2 Dec 2012

கோழிறெக்கை,,,,,



                 
இன்று காலைஞாயிறு விடுமுறை என்பதாலா என்ன?கோழிகள்ஒன்றையும்காணவில்லையே?

இது சாமி மாதம்தானே?நேர்ந்து கொண்டவர்கள் முருகக் கடவுளுக்கும்,ஐயப்பன்சாமிக்குமாய் 
மாலை போட்டு காவிக்கட்டிக்கொண்டிருக்கிற மாதமாயிற்றே?

பின் ஏன் யோசிக்கின்றன கோழிகள் குப்பை கிளற வருவதற்கு?வரட்டும் குப்பைகளை 
கிளரட்டும்,பூச்சி,ப்புழுக்களை பிடித்து சாப்பிட்டு பசியாறிக்கொள்ளட்டும்.அதில் எந்தவித 
மாற்றுக்கருத்தும், வேறு பாடும் இல்லை அவனுக்கு/ஆனால் காலையில் பொழுது புலர்கிற வேலையில்விழித்தெழுகிறஅவைகள்சோம்பல்முறித்தும் உடல்உதறியுமாய் வருவது இங்காகத்
தான்இருக்கவேண்டுமா?

இறுகிப்போன மண்னைபூப்போல கீரியும்,வாய்க்கால்அமைத்துமாய் பாத்ரூமின் கழிவு நீரை வெளியேறுகிற அதி முக்கிய பாதையை இப்படி தன் கூரிய நகங்கள் முளைத்த இறுக்கமான கால்களால் கிளறிசேதப்படுத்திவிடுகின்றன.பின்திரும்பவுமாய் ஒரு முறை கீறி  பூப்போல மாற்றுகையில் கொஞ்சமாய் சேதப்பட்டும் திசை மாறியுமாய்/

ஒரு முறையல்ல,இரு முறையல்ல,மாறி,மாறி தினசரிகளின் நகர்வுகளில்வாரத்தில்மூன்று அல்லது நான்குமுறை இப்படி ஆகிபோவது சகஜமாய்.சமயத்தில் வார நாட்கள் முழுவதுமாய்/

அங்கென்ன கிடைத்து விடப்போகிறது அவைகளுக்கு எனத் தெரியவில்லை.அதிகாலையின் புலர்வுக்கு முன் ஆரம்பித்து வெயில் படர்ந்து தரை நனைக்கிற வரை தங்களது வேலையை அயராது செய்து கொண்டே/

விட்டால் 24 மணி நேரமும் இப்படியே முழு வேகத்தில் செய்து கொண்டிருக்கும் போலும்.யாராவது நான்கு பேரை வைத்து பேசித்தீர்க்க வேண்டும் முதலில்/

என்ன செய்தும் போக மறுக்கிறது அவைகள்.கல்லெத்து எறிந்தும், மண்துகள்களை விசிறிப்
பார்த்துமாய் தண்ணீரை அள்ளித் தெளித்துமாய் ஊற்றியும் பார்த்தாகி விட்டது.ஆனால் அடம் கொண்ட கோழிகள் திரும்பத் திரும்பதன்செயல் விடாது அடம் கொண்டவாறே/

வெள்ளைநிறத்தில் இறக்கைகளை சிலிர்த்துக் கொண்டு திரியும் போந்தாக்கோழி ஒன்றும்,
கருஞ்சாந்துபொட்டுக்கலரிலும்மஞ்சள்பூசித்திரிந்த்துபோலவுமாய் மாறி,மாறிகாணப்படுகிற
இறக்கைகளுடன்இருக்கிறஒன்றும்தனதுகுஞ்சுகளுடன்வந்துஅன்றாடங்களின் நகர்வுகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையுமாய் பிள்ளையார் சுழியிடுகிற வேலையாய் ஆகிப்
போகிறது.கூடவே துணைக்கு வந்து போகிற சேவல் ஒன்றும் அத்துடன் சேருபவையாக/

அதிகம் ஒன்றுமில்லை நாங்கள் ஐந்தாறு பேர்தானே எனச் சொல்லி வரிசை கட்டி வருகிற
அவைகளில் சேவலின் வேகமும்,பலமும் கொஞ்சம் கூடுதலாகவே/

அதுமண்ணை,குப்பையைகிளறஆரம்பிக்கிறவேகம்காணக்கிடைக்காத்தாகவே/அம்பாரமாய் 
குவிந்து போகிற மண்ணை அள்ளிக் குவிக்கிற அளவுக்கு அதன் தோண்டல் இருக்கிறது சமயத்தில்/

விட்டால் தரையின் அடி ஆழம் வரை போய் தண்ணீர் வர வைத்து விடும் போலிருக்கிறது.

அவைகளிடம் சொன்னால் விரட்டுவது உங்கள் வேலையென்றால் மண் கிண்டுவதும்  குப்பை கிளறுவதும் எங்களது வேலையும் உரிமையும்ஆகும்என கர்ஜிக்கிறதுகள்.

மலர்ந்து நிற்கிற பூவை செடியிலிருந்துபிய்த்தெடுத்துசரம்தொடுப்பதுபோலவும்,தலையில் சூடி
அழகுபார்ப்பதுபோலவுமாய்வாயில்கவ்விநிற்கிறஇரையுடன்இருக்கிறஎங்களைஇப்படியெல்லாம்ஏதேதோ உபாயங்கள் செய்து விரட்டுவது அநியாயம் என்பது அதனுடைய வெகு முக்கிய கோரிக்கையாய் இருக்கிறது.

இப்படியாய் கோரிக்கைகள் சுமந்தும்,தனது இரைதேடியும் பசித்த வயிறுடன் இரை தின்கிற ஆவலுடன் வருகிற கோழிகள் இன்று காணோம்,ஒரு வேளை ஞாயிற்றுகிழமை லீவு விட்டு விட்டதோ?

எதற்கும் ஒரு எட்டு அதன் இருப்பிடம் தேடிப்போய் பார்த்துவிட்டுவர வேண்டும்.

4 comments:

வலையுகம் said...

///அவைகளிடம் சொன்னால் விரட்டுவது உங்கள் வேலையென்றால் மண் கிண்டுவதும் குப்பை கிளறுவதும் எங்களது வேலையும் உரிமையும்ஆகும்என கர்ஜிக்கிறதுகள்.///

மிக அருமையான நடை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

தேடிப் பாருங்க சார்... (குழம்பு ஆகி இருக்குமோ...?)

vimalanperali said...

வனக்கம் ஹைதர் அலி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/