18 Jun 2012

மண்துளைத்து,,,,,,,


                  
  ஏற்பட்ட பிரமிப்பு உள்ளின் உள் சென்று வெகு நேரம்வரை அகலாமலேயே/
 மடக்கிக்கட்டப்பட்டிருந்த சுவர்களுக்குள்ளாக பொதிந்திருந்திருந்ததை வீடென சொல்லலாம்.
 ஆனால் அவர் காட்டி சென்றதை.சொர்க்கம் அல்லது அதற்கு ஈடான வார்த்தைகளில்  வர்ணிக்காவிட்டாலும்கூடஅதுஏற்படுத்திசென்றுவிட்ட தாக்கம் அல்லது  வியப்பு,,,,,,,,,,,,,
சமையலறை,ஹால்வரவேற்பரைஇன்னபிற என தனக்குள் பொதிந்திருந்ததை  பார்க்க எனக்குள் எழுந்து விட்ட ஆவல் எல்லாம் ஒன்றும் பெரிதாக காரணம் இல்லை.
அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது “உங்களது வீடிருப்பதாய் சொல்கிற ஏரியாவை தினசரி நான் கடந்து போய் வருகிறேன்.ஆனால் உங்களது வீட்டை நான் பார்த்ததில்லை” என்றேன்.
 சொன்னதுதான் தாமதம்.”வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்றார்.நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ?சே,மிகவும் தப்பு செய்து விட்டேன்.என மூளையை அழுந்திக்கடிந்து கொண்டவனாக வேறொன்றும் சொல்லாமலும், அதை தவிர்க்க இயலாமலும் அவர் பின்னால் செல்கிறேன்.
 பரஸ்பரம்  இருவருமாய்  அவரவரது இருசக்கரவாகனத்தில் பயணிக்கிறோம்.
அவர்முன்னால்,நான்பின்னால்,,,,,,,,எனக்கு ஏரியா தெரியாதல்லவா?நல்ல மனிதர்.விசாரித்த விலாசத்தையும்,விலாசம்குடிகொண்டிருக்கிறஇருப்பையும்காண்பிக்க கைபிடித்து
(மன்னிக்கவும்,வாகனம்தொடர)அழைத்துப்போகிறாரே,வாழ்க வளமுடன்/
 நேராகப்போய் வலது ,இடது எல்லாம் கட் பண்ணி வளைந்து அவரது வீட்டைத் தொட்டோம்.
  மூடி வைத்திருந்த பெரிய கருப்புவர்ண  கேட் எங்களை வரவேற்க திறந்தால் சிவப்பு நிறத்தில் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த முன் வெளி வராண்டாவாய் விரிந்து வீட்டு நடை வரை உள்ளிழுத்துப்போனது.
  ஒன்று,இரண்டு,மூன்று என நான்கு படிகள் வைத்து நடை.நடையை ஒட்டி ஒரு சதுர மடக்கு.மடக்கை கடக்க நினைத்தால்கதவு பூட்டியிருக்கிறது.வீடு பூட்டியிருக்கிறது.
 இது கீழ் வெடு சார்,ஒத்திக்கு விட்டுருக்கேன் என்றார்.அதிலிருந்து கஷ்டப்பட்டு பெயர்த்தெடுத்த பார்வையை பரப்பிய வெளியில் வளைந்து ஏறிய படிகள் கைகாட்டி எங்களை அழைத்துக்கொண்டு போனது.
 சில்வர் கம்பி பிடிபோட்டிருந்த ஏணிப்படிகளில் அவரை நான் தொடர அவர் எனக்கு முன்னால் செல்ல அமைதியாக எங்களது பயணம்(?)நீ,நான்,நிலா,,,,,,,என்பது போல/
  படியேறி,படியேறிபடியேறிசென்றபரப்புவீடாகவிரிந்துகாட்சிப்பட்டது.மடக்கிக்கட்டப்பட்டிருந்த சதுரப்ப்ரப்புக்குள் உள்ளடங்கியிருந்த வீட்டை ஒவ்வொரு அறையாக சென்று சுட்டிக்காட்டினார்.
 மனித உழைப்பு கைபட்ட பூமி  இப்படி அழகு உருவாய் கம்பீரித்து  நிற்கிறது.நேற்று வரை இந்த பூமியில் என்ன இருந்தது என தெரியவில்லை.எது விழைந்தது எனவும் புரியவில்லை.யார்,யாருக்கெல்லாம்இந்தபரப்புசோறிட்டது என்பதும் விளங்கவில்லை.
இதுபடுக்கையறைஇதுசமையலறை,இது படிப்பறை,இது,இது,இது,இது,,,,,,,,என 
அவர் அழைத்து காண்பித்துச்சென்ற இடங்களிலெல்லாம் காட்சிப்பட்ட எல்லாவற்றையும் பார்க்க தவறியவனாகி அந்தவீட்டின் அழகிலும், அதுகட்டப்பட்டிருந்த  விதத்திலும்,அலங்கரிக்கப்பட்டிருந்த பாணியிலுமாக மனம் சொக்கி நிற்கிறேன்.
 அவர் சொன்ன வார்த்தைகள் பாதி காதில் விழுக,மீதி காற்றில் கறைய மீண்டும்,மீண்டுமாய் வீட்டின் அழகிலும் அலங்கரிப்பிலுமாய் மனம்பறிபோக/
“நல்ல மனிதருக்கு நன்றாக ஒரு   வீடு கைவரப்பெற்றிருக்கிறது.வீடு என்பது செங்கலும்,செமிண்டும்,மட்டுமல்லவே,மனித உணர்வும் கலந்ததுதானே?
 அவரது உணர்வு அந்த வீட்டில் கலந்திருந்தது.என முற்றுப்பெற்ற வார்த்தைகளுடன் இது மாதிரியானதொரு வீட்டை என் வாழ்நாளில் இது வரை கண்டறிந்த அனுபவமோ,அதில் வாழ்ந்து பழகிய நாட்களின் நகர்வுகளோ என்னுள் இல்லை என விடை பெற்று வருகிறேன் அவரிடமிருந்தும்,அவரது குடும்பத்தாரிடமிருந்தும்/    


11 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//“நல்ல மனிதருக்கு நன்றாக ஒரு வீடு கைவரப்பெற்றிருக்கிறது.வீடு என்பது செங்கலும்,செமிண்டும்,மட்டுமல்லவே,மனித உணர்வும் கலந்ததுதானே?//
உண்மைதான்.
உங்கள் வருணனை அருமை.

சசிகலா said...

அவர் சொன்ன வார்த்தைகள் பாதி காதில் விழுக,மீதி காற்றில் கறைய மீண்டும்,மீண்டுமாய் வீட்டின் அழகிலும் அலங்கரிப்பிலுமாய் மனம்பறிபோக/// கவித்துவமான வரிகள் அழகு .

ராமலக்ஷ்மி said...

மனித உணர்வும் கலந்தால்தான் அது வீடு. அருமையான ஆக்கம்.

விச்சு said...

கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் நிச்சயம் அன்பும் மனித நேயமும் குடியிருக்கும்.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,மனித நேயம் வாழ்கிற் இடங்களில் வீடும் ஒன்றாக/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராமலஷ்மி மேடம்.நிலைகொண்டிருக்கிற வீடு ஏதோஒன்றை சொல்லி சென்றவாறு/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் முரளிதரன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.வரிகளில் அடங்கியுள்ள வாழ்க்கை எதையும் தூக்கிப்பேசவும்,அமுக்கிவைக்கவுமாய்/
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/