வைத்தியம் பார்த்த
வெள்ளைச்சாமி டாக்டரை
இன்று பார்த்தேன்,
நண்பகல் ஒருமணி வெயிலில்,
வருமானவரி அலுவலகம் முன்பாக./
வருமானத்தில் சரியாக வரிகட்டும்
நபர்களில்
அவரும் ஒருவராய் இருக்கிறார் இன்றுவரை.
இரண்டு வேளை மாத்திரை,
வெள்ளை மருந்துடனான ஒரு ஊசி,
இவைகளோடு சேர்த்து
"மறக்காம நாளைக்கு வாங்க"என்பதே
அவரின் வைத்தியமாய் இருக்கிறது இன்றுவரை.
நீண்டு கிடந்த கொடவ்ன் சாலையில்
தெற்குப்பக்கமாய் வாசல் வைத்திருந்த
ஆஸ்பத்திரி
எங்களது சிறு பிராயதில் கோவிலாகவும்,
டாக்டர் கடவுளாகவும்பார்க்கப்பட்டார்.
இன்று காட்சி மாறி
பழமையாளராய் பார்க்கப்படுகிறார்,
அல்லது பேசப்படுகிறார்.
ஆனாலும்
அவர்அணிந்திருக்கும்
தொள,தொள ஃபேண்டிலும்
மணிக்கட்டுவரை மூடிய
முழுக்கை சட்டையிலும்
தலை கவிழ்ந்த தளர்ந்த நடையிலும்
இன்றுவரை மாற்றமுமில்லை.
வைத்தியதிலும் தான்.
13 comments:
வணக்கம
சிறு பிராயதில் கோவிலாகவும்,
டாக்டர் கடவுளாகவும்பார்க்கப்பட்டார்.
இன்று காட்சி மாறி
பழமையாளராய் பார்க்கப்படுகிறார்
நீங்கள் சொல்வது உண்மைதான்
பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பழமையாளராய்ப் பார்க்கப் பட்டாலும்
நேர்மையாளராய் இருக்கின்றாரே.
பாராட்டப் படவேண்டியவர்.நன்றி ஐயா
அவரின் சேவை மேலும் தொடரட்டும்...
சென்னை மேற்கு மாம்பலத்திலும் இதுபோன்றதொரு மருத்துவர் இருக்கிறார். இருபதாண்டுகளுக்கு முன்பு வெறும் ஐந்து ருபாய் தான் வாங்குவார்.இப்போது தான் இருபது வாங்குகிறார். (மற்றவர்கள் நூற்றி ஐம்பதுக்குக் குறைந்து வாங்குவதில்லை). இவரிடம் போய், அவருடைய கட்டணத்தைச் செலுத்திவிட்டாலே பலருக்குக் குணமாகிவிடும். மருந்து வாங்கிச் சாப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அவ்வளவு கைராசி. டாக்டர் ஹெர்லே என்று பெயர். கன்னடம் பேசுபவர். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
எங்களது சிறு பிராயதில் கோவிலாகவும்,
டாக்டர் கடவுளாகவும்பார்க்கப்பட்டார்.
இன்று காட்சி மாறி
பழமையாளராய் பார்க்கப்படுகிறார்,//
அருமை.
கைராசி என்று அவரிடம் வரும் பழைய ஆட்கள் இருப்பார்கள்.
பழமையாளர் நல்ல வரி ஏய்ப்பு செய்யாத நேர்மையாளாரக இருப்பது மகிழ்ச்சி.
நேர்மையாளராக உள்ள மருத்துவரை நினைத்து மகிழ்ச்சி. சின்ன வயதில் பார்த்த மருத்துவரையும் மறக்காமல் இருக்கும் தங்களது மனம் கொண்டும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே.
வணக்கம் ரூபன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் செல்லப்பா யாக சுவாமி சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் கோமதி அரசு சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் அ பாண்டியன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
அட...
அருமையாச் சொல்லியிருக்கீங்க
வெள்ளச்சாமி டாக்டரை...
நினைவில் நின்றவர் பற்றிய கவிதை நினைவில் நிற்கிறது. அதைவிடவும் படம் அருமை எங்கய்யா புடிக்கிறீங்க இப்படியான படங்களை? அதை எப்படிங்க ஏத்துறீங்க வலைக்கவிதையில? மிக அருமை!
Post a Comment