9 Jun 2012

சிதறல்,,,,,,,,



சிதறிக்கிடந்த அரிசி
பத்து கிலோவிற்கும்
குறையாமல் இருக்கலாம்.
அரிசியும்,மண்ணும்,
அழுக்கும்,புழுதியுமாய் சேர்த்து/
புகை வண்டி நிலையத்தில்
சரக்கு வண்டிகள் நிற்கிற
இருப்புப்பாதை ஓரத்தில்
சிதறிக்கிடந்த அரிசி
மூட்டைகளுள் குடிகொண்டிருந்த
போது அங்கிருந்து ஏற்றுமதியானதா
அல்லது எங்கிருந்தாவது
இறக்குமதியானதா தெரியவில்லை.
எத்தனை பேரின் கைகள்
அந்த  மூட்டைகளை ஏற்றவும்,
இறக்கவும் செய்ததோ
என்பதும் விளங்காமலேயே/
வேர்வைக்கோடுகள்
உடலில் பதிய மூட்டைகளை
சுமந்தவர்களின் வீடுகளில்
இன்றிரவு பொங்கிச்சாப்பிட
அரிசி இருக்குமா என்பது கேள்விக்குறியே/
சிதறிக்கிடந்த அரிசி
பத்து கிலோவிற்கும்
குறையாமல் இருக்கும்.
தூசியும்,மண்ணும்,
அழுக்கும்,புழுதியும் சேர்ந்து/  

7 comments:

முத்தரசு said...

ம்.... சிதறித்தான் கிடக்குது

விச்சு said...

மனசும் அதையே நினைக்குது. சிதறும் அரிசிகூட வீட்டில் இல்லையே.

vimalanperali said...

நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக மனசாட்சி தோழர்.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.சிதறிக்கிடப்பது அரிசி மட்டுமா?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

பறவைகளுக்கு உணவாக மாறினால் நல்லது.

vimalanperali said...

வணக்கம் வேல்முருகண் சார்.ஒரு படைப்பு பலவிதங்களில் கருத்துக்களை உருவாக்குகிறது.பறைவகளுக்கு உணவானால் நல்லது என்கிற சிந்தனை கவிதை எழுதும் போது எனக்கு எழவில்லை. நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராமலட்சுமி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/