ஈரச்சுவடு,,,,,,,
“யாருஅவரு இந்த ஊருதானா”? என்கிற எனது கேள்விக்கு டீக்கடைக் காரர் பதில் சொல்லவில்லை.
கடைக்குவந்திருந்தவர்தான்சொன்னார்.அவர்டீமட்டுமேகுடிக்கவந்த வராயும்,எங்களைப் போல என்றைக்காவது ஒருநாள் வந்து டீக்குடிப் பவராகத் தெரியவில்லை.
டீ,டிபன்என்கிறரகவாடிக்கையாளராய்இருக்கவேண்டும்போலிருக்கி றது.
தினசரிகளின் புலர்வுகளில் அதிகாலையில் திறக்கப்படுகிற அந்தக்க டையில் முதன் முதலில் டீக்குடிக்க வருபவரும் அவராகத்தான் இருப்பாராம்,சொன்னார்கள்.
இடையிடையில்டீ,டிபன்,வடைஎன்கிறஎக்ஸட்ராக்களிலும்நிறைந்து தெரிகிறவர்.
அவர்தான்சொன்னார்.வெள்ளைவேஷ்டி,வெள்ளைசட்டை அழுக்குப் படாத மேனி,அலுப்பில்லாத உடல். ஆனால் முகத்தில் நிரந்தரமாய் ஒட்டிக்கிடந்த கவலை ரேகைகள் எல்லாம் தாண்டி சிரித்துக் கொண்டே சொன்னார்.
வாடலாய் தெரிந்த கருத்த மேனியினரான அவர் கால் மீது கால் போ ட்டு பெஞ்சில் அமர்ந்திருந்தது பார்க்க பாந்தமாய் இருந்தது. ஆட்டி, ஆட்டிப்பேசியஅவரதுவலதுகையால்இடதுகையில்சிலிர்த்துத்தெரி ந்த முடிகளைதடவிவிட்டவாறும்,தலை கோதிக்கொண்டும் மூக்கு கண்ணாடியைசரிசெய்தவாறுமாய்சொன்னார்.நாற்பதிற்குமேலிருக்கும்
வயதின் அனுபவம் போலிருக்கிறது.
“இந்தஊருதாஅவன்,நல்லா படிச்ச பையன்.திடீர்ன்னு புத்திபேதலிச்சு ப் போச்சு” என்றார்.
“பக்கத்து டவுன்லதான் படிச்சான்.வசதியான வீட்டுபுள்ள, அடுக்குத் தகுந்தாப்புல வாக்கப்பட்டு வந்தவளும் எக்கா நகநட்டு, துட்டுதுக்கா னின்னுதாவந்தா,உத்தியோகம்ன்னு பையனுக்கு நெரந்தரமா எதுவும் இல்லை ன்னாலும் அவன் சொத்த நம்பி பொண்ணகுடுத்தாக,சும்மா சொல்லக்கூடாது பையன,வந்தவள கையில் வச்சி தாங்குனான்.
அப்பறம்ஒருபுள்ளபெர்ர வரைக்கும் புதுச்செழிப்புமா,குதுகூலமும் சந்தோசமுமாத்தான்இருந்தாங்க,எத்தனஇருந்தாலும் உக்காந்து தின் னா மலையும் கடுகாயிரும்தான?பாத்தான்,வீட்டுக்காரிக்கு வளை காப்புநடந்தகையோடபஸ் ஏறிட்டான்.வேலைதேடிப்போரம்னு/
பழக்காமனவன்ட்டஏற்கனவேசொல்லிவச்சிருந்ததாலஇவன்நேராப் போயி வேலையில சேந்துட்டான்.
அவ்வளவுபடிச்சவன்ஓட்டல்லகணக்குஎழுதுறவேலையின்னு கொ றவாநெனைக்கல,கைநெறையஇல்லைன்னாலும்ஏதோசம்ளம் முன் னு அவன் பாத்த வேளைக்கு தகுந்தாப்புல குடுத்துருக்காங்க/
வேலையிலசேந்தகொஞ்சநாளையிலயேமொதலாளிமனசுக்கு புடிச்சவனாயும்,கைராசிக்காரன்னும் ஆகிபோனான்.
அப்பறம் என்ன கடையில இவன் ராஜாதான். அது பொறுக்குமா கூட வேலைபாக்குறவுங்களுக்கு.கடைகல்லாவுல கைவச்சிட்டான்னு
இவன சி க்கல்லமாட்டிவிட்டுட்டாங்க/
இதவாடிக்கையா கடைக்கு சாப்புட வர்ர ஒருத்தர்தா கவனிச்சு மொத லாளி கிட்ட எடுத்துச்சொல்லி அவன மீட்டுருக்காரு.கடையில சேந் த கொஞ்ச நாளையிலையே அங்கயிருக்குற மனுச மக்க, மண்ணு ,ஊரோட தரம் எல்லாம் பத்தி அறிஞ்சி அதுக்கு தக்கன போயிகிட் டான்.
பெரிய டவுன்னுன்னாலும் ஒரு ஜாதி ஆதிக்கம் உள்ள ஊரு.அது லயும் அவன் வேலை பாத்த கடையில கூட வேலை பாக்குறவுங்க கூட அப்பிடி பிரிச்சுத்தான் பாப்பாங்க/
அதுல இருந்தெல்லாம் நெளிவு சுளிவா தப்பிச்சு நெரந்தரமா அங்க யே இருந்து சாதிச்சவன் மாசத்துக்கு ஒரு தடவ வீட்டுக்கு வருவா ன்.சில சமயம் ரெண்டு மூணு நா லீவுல வருவான்,சில சமயம் மொத நா நைட்டு வர்றவன் மறுநா சாயந்தரம் பஸ் ஏறிருவான். என்ன செய்ய அவன் பொழப்பு அப்பிடி/
இப்பிடி இருந்த அவங்க மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, நல்லா இருந்த அவுங்க பொழப்புல மண்ணு விழுந்துருச்சி,,,,,,,,,” என பேச்சு விரிந்த நாளொன்றின் காலை நேரம் நானும் எனது நண்பனு மாக அலுவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.
நண்பன் என்றால் பல வருடங்களாக பழகிய பழக்கமோ,நட்பு முறை யோ அல்ல.உடன் வேலை பார்ப்பவர்தான் நண்பர் ஆகிப் போனார் அல்லதுஅவரைவலிந்துநண்பராக ஏற்றுக்கொள்ள வேண்டிய மனோ பாவம் வந்து விழுந்து விடுகிறது.
வந்து விழுந்தது விதையாக, செடியாக மரமாக பூவாக, பிஞ்சாக, காயாக,பழமாக கனிந்து கிளை பரப்பி நிற்கிறது.
அதிலிருந்து விழுகிற துளிகளாக கனிந்து,கனிந்து விழுந்து எழுந்து நிற்கிற உயர் நவிற்சி மனோபாவம் வந்துவிட்ட காரணங்களாலே யே அப்படி சாத்தியம் கொள்ளவும் கைவரப்பெறவுமாய் செய்கிறது.
அப்படி வரப்பெற்ற கைகளின் பரஸ்பர கைகுலுக்கலில்தான் நட்பின் பரப்பு விரிந்து நின்றது கைத்தாங்கலாக/
நாங்கள்வந்த இருசக்கர வாகனத்தை கடையின் ஓரமாக் நிறுத்தி விட்டு டீக்குடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது ஒருவர் அழுக்கு வேஷ்டியுடனும்,மேனியுடனுமாய், தலை முடிகள் பறக்க கடை முன் வந்து நிற்கிறார்.சைகையால் டீ தருமாறு கையேந்தி நிற்கிறார்.(கேட்கிறார்.) பஞ்சடைந்த கண்களில் விட்டேத்தியான ஒரு பார்வை.எண்ணை காணாத தலைமுடி பரட் டை விழுந்து சிக்கல்,சிக்கலாக திரிந்துபோய்/காய்ந்து ஈரமற்றுப் போ யிருந்த உதடுகள் வெடிப்பு விழுந்து/முகத்தில் அடர்ந்து தெரிந்த தாடி அவரை இன்னமும் கொஞ்சம் விகாரமாய்க் காட்டியது.நடுங்கிய கரங்கள் எதையும் பிடிக்க சக்தியற்று/மெலிந்து இற்றுப்போனது போலிருந்தகால்கள் நிற்கக்கூட வலுவற்று/சட்டையணியாத வெற் று மேனி அழுக்குடனும்,பிசுபிசுப்பாயும்/
தினசரியான அவரது வழக்கமோ அல்லது அப்படிகேட்டதால் கடைக் காரருக்கு அவர்மீதுவந்த வெறுப்போ தெரியவில்லை.
“ஓடு அங்கிட்டு,இங்கயெல்லாம் வரக்கூடாது ஆமாம்”என்கிறார். டீக்கேட்டவரும்பரிதாபமாகபோய் கடையின் ஓரமாய் நின்று கொண் டிருந்தார்.
அப்படிவிரட்டப்பட்டவரைப்பற்றிதான்இவ்வளவுநேரமும் சொல்லிக் கொண்டிருந்தார்
டீக்கிளாஸைகையில்வைத்துக்கொண்டவாறே கைக்கு டீக்குடிக்க வந்திருந்தவர்.குடித்த டீக்கும், தின்றவடைக்குமாக காசு கொடுத்து விட்டு கிளம்புகிறேன்.
பூத்து மகிழ்ந்து நின்ற மண்ணும்,விரிந்து ஓடிய தார்ச்சாலையும்,கரம் விரித்து நின்ற மரங்களும்,சாலையில்ஓடியகனரக, மிதரகவாகனங் களும் அவரின் நிலைபற்றியும்,அப்படி ஒருவர் நின்று கொண்டிருப் பதைப் பற்றியும் கவலை கொள்ளாதவர்களாக.படுகிற கவலையும் ஞாயமற்றது என தோன்றியவாறு சென்று விடுகிறார்கள்.
கடையோரமாக நிறுத்தியிருந்த வண்டியை எடுத்துக்கொண்டு கிளம் பும் போது நண்பனிடம்சொல்லுகிறேன் கடையின்ஓரமாகநின்றஅவ ரை திரும்பவும் பார்த்தவனாக/
மனோநிலைசரியற்றவர்களின்வாழ்வுபெரும்பாலும்இப்படிகவனிக் கப்படாமல்தெருவோரங்களிலும்,கிட்டத்தட்டநாடுமுழுவதுமாயும்/
13 comments:
ஆம். தாங்கள் சொல்வது உண்மைதான். மனோநிலை சரியில்லாதவர்களைக் கவனிக்காத நாம்தான் உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவர்கள் என நினைக்கின்றேன்
வணக்கம் கர்ந்தை ஜெயக்குமார் சார்,மனோநிலைகளின் மாறுபாட்டில் சமன்பாடு இல்லாதவர்களின் உலகமாக இச்சமூக வெளி/நன்றி வருகைக்கு/
நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்.நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
இப்போது இது போன்று
மன நிலை சம நிலை தவறியவர்களை
அதிகம் சந்திக்க முடிகிறது
காரணம் ஏன் தெரியவில்லை
உண்மை... இன்றைக்கு அதிகம் ஆகிக் கொண்டிருப்பதும் உண்மை...
வருத்தம் அளிக்கிற நிலைமை.
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் ராமலட்சுமி மேடம்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சமூக நிர்பந்தங்களும் ,அர்த்தமில்லா தேடுதல்களும், இது போன்ற மன அழுத்தங்கள் அதிகமாகக் காரணங்களாகி...நம்மையெல்லாம் குற்றவாளிகளாக்கியுள்ளது நிஜம்...
வனக்கம் எழில்மேடம்.நன்றி வருகைக்கு,கருத்துரைக்குமாக/
Post a Comment