24 Aug 2013

இலக்கு,,,,,,,


             
வெள்ளை நிற நாய் அது.புசுபுசுத்த முடிகள் அடர்ந்து தெரிய வாலைமடக்கிக் கொண்டு காது களை கூர் தீட்டியது போலவுமாய் தூக்குக்கொண்டு ஒடியது.

கரு நிற போர்வை  போத்தியது போல தன் மேனியின் நிறம் காட்டிய சாலையது.இரு சக்கர வாகனங்களும்,சைக்கிள்களும்,கனரகமிதரகவாகனங்களுமாய்அவ்வளவாகவும் அவ்வளவு அல்லாமலும் பயணித்துக்கொண்டிருந்த காலை வேலையது.

மணி 9ஐத்தொட்டுகைகுலுக்கப்போகிற8.59ன்முடிவு நேரமாய்/மொட்டவிழ்ந்து மலர் கிற ஒரு பூவின் மென் மலர்வாய்.8.9.10.11 12,,,,,,,,,,,,என முடிந்து திரும்பவுமாய் ஒன்றிலிருந்து ஆரம்பித்து நகர ஆரம்பிக்கிற மணித்துளிகள் இந்த ஒன்பதை இப்படியாய் காட்டிச்செல்கிறது.

தன் உயரம் காட்டியும்,தன் ஆகுருதி காட்டியுமாய் சாலையின் இருபக்கமுமாய் வளர் ந்து நின்ற பலநிற மரங்கள் பலபெயர்களைஅறிவித்தவாறும்,தன்னைஇனம்காட்டியுமாய்/முரட்டுத் தனமாயும் இள ஊடல் காட்டியும்,பூஞ்சையாயும் கைவிரித்து இலைகளும் பூவும் பிஞ்சுமாய் அது அற்றுமாய் நின்றவைகளுமாய் தன்னை இனம் காட்டிக் கொண்டிருந்த மரங்கள் தன் வளர்விலிருந்து இன்று வரையான தன் கதையைக்கூறி அடையாளம் காட்டியவாறு/

புளிய மரம் கேட்கிறது,வேப்பமரம் சொல்கிறது.புங்க மரம் சொல்கிறது, பூவரசமரம் கேட்கிறது. நால்வழிச்சாலையமைக்கவெட்டுப்பட்டசாலையின்ஓரங்களில்நிலைகொண்டிருந்தஐம்பது வருடசரித்திரம் பேசிய மரங்களின் உள் ஆத்மாக்களையும்,அதன் பெருமூச்சுக்களையும், விரக் திப்பேச்சுக்களையும்வெளிப்படுத்தியமரங்களின்நடுவாய்ப்பயணித்த்சாலையில்பின்னங்கால்கள்இரண்டும்,முன்னங்கால்கள்இரண்டைத்தொடஓடிக்கொண்டிருக்கிற நாய் தனக்கு முன்னா ல் பார்வை படும் தூரத்தில் சைக்கி ளில் செல்கிற அதன் உரிமையாளரை எட்டிப்பிடிக்கச் செல்கிறதாய்/
நாய்பின்னால்,அதன்உரிமையாளர்முன்னால்,உரிமையாளர்முன்னால்நாய்பின்னால்,,,என்கிற
ஒரேநேர்கோட்டுநிகழ்வாய் காட்சிப்பட்ட அதன் பின்னால் இருத்தி வைக்கபட்டிருந்த விழிகள் பல நோக்க தன் செயல்,நோக்கம் ,இலக்கு எல்லாம் ஒன்றென கருதி மனம் குவித்து ஓடுகிறது நாய்/

பின்னங்கால்கள் இரண்டும் முன்னங்கால்கள் எட்டிஇரண்டைத்தொட்டவாறிருக்க/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...! நன்றி....

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி

'பரிவை' சே.குமார் said...

இலக்கை நோக்கிய பயணம்... அருமை.

Tamizhmuhil Prakasam said...

நாயின் வேகமும், அதன் இலக்கு நோக்கிய தெளிவான பார்வையும், எடுத்துச் சொன்ன விதம் அருமை.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம்தம்ல் முகில் பிரகாசம் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/