1 May 2012

அட்சதை,,,,,,,,,

காதோரம் இறங்கிச்சரிகிற உனது கூந்தல் முடியின் கடைசி இழையை 
பார்த்து மயங்கியிருக்கிறேன். அதன் காரணமாகவே ரசித்தும் இருக்கிறேன்.
  அது போலவே உனது கரு விழியைகளையும்,கரு விழிமூடும் இமைகளையும்,இமை சுமந்து நிற்கிற மென் முடிகளையும்,முடி காட்டிய அடர்த்தியையும் பார்த்து ஆச்சரியம் கொள்ளவும்,அசந்தும்  போய் இருக்கிறேன்.
உனதுமூக்கின்நீளத்தில்எனதுமனதைகட்டிபடுக்கவைத்துமிருந்திருக்கிறேன்.உனது பற்களின் அழகும், அதை உள்ளடக்கியிருந்த வாயும்,உதடுகளும் அடையாளத்தின் சின்னமாக/
   நான்  உனது  முக  அசைவை  வெகுவாக  ரசித்திருக்கிறேன்.  நான்  உனது  உதடு
உச்சரிப்பையும்,அதிலிருந்து வெளிப்படுகிற சொல் அசைவையும்  ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
 சமயத்தில் உனது உதடுகளிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளை கேட்க  நீளமாக காத்திருந்திருக்கிறேன்.
அப்புறமாய்உனதுசேலைக்கட்டலைஅதற்குபொருத்தமானநிறத்தில்சட்டை உடுத்துவதை,
உன்நடையசைவை,உடலசைவைநீநடப்பதை,நீதிரும்புவதை,நீபார்ப்பதை
உனது  அசைவை, முகந்திருப்பலை உனது முன்னழகை,பின்னழகை என எல்லாமும்  ரசித்துள்ளேன்.
  மொத்ததில் உன்னை அனுஅனுவாக ரசிக்கிற பித்தனாக இருந்திருக்கிறேன் அனுதினமும்/
 உன்னை ,உனது அழகை ,உனது நடையை,உனது அசைவை என எல்லாவற்றையும் ரசித்திருக்கிறேன்.அதற்குகட்டுண்டுகிடந்திருக்கிறேன்.எனதுவீட்டின்நடையிலிருந்து பக்கவாட்டாக இடதுபுறம் திரும்பிப்பார்த்தால் சில தப்படி தூரத்தில் தெரிந்த உனது வீட்டின் வாசற்படியைநேரம் கிடைக்கும் போதெல்லாம் உற்று  நோக்கியிருக்கிறேன்.
 வாசல் தாண்டி விரியும் ஹால்,ஹாலில் தெரிகிற ஏதாவது ஒன்றில் உன் முகம் அல்லது உனது உருவம் தாங்கிய பெண்ணுரு தட்டுபட்டு விடாதா?அசைவு ஏதேனும் தெரியுமா?என தவமாய் தவம் கிடந்திருக்கிறேன்.உன்னைப்பார்க்க வேண்டி/
  காலையில் நீ முகம் கழுவுவதிலிருந்து காட்டுக்கு வேலைக்கு செல்வது வரை உன்னை என் பார்வை  தொடர்ந்திருக்கிறது.அந்த பின் தொடர்வு முன் தொடர்வாய் உனது பாதங்களை இடறுகிற அளவிற்கு நீ எட்டெடுத்து வைக்க முடியாமல் சுற்றியிருக்கிறது.
 உனதுஒவ்வொருஅடிக்கும்எனதுநினைவுஒருபூவாய்மலர்ந்திருக்கிறதுமலர்ந்த பூக்களிலிருந்து வீசிய நறுமணம் நீவேலைக்கு செல்லும் காடு ,தோட்டமென எதுவரை பரவி நிற்க முடியுமோ அதுவரை தன்னை அடையாளம் காட்டி நின்றிருக்கிறது.
  நீயும் அப்படித்தான் உனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறாய் என பின் நாட்களில் அறிந்தேன்.
  அப்போது உனக்கு 18 அல்லது  19 இருக்கலாம்.எப்படியோ யார் மூலமாகவோ உனது வயதை பூடகமாக அறிந்து கொண்டேன்.அது அப்படித்தான் காதலின் சக்தி போலும் அது.எனக்கு 23 கடந்து24ஐஎட்டி தொடப்போகிற வயது.உடலில் நிமிர்வும்,மனதில் திமிரும் குடிகொண்டிருந்த வயது.
  இதில் எனது வேலை,எனது சம்பாத்தியம்,எனது பிண்ணனி  எல்லாம் உன் மேல் கொண்ட காதலால் ஒன்றுமற்றுத்தெரிந்தது.
   நீயும்உழைப்பின்வாசைனைநுகர்ந்துவளர்ந்தகுடும்பத்தில் ஒருத்தியாய்/
  பிழைப்பு,பிழைப்புஎனபிழைப்பை நோக்கியும், அன்றாட கஞ்சி பாட்டை நோக்கியுமாய் இருந்த உனது நகர்வுகளில் எனது காதல் உன்னை போர்த்திய பூங்க்கொத்தாக/
  இப்படியான ஓட்டத்தின் வேகம் திகிடுதிம்பாக ஆகிய நாட்களில் அன்று உன்னிடம் நானும்,என்னிடம் நீயுமாய்  சொல்ல மறந்த காதல் வாழ்நாளின் நகர்தலில் உன்னை வேறொருவனுக்கு மனைவியாகவும்,என்னை வேறொத்திக்கு கணவனாகவும் ஆக்கி பதியனிட்டு சென்று விட்டது.
 காலம் கிழித்துப்போட்டு பதியனிட்டு சென்று விட்ட வெவ்வேறு பக்கமான நம் ஒன்றினையாத காதல் இன்று வெவ்வேறு திசைகளில்கூடு கட்டி மென் உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.வாழட்டும் நன்றாக.வாழ்வோம் நன்றாக.
தினங்களைகொண்டாடுவதையும்அதைஅர்த்தமற்றுஎதிர்ப்பதையும்  விடுத்து
பரஸ்பரம் இருவர் மனதிலும் இன்னும் குடி கொண்டுள்ள  காதலை
கொண்டாடுவோம். காதல் வாழ்க/  

10 comments:

 1. மிக அருமையான சோக உணர்வின் வெளிப்பாடு

  ReplyDelete
 2. உனதுஒவ்வொருஅடிக்கும்எனதுநினைவுஒருபூவாய்மலர்ந்திருக்கிறதுமலர்ந்த பூக்களிலிருந்து வீசிய நறுமணம் நீவேலைக்கு செல்லும் காடு ,தோட்டமென எதுவரை பரவி நிற்க முடியுமோ அதுவரை தன்னை அடையாளம் காட்டி நின்றிருக்கிறது.
  அழகான வரிகள் ரசிக்கும் படி தந்த விதம அருமை.

  ReplyDelete
 3. வணக்கம் பாலா சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. இப்படி சொல்ல மறந்த- சொல்லத் தயங்கிய காதல் எத்தனையோ உண்டு.
  அதை இப்போது அழகாக சொல்லிருயிக்கிறீர்கள். அருமை.

  ReplyDelete
 6. உங்கள் பதிவு எனக்கு எதை எதையோ நினைவூட்டுது போங்க..

  ReplyDelete
 7. வணக்கம் சதீஸ்பிரபு சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. வணக்கம் முரளிதரன் சார்,நல்ம்தானே?நன்றி தங்களது வருகைகும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. காதலின் நினவு இறக்கும்வரை.நினைவுகளை ஆழத்தில் புதைத்துவிட்டு இன்னொருவருடன் வாழ்வது கொடுமையிலும் கொடுமைதானே விமலன் !

  ReplyDelete
 10. வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete