11 Nov 2012

இனிப்பு,காரம்,வெடி மற்றும் காய்கறிகள்,,,,



    
முதலில் இனிப்பு.பின்தான் மற்றதெல்லாம்என்கிறமுடிவுடனும்மனம் பாவிய எண்ணங்களுட
-னுமாய் பேண்ட்சட்டையினுள் நுழைந்து மனைவியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிய போது காலை மணி 11 இருக்கலாம்.

தந்து விடுகிறேன்இன்றுகண்டிப்பாகஎனச்சொன்னஇரண்டுபுத்தகங்களைநண்பரிடம் சேர்த்து
விட வேண்டும்.வட கடைசியை வேலைபார்க்கும் இடமாகவும்,தென் கடைசியை குடியிருக்கும்  பகுதியாகவும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டுள்ள நண்பரை பஜாரில் நான் இருந்து கோண்டு வரச்சொல்லியோ,அல்லது அவரை தேடிப்போயோ கொடுத்து விட்டு வர வேண்டும்.

அறிவியல்புத்தகங்கள்அது.பேராசிரியர்,,,,,,,,அவர்கள்எழுதியது.,,,சார் என என் போன்றவர்களால்
பிரியமாயும்,அன்பு நிறைந்துமாய் அழைக்கப்பட்ட அன்பின் மனிதர்.தான் எழுதிய இரண்டு புத்தகங்கள் மூலம் எங்களிடம்உரையாடிகொண்டும்,மனம்பகிர்ந்து கொண்டுமாய்/

வாழ்நாளின் நகர்வுகளில் அன்றாடம் இரண்டு முறையாவது பார்த்துக்கொள்ள முடிந்த அருகாமையில் இருந்தர் இப்போது பார்க்க வாய்க்காத எட்ட தூரத்தில் இருக்கிறார்.

140ரூபாய்இனிப்பு,160ரூபாய்காரம்என்கிறார்கள்.எப்போதும் காரத்தை விட இனிப்பே கூடுதல் விலைசொல்லும்.இந்ததடவைஎன்னவோகாரம்கைதூக்கி நிற்கிறது,நிற்கட்டும்,நிற்கட்டும்,,,,,,
கால் வலிக்கிற வரை.

ஒண்ணரைக்கிலோ லட்டுஅரைக்கிலோ  பாதுஷா,,,,,,,,வாங்கிய பின் போதுமா,இவைகள்,
போதுமா வைகள் மட்டும்,,,” என மூன்று தடவைக்கும் மேலாக கேட்டும் தெளிவாக என்னைப் பார்த்துமாய் இனிப்புநிறைந்த பையை தந்த கடைக்காரர் என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்ட போது காரத்தில் மிக்சர் மட்டும் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது,

நான் வாங்க நினைக்கிற மிக்சர் இந்த நிறை பஜாரில் வேறெங்கும் கிடைக்காது.ராமசாமி ரோட்டிலிருக்கிற அற்புதசாமி கடையில்தான் கிடைக்கும்.”தடிமிக்சர்என அதற்கு எங்களது
குடும்பமே பெயர் வைத்திருந்தோம்.

இவ்வாறாய்இரண்டுகிலோஇனிப்பும்,ஒருகிலோகாரமுமாய்(மிக்சர்)வாங்கியகடைகள்இரண்டும்
கிறிஸ்டின்பெயரைதாங்கியிருந்ததுதற்செயல் ஒற்றுமையாய்/

இனிப்புப்பையைதாங்கிக்கொண்டுபாண்டிதோழர்கடையில்அமர்ந்து டீக்குடித்துக்கொண்டிரு
-ந்த வேளைடீ யேவாரம் முன்னமாதிரி இல்ல தோழர்,இப்பயெல்லாம் பிராந்திக் கடைப்பக்கம்
போயிர்றாங்க,முன்னயெல்லாம்நாலஞ்சு பேரு சேர்ந்து டீக்குடிக்க வருவாங்க தோழர்.இப்ப அப்பிடி சேர்ற நாலஞ்சு பேர்ல யாராவது ஒருத்தர் அல்லது ரெண்டு பேர் மத்தவுங்கள தண்ணி ஆச காண்பிச்சி கூட்டீட்டு போயிறாங்க .நுகர்வோர் எண்ணிக்கை கூடிப்போச்சு தோழர்.இந்நேரம் போயி உக்காந்து குடிக்க ,அப்பிடியே அங்கேயே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துக்கிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிறதுன்னு இருக்காங்கஇதுல
அடிபடுறது எங்களமாதிரி டீக்கடைகள்தான் தோழர்.”எனச் சொல்லிக் கொண்டிருந்தவரின்
பேச்சுக்கு காது கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் வந்த நண்பரிடம் புத்தகங்களைக்
கொடுத்துவிட்டுஇருவருக்குமாய் தீவாவளி நல் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு பிரிகிறேன் அவசரமாக/

இன்னும் வெடிவாங்க வேண்டும்.வழக்கமாக வெங்காயமும்தேங்காயும் விற்கிறகடையில்தான் வெடி விற்றார்கள்.

ரூ,300க்குகிப்ட்பார்சல்பெட்டிஒன்றும்உதிரியாய் சி வெடி பொருட்களும் வாங்கிக்கொண்டு கிளம்பலாம் என்றிருந்த வேளையில் ட்டோவில் தனது மகனுடன் வந்து இறங்கிய பெண் டையை உண்டு இல்லை என பண்ணிக்கொண்டிருந்தாள்.

16இஞ்ச் ராக்கெட்பாக்ஸ், அதுலமல்டிக்கலர்மேலேபோய் வெடிக்கிற வெடி,,,இந்தக்கம்பெனி கேரண்டியா,,,,,,,,,,,,,எனநிறைய,நிறைய பேசிக்கொண்டும்சரக்குகளை எடுத்துப்பிரித்துக்
காண்பிக்கச் சொல்லியும்,விலையை கேட்டுக் கொண்டும் காண்பித்த யிட்டங்களில்
ஒவ்வொரு பெட்டியாக வாங்கிப் போட்டுக் கொண்டும் இரண்டாயிரத்துச் சொச்சங்களைதந்து 
விட்டு போன பின்பு அதுவரை என்னை கைமர்த்தி அமருமாறு சொன்ன டேவிட் என்கிற கடைக்காரர்வெடிகள் அடங்கிய பார்சலையும்,நான் கைகாட்டிய வேட்டுக்கள் சிலவற்றை உதிரியாய்தந்துவிட்டும் ரூ400 என சைகையால் விரல் காட்டி கைநீட்டி வாங்கிக்கொள்கிறார்.

இனிப்பு,வெடிகள்,காரம்,மற்றும் காய்கறிகள் என்கிற வரிசையில் இனி வாங்க வேண்டியது காய்கறிகளும்,காரமும் மட்டுமே.

காரம் வாங்கினால் காய்கறிக்கு பணம் இருக்காது,காய்கறி வாங்கினால் காரத்திற்கு பணம் பத்தாது என்கிற எண்ணத்தில் காய்கறியை பின்னுக்கு தள்ளிவிட்டு காரத்திற்கே முன்னுரிமைஎனநகைக்கடைகளின்முன்பும்,காய்கறிக்கடைகளின்முன்பாகவும் பஜாரில் கூடியிருந்தகூட்டத்தைவிலக்கிவிட்டும்,ஊர்ந்தும்,நகர்ந்துமாய்வந்துதியேட்டர்முன்பிருந்த டீக்கடையில் நின்றபோது வாங்கிய இனிப்பும்,காரமும் பையினுள் குடிகொண்டிருந்த வேட்டுகளும் தீபாவளி கொண்டாட்டாத்திற்கு உருவெடுத்து நின்றவையாய் சிரித்த முகம் காட்டி/


12 comments:

Anonymous said...

பால்கோவா தான் எனக்கு மிகவும் பிடித்த பட்சணம், இங்கு வந்த பின் இனிப்புக்கள் சாப்பிடுவதை குறைத்துவிட்டேன் .. இப்படி வகை வகையாக இனிப்பு, காரங்களை பற்றி சொல்லி உசுப்பேற்றி விடுகின்றீர்களே ! எங்கே செல்வேன், ஏது செய்வேன், அறியேன் !

Easy (EZ) Editorial Calendar said...

உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பால கணேஷ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

ராஜி said...

தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ!

vimalanperali said...

வணக்கம் இக்பால் செல்வன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,வாழ்த்திற்கும்/

vimalanperali said...

வணக்கம் எடிட்டோரியல் காலண்டர் அவர்களே.நன்றி.

vimalanperali said...

வணக்கம் பாலகணேஷ் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,வாழ்த்திற்கும்.

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,வாழ்த்திற்கும்/

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் ரெவரி சார்,நன்றியும் வாழ்த்துக்களும்/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நன்றியும்,
வாழ்த்துக்களும்/