டும் வேர்கள் தன் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள வீட்டின் அஸ்திவாரத்தை துளைத்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
 இப்போது மரத்தை சுற்றியுள்ள சிமெண்டு தரை பாலம்,பாளமாக பிளவுண்டு காணப்படுவதுபோல நாளை அஸ்திவாரமும் துளைக்கப்படலாம்.இப்படி வெடிப்புறுக்கிற பாளங்களாய் ஆகிப்போகலாம்.
 தவிர கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் போர் வேறு இருக்கிறது.போர்க்குழியில் வேர் நுழைந்து விட்டால் அப்புறம் நம் பாடு கொஞ்சநஞ்சமல்ல படுசிரமமாய் ஆகிப்போகும்.
  அதெல்லாம்எதற்குவம்புஎனத்தான்இப்படிஒருமுடிவைஎடுக்கவேண்டியதாகிப்
போகிறது.
   இதுநாள் வரை மரத்தை சுற்றி விளையாடிய பிள்ளைகள்,மரம் சுற்றி பறந்து கூடு கட்டி,குஞ்சுபொரித்து தன் இனத்தை பெருக்கிகொண்ட பறவைகள்,அதன் இலைகளை சாப்பிடஓடோடிவரும்ஆடுகள்எல்லாம்இனிஎங்கேபோகும்என தெரியவில்லை.
இருந்தாலும்அதைவெட்டத்தான்வேண்டியிருக்கிறது.வெட்ட வெட்டத்தானே    
  தழைக்கும் என்கிற வாசகத்தை என்னில் தாங்கி அந்த இடத்தை விட்டு   
 திரும்பிய போது குழந்தைகள் இரண்டு விளையாடுவதற்கு மரத்தை நோக்கி  
 விளையாட வந்து கொண்டிருந்தார்கள்.     

4 comments:

 1. உண்மே பேசும் கொழுந்து

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வேல் முருகன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. ஒரு மரத்தை வளர்ப்பது எவ்வளவு கஸ்டம்.தறிக்க சொற்ப நிமிடம்தான்.பாதிக்கப்படுவது எத்தனை உயிகள் !

  ReplyDelete
 3. வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete