10 Dec 2013

பேச்சுக்கால்,,,,,,,

             
ரொம்ப நாள் கழித்து நானும் எனதுமனைவியும்பேசிக்கொண்டிருந்தோம்.
ஆமாம்அப்படித்தான்ஆகிப்போகிறது. 
காலை எழுந்தவுடன் காபி,டிபன்,சாப்பாடு என சமையலறையில் அவளும்,,,, ,,,,பையனின்பள்ளிப்புறப்பாடு,எனதுஅலுவலகப்புறப்பாடுஎனநானும்,,,,,,,,,,,,மாலை வந்ததும் டீ.வி,கொஞ்சம் ஊறுகாய்ப்போலபுத்தகம், சப்பாடு,தூக்கம் என ரெக் கை கட்டிக் கொள்ளும் நாட்களின் மத்தியிலாக இப்படித்தான் நேரம் ஒது க்கி சாவகாசமாக ஏதாவது பேசிக் கொள்வோம்.
சமயத்தில்சண்டைகூடப் போட்டுக் கொள்வோம்.(ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவிற்கு போகும் அளவிற்கு அல்ல,மிஞ்சிப் போனால் ஒரு நேர சாப்பாட்டையாரவதுதியாகம்செய்துகொள்வோம் அவ்வளவே.)
பெரும்பாலான தமிழக நடுத்தரவர்க்கக் குடும்பங்களில் உள்ள நிலைமையும் அது தானே?கணவன்,மனைவி இரண்டு பேரும் அரசாங்க வேலை அல்லது கணவன் மட்டும்.
இரண்டு பிள்ளைகள், இங்கிலீஸ் மீடிய படிப்பு,கண்டிப்பாக ஒரு இரண்டு சக் கர வாகனம்,டீ.வி,மிக்ஸி,கிரைண்டர்,வாஸிங் மிஷின்,குளிர்சாதனப் பெட்டி இத்தியாதி,இத்தியாதி என 500 அல்லது 800 சதுர அடியில் மஞ்சள் பெயி ண்ட் அடித்த  சொந்த வீடு,,,,,,,,,என செட்டில் ஆகிப் போன மத்திய தர வர்க்கம்.
 ஒரு நாள் மாலை டீ.வி யில் ஒரு நடிகரின் பேட்டி.
என் மனைவி சொன்னாள். “இந்தமாதிரிநாடகம், நடிப்பு,புத்தகம், இலக்கியம் னு,,,,,இருக்குறவுங்களுக்கு பேரு இளிச்சவாயன்,பொழைக்கத் தெரியாதவ ன்னு  நம்ம உருல நம்ம சொந்தக்காரவுங்க மத்தியில பேரு”.என்றாள்.
“வாஸ்தவந்தான்.நம்ம ஊருல மட்டும் இல்ல,பெரும்பாலான கிராமங்கள்ல யும், டவுன்லயும்,அதான் நெலம.ஏங் நம்ம ஊர்ல கூட எடுத்துக்கயேன். வடக் குத் தெருவுலஇருக்குறநம்மசொந்தக்காரங்க அப்பிடியில்ல,அவுங்களுக்கு இந்தமாதிரிவிஷயமெல்லாம்ஏற்புடையதாஇருக்குல்ல,அவுங்களெல்லாம் தெ ரு மொத்தமா கூலிக்குப் போரவுங்க.காலையில எந்திரிச்சு அவுங்கவுங்க வயித்துப்பாட்டமுடிச்சிட்டுஆம்பளைங்ககையிலமம்பட்டியோடவும்பொம்பளைங்ககளைவெட்டியும் கையுமா கெளம்பீருவாங்களே.
வெயில்ல காஞ்ச்சு, மழையில நனைஞ்சு,நெழல்ல தைப்பாறி கையும்,ஒடம்பும் காய்ச்சுப் போயி ஒரமேருன அந்த சனங்க எண்ணிக்கையில நெறைய இருக்காங்க.
ஆனா பொழக்கத் தெரியாதவன்,இளிச்சவாயன்னு சொல்ற இந்தத் தெரு சொந்தக்காரங்களுக்கு கொறைஞ்சது பத்து ஏக்கர் நெலமாவது இருக்கு. பம்புசெட்டுத்தோட்டம்,கொஞ்சம்வயக்காடு,மானாவாரிகொஞ்சம்னு இருக்கா ங்க,
    கோழிகூப்புடவும்,காபித்தண்ணியகுடிச்சிட்டு,தோட்டம்காடு,வயல்,பயர்,பச்சை
தண்ணிப் பாய்ச்சல் எந்த வேலைக்கு எந்த ஆளைக்கூப்புடலாம்?இந்த வேலைக்கு எத்தனை ஆளை வுடலாம்,,,,,,,,,,,,எவ்வளவு சம்பளம் குடுக்கலா ம்னு யோசிச்சிக்கிட்டு வெளக்கமாத்துக் குச்சியால பல்லக்குத்திக்கிட்டு திரி யிர வுங்களுக்காக நெறையப் பேர்க பாடுபட்டுட்டேதான் இருக்காங்க.
அந்த பாடுபடுற ஜனங்களுக்கு,இந்த மாதிரி கலையும் இலக்கியமும் மனச நீவி விடுற மாமருந்தா மாறிப் போகுது.
அதனாலத்தான் அந்த வடக்குத்தெரு சொந்தக் காரங்கஅதமனசால ஏத்துக்குறாங்க.

கலையும் ,இலக்கியமும் அது சார்ந்ததும்,அத சார்ந்தவுங்களும் நமக்காகத் தான். நம்ம கையாலதான் அவங்களுக்கு சாப்பாடு அப்படீன்னு நெனைக் கிறதாலத்தான்,,,,,,,,,,,,,, நம்ம மேற்குத்தெரு சொந்தக்காரங்களுக்கு இளிச்ச வாயன்,பொழைக்கத் தெரியாதவன்னு படுது.”என பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு நண்பரின் பேச்சு ஞாபகம் வருகிறது.
சிறுபான்மையினர் என்பவர் சிலுவை போட்டவரோ, குல்லாபோட்டவரோ அல்ல,உழைக்கும் நாம்பெரும்பான்மை, கொடுக்கும் அவர்கள்  சிறுபான்மை
பெரும்பான்மையான  நாம் எப்போதும்  கேட்டுக்  கொண்டேஇருக்கிறோம். 
சிறுபான்மையான அவர்கள் எப்போதுமே கொடுக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.கொடுப்பவர்களுக்கும்,வாங்குபார்களுக்கும்மத்தியிலாக இழு படுகின்ற அமைப்பில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரைநசுக்கு வதும்,கலைஇலக்கியவாதிகளைபிழைக்கத்தெரியாதவன்எனக்கூறுவதும் இன்றுவரை நடப்பில் உள்ள கசப்பான உண்மைதானே?       

14 comments:

 1. சிறுபான்மையினர் என்பவர் சிலுவை போட்டவரோ, குல்லாபோட்டவரோ அல்ல,உழைக்கும் நாம்பெரும்பான்மை, கொடுக்கும் அவர்கள் சிறுபான்மை


  அருமை... அருமையான பகிர்வு விமலன் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் குமார் அண்ணா,நலம்தானே?
   உழைக்கும் பெரும்பான்மையை விழுங்கி ஏப்பம் விட,
   அல்லது அது பற்றி கவலைகொள்ளாமல் இருக்க
   சிறுபான்மை எப்போதுமே காத்திருக்கிறதுதான்,
   அதற்கு சிவப்புக்கம்பள வரவேற்பும் கனஜோராய்/
   நன்றி,தங்களது
   வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. வணக்கம்

  பெரும்பான்மையினரைநசுக்கு வதும்,கலைஇலக்கியவாதிகளைபிழைக்கத்தெரியாதவன்எனக்கூறுவதும் இன்றுவரை நடப்பில் உள்ள கசப்பான உண்மைதானே?

  நன்றாக சொன்னிர்கள் சிறுகதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் சார்.கலைஇலக்கியவாதிகளை
   இவ்வுலகம் இகழந்துகொண்டுதான் இருக்கிறது
   இன்றளவுமாய்.
   இங்கே சம்பாதிக்கத்தெரிந்தவன் கூட இல்லை,
   பணம் பண்னத்தெரிந்தவன் மட்டுமே இங்கே கெட்டிக்காரன் ஆகிறான்,அவனையே சமூகம் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறது.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. றுபான்மையான அவர்கள் எப்போதுமே கொடுக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.கொடுப்பவர்களுக்கும்,வாங்குபார்களுக்கும்மத்தியிலாக இழு படுகின்ற அமைப்பில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரைநசுக்கு வதும்,கலைஇலக்கியவாதிகளைபிழைக்கத்தெரியாதவன்எனக்கூறுவதும் இன்றுவரை நடப்பில் உள்ள கசப்பான உண்மைதானே? //

  இவ்வளவு பெரிய விஷயத்தை
  இத்தனைச் சாதாரணமாகவும்
  அதேசமயம் மனதில் ஆழப் பதியும்படியும்
  உங்களால்தான் சொல்ல முடிகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது
   வருகைக்கும்,கருத்துரைக்குமாக எனச்
   சொல்லிகொள்கிற வேளையில்
   பெரும்பான்மையை நசுக்கும்,
   சிறுபான்மையை ஊக்குவிப்பதன் பிண்ணனி
   என்ன எனவுமாய் நம்மில் ஒரு கேள்வி எழாமல் இல்லை,அதிலிருந்துதான் பணம் பண்ணுபவன்
   மட்டுமே கெட்டிக்காரன் எனவும் மற்றவர்கள் பிழைக்கத்தெரியாதவர்களாயும்
   ஆகித்தெரிகிறார்கள் எனத்தோணுகிறது.

   Delete
 4. Replies
  1. நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.

   Delete
 5. ஆம் உண்மைதான் நண்பரே.
  தொடருங்கள்
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 6. பெரும்பாலான தமிழக நடுத்தரவர்க்கக் குடும்பங்களில் உள்ள நிலைமையும் அது தானே?கணவன்,மனைவி இரண்டு பேரும் அரசாங்க வேலை அல்லது கணவன் மட்டும்.
  இரண்டு பிள்ளைகள், இங்கிலீஸ் மீடிய படிப்பு,கண்டிப்பாக ஒரு இரண்டு சக் கர வாகனம்,டீ.வி,மிக்ஸி,கிரைண்டர்,வாஸிங் மிஷின்,குளிர்சாதனப் பெட்டி இத்தியாதி,இத்தியாதி என 500 அல்லது 800 சதுர அடியில் மஞ்சள் பெயி ண்ட் அடித்த சொந்த வீடு,,,,,,,, /////

  ஹா ஹா நல்ல அவதானிப்பு
  நல்ல பேச்சு தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆத்மா சார்.மறந்து போனீர்களே என நினைத்தேன்,
   இது போன்ற பேச்சுக்களைத்தொடராமல்
   வேறெதைத்தொடர?நன்றி ,வருகைக்கும்,
   கருத்துரைக்க்குமாக/

   Delete
 7. சரியாக மிகச்சரியாகச் சொன்னீர்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
  நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete