18 Dec 2012

கவசம்,,,,


                       
விருதுநகர் டூ மதுரை சாலை அதுநாற்கரச்சாலையின் வசதியை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டதாயும்/

இன்றைக்குபேருந்தில்போய்க்கொள்ளலாம்என இருசக்கரவாகனத்தை வாகனக் காப்பகத்தில் நிறுத்திவிட்டுவெளியேவருகிறேன்கையில்டோக்கனுடனும், வண்டியின் சாவியுடனுமாய்.

இது இரண்டாவது சாவி.மெக்கானிக்கின்கையைக்காலைப்பிடித்துவாங்கியடூப்ளிக்கேட் சாவி இது.முதல் சாவிக்குப் பின் ஸ்பேர் சாவியும் தொலைந்து போக வேறு வழியற்று போகக்கூடாது என நினைத்து மெக்கானிக்கிடம் போய் நிற்கிற மாதிரி ஆகிப்போனது.

அவன் அன்று பண்ணிய கிராக்கி உலகக்கிராக்கி எனலாம்வண்டி உங்களதுதானா சார்எங்கிருந்ததுஇதுநாள்வரை.ஏன்இப்படிஆகிப்போனது.சாவியைஇவ்வளவுஅஜாக்கிரதையாகவா  வைத்திருப்பதுஉங்களை நம்பி அரசு ஒரு வேலையையும் கொடுத்திருக்கிறது.ஹீம்”என்கிறது மாதிரியானஅவனதுஅலட்சியபார்வை யுடனான பேச்சுக்கும் எடுத்தெரிதலுக்குமாய் சேர்த்து அங்கேயே நாண்டு கொண்டு விடலாம்போல தோனியது.

அவன்தான் சொன்னான்பின்டயர் மிகவும் தேய்ந்து வழுக்கை விழுந்து மோசமாக உள்ளதுசீக்கிரம் மாற்றி விடுங்கள்இல்லையேல் எங்காவது நடு வழியில் சிரமப்படவேண்டியிருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள்”எனஅலட்டலாய்சொன்னதுஏனோஇப்பொழுதுநினைவுக்குவருகிறது.

போன வாரம்தான் வண்டியில் ஹெட்லைட் டூமை மாற்றினேன் வாகனக் காப்பகத்தின்
சீரில்லாதமேடு பள்ளமான தரை வண்டிகள் வைக்க லாயக்கற்றதாய் தன்னை நிலை நிறுத்திக் காண்பித்தது.போன நாட்களில் பெய்த மழைக்குவடிகாலாய்தடம் காண்பித்த தரை வாய் பிளந்தும், பள்ளம் காட்டியும், வாய்க்காலாய் ஓடி விரைந்துமாய் இன்னும் சரி செய்யப்படாமல் தன் மேனி காட்டியும் அடைகாட்டி சிரித்துமாய்.

அப்படியான சீரற்றதரையில் வண்டிகள் ஒழுங்காக அமர முடியாமல் தன் நிலையி லிருந்து தவறியும்,ஓரங்கட்டி எடுத்து வைக்கும் போது நிலைதடுமாறி அருகிலிருக்கிற வண்டியின் மீது சாய்ந்தும்சேதப்பட்டுவிடுகிறது,அப்படியாய்சேதப்பட்டுஉடைந்ததுதான் எனது வண்டியின் ஹெட்லைட்டூம்இதைவாகனக்காப்பக உரிமையாளரிடம் சொன்னபோது நாங்கள் ஏலத்திற்கு எடுத்ததொகைக்குமேல்ரொம்பவும்இல்லாவிட்டாலும்கொஞ்சமாவது லாபம் பார்க்க வேண்டும்இதெல்லாம்சரி செய்து கொண்டிருந்தால் எங்களது பிழைப்பும் இப்படி ஆகிப்போகும்” என பெயர்ந்து ஒடி விரிந்திருந்த வாக்கனக்காப்பகத்தின் தரையை காட்டிச்சிரிக்கிறார்.

காப்பகத்தின்அருகிலிருந்தகடையில் டீக்குசொல்லிவிட்டு  மதிய சாப்பட்டிற்காக ஒரு வடை வாங்கிபையில்போட்டுக்கொள்கிறேன்.குடித்துக்கொண்டிருந்த டீயின் மிடறுகள் ஏனோ மிகருசியாகதெரிந்ததுஅன்று.கடைக்காரரிடம்சொன்னபோது மேலும்கீழுமாய் என்னை ஏற இறங்கப்பார்த்தார்.”எப்பொழுதும்இப்படிசொல்லாதவன்சொல்கிறான்என்றால்ஏதும் விசயமிருக் குமோஎன்பதுபோலிருந்த பார்வையுடன் நான் நீட்டிய ஹெல்மெட்டை வாங்கிகொண்டான்.(ஹெல் மெட் கொடுப் பதற்காகத்தானே இத்தனையும்)

சிவா வாங்கிக் கொடுத்தஹெல்மெட் இது.ஊரெல்லாம் ஹெல்மெட் கெடுபிடியிலும், போலீஸ் சார்ஜ் பண்ணிகொண்டிருந்த நாட்களொன்றின் நகர்வில் வாங்கியதிந்த ஹெல் மெட்.

பிடித்தால்ஸ்பாட்பைன்,எங்குபார்த்தாலும்பிடிக்கிறார்களாம்.விரட்டி,விரட்டியும் கூட,,,,,,,,என்பது மாதிரியான உபரியான தகவல்களை சுமந்து கொண்டு எத்தனை நாட்கள்தான் ஹெல்மெட் இல்லாமல் தப்பிப்பது,அல்லதுபோலீஸார்நிற்காத பாதையாய் தேர்ந்தெடுத்து செல்வது?பல நாள்,,,,,,,,,என்கிறசொல்படிஒருநாள்ஹெல்மெட்வாங்கி விட்டேன்ரோட்டோரம்போட்டு விற்றுக்
கொண்டிருந்தார்கள். கையில் 250 க்கு மேல் இல்லை.தோள்ப்பையின் உள்ளறையெல்லாம் தேடிப்பார்த்தும் அகப்படவில்லை ரூபாய் என்றதும் ஹெல் மெட் வாங்கும் பொறுப்பை சிவாவிடம் விட்டுவிட்டேன்.

பழக்கமானடீக்கடையது.இதற்கு எதிர்த்தாற்ப்போலரோட்டின்அந்தப்பக்கம் உள்ள கடையில் டீ இன்னும்கொஞ்சம்நன்றாகவேயிருக்கும்,ஆனால் இந்தப்பக்கம் வந்தால் இந்தக்கடையில்தான்  டீ,வடை எல்லாம்வீட்டுக்கு வடை பார்சல் என்றால்கூட அது இங்குதான்பழக்க முறிப்பு வேண்டா மே  என்கிற உயர் நவிற்சி மனோ பான்மை காரணமாக்கூட இருக்கலாம்,அது இப்போது ஹெல் மெட் கொடுத்து வாங்குகிற அளவுக்கு உதவுகிறது,இல்லையெனில்இதை ஒருகைக்குழந்தையைப் போல தூக்கிக்கொண்டு திரிய வேண்டும் எங்கு  போனாலும்.  வண்டியிலேயே வைத்துப்பூட்டலாம் என்றால் அது அவ்வளவு பாதுகாப்பானதாய் தெரியவில்லை. நம்பி வாகனக்காப்பகத்திலும் கொடுத்து விட்டு வர முடியவில்லை.ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஹெல் மெட்டின் மீது இழுக்கப்பட்ட கோடு கோடு களாய்த் தெரிகிறது மாலையில் வண்டியை காப்பகத்திலிருந்து  எடுக்கும் போது. இல்லையென்றால் முன் பக்கம் முகத்திற்கு நேராக தொங்குகிற பைபர் கிளாஸ் உடைந்து போகிறது.மனதுக்கு மிகவும் சங்கடமாகிவிடுகிறதுஇதையெல்லாம்பார்க்கையில்.இது இரண்டாவது ஹெல்மெட்,இனியொரு முறை என்னால் 350 ரூபாய் செலவழிக்க முடியாது அல்லது அந்த மனோநிலைக்கு நான் தயாராக இல்லை.ஆனால் என்னதான் செய்ய?அவசியம் வரும் பொழுதும் நெருக்கடி வரும் பொழுதும் செலவு செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது.தவிர அவசிய மற்றதையும் சில நேரம் சுமந்து அனாவசியத்திற்கு அல்வா சாப்பிட்ட கதையாக ஆகிப்போகிறது.

கதிரேசன் மாப்பிள்ளை அந்த டீக்கடையில் வேலை செய்தபொழுது வடைகளில் ஐந்துரகங்களும்,இனிப்புகளில்இரண்டுமாய்இடம்பிடித்துஇருந்தகடையாக.அந்த இரண்டில் ஒன்றுஅல்வா/

அது அவர்கள் தயாரிப்பா அல்லது வெளியிலிருந்து வாங்கி விற்கிறார்களா தெரியவில்லைமாப்பிளையிடம் கேட்ட பொழுது அது தொழில் ரகசியம் என்றான்.ஒரு நாள் ஆசை மிகுதியில் வாங்கித் தின்றுவிட்டேன்.கூட ஒன்று சேர்த்துத் தின்றதாலோ என்னவோ வயிற்றால் எடுத்து விட்டது ஒரு நாள் அலுவகத்திற்கு விடுமுறை சொல்கிற மாதிரி/அதை சரி செய்ய அவர்களது கடை வடையையேசாப்பிடவேண்டியதாகிப்போனது.

மாப்பிள்ளைகதிரேசன்தான்சொன்னான்.”ரொம்பப்போகலயில்ல மாமா, இந்தாங்க, இந்த மாவு வடைய சாப்புடுங்கசரியாப்போகும்”என.” அனுபவ மருந்து இது,இத மிஞ்ச ஒரு இங்கிலீஸ் 
வைத்தி யமும்கெடையாது தெரிஞ்சுக்கங்க மாமா,,,, என்றான்.

அவனது ஆலோசனையின் பெயரில் அன்றிலிருந்து நான் அல்வா சாப்பிடுவதில்லைநல்ல வேலையாய்போன வயிற்றோட்டம் அதிகமாயில்லாததால் அல்வாவினால் மனபாதிப்பெல்லாம் ஒன்றுமேற்பட்டுவிடவில்லை.

மாப்பிள்ளையென்றால்கதிரேசன்சொந்தமெல்லாம்ஒன்றுமில்லை.வேற்றுஜாதிகளுக்குள்உறவுமுறையை முடிந்து வைத்துக் கொண்டிருக்கிற கிராமமாக இன்றளவும் இருக்கிற ஊரில்
மாப்பிள்ளை வடக்குத் தெருவிலும்,நான் கிழக்குத் தெருவிலுமாக குடிகொண்டு இருந்தவன்நல்லஊர்,நல்லமக்கள்,நல்லபழக்கமென்கிறஅடிப்படையில்நான் அவனது மாமாவாகவும்,அவன் எனக்கு மாப்பிள்ளையாகவும்இருந்த நாட்களும் கொஞ்சம் வினோதிப்பானவையாகவே/

அப்போதெல்லாம்அவன்சரக்கடித்துவிட்டு எங்காவது மட்டையாகி விழுந்து கிடப்பான்.அப்படி விழுந்துகிடக்கிறஅவனைவீடுசேர்க்கிறவனாகநான்தான் பெரும்பாலுமாய் இருந்திருக்கிறேன்அப்படியான நாட்களில் முளைத்தபழக்கம் இன்று கிளைவிட்டு டீக்கடை வரை வந்து நிற்கிறது.

அவன்  வேலை  பார்க்கிற ஐந்தாவது கடையிது.  சொல்வார்கள்  பொதுவாக  டீமாஸ்டர்கள்
இப்படித்தான் எனஅதை நிரூபித்துவிட்டான் மாப்பிள்ளை என நான் சொல்லிவிடவில்லை.

கதிரேசன் அல்லம் பட்டியிலேயே வீடு பார்த்துக்கொண்டு இங்கேயே வேலை பார்க்கிறேன் என்கிறான்.கடையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடத்திற்கும் மேலாகிப் போனது,இப்போதுதான் உங்களைப் பார்க்கிற மாதிரி இருக்கிறது என்கிறான். மேலும் நேரம் கிடைக்கையில் ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள் என்கிறான்.கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது வீடு எனவும் ஒத்திக்குத்தான் வீட்டை வாங்கி குடியிருப்பதாகவும்,ஒத்தி முடிய இன்னும் ஒருவருடம்தான் இருப்பதாகவும் அதற்குப்பிறகு வீட்டிற்கு என்ன செய்ய?எங்கு போய் குடியிருக்க எனத்தெரியவில்லை எனவுமாய் பேசிய அவனுக்கு ஆண் ஒன்றும்,பெண்ஒன்றுமாய்6வயதிலும்8 வயதிலுமாய் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றான்.

அன்று அவனுடன் பேசிய பேச்சுக்கப்புறமாய் இன்றுவரை அவனைப்பார்க்க முடியவில்லை.கொத்தனார் வேலைக்குப்போகிறானாம்.வேறு வேலை காரணமாக நாங்களும்கடையை இரண்டு மாதம் மூடிவிட்டோம்.தவிர உங்கள் மாப்பிளையின் போக்கு,,,,,,,,,என இழுத்த டீக்கடைக்காரரிடம் சரி சரி அப்பிடியே பழகீட்டான் என சொல்லி முடித்து விட்டு ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு கிளம்புகிறேன் பஸ் நிறுத்தத்தை நோக்கி.கடையின் அருகிலிருந்த மரத்திலிருந்து உதிர்ந்த பூ ஒன்று எனது தலையில் பட்டு கீழே விழுந்து சிரிக்கிறது என்னைப் பார்த்து/   









4 comments:

Yaathoramani.blogspot.com said...

கவசச் சிந்தனையை தொடர்ந்து
எனது கவசச் சிந்தனையும் போனது
அதுதான் எழுத்தின் வெற்றியென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்

vimalanperali said...

நன்றி ரமணி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Manimaran said...

அழகான எழுத்து நடை.

vimalanperali said...

வணக்கம் மணிமாறன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/