அவனது இயல்பே அப்படியாய்/
அக்கம் பக்கம் சுற்றம் தோழமை,
மட்டுமென இல்லை.
முகம் தெரியாதவர்களிடமும் கூட
அன்பாகவும் நட்பாகவும்,பிரியமாகவும்தான்
பேசுகிறான்.பழகுறான்.
அவன் அதிகமாக படிக்கவில்லை.
அரசு வேலையில் இல்லை.
கை நிறைய சம்பாதிக்கவில்லை.
வங்கிக்கணக்கு,சேமிப்பு,,,,,,,எதுவும் இல்லை.
சொந்த வீடு,நிலம் என எதுவும் இல்லை.
தனது பிள்ளைகளை இங்கிலீஸ் மீடியத்தில்
படிக்க வைக்கவில்லை.
அவனது வீட்டில் நவீன
சமையல் சாதனங்கள் இருந்திருக்கவில்லை.
அவனிடம் காணப்படாத படோடோபம்
யாரையும் ஈர்த்திருக்கவில்லை.
அவனது பொதுவான படிப்பும்,அறிவும்
அவனை தனித்துவப்படுத்திக் காட்டியது.
ஆகையால் அவன் அதிகம்
சம்பாதித்திருந்தது நண்பர்களையே/
14 comments:
நண்பரே நலமா??
//அவனது பொதுவான படிப்பும்,அறிவும்
அவனை தனித்துவப்படுத்திக் காட்டியது.
ஆகையால் அவன் அதிகம்
சம்பாதித்திருந்தது நண்பர்களையே///
இப்படி சில மனிதர்களை நானும் சந்தித்து இருக்கிறேன்
நண்பர்களை சம்பாதிக்க எந்த தகுதி வேணும் நண்பரே???
நீங்கள் சொன்ன தகுதியே ரொம்ப ரொம்ப போதுமானது.
சம்பாதிக்கப்படும் நண்பர்களும் அவனது வட்டத்தோடே தொடர்புடையதாகவே இருக்கும்...
கொஞ்சம் மேல் மட்ட மக்களுடன் நட்பு வைக்க இன்னும் சில தேவைப்படும் என்றே கருதுகிறேன்
வணக்கம் ஹைதர் அலி சார்.
நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சிட்டுக்குருவி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்டுரைக்குமாக/
வணக்கம் செம்மலை ஆகாஷ் சார்.
நன்றி தங்களது வருககைக்கும்,
கருத்துரைக்குமாக/
எதுவும் அதிகம் தேவையில்லை-நண்பர்களைத் தவிர...
அருமை... வாழ்த்துக்கள்...
நண்பர்களும்,இன்னபிறவையும் வேண்டுதான் நாம் வாழ்வதற்கு,சமூகம் அவனை பார்க்கிட்ற பார்வை இப்படியாய் இருக்கிறது ஏனபதையே கவிதை சொல்லிச்செல்கிறது,ஒன்றுமற்றவன் வாழலாயக்கற்றவன் என பதிவாகிறது பல கோனங்களில் இந்த சமூகத்தில்/
அடக்கம், அன்பிருந்தால் அதிகமானோரை நண்பர்களாப் பெறலாம்
நல்லதொரு கவிதை !
தொடர வாழ்த்துகள்...
நண்பர்களை சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்லவே.....
பிடிச்சிருக்கு உங்களின் இப் பதிவு - பகிர்வுக்கு நன்றி
மிக அருமையா எழுதி இருக்கீங்க.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி ஈசி எடிட்டோரியல் காலண்டர் சார்.
வணக்கம் முத்தரசு சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/
வணக்கம் சேக்கனா m நிஜாம் சார்,நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment