சிதறிகிடக்கிறது வாழ்க்கை.
வேப்பம் பழம் பொறுக்கும் மூதாட்டி/
=====
நெடித் துயர்ந்து நிற்கிறது மரம்.
நிழல் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாய்/
=====
பூத்து மலர்ந்து நிற்கிறது செடி.
ஒற்றை ரோஜாவை தலை முடியில்
சொருகியொருக்கும் சிறுமி/
=====
படர்ந்து நிற்கிற கொடி,
வீதியில் பார்த்த நண்பர்./
=====
வெடித்து சிதறியிருக்கிறது மண்.
பொக்கை வாய் சிரிப்புடன் குழந்தை/
=====
மண்கீறி துளிர்க்கிற செடி.
மருத்துவச்சி கையில் குழந்தை/
=====
சிதறிக்கிடக்கிற மண்.
தூரத்தில் நடந்து செல்கிற மனிதர்கள்/
=====
உயர்ந்து நின்ற வீடுகள்.
சுவரை ஒட்டி ஊர்ந்த எறும்புகள்/
=====
நடந்து செல்கிற பாதசாரிகள்.
கலர்க்கலராய் பூத்து நிற்கிற மலர்ச்செடிகள்.
விரிந்து கிடக்கிறது வீடு.
வீதி முனையில் அடிக்கப்பட்டிருக்கிற
சாலையோர வியாபாரியின் டெண்ட்/
=====
நடு வீதியில் இரு சக்கர வாகனம்.
தவழ்ந்து படியேறுகிறது குழந்தை/
=====
நகர்கிறது பேருந்து.
பேசிக்கொண்டே செல்கிற பெண்கள்/
=====
கடையினுள் அடுக்கப்பட்டிருக்கிற புத்தகங்கள்.
மனதினுள்ளே விரிகிற கதைகள்.
======
நண்பணின் அழைப்பொலி.
மயிலிறகு ஒன்று வருடிவிட்டுச்
செல்கிறது மெலிதாக/
======
விரிந்து செல்கிறது சாலை.
பறந்து செல்கிறது பறவைகள்/
======
தேநீர் கடை முன் கூட்டம்.
நிறைந்தோங்கி தேங்கியிருந்த உழைப்பின் வாசம்/
======
விறைந்து கடக்கிறது வாகனம்.
பறந்து செல்கிறது பறவை.
அருகில் எரிபொருள் நிரப்பும்
நிலையம் ஏதுமில்லை/
=====
மலர்ந்திருக்கிறது மண்.
காற்றில் கலந்து வருகிற மழை வாசம்/
3 Aug 2012
தூறல்,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
Sinthanai kavi varikal valthukkal
நன்றி கவி அழகன் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
//சிதறிகிடக்கிறது வாழ்க்கை.
வேப்பம் பழம் பொறுக்கும் மூதாட்டி//
நல்லாயிருக்கு. படமும் அழகாக உள்ளது.
கவிதை அருமை மூதாட்டியின் நிலை !ம்ம் காலத்தின் கோலம்!
வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்.மூதாட்டிகள் எப்போதுமே காலத்தின் அசைக்க முடியாத அடையாளமாகத்தான் இருக்கிறார்கள்,தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.
வணக்கம் தனிமரம் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
அன்றாட நிகழ்வுகள் குறித்த
ஆழமான அருமையான
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமை... அசத்திட்டீங்க... பாராட்டுக்கள்...
நன்றி…
ஒவ்வொரு வரிகளிலும் அனுபவம் பேசுகிறது அருமை அருமை.
ஒவ்வொன்றும் அருமை,யாதர்த்தம்
வணக்கம் ஹைதர் அலி சார்,நலம்தானே?நன்றி தங்கள்து வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது மேலான வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ரமணி சார்,தங்களது ஆழமான கருத்துரைகள் குறித்து ஒரு பதிவு போடலாம் என ஆசை.நேரமும் தங்களது அனுமதியும் அனுமதிக்குமாயின் எழுதி விடுகிறேன்.நன்றி,வணக்கம்
குறிப்பிட முடியவில்லை.அத்தனை ஹைக்கூக்களுமே அருமை.சிறப்பு விமலன் !
வணக்கம் ஹேமா மேடம்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.
Post a Comment