2 May 2013

சோதனை ஓட்டம்,,,,,,


                
  
 பயணங்கள் பலவற்றை கற்றுத்தருகின்றன.அல்லது சொல்லிப்புரிய வைக்கின்றன. என்கிற முன் முனைப்புடன்தான் அன்று பஸ் ஏறினான்.
   
 விருதுநகர் to மதுரை.காலை எழுந்ததும் தொற்றிக்கொள்கிற பரபரப்பு,மனம் முழுவதும் வியாபித்த எண்ணம் எல்லாம் சேர்ந்து உந்தித்தள்ள ஆறு மணிக்கு எழுந்தவன் குளித்து முடித்து வீட்டை விட்டு கிளம்ப 9 ஆகிவிட்டது
.
 ஷேவிங்க்பண்ணிக்கொள்ளக்கூடத்தோணவில்லை.ஃபேண்ட்,சட்டையை போட்டுக்கொண்டு   மனைவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

 நல்ல வெயில் பை பாஸ் ரோட்டில் பஸ் ஏறும்போது.ஏறி விட்டான் துணிந்து.இதில்  என்ன துணிவு என்கிறீர்களா?போன வாரம் முதல் நாள் நடந்த கூத்து அவனை அந்த மாதிரி யோசிக்க வைத்திருக்கிறது
.
அதிகாலை3.30பஸ்சிற்க்கு2.00மணிக்கெல்லாம்எழுந்துகுளித்துகிளம்பிவிட்டான்.ஆட்டோக்கார ரையும் வரச்சொல்லி விட்டான்.மனதும் தயாராகிவிட்டது.

எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டான்.ஒருவாரம் தங்குவதற்கு தேவையான துணிமணிகள், டூத் பிரஷ்,ஷேவிங்க் செட்,பணம் மற்றும் மனைவி,மக்களினது அன்பு என எல்லாம் எடுத்துக் கொண்டான்.

 ஆனால் உடல் மட்டும் ஏனோ ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருந்தது.நேற்று இரவும்,மதியமும் சாப்பிட்ட தக்காளி சாதம் செரிமானம் ஆகவில்லை போலிருக்கிறது. வயிற்றிற்கும் நெஞ்சிற்கும் புளிச்சேப்பமாய் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாகிப்போகும் பயணத்தின் வேகத்தில் என்கிற நினைப்பில் பஸ் ஏறிவிட்டான்.அவன் நினைத்தது போல சரியாகிப் போகவில்லை.நடுவழியிலயே அதன் குணத்தை காட்டி விட்டது.தலை சுற்றல்.வயிறு எரிச்சல் எல்லாம் சேர்ந்து கொள்ள திருமங்கலத்தில் இறங்கி திரும்பவும் வீட்டிற்கே வந்து விட்டான்.

என்ன செய்ய,ஏது செய்ய,,,,,,,,, என்கிற நிதானமான யோசனைக்கெல்லாம் வழியற்றுப் போனது. அடைபட்டுப்போனயோசனையைதிறக்கஏது முயற்சிசெய்யாதவனாக  முன் எடுத்த காலை பின் எடுத்து வைத்து விடுகிறான்.

 அதே பேண்ட்,அதே சர்ட்,அதே தோள் பை,,,,,,ஆனால் பஸ் ஏறும் போது இருந்த தலை நிமிர்வு இல்லை.மனநிமிர்வும் இல்லை.வீடு வந்து விட்டான்.

 வீடுவந்தவன் அன்றிலிருந்து இன்றுவரை யோசித்ததன் விளைவு பஸ் ஏறிவிட்டான் சோதனை ஓட்டமாக./

அதிகாலை வேலையில் செல்லும்போது தெரியாத பலவிஷயங்கள் இப்போது பளிச்சிட்டு. சாலையின் அகலமும்,நீளமும்,விரிவும்,வாகனங்களும்இப்போதுதெளிவாகவே/

ஊருக்குள்செல்லும்போதுசாலையின்இருமருங்கிலுமாய்அடுக்கிவைக்கப்பட்டிருந்தகடைகளில்   வியாபாரம் வெகு மும்பரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.மனிதர்கள் எந்த கடையிலாவது ஏதாவது பொருளை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.சினிமாபோஸ்டர்கள்,ஜாதி சங்கம், நண்பர்கள்  வட்டாரம் என பாலவாறாய் தெரிந்த ப்ளக்ஸ் பேனர்கள் வெயிலில் பட்டு பளிச்சிட்டன.

 பேனர்களின் கீழே வரிசையாக உட்கார்ந்துவியாபாரம்பார்த்தவர்கள்பேரத்தில்மும்பரம் காட்டிக்  கொண்டிருந்தார்கள்.

 சாலைகளில்விரைந்தஇருசக்கர வாகனங்களிலும்,சைக்கிளிலும்,நடந்தும்,பேருந்துகளிலுமாக  அலைகழிந்தமனிதம்தனதுரேகையின்ஆழம் பதித்தவாறு/

சாலையின் இடதுபக்கமாய் இருந்த போலீஸ் ஸ்டேசன் வாசலில்  சற்று ஓரமாய் விபத்துக்குள் ளான ஒரு வேன் முன் பகுதி தெரியாமல் அடையாளமற்று நசுங்கிப்போய் நின்றது.

வேனின் பக்கவாட்டாக ஒரு பைக் படுத்திருந்தது நைந்துபோய்.ரோட்டோரமாய்முளைத்திருந்த வீடுகள் பல கதைகளையும், சம்பவங்களையும் தன்னுள் அடக்கி அடைகாத்தவாறு./

சாலை, சாலையின் மனிதர்கள்,அவர்கள் வசித்த வீடு ,அவர்கள் வாங்கிய கடைகள்,கடைகளின் சொந்தக்காரர்கள்,அவர்களதுஉறவுகள்,அவர்களதுசுகம்துக்கம்,சுபகாரியங்கள்,அவர்களது வீட்டு  பிள்ளைகளின்படிப்பு.வேலைவாய்ப்பு,சம்பாத்தியம்,

கடன்,வரவு,செலவு,கல்யாணம்,விசேஷம்,பிறப்பு,இறப்புநல்லது,கெட்டதுஎன்கிறதானநெசவு அவர்களுக்குள் பலப்பட்டிருந்ததைபளிச்சிட்டுக்காட்டியசாலை அந்நேரம்
நன்றாகத் தெரிந்தது.

இப்படியாக சாலைகாட்டிய மேடு பள்ளங்கள்,நீள அகலம்,மனித வாழ்வு,அதன் மாண்பு,,,,,,எல்லாம் தாண்டி பஸ் மதுரை பஸ்நிலையத்திற்குள் வந்ததும் இறங்கி சிறுநீர் கழித்து விட்டு, டீ சாப்பிட்டு விட்டு திரும்பவுமாய் பஸ் ஏறுகிறான்.தனது சோதனை ஓட்டத்தை தொடர்பவனாக,,,,,,,,,,,,,,,,,,/

2 comments:

  1. சாலையில் நடப்பதை கண் முன்னே தெரிகிறது...

    ReplyDelete
  2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

    ReplyDelete