15 Sept 2012

கூண்டு,,,,,,,,,



 கோழிகளின் மேல்

கொல்லைப் பிரியம் கொண்டிருந்த 

சரோஜா அக்கா

அவைகளை கையில்

 தூக்கி கொஞ்சுகிறாள் 

தினமும் ஒருமுறையாவது.

அதற்கென இருக்கிற 

தனிக்கூண்டில் தன்னை 

உள்ளிருத்தி அடைத்துப்

பார்த்துக் கொள்வாள்
 
எப்பொழுதாவது ஒருமுறை 

அல்லது தினங்களின் நகர்வுகளில்
 
என்றேனும் அவ்வப்பொழுது.

முட்டையிடவும் அடைகாத்து 

குஞ்சு பொரிக்கவுமாய் இருக்கிற

 கோழிகளும் மேயப்போகிற 

நேரம் தவிர்த்து அவள் மீது 

பிரியம் கொண்டு அவளுடன் 

ஒட்டி உறவாடிக்கொண்டு திரியும்.

இரை போட,அவைகளின் உடல் நீவ,

தண்ணீர் காட்ட என ,,,,,,,,,,

இன்னும் இன்னமுமான

பலவேலைகளை 

வீட்டு வேலைகளுடன்

 சேர்ந்து செய்த அவள் இப்பொழுது

 எங்கோ ஒரு தொலை தூரத்து 

நகறொன்றுக்கு  திருமணமாகிச்

சென்று விட்டதாக தகவல் சொன்னார்கள்.

அவளைப்பற்றி கேட்ட தினத்தன்றும்,

கோழிகள் பராமரிப்பின்றித்

திரிகின்றனவே என கேட்டபொழுதினூடாகவும்.

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சிலருக்குக் கூடே கூண்டாக..

சிலருக்குக் கூண்டே கூடாக..

கவிதை நன்று.

vimalanperali said...

வணக்கம் குணசீலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

கூண்டைக் காத்தவளுக்கே கூண்டாகிப்போனது வாழ்வு !

vimalanperali said...

நன்றி ஹேமா மேடம் தங்களின் வருகைக்கு/