29 Oct 2012

மண்பிளந்து,,,,,,,,,


    
தரை தொட்டு துளைத்த மென் காற்றின் நீட்சி அவர்களை தொட்டுத் திரும்புவதாய்/

குறிப்பிட்ட தூரத்திலிருந்து கிளம்பிய காற்று ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக பயணித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால்பதித்து தன்னை பூமிக்குள்ளாக நுழைத்துக் கொள்கிறது.

பாண்டியன் நகர்,ரெட்டிப்பாளையம்,ஐந்து கோவில் முக்கு,NGO காலனி, PR  நகர் வடக்குப்
பட்டி,தெற்குப்பட்டி என எந்த அடையாளத்திற்குள்ளும் நில்லாமலும் வேறு எங்குமாய்
தன்னை  அடையாளப் படுத்திக் கொள்ளாமலும் பறந்து பட்டு ஈட்டலும்,இழத்துலுமாக மர
வேர்களைப்பற்றி ஊஞ்சலாடியும்,அதற்கடுத்ததாய் தெரிகிற மண் மீதும்,கல் அடுக்குகள்
மீதுமாய் ஏறியும்,மிதித்திறங்கியுமாய் விரைந்து செல்கிறது எந்த வித போக்குவரத்து
இடைஞ்சலுமற்று/

தாய்,தந்தை,மகன்,மகள் அவர்களது பெறோர்கள்இருவர் எனஅருகாமை,அருகாமையாக
வசித்த வீட்டின் கூரை பார்க்க அழகாயிருக்கிறது.உயர் ரக வசதிகளுடனும்,வாஷிங் மிஷின்,
பிரிட்ஜ்,இன்வெட்டர்,குக்கர்,மிக்சி,கிரைண்டர் என்கிற ,,,,,,,,,,நவீன சாதனங்கள் ஏதுவுமற்று காணப்பட்ட வீட்டில் மின்விசிறியும்,குழல் விளக்கும்,ட்யூப்லைட்டும் இல்லை.வீட்டின் 
சுவர்களுக்குள் குறுக்கும்,நெடுக்குமாக பதிக்கப்பட்ட மின்வயர்கள் ஏதுமற்று அங்கு பறந்து திரிந்த மின்மினிகளையே பிடித்தழைத்து வெளிச்சத்திற்காய் வைத்திருக்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்டும்,டீ சர்ட்டும்,நைட்டியும்,பட்டும்,சுடிதாருமாய்  காட்சிப்பட்ட அவர்கள் ஏன் அங்கு அந்த  வெளியிலும், பூமியின் கீழ்த்தளத்திலுமாய் வசிக்கிறார்கள்?என்கிற காற்றின் கேள்விக்கு அவர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கிறது.

என்ன இல்லை இங்கு?இங்கென்ன குறைச்சல் எங்களுக்கு?மாசுப்பட்ட மண்ணும்,அசுத்தப்
-பட்ட குடிநீரும்,அழுக்குப்பட்ட காற்றும் இங்கு இல்லை.வேலை இல்லாத்திண்டாட்டமும்,
ஏறிப்போன விலை வாசியும்,பொருளாதாரப்பற்றாக்க்கூறையும் இங்கு இல்லை.எங்களைப் போன்ற  ஏழைகளுக்கும்,நடுத்தரவர்க்கத்தினருக்கும் எட்டாக்கனியாயும்,கனவாயும் இருக்கிற 
உயர்கல்விக்கு விலையேற்றமும்,விலை நிர்ணயமும் இங்கு இல்லை.

குடிக்கப் பழக்குகிற வேலையை அரசும், படிக்கப்பழக்குற வேலையை தனியாருமாய்
வைத்துக்கொண்ட அவலம் இல்லை.விலை வாசி ஏற்றம் ,பொருளாதார வீக்கம்,அந்நிய முதலீடு,உலகமயமாக்கத்தின் தாக்கம் அதனால் வந்த,,,,,,,,,,கரண்ட் கட்,பொய் பித்தலாட்டம்,
மரித்துப் போனமனிதமாண்புகள்,,,,,,,,இன்னும்,இன்னுமானஎத்தனைகளோ இல்லை இங்கு/

எங்களைப்போலஎனதருகாமையாயும்,சற்றேதள்ளியும்நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன
அவர்கள் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்கள் பள்ளிகளுக்கும்,கல்லூரிக்கும் செல்கிறார்கள்.வேலைக்குப் போகிறார்கள்.இங்கு தனியார் மற்றும் அரசுத்துறை அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கு ஆட்கள் வேலை பார்க்கிறார்கள்.இது போக இங்கு கூட்டுப்பண்னை விவசாயம் உண்டு.அரசாங்க நிலத்தில் குறிப்பிட்ட நேரம் வேலை செய்து விட்டு அவர்கள் தருகிற அதிகபட்ச கூலியுடனும்,அங்கு விளைகிற விளை பொருட்களுடனுமாய் வீடு வருகிறவர்களைப் பார்க்கவே சந்தோஷமாய் இருக்கும்.

இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளிப்போனால் பஜார் வரும்.இங்கு எங்களுக்கென தனி அரசு உண்டு.இங்கு எல்லாமே வீடு தேடி வரும்.ரேசன் பொருட்களிலிருந்து படித்து முடித்தவுடன் கிடைக்கிற வேலைவரை/

கேட்கவவே இனிமையாயிருக்கிறதுதானே?இது போக மேலிருக்கிற எந்தத்  தொந்தரவும் இல்லை இங்கு.வீடு,வாடகை,அட்வன்ஸ்,நிலம் வாங்க,பத்திரம் பதிய எக்ஸட்ரா,எக்ஸட்ரா என எதுவும் இல்லை இங்கு.

அரசே நல்ல வீடு கட்டி விற்கிறது.தேவையானால் வீட்டை வாங்கிய அரை மணி பொழுதில் உங்களிடம் வீட்டின் சாவியும்,பத்திரமும்/

இது போக கட்டிய வீடு பிடிக்கவில்லை எனில் நீங்களே இடம் வாங்கி கட்டிக் கொள்ளவும்
ஏற்பாடுண்டு.குறைந்த விலையில் நிலம் வாங்கி வீடு கட்டிக்கொள்ளலாம் விரும்பிய வண்ணம் என சொல்லியவரை தொட்டு விலகிய காற்று வருகிறேன் பை ,,,,, உங்களைப் போல நிறையப் 
பேரை சந்திக்க வேண்டியிருக்கிறது.என மேல் நோக்கிச் செல்கிறது.

தரை தொட்டுத் துளைத்த மென் காற்றின் நீட்சி அவர்களை தொட்டுத்திரும்புவதாய்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... முடிவு எதிர்ப்பார்க்கவேயில்லை...

கலாகுமரன் said...

எழுத்து நடை சில இடங்களில் சில்லென்றும்,சுடாகவும், மெல்லென்றும் தவழ்ந்தும்,கீழும் மேலும்,வேகமாகவும் என பல பரிமாணங்களாய்...ஒரு காற்றைப் போல : வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/

vimalanperali said...

வணக்கம் கலாகுமரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

good .. keep it up

vimalanperali said...

thanks rajini pirathap sing sir,

குட்டன்ஜி said...

உங்க ஸ்டைலே அட்டகாசம்

vimalanperali said...

நன்றி குட்டன் சார்.