16 Jan 2013

தலைமுறைஇடைவெளி,,,,,,


     
இரண்டுக்குமானவித்தியாசத்தை
ட்வின்ஸ்""பார்க்கத் தெரிய வேண்டும், என
தனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் சொன்ன
கந்தவேல்அவரது தலைமுறையில்
முதன் முதலாய் நகரத்திற்குகூலி
வேலைக்கு போனதாய் அறியப் படுகிறார்.
கிழக்குத் தெருவின்கண்மாய்க் கரைமேட்டில்
நல்ல தண்ணீர் கிணற்றின்அருகாமையாக
அவரது வீடு.
மண் சுவர் வைத்து கட்டிய வீட்டின்
மேல் கூரை கம்மந்தட்டையால்
வேயப்பட்டிருந்தது.
தரை முழுவதும்சாணம் மொழுகிய
ஒற்றை வாசலைக்கொண்டஅவரின் வீடு
எந்த வாஸ்த்துக்குள்ளும்அடங்காமல்!
வீட்டின் அடுப்படிவெளி வாசலை
ஓட்டி இடதுபக்கமாய்!
குளியலறை என தட்டி கட்டி
சிறியதாய் மறைந்திருந்தார்கள்.
சாப்பிடுவது,தூங்குவது,ஓய்வெடுப்பது
உட்கார்ந்து பேசுவது,சுகம் துக்கம்
பகிர்ந்து கொள்வது எல்லாம்
வீட்டை ஓட்டிய வெளியில்தான்.
வீட்டைச் சுற்றிலுமாய் வேலி போட்டு
அடைக்கப்பட்டவெற்றிடத்தில் - ஓரமாய்
ஆடுகளைஅடைத்து வைத்திருந்தார்கள்.
ஆடு மேய்க்கும் கம்பு,ஆட்டு குட்டிகளை
அடைக்கும் கொடாப்பு ஆட்டு சாணம்
மூத்திர வாசனை உதிர்ந்த முடிகள் என
ஆட்டுக் கொட்டடியையும்,சாண வாசமும்
ஓற்றை வாசலுமாய்இருந்த வீட்டையும்
கொண்டிருந்த அவரின் தாத்தா
வருட சம்பளத்திற்கு ஒரு வீட்டில்
வேலைக்கு இருந்தார்.
அவரது தந்தை ஆடு மேய்த்தார்.
இவர் கூலி வேலைக்குச்சென்றார்.
தான் குடியிருக்கும் கிராமத்தின்
காடு கரைகளுக்கும் நகரத்தின்
சந்தடிகளுக்கும் மத்தியில்!
பத்து வருடங்கள்கழித்துப்பார்க்கையில்
அவரதுஇரண்டு பிள்ளைகளும் கூலி
வேலைக்குசென்று கொண்டிருக்கிறார்கள்
நகரத்தை நோக்கி!

25 comments:

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் சரியாக சொன்னிங்க......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

vimalanperali said...

நன்றி easy editiriol calander sir

விச்சு said...

இப்போது நகரம்தான் எல்லாமும் என்றிருந்தாலும் கிராமம் நோக்கிய பயணம் ஒருநாள் இருக்கும் என்று நம்புவோவோமாக... எழுத்துநடை இயல்பாக அருமையாக இருந்தது சார்..

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

ezhil said...

அவர்கள் வாழ்வின் தலைமுறை இடைவெளி அவ்வளவுதான்... ஒரு கிராமத்து நாயகனின் டைரிக்குறிப்பு போல் இருக்கிறது உங்களின் அழகான எழுத்து நடை..

சேக்கனா M. நிஜாம் said...

நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகள்

அருமை !

தொடர வாழ்த்துகள்...

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் சேக்னா நிஜாம் முகைதீன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

என்றன் வலையில் இசைத்த கருத்துக்கள்
என்றும் இருக்கும் இனித்து!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நகரத்தை நோக்கி நகா்ந்த கவிதை
சிகரத்தை நோக்கும் சிறப்பு!

vimalanperali said...

வணக்கம் பாரதிதாசன் சார்,
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

அருணா செல்வம் said...

அருமையான சிந்தனை.
வாழ்த்துக்கள் விமலன் ஐயா.

vimalanperali said...

வணக்கம் அருணா செல்வம் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Studentsdrawings said...

மலரும் நினைவுகள்

vimalanperali said...

வணக்கம் ஸ்டூடென்ட் பெயிண்டிங்க்ஸ் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/