14 Jan 2013

முடிவே முன்னாய்,,,,


              
ஒரு கவிதையை படித்ததும் பிடித்துப்போக காரணங்கள் பல இருக்கலாம்.அவைகளில் முக்கிய மானதாயும்,முதன்மையானதாயும் இருந்த ஒரு கவிதையை இன்று தீக்கதிர் வண்ணக்கதிரில் படிக்க நேர்ந்தது.ஒரு இடத்தில் ஆரம்பித்து இன்னொரு இடத்தில் முடிகிறதுதான் கவிதைகளைத் தான்இதுவரைபடித்துள்ளேன்,முடிகிறஇடமேகவிதைதுளிர்க்கிறஇடமாய்உள்ளதே கவிதையின்  சிறப்பு.திரு எஸ் வி வேணுகோபால் அவர்கள் எழுதிய அந்த கவிதை இதோ;
                                   
                           பாயாசம்:

பாட்டி சொல்லத் தொடங்குகிறாள்
குருவி பாயசம் வைத்த கதையை/
முன்னூறு நாலாவது முறையாக.
கதை கேட்கத்துவங்குகிறது குழந்தை
 தனது போர்வை,பிடித்தமான தலையணை,
மின் விசிறியின் வேக விசை,
எல்லாம் சரி பார்த்துக்கொள்கிறது.
கதைக்கு உம் கொட்டியபடி/
கதையில் குருவி கடைக்குப்போகிறது
பாயசம் வைக்க.
சேமியாவுக்கு ஒரு முறை,
முந்திரிக்கு ஒரு தடவை,
பாலுக்கு ஒரு தவணை,
சர்க்கரைக்கு ஒரு நடை,,,,,,,,
இன்றும் குழந்தை தூங்கி விடுகிறது.
பாயசம் கொதிக்கும் முன்.,,,,,
இறக்கி ஆற வைத்த பாயாசத்தில்
நனைத்தெடுத்த கை விரலை
உறங்கும் குழந்தையின் உதடுகளில்
தீற்றுகிறாள் பாட்டி.
சப்புக்கொட்டிக்கொள்கிறது குழந்தை.

                                                                                           

                                                                                     நன்றி :எஸ்,வி வேணுகோபால்
                                                                                     தீக்கதிர் வண்ணக்கதிர்,13.1.13

2 comments:

கோவி said...

nice one..

vimalanperali said...

நன்றி கோவி சார்.