15 Sept 2012

மகிழ்ச்சி ரேகை,,,,,,,,



தனது மகனின் திருமணகாட்சிகளை

பதிவு செய்து லேப்டாப்பில்

காட்டிய எதிர் வீட்டுக்காரி

தனது திருமண நாளன்று

இந்த வசதி எல்லாம் இல்லை என்றும்,

தனக்கென இதுவரை

ஒரு போட்டோக்கூட

தன் வீட்டில் கிடையாது எனவுமாய் சொன்ன

அவளின் முகமெங்கும் ஒரே சந்தோசம்.

இனி தன் ஜென்மம் சாபல்யம்

அடைந்து விட்டது எனவும்

எனது மகன் திருமண நிகழ்விலாவது

எனது முகம் போட்டோவாய் காணக்கிடைத்து விட்டதே

எனவுமாய் சந்தோசம் கொள்கிறாள்.

10 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
பல விஷயங்களுடன் இதைப் பொருத்திப்பார்க்கையில்
கவிதையின் உட்கருத்து விரிந்து கொண்டே போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தாயின் மகிழ்ச்சியை உணரமிடிகிறந்து. நன்று.

Aathira mullai said...

உண்மைதான். இன்றைய அறிவியல்.. சில நேரம் ஏக்கம் கொள்ளவே செய்கின்றன.
மகிழ்ச்சி ரேகை பரவட்டும் படிப்பவரின் மனங்களிலும்.. தொடரட்டும் பதிவரின் விரல்களிலும்..

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி.

vimalanperali said...

வணக்கம் டீ,என் முரளிதரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஆதிரா அவர்களே/
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Rasan said...

அருமையான பதிவு. தாயின் உள்ள உணர்ச்சியை அப்படியே படம் பிடித்து உள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
ரசன் என்று என்னை விளியுங்கள் நண்பரே.

vimalanperali said...

வணக்கம் ரசன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

நம் பெரியவர்கள் எல்லோருக்குமே இந்த ஆதங்கம் உண்டு !

vimalanperali said...

நன்றி ஹேமா மேடம்.தங்களது மேலான கருத்துரைக்கு/