பஸ் நிற்கிறது. இறங்கிச் செல்கிறாள் யுவதி ஒருத்தி. காலில் கொலுசும், கையில் வளையலுமாக/
வலதுகையில் இரட்டைவலையல்சேர்ந்தாற்ப்போலஇடதுகையில் சின்னதாய்
தெரிந்தவாட்ச்காலில் இருந்த கொலுசு கண்ணுக்குத் தெரியவில்லை. சலங்கை
கள்அதிகமாகஇருந்திருக்கவேண்டும்போலசப்தம்அதிகமாகக் கேட்டது.காலில் அணிந்திந்த செருப்பு200ரூபாய்க்கும் மேல் இருக்க வேண்டும் தலையை படிய
வாரிசடைப்போடாமல்குதிரைவாலாய்விரித்துவிட்டிருந்தாள்.நெற்றிக்குஇட்டிருந்தாள்.
லிப்ஸ்டிக்ஒன்றும்அவ்வளவுதூக்கலாகத்தெரியவில்லை.இப்படியிருந்தாலேஒப்பனைகளும்,அரிதாரங்களும் ஓகேதானே?
தலையில் வாடிப் போயிருந்தபூ,மல்லியோ,பிச்சியோ தெரியவில்லை,கலர் வெள்ளைகழுத்தில்மெலிந்துதொங்கியஒற்றைச்செயின் அவளில் படிந்து படர்
ந்து/
கருப்புப்புடவையும்அதற்குபொறுத்தமானகலரில்ஜாக்கெட்டும் அணிந்திருந்தா
ள்,பப்புக்கைவைத்துதைப்பதெல்லாம்இப்போது"அவுட்ஆப்பேஷன்”ஆகிப்போனதுபோலும்அடுத்ததெருமாமிஅவனதுவீட்டுக்காரியிடம்சொல்லியிருக்கிறாள்.
“அத எவடி போட்டிக்கிட்டு அலைவா? என்னமோ பப்பாயிங் அடிக்கிற மாதிரி.
குட்டக்கைதான்போட்டுக்கிட்டுஇருக்கேன்,ஊரோடஒத்துப்போயிரணும் கேட்டி
யா?என்றாளாம்.
அது பார்த்தால் முன்னால் கை இறக்கமாக அணிந்திருந்தவர்களுக்கு அந்த இடத்தில் கையில் தடம் விழுந்து இப்போது கைஏறிஅணிகையில் துண்டாகவும்
அசிங்கமாகவும் தெரிகிறது அது போலத்தான் அவளுக்கும் தெரிந்தது.
கையெல்லாம் முளைத்துத் தெரிந்த மென்முடிகள் வேறு துருத்திக்கொண்டு.
நிறைய இல்லாமல் கொஞ்சமாக இருந்தாலும் அதன் வெளிப்பாட்டுக்கு குறைவில்லை.
சாதாரண மென்மை பூத்த பெண்ணாய்த்தான் இறங்கிப் போகிறாள்.
பங்கஜம் அத்தையின் பெண்இப்படித்தான் இருப்பாள்.அவள் கொஞ்சம் சிவப்பு.
இவள் கொஞ்சம் கருப்பு.அவள் கொஞ்சம்உயரம்,.இவள்கொஞ்சம்உயரம் கம்மி.
அவள் கொஞ்சம்அழகாயிருப்பாள்.இவள் மேக்கப்போட்டிருந்தாள். அவள் ஒல்லியாய், இவள் வாடலாய்.இவள் கொஞ்சம் புஷ்டியாகவும் சதை
போட்டுமாய்/
அவன் அங்கு வந்த போது மாலை மணி 6.00 இருக்கலாம்.எந்த வண்டிக்காக கேட் அடைத்திருந்தார்கள் எனத்தெரியவில்லை.அனேகமாக செங்கோட்டை பாஸஞ்சராக இருக்க வேண்டும்.செங்கோட்டை பாஸஞ்சரும் பாஸ்கரனும் என ஒரு சொல் உதிக்கும் அந்த வண்டியை பார்க்கிறகணங்களில்/அதன்தட,தட
சப்தங்களில்பாஸ்கர்,பாஸ்கர்,பாஸ்கர்,,,,,,,,,என்பதுஅசரீரியாகஅதுஎதிரொலிப்பதாக/
அவர் ரயில்வேயில் வேலை செய்கிறவர் நீண்ட கால நண்பர்.நல்ல பழக்கம்,
வேர் விட்டு கிளை படர்ந்து பூத்தது இல்லை என்றாலும் கூட மெனமை பூத்து விரிந்த மலராய்இருக்கிற நட்பு பார்க்கிற நேரங்களில் பேசிக்கொள்வோம்,
சிரித்துக்கொள்வோம்,வணக்கம் சொல்லிக் கொள்வோம்,உடன் எங்காவது
எதிர்படுகிற கடைகளில் டீ சாப்பிடுவோம் சேர்ந்து நின்று/அப்படி நட்பாய் வாய்த்துப்போகிற கொஞ்சம்பேரில்அவரும்ஒருவராய்த்தெரிந்தார்.
ரயில்வே பாஸ்கர்”சொல்லவே நல்லாயிருக்கு.
நேற்றைக்கு காலையில் மிகவும் பிரியமாய் இருப்பவரிடமிருந்து போன்
என்னப்பா ன்ன செய்யிறப்பா?ரொம்பநாளா போன் பண்ணல எப்பிடி இருக்கப்பா
என்றார்.
அவன் அதற்கு மிகவும் லேசாகவும் ,கேலியாகவும் பேசுவாதாக எண்ணி,,,,,,,, இப்பத்தான் ரோட்டுக்கடையில் டீசாப்புட்டுட்டு நின்னுக்கிட்டு இருக்கேன்,
ரொம்பநாளா பேசவுட்டுப் போனவுங்ககிட்டயெல்லாம் பேசனும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்,கரெக்ட்டா நீங்க பேசிட்டீங்க”என்றான்
,”டீரொம்பநல்லாயிருந்துச்சி.”,,,,,,,,என்கிறவார்த்தையுடன் சேர்த்து./
“சீ கர்மம்புடிச்சவனே காலங்காத்தால இப்பிடி பேசிட்டு,வேற வேலையில்லை
யாப்பா ஒனக்கு” என போனை துண்டித்து விட்டார்.
ரோட்டின் இடது ஓரமாக அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தான். நிறுத்தியிருந்த இடத்தை ஒட்டி பிளாட்பாரம் தாண்டி அமர்ந்திருந்த வீட்டின் முன் இருந்த மரத்தில் பூத்து நின்ற மஞ்சள் நிற பூக்கள் அவனைப்பார்த்து கண் சிமிட்டியதாய் தோனியது.
தூரத்திலும்,மிக அருகாமையிலுமாய் அற்று கத்திச்சென்ற பறவையின் சப்தம் இருள்சூழ்வதற்காய் கனிந்து நிற்கிற வானம்,மப்பும் மந்தாரமுமான சூழல்.மழை வரலாம் அனேகமாக/
நேற்று மழை கொட்டித் தீர்த்துவிட்டது. நாளைக்கெல்லாம்பெய்யப் போவதில்
லை.
இத்துடன் என்னிடம் நீர் இல்லை என்பது போல கொட்டித்தீர்த்து விட்டது.நல்ல மழை.வெயிலும் காலையிலிருந்து எரித்துத்தீர்த்தது.உடலை உருக்கி ஊண் தொட்டு விடும் போல தெரிந்தது.இதெல்லாம் எதிர் சாரியில் சினிமா பேனரில் சிரிக்கிற கதாநாயகனுக்கு தெரியுமா தெரியவில்லை.ப்ளெக்ஸின் அடியில் நாயனின் பெயருடன் தனது பெயரை கடைசியிலோ,முதலிலோ சேர்த்து ஒட்ட வைத்திருந்தார்கள் ரசிகர்கள்/
பஸ்,லாரி சைக்கிள்,இரு சக்கர வாகனங்கள் என குழைத்து நின்ற வரிசையை தன் மீது சுமந்து நிற்கிறது சாலை.
விரைந்துவந்த சைக்கிள் ஒன்று அவனருகில் வந்ததும் பிரேக்கிட்டு நின்றது.
அவசரத்தில் வந்தஅவன் சைக்கிளை விட்டு இறங்குகையில் நிலை குலைந்து வண்டிமீது சாய்ந்துவிட்டு ஸாரி சொன்னான் அவன் சொன்ன ஸாரிகூட பெரிதில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கப் போன அவளை முழுமையாக பார்க்க
முடியாமல் செய்து விட்டான்.கவனம் முழுவதும் அவன் மீதும்,அவனின் எரிச்சல் உண்டாக்கிய செய்கை மீதும்.
கொஞ்சம் இடைவெளி விட்டு கவனித்ததில் ரயில்வே கேட் அருகில் வலது புற பிளாட்பாரத்தில் நின்ற ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். அங்குதான் கோபால் அண்ணன் இருந்தார்.ஒரு மாதம் முன்பாக/
அண்ணன்என்றால்அவனுக்குஉறவுஇல்லை.பற்றிப் படர்ந்து நின்ற தோழமை,
நட்பு,
மனம் பூத்தபழக்கம்.அவர் ஆபீஸர்,அவன் குமாஸ்தா ஆனாலும் பிடித்துப் போன மனதுநெருங்கி விட்ட நட்பு. பரஸ்பரம் மனம் படர்ந்த நடவடிக்கைகள்
எல்லாம் காரணமாகிப் போகவும் நெசவிட்டு விடவுமாய் இருந்த நேரங்களில்
மலர்ந்த நட்புதான்.அண்ணன்.
அண்ணன்என்றால்அண்ணா,எண்ணன்னா,வாங்கண்ணா,போங்கண்ணாதான். இப்படியானமனம்தொட்டகூப்புடுதலில்கலந்திருநது அவர்களது பேச்சும்,பேச்சு சூழ்ந்த நிமிடங்களும்/
திடீரென தூங்கி எழுந்த ஒருநாள் காலையில் அவரை பக்கவாதம் ஆட்க்
கொள்கிறது.முதல் நாள் வேலைக்குப்போய் விட்டு அன்று 200 கிலோ மீட்டருக்கும் மேலாக இரு சக்கர வாகனத்தில்அலைந்தவர் அன்றிரவு படுத்து
மறுநாள் எழுந்திருக்க முடியவில்லை.
பத்துநாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டுப்போனார்.வைத்தியம், ,பிஸியோ
தெரபிமருந்து,மாத்திரைகள் மற்றும் வைட்டமின்கள் எல்லாம் சேர்த்து லட்சத்தை தொட்டு விட்டது என்றார்.
அது போலிருக்கிற உறவினர் அல்லது நண்பர்கள்,அக்கம்பக்கம்யாரையாவது பார்க்கப்போகலாம்அவள்.
இறங்கிப்போகிறாள்,இறங்கிப்போகிறாள்,இறங்கிப் போகிறாள்,,,,,,,,,,,எத்தனை
முறைசொன்னாலும் அதுதானே?அதுதான் என்பது சரி. வளையோசையும்,
நடையின்நளினமும்இப்படி சண்டி இழுக்கிற போது மன்ம் தக்கையாய் தள்ளாடி சுண்டப்பட்டு விடுகிறதுதானே?
“தள்ளாடி விடுகிறதா,கொடுமை .இந்த 48 ல் இப்படி மனதை கட்டிபோடாமல் விட்டால் எப்பிடி?ஒரு கயிறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ரெடியாக.இப்படி மனதுஉங்களைமீறிஅலைபாய்ந்துசெல்கிறநேரங்களில்வீசிசுருக்கிட்டுஇழுத்து
க்கொள்ளுங்கள்”.என்கிற வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாய் எனது இரு
சக்கரவாகனத்தின் இருக்கையில் கையூன்றியவாறு/
நடத்துனர்சில்லறையைகொடுத்துக்கொண்டிருந்தார்கூடவேவிடுபட்டநபர்களுக்குடிக்கெட்போட்டுக்கொண்டிருந்தார்.ஜன்னல்வழியாகஎட்டிப்பார்த்தமுகங்கள்படிக்கட்டில்உதிர்ந்துகிடந்தமண்னைகவனிக்கவில்லை.தத்தம்பாடு,தத்தம்பேச்சு,தத்தம் கவலை, தத்தம் போக்கு,,,,,,,,,,,, என்றவாறாய் காட்சிப்பட்ட அவர்க
ளில் உருக்கொண்டிருந்த மனிதம் ஒரு பெரியவரின் செய்கையில் இட்ட புள்ளியில் முடிகிறது.
கால் பரப்பி இருக்கையில் அமர்ந்திருந்த அவர் கம்பூன்றி எழுந்து அருகில் பஸ்ஸின் கம்பிபிடித்துநின்றிருந்தநிறைமாதகர்பிணியைதன்னிடத்தில்அமரச் சொல்கிறார்.
அதற்கப்புறம் பஸ்சில் வாண்டுகளும்,பள்ளிப் பையன்களும் பெண்களும் அதை ஒரு ஆச்சரியமாகவும் சற்றே குற்ற உணர்வு கலந்தும் பார்க்கின்றனர்.
“கொட்டுகிற அருவியில் தன்னன்ன,தனனன்னே,,,,,,,,,எனஒலித்த பாடல் விரிந்துபரவுகிறது. ஒலித்த நேரம் ரயில்வே கேட் திறக்கிறது.என்னைப் பார்த்து சிரித்த மஞ்சள்பூ மரத்திலிருந்து உதிர்ந்து தரை தொடுகிறது. கேட்அடைப்பில்
நின்றவாகனங்களும்வாகனங்களைக்கொண்டமனிதர்களும்புறப்பட்டுச்செல்கிறார்கள்.
கூடவே பேருந்தும்,இன்னபிற வாகனங்களுமாய்,அவன்பேருந்தினுள் ஒலித்த பாடலின் கைபிடித்தவாறும்,ந்டந்து சென்றவளை நினைத்தவாறுமாய்/
No comments:
Post a Comment