அள்ளித்தின்ற ஒரு கவளம் சோற்றினுள்
புதைந்து தெரிந்த முகங்கள்
ஈரம் சுமந்ததாயும்
வாஞ்சைமிக்கதாயுமாகவே/
உழுதவர்கள்,விதைத்தவர்கள்,
அறுவடை செய்தவர்கள்
வாரி எடுத்து களத்தில் சேர்த்தவர்கள்
அதை நெல் மணிகளாய்
சேர்த்தெடுத்தவர்கள்
என அத்தனை பேரின்
வியர்வை ஓடி பிசுபிசுத்த கரங்களும்
உழைப்பு மிகுந்த உடலுமாய்
சேர்த்து முழுதாய் உருத்தெரித்து,,,,,,,,,,
நான் அள்ளித்தின்கிற சோற்றில்
புதைந்து தெரிந்த முகங்கள்
ஈரம் சுமந்ததாயும்,
வாஞ்சைமிக்கதாயுமாகவே/
9 comments:
நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும், அதை விதைத்தவர் துவங்கி, நமக்காய்ச் சமைத்துத் தருபவர் வரையிலும் அனைவரது உழைப்பும்,அன்பு நிறைந்த முகங்களுமே தெரிகிறது.உண்மையை அழகாக எடுத்தியம்பும் கவிதை.
வாழ்த்துகள் ஐயா..
உண்மையை விளம்பும் கவிதை. சாதி, மதம், இன பேதம் பார்க்கும் நாம். உண்ணும் உணவில் விதைத்தவர், அறுத்தவர், சுமந்தவர், விற்றவர், சமைத்தவர் என வெவ்வேறு சாதி, மதம் பார்ப்பதில்லை தானே. பசிக்கும் ருசிக்கும் உண்டு களிக்கும் போது அவ் உணவை படைத்தவர்களை ஒரு கணம் சிந்திப்போமாக.
சிந்திக்க வேண்டிய... உணர வேண்டிய கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.சிந்திப்பு மட்டுமே அவர்களுக்கு மாற்றாகிவிடப்போவதில்லை,மாறாக கிட்டத்தட்ட காணாமல் போய்க் கொண்டிருக்கிற அவர்களின் வாழ்வு ஓரளவிற்காவது சீர்தூக்கி வைக்கப்படுமா னால் சந்தோஷமே/
தேவை மனித பேதம் பார்க்கக்கற்றுக் கொடுப்பதில்லை,மாறாக தேவை முடிந்த பின் புறந்தள்ள பழகிக்கொடுத்து விடுகிறது.விதைத்தவரில் தொடங்கி அறுப்பவர் வரை இங்கே நினக்கப்பட வேண்டியவர்களும்,போற்றப்பட வேண்டியவர்களுமே/
ஒவ்வொரு பருக்கையிலுமாய் எழுதப் பட்டுள்ள பேரை வாசிக்க இங்கே எத்ஹனை பேர் துணிவு கொள்கிறார்கள் என்பதைப்பொறுத்தே இவ்விஷயத்தின் வீரியம் தெரிவதாய் இருக்கிறது,நன்றி தமில் முகில் பிரகாசம் சார்.
நன்றிநிரஞ்சன் சார் தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
//நான் அள்ளித்தின்கிற சோற்றில் புதைந்து தெரிந்த முகங்கள் ஈரம் சுமந்ததாயும், வாஞ்சைமிக்கதாயுமாகவே//
அருமை... அருமையான வரிகள்.
வணக்கம் சே குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment