7 Oct 2013

ஒட்டுவாரொட்டி,,,,,,


பழக்கங்களின் விளிம்புகளில் வந்து தோள் சேர்ந்து தெரிகிற மனிதர் கள் பற்றியான பார்வை அவரது பின்புலத்தை வைத்தே தீர்மானிக் கப்படுகிறது,அவர்எவ்வளவுநல்லவராகவும்,திறமையானவராகவும் , உ ண்மையானவராகவும் இருந்த போது கூட/
வாங்கியவாழைப்பழத்தில்ஒன்றை“வணக்கம்ண்ணே”எனச்சொன்ன
வருக்குகொடுத்தபோதுவாழைப்பழத்தைஎன்னிடமிருந்துவாங்கியவரு ம், கொடுத்ததற்கு ஆட்சேபனைசொன்னவரும் போன பின் வாங்கிய தேனீரைஅருந்திக்கொண்டிருக்கும் போதுஉள்ளுள்வந்தமர்ந்த நினை வை தவிர்க்க முடியவில்லை.
அவரதுசட்டைப்பையில்எப்பொழுதும்சின்னதானஒருஉளியும் அதை விட சின்னதான ஒரு சுத்தியலும் இருக்கும்.
அது இரண்டும் அவரது அழுக்கான பையில் இருந்த போதும்கூட பார்க்கஅழகாகவேஇருந்தது.சிற்பியின்கையிலிருக்கிறதுபோல இல் லா விட்டாலும் கூட அவரது கைபட்ட வேலை மிளிரும்.
சைக்கிள்,இருசக்கரவாகனங்கள்,சமயத்தில்பாத்திரங்கள்எனஇவர்
பெயர் செதுக்குவார்.
ஒருநாள் இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில்டீக்கடையில் சைக் கி ளுடன் நின்று கொண்டிருந்த போது வனக்கம்ண்ணே,”ஒங்க சைக்கிளல பேரு அடிச்சுருவமா”என என் சம்மதத்துடன் ஐந்தே நிமிடங்களில் எனது பெயரையும் சேர்த்து அழகான இரண்டு மயில் களையும் பெயரின் வலமும்,இடமுமாக செதுக்கிக்கொடுத்து விட்டு விட்டார்.
ஐந்தே நிமிடங்களில் ஏற்பட்டு விட்ட அந்த அதிசயத்தைகண்டு வியந் தவனாய்அவருக்குபணம்கொடுத்தபோதுஒருடீயும்இரண்டுவடையு ம் மட்டும் போதும் என முடித்துக்கொண்டார்.
நான்தான் வம்பு பண்ணி வீட்டிற்கு கொண்டு போங்கள் என மேலும் சில வடைகளை வாங்கி கொடுத்தனுப்பினேன்.இதே வேலையை வேறு யாராவது செய்திருந்தால் கண்டிப்பாக ஐம்பது ரூபாய் வரை வாங்கியிருக்கலாம்.அப்போது கிளைத்த அறிமுகமும்,நட்பும் இன்று வரை/
அவரது திறமையை பாரட்டி நாலு வார்த்தைகள் பேசியதுதான் கார ணமாக இருக்கலாம்.நன்றாக இருந்தால் அவருக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம்.உருக்கிவார்த்ததுபோலானஉடம்பு..உச்சந்தலை  யிலிருந்து உள்ளங்கால் வரை தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட வர்போலஉடம்பில்உதிரித்தசைஎதுவும் வெளிபிதுங்கி தொங்காமல்  கச்சிதமாகத்தெரிந்தார்.
விரைப்பாய் நீண்டு தெரிந்த கை,கால்களில் தசை முறுக்கித்தெரியும் எந்நேரமும்.சிறிய கூர் விழிகளும்,கத்தரித்து எடுத்து ஒட்ட வைக்கப் பட்டது போலான மூக்கும்,சிவந்த உதடுகளுமாய் வசீகரத்தனத்துடன் இல்லாமல் போனாலும் கூட நல்ல முகவெட்டுடன் காணப்பட்டார். சிந்தனை தாங்கிய நெற்றியும்,பார்வை நிறைந்த கண்களும் செயல் நிறைந்த உடலுமாய் தெரிந்த அவர் அடர்நிற உடைகளில் கசலையா யும் அழுப்பு அப்பிய உடலுடனுமாயே தெரிகிறார் எந்நேரமும். கூடவே போதை தெளியாதவராயும்/
நான்பார்க்கிறபெரும்பாலானநேரங்களில்இப்படித்தான்தென்படுகிறா ர். டீக்கடை முன்புஏதாவது ஹோட்டல் முன்பாக அல்லது பெட்டிக் கடை முன்பாக/
இவை மூன்றில் ஹோட்டல் தவிர்த்து பெட்டிக்கடைகளுக்கும் ,டீக் கடை ஆகிய இரண்டிற்கும் எனக்குமாக ஒரு நெசவு அல்லது மெலி தான அல்லது தடிமனான ஒரு இழையோடல்இருக்கும்.அந்த இழை யோடலும் நெசவும் ஹோட்டல்களின் முன்பு எப்போதாவது.
அப்படியானநேரங்களில்”வணக்கம்ண்ணே”என்கிறவெள்ளை
சிரிப்புடன்நேராகநிற்கக்கூடசக்தியற்றவராக என்முன்னே/
என்ன செய்ய?வணக்கம் சொல்லி எதிரே வந்து நிற்பவரை தவிர்க்க முடிவதில்லை. அப்படியான செயலும் எனக்கு வாய்க்கப் பெற்றதில் லை எப்போதும்/
தினசரி காலை 5.00 அல்லது 5.30 மணிக்கெல்லாம் அவரது திருப் பள்ளியெழுச்சி ஆரம்பம் என அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
அவரது எழுச்சி,அன்றாட ஓட்டத்திற்கான அவரது தயார் நிலை,,,,,, ,,, ,,,,,,,,,,,இதர,இதர என்கிறதானவைகளைஉள்ளடக்கிய அவரது அர்த்தப் பூர்வமான (?/) செய்கைகளை கொண்டாடுவது போல் சேவலின் கூவலிருந்து பறவைகளின் கீச்சிடல் வரை எல்லாம்/ மரத்தின் இலைகள் உட்பட/
ஒருகை தண்ணீர் அள்ளி முகத்தில் தெளித்தவராகவும்,தன்னை தயார் செய்து வீட்டை விட்டு ஓடிக்கொண்டிருப்பவராகவும் இருக்கி ற அவருக்குகென நிலையான வேலை எதுவும் இல்லை.
ஒருநாள்கட்டிடவேலைக்குசெல்வார்.இன்னொருநாள்பெயிண்ட் அடிக்கப்போவார்.
வேறு ஒருநாள் சினிமா போஸ்டர் ஒட்டுவார்.மில் வேலைகளில் தனது உழைப்பை கலந்து விடுவார்.மூடை தூக்கச்செல்வார். டீக்க டையில் டீ ஆற்றுவார்.ஹோட்டலில் சப்ளையராக உருமாறுவார் .விறகு வெட்டச் செல்லுவார்.,,,,,,,இப்படி உதிரி,உதிரியான வேலைக ளா க நிறைய செய்தும் அதில் வருகிற வருமானத்தை வைத்துமே நிலையற்ற வாழ்வில் தன்னை பிணைத்துக்கொண்டவராய் தெரிகி றார்.
“சார்.இவனுக்கெல்லாம் நீங்க இப்பிடி உதவி செய்யிறது வேஸ்ட்டு சார்.இவனெல்லாம் கொஞ்சமாவா சம்பாதிக்கிறான்.என்ன கேடு இவ னுக்கு?இவன் நெலையில நான் மட்டும் இருந்தேன்னா இந்நேரம்  சொந்தமா ஒரு வீடு கட்டியிருப்பேன்”
“யாருதான் சார் தண்ணி அடிக்கல இந்தக்காலத்துல/,பொழைக்கிற பொழப்புல ஒரு ஒழுக்கம் வேணும்ல சார்.அது இல்லாததுனால இப்படி சீரழிஞ்சு அலையுறான்.நீங்க இந்த மாதிரி ஆளுக்களுக்கு உதவி பண்றதெல்லாம்”,,,,,,,,,,,,,,,, என நீளமாக சொல்கிறார். கொஞ்சம் அடர்த்தியாகவும்/ பழக்கங்களின் விளிம்புகளில் வந்து தோள் சேர்ந்து தெரிகிற மனிதர்கள் பற்றியான பார்வை அவரது பின்புலத் தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது,அவர் எவ்வளவு நல்லவராக வும்,திறமையானவராகவும் ,உண்மையானவராகவும் இருந்த போது கூட/

No comments:

Post a Comment