14 Jan 2013

தடம்,,,,,,,,,


                       

ஆறு இட்லிகள்,நான்கு பூரிகள் இவைகள்தான் நான் வாங்கியவையாய் இருந்தது. வெள்ளைக் கலரில்புள்ளிப்புள்ளிகளாய்விழுந்திருந்தசிறு,சிறுபள்ளங்களுடன்தன் மேனியின் அழகு காட்டி சிரித்துநிற்க,அதன்அருகாமையாய்ஒன்றின்பக்கம்ஒன்றாயும், ஒன்றின்  மீது மற்றொன்றும் ஏறி அமர்ந்துவட்டமாய்காட்டிக்கொண்டிருந்தவைகளின்வலது பக்கம் தேங்காய்ச்சட்னியும்,இடது பக்கம் காரச்சட்னியும்/
வெள்ளை,சிவப்பு,,,,,,,,,,,,,,அட இந்தஒற்றுமையைஇதுவரைவரையிலும் எந்தக்கொடியிலும்  பார்த்ததில்லையே?நன்றாகத்தான் இருக்கிறது.இதுவும் பார்ப்பதற்கு.
கிருஷ்ணனைக் காணவில்லை. வேலைக்காரர்கள்தான் இருந்தார்கள்.ப்ரௌன் கலர் பனியன் போட்டு தொந்தி நீட்டிக்கொண்டிருந்தவர் வெள்ளை வேஷ்டியை மடித்து கட்டியிருந்தார் உள் டவுசர் தெரிய /கட்டம் போட்ட லுங்கியில் தெரிந்தவர் அடர் நிற சட்டை அணிந்து கொண்டிருந்தார்அவர் மாட்டாமல் விட்டிருந்தமேல்வரிசை பட்டன் வழியாக அவரது மாரிலிருந்த முடிகள் கறுப்பும்,வெள்ளையும் காட்டி/
நான்கு அல்லது மூன்று வரிசை இருக்கலாம்.இடமும் ,வலமுமாய் மாறி,மாறி போடப் பட்டிருந்த டேபிளில்அமர்ந்துசாப்பிட்டுக்கொண்டிருந்தநால்வருக்கும்ஓடி,ஓடி பரிமாறிக் கொண்டிருந்தவர் இளவயதுக்காரராய்த்தெரிந்தார்.
பூரியைக்கட்டியவரும்,இட்லியைக்கட்டியவரும்சொன்னகணக்கைகல்லாவில் இருந்தவர் சிரிக்க மறந்து வாங்கிப்போடுகிறார்.(அவ்வளவு கறாராக இல்லையென்றால் யாராவது ஏமாற்றி விட்டால்,,?)மீதம்சில்லறையைகொடுக்கையில்கிருஷ்ணன்வீட்டிற்குப்போயிரு ப்பதாகவும் வந்து விடுவார் சிறிது நேரத்தில் எனவுமாய் சொல்கிறார்.
தான் கிருஷ்ணனின் தூரத்து உறவுஎனவும்அவனுக்குஹோட்டல்ஆரம்பிக்க தான்தான் ஆலோசனை கூறியதாகவும் கூறினார்.அவர் சொன்னதை கேட்டவாறும்,சிரித்துவிட்டும் கடையை விட்டு வெளியே வரும் போது கடையின் எதிர் முனையைப் பார்க்கிறான். 
கிழக்கும்மேற்குமாய் நீண்டிருந்த சாலை அது.கறுப்பு உடை அணிந்து அழகு காட்டிக் கொண்டிருந்தது,வலமும்,இடமுமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தவீடுகளுக்கும், கடைக -ளுக்கும் மத்தியில் வலதுஓரம் இட்லிசுட்டவளாய்அமர்ந்துகொண்டிருந்த அவளுக்கு55  வயதிருக்கலாம்,ரோஸ்க்கலரில் நூல்புடவைஅணிந்திருந்தாள்.புடவையின்ஓரம் தெரிந்த வெள்ளை பார்டர் சேலைக்கு அழகு காட்டி அமைந்திருந்ததாய்/
ரோட்டின்ஓரமாய்இட்லிப்பானைக்குபின்னால்அமர்ந்திருந்தஅவர்மாநிறம்தரித்தவளாய்/ வலது ஓரம் இருந்த சட்டியில் பணியாரம்வெந்துகொண்டிருந்தது.மண்அடுப்புதீ காட்டி/ இடது ஓரம் இருந்தஅடுப்பில்இட்லிவெந்துகொண்டிருந்தது.மல்லிகைபூப்போலெல்லாம்  இல்லை.
இட்லியாய் இருக்கும் இட்லி,சட்னி சாம்பாரெல்லாம் கிடையாது.சீனி வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். பார்சலாக இலையில் வைத்தோ அல்லது பேப்பரில் வைத்து கட்டியோ தரமாட்டாள், தூக்கு வாளி அல்லது  நாம் கொண்டு போகிற பாத்திரத்தில் வைத்துக் கொடுப்பார். வேண்டுமானால் சேர்த்து உடன் ரெண்டு பணியாரம் வாங்கிக் கொள்ளலாம்.
அங்குவருபவர்களும்,நான்கு இட்லிகளுக்கு மேல் வாங்கி நான் இதுநாள்வரை பார்த்ததில்லை.
கிட்டத்தட்டஎனக்குநினைவுதெரிந்தநாளிலெல்லாம்இருந்துஇல்லை,பத்துவருடங்களாக அவரை அப்படித்தான் பார்க்கிறேன்.
அப்பொழுது தயக்கமாக வந்த ஒருவர் தான் கொண்டு வந்திருந்த தூக்குச்சட்டியில் ஒரு இட்லி வாங்கிக்கொண்டிருந்தார்.தனது ஒரு வயது குழந்தைக்கு சாப்பிடக்கொடுக்க வேண்டும் என/பத்து வருடங்களுக்கு முன்பு நான் நின்று வாங்கிய அதே இடத்தில்/

No comments:

Post a Comment