1 May 2013

ரயிலுவண்டி,,,,




 சுற்றுலா  செல்வதென்பது  எல்லோருக்கும்  பிடித்தமானதாகவே. /
அதுவும்  மிகவும் பிடித்த இடங்களுக்கு பிடித்த மனிதர்களுடன் செல்வதென்பது மன
இசைவுடன் நடைபெறும் குதூகல விசயமாகவே




        பெற்றோர்களுடனும் சுற்றத்தார்களுடனும் சூழ கோவில்குளம் என போய் வந்த
காலங்கள் போய் அவரவர்களின் பணிநிமித்தமாயும் பிழைப்பு கருதியும் வெளியூர்களில்
தனித் தனி குடும்பங்களாய் தங்கிவிட நேர்ந்த பிறகு எங்கும் எதற்கும் தனியாகவே
சென்றுவரும் நிலையும் அவசியமும் உருவாகிப்போகிறது       



 அந்த உருவாக்கம்தமிழ்நாட்டில் இருக்கிற ஆயிரக்கணக்கான கூலி வேலைக்

காரர்களின் அன்றாடப்  பாடுகளில் இல்லாமல் இல்லைஅவர்களுக்கெல்லாம்
 " ப்ளாக்இயர்"  கிடையாது. "லீவ் சரண்டர்ட்ரிப் ஷீட், பெட்ரோல்பில் , ரூட் மேப்"
இத்தியாதிஇத்தியாதி என்கிற எந்த வரையரையும் நியதியும் கிடையாது.




       அதையெல்லாம் தாண்டியவர்களாகவும்அதற்கு அப்பாற்ப் பட்டவர்களாகவுமே
இருந்துள்ளார்கள் எப்பொழுதும்அதையும் மீறி அவர்கள் மேற்ச் சொன்னவற்றிக்கெல்லாம்
பிரியப் பட்டாலோ ஆசைப் பட்டாலோ நஷ்டமே ஏற்படும்அதனால் அந்த
பிளானிங்க்கிற்குள்ளாகவெல்லாம் வரமாட்டார்கள் அவர்கள்ஆனால் அவர்களது
பிளானிங்குகளின் முன் எப்போதுமே தோற்றுப் போகிறவகளாகநாம்.




        ஒரு வீட்டில் கணவன்மனைவிபிள்ளைகள் இரண்டு பேர் அல்லது ஒருவர் என
வைத்துக் கொண்டாலும் அவர்கள் மூவருமாக அல்லது நால்வருமாக வேலைக்குச்
சென்று சம்பாதித்து வருவதில் ஒரு பகுதியை சேமிப்ப்புக்கென ஒதுக்கி விடுகிறார்கள்.         தீப்பெட்டி ஆபீஸ், பயர் பீஸ் , கட்டிட வேலை என பலதரப்பட்ட வேலைக்கு
சென்று வாரச் சம்பளம் வாங்கும் அவர்கள் சேமிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ,சென்செக்ஸ் புள்ளிகளை அறிவிக்கும் தனியார் நிறுவனங்களிலோ இல்லை.         பெரிய கம்புகொண்டு ஓடிவந்து மூச்சடக்கி "ஹைஜம்ப்தாவி வங்கிக்குள்
நுழைந்து , அங்கிருக்கிற தடைகளையும் பார்மாலிட்டிகளையும் உடுருவிச் சென்று
கணக்கு ஆரமிப்பதற்குள்அலுத்துப் போகிறார்கள்பாவம்அதுவும் பேங்க் ஸ்டாப் என்றாலே
கெத்தாக இருக்க வேண்டும் என்கிற மனோநிலையுடன் வேலை பார்ப்பவர்கள் முன் போய்
நிற்பதற்கு அய்யரவுப் பட்டுக் கொண்டே ஒதுங்கி விடுகிறார்கள்பின் எப்படி அவர்களது
சேமிப்பும்சுற்றுலாவும்?




        கணவன்மனைவிபிள்ளைகள் எனத் தனியே வேலை கிடைத்து சம்பாதிக்கும்சராசரியான சம்பளமான 3500ரூபாயில் (25நாட்கள் வீதம் ரூ.100)வாரம்
ஒருமுறை குடும்பச்  செலவிற்கென  ஒருசீட்டும்பலகாரச்சீட்டுஜவுளிச்சீட்டுபாத்திரச்சீட்டுஎன்கிற வரிசையில் சுற்றுலாச்சீட்டும் கட்த் தவறுவதில்லைஅதுவும்
தனித்தனி நபர்களின்பெயரில்.     அம்மாதிரியான தனித்தனி சீட்டுகளில் இடம் பெறுகிறஜவுளியும்பலகாரமும்அவர்களது பண்டிகை நாட்களை ஈடு செய்து விடுகிறது.      மற்றவைகள் அவர்களதுகுடும்பத்தேவைகளையும் இப்படியான சுற்றுலா ஆசையையும்
போக்கவல்ல நிவாரணியாக அமைந்து போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லைதான்.    
       என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் கூடச் சொல்வார் அவர்களைக் கண்டவுடன் . "இது லேபர் ஏரியா,".......... ன்கிற முகச் சுளிப்புடன்லேபர் எனச் சொல்லும் போதே
வருகிற முகசுளிப்பு அவருடைய " உயர்ந்த மனோநிலையை"...,,,?/ காட்டும். லேபர் என்றவுடன் தெரிகிற சக மனித உருவமும்நேயமும் மறைந்து முகச் சுளிப்புமட்டுமே   ஏற்படுகிறதாயி ன் அவருடைய உயரிய எண்ணங்கள் லேபரைப் பற்றி என்னவாகஇருக்கும் ?  அந்த உயரிய எண்ணமே முடை நாற்றமெடுத்துப் போய் அவர்களின்பெண்டு,பிள்ளைகள்குடும்பம் பற்றியதான தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைப்பதில்கொண்டு போய் விட்டு விடுகிறது
        அப்படியெல்லாம் ஏளனமாக நினைப்பவர்களையும்முகம்  சுளிப்பவர்களையும் செ.......................தான்.   எனவும் தோன்றுகிற அதே நேரத்தில் அந்த லேபர் ஏரியாவிலும்அதை ஒட்டிய நிலையில் இருக்கும் மிகப் பெரிய மக்கள் திரளினது கல்விபொருளாதாரம்வேலை வாய்ப்பு என சகலத்தையும் யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதைப்
பற்றி சரியான நிலைபாடு எடுக்கும் போது "லேபர் ஏரியா " முன்னேறிய ஏரியாவாக இருக்கும்
என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.        அங்கிருந்த இளைய தலைமுறையினரும் முன்னேறி வருவார்கள்என்பது திண்ணம்இப்போதைக்கு தடைபட்டு நிற்கிற அவர்களின் முன்னேற்றத்தைப்  பற்றி சிந்திக்கவும்முடிவெடுக்கவுமான  நிலையில் உள்ளவர்கள் அவர்களின் வோட்டுக்களைப் பற்றிமட்டுமே
யோசிக்கிற அவலநிலையில் .
        எந்தவிதமானமிடில்க் கிளாஸ்த் தனத்துடனும் மிகை கொண்டுவாழாமல்
வாயைக்கட்டி,வயிற்றைக் கட்டி,அரை வயிறுகால் வயிறாயும், நல்லதாக உடுத்தியும்
உடுத்தாமலும் தன் வாழ்க்கைதன் சம்பளம் தன் சேமிப்பு என வாழ்கிற அவர்களுக்கு
சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்தமான விஷயமாகவும்மிகப் பெரிய
ரிலாக்ஸாகவும்  இருக்கிறது.       அப்படியான ரிலாக்ஸ் "லேபர்என்றதும் முகம்சுளிப்பவரிடம்உள்ளதா?இல்லையா ?என்பதே இந்த நேரத்து கேள்வியாகவும்தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமாகவும்
உள்ளது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான கண்ணோட்டம்...

இனி உங்கள் பதிவுகள் அனைவருக்கும் செல்லும்...(Reader-ல் படிப்பவர்களுக்கும்) கருத்திட வரும் நண்பர்கள் email subscription செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...

vimalanperali said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.