சந்தேகத்தின் வேர்கள்
எங்கெல்லாமோ முளைவிட்டு
கிளை பரப்பி நீள்வதாக/
அதிகாலையில் பேசிய நண்பர்
அவரைத் தெரியுமா தங்களுக்கு?என
இவனது தொடர்பிலக்கிற்கு
வெளியே உள்ள முகம் தெரியா
ஒருவரைப் பற்றிக்கேட்கிறார்.
இதன் மூலம் அவர் இவனது
சார்ப்பை தெரிந்து கொள்ள விரும்புகிறாரா?
என அறிகிற ஆவலில் இருக்கிறாரா?.
இவன் இவனாகவும்,
அவர் அவராகவும் மட்டுமே
இருந்த காலங்களில் கிளைத்த நட்பு
அவர்களுடையது.
இப்போது அந்த நட்பின் எல்லையிலிருந்து
இப்படிய்யொரு கேள்வியைக்கேட்கிறார்.
கேட்கட்டும்,கேட்டுவிட்டுதான்போகட்டும்/
சந்தேகத்தின் வேர்கள் எங்கெங்கெல்லாமோ
கிளை பரப்பி நீள்வதாக/
No comments:
Post a Comment