மருந்துதோன்றியாய்உருவாகிபின்மருதோன்றியாய்மருவிஅதன்பின்மருதாணியாய்
உருப்பெற்றுஉயிர்ப்பெற்றஒருஉயிர்தாவரமேஇங்குகவிதைப்புத்தகமாய்பூத்திருக்கிறது, “நீவைத்த மருதாணி” என்கிற
பெயர் தாங்கி/
பெயரில்என்னஇருக்கிறதுஎன்பதல்ல,பெயரிலும்இருக்கிறது கவிதையும்
அதற்கான சந்தமும், சப்தமும்என்பதை நிரூபிக்கிறது புத்தகம்.
சொல்லியசொல்லைவிடசொல்லாத சொல்லுக்குஅடர்த்தியும்அழகும் பரிமாணமும் ஜாஸ்தி தான்என்றாலும்கூட சொல்லாதசொல்லுக்கு
விலையேதும் இல்லைதான் என நினைத்தோ என்னவோஎல்லாவற்றையும்சொல்லமுனைந்திருக்கிறார்கவிஞர்.கருணாகரசுஅவர்கள்/
தான் பார்த்தது,படித்தது,கேட்டது, பேசியது,பகிர்ந்துகொண்டதுஎன,,,,,,இந்தமண்,
மண் கொண்ட மனிதர்கள்,அவர்களின் அன்றாடப்பாடு,பிழைப்பிற்கான அவர்களின் உயிர் அவஸ்தை,,,,,,,,, எனஇன்னும்இன்னுமாய்நிறைய,நிறைய
சொல்லிச் செல்கிறஇவரின்நீவைத்தமருதாணி புத்த கத்தைஒரு குழந்தையை கையில் தாங்கி எடுக்கும் பாங்குடனும் மனம் மிகுந்த களி கொள் ளலுடனும்
வாரி எடுத்து உள் பிரிக்கையில் ஆ,,,,,அட்டகாசம் என சொல்ல வைக்கிறது புத் த கம்,
அச்சிடப்பட்ட வெள்ளைத்தாள்களை 127 பக்கங்களாய் வரிசை காட்டி
காட்சிப் படுகிற இப் புத்தகத்தில் ஒவ்வொருபக்கமுமாய் இருக்கிற படங்களே ஒரு கவிதையாய்
காட்சிப்பட்டு விரிகிறது.
அப்படிக்காட்சிப்படுகிற அப்படங்களின் மேல் கையூன்றி சுவர்
பிடித்து தன் பிஞ்சுப் பாதம் பதித்து நடை பழகும் குழந்தையின் விடாமுயற்சியுடனும், எளிய
பாங்குடனு மாய்நகர்கிற கவிதைகள்ஒவ்வொன்றும்இச்சமூகத்தின்மேல்அக்கறைகொண்டும் இப்புவிப்பரப்பின்
அநியா யம் கண்டும்பொங்கி எழும் எண்ணப்பதிவுகளாகவே/
நாம் விழித்துக் கொள்ளும் தருணமிது
இல்லையேல் விழித்துக் கொள்ளும் ஆர்ட்டிக்
என”உலகவெப்பத்தில்”சுழியிடுகிற இவரது கவிதை தொட்டுச்செல்லாத
இடப் பரப்பு மிகவும் குறைச்சல் எனலாம்,
”மகிழ்ச்சியை விற்பவர்” என்கிற தலைப்பில் புல்லாங் குழல் விற்பவரின்வற்றியவயிற்றில் இவரதுகவிதைக்கண்பட்டுப்படர்கிறபொழுதுஅவர்வாசிப்பதென்னவோசோகசுரம்தான்.விற்பதோ புல்லாங்குழல் என்கிறார்.
ஒருபெண்ணின்கொலுசொல்தாங்கிய நடை வீணையின் மென்சுரத்தை
ஞாபகப் படுத்துகிற து இவருக்கு,நமக்கும் சேர்த்துத்தான் கொலுசொலி கவிதையில்/
அதை நமக்கும்அப்படியே தன் வார்த்தைகளில் பரிமாறுகிற இவர்
கை ரேகை பார்ப்பதில் அல்ல கைரேகை தேய்வதில்தான் உன் வாழ்க்கையின் பதிவு இருக்கிறது
என்கிறார் கைரே கை
கவிதையில்/
அவ்வளவு வலியிலும், உதிரத்திலும் அழுக்கிலுமாய் பிறக்கிற
குழந்தை உணர்வு இருண்ட தருணத்தில்பிறக்கிறவெளிச்சம் எனவெளிச்சம் கவிதையின் மூலமாய் சொல்லும்
இவர்,,,,,,,
கடவுள் வாழும் கல்லறையில்பறிபோகிறது கற்பு
எனும் செய்தி கேள்விப்படும் பொழுது
இடம் மாறுகிறது என் கோபம்
பூசாரியின் மீதிருந்து கடவுளுக்கு,,,,,,,,
எனச் சொல்லவும் மறக்கவில்லை ”இடம் விட்டு இடம்” கவிதையில்/
நீ பூவை தலையில் வைத்துக்கொண்டாய்,
பூ தன் தவத்தை முடித்துக்கொண்டது
எனதவம் கவிதை மூலம் சொல்லிச்செல்கிற இவரால்இத்தேசத்தின்சாகாவரமான வறுமை குறித்தும்,குறித்தும் பயங்கரவாதம் குறித்தும்
வருத்தப்படவும் சாடவும் அதன் முகத்தில் காறி உமிழவும் முடிந்திருக்கிறது.மதிப்பீடுகள்,பயங்கரவாதம்
என்கிற இரு கவிதைகள் மூல மா கவும்’/
(வறுமை தின்ற பாரதிக்குவாய்க்கரிசிபோடாத
சமூகம்
அவன் கோபத்தை
இன்று
கொண்டாடிக்கொண்டிருக்கிறது).
இதுஇப்படி என்றால் பால் சுரப்பிஎன்கிற கவிதை கவிதைக்கு தேவையில்லை
பொய் வார் த்தை ரத்தமும் சதையுமான எங்களது அகதிகளின்கிழித்துநிர்மூலமாக்கப் பட்ட வாழ்வே
வலு எனச் சொல்லிச் செல்கிறது.
நாற்றைபிடுங்கி வேறொரு இடத்தில் நடுங்கள் தயவுசெய்து அல்லது
நட அனுமதி யுங்கள் என மறுநடவு கவிதை மூலம் இப்படியாய் பதிவு செய்கிறார் இச்சமூகம்
துச்சமென மதிக் கிற திருநங்கைகளை
(எங்களை
மதிக்க வேண்டாம்,
உங்களது
கால்களை நகர்த்துங்கள்,
உங்களது
செருப்பின் கீழ் உயிர் அறுபட்டுக்கிடக்கின்றோம்)
என ஒவ்வொன்றின் அவஸ்தை பற்றியும்அழகுபற்றியும் அதன் தன்மை
பற்றியும் அதன் உள்ளீடுகள் பற்றியும் பேசுகிற கவிதையின் அடர்த்தி நிறைய நிறையவாய் சொல்லிச் செல்கிறது,
வானம் வசப்படும்,சகுனம், போருக்குப் பின்,,,,,,,,போன்ற, மனம்
நிறைந்த தலைப்புகளிளெல் லாம்கவிதைஎழுதியகவிஞர்கடைசியாய் தான் படித்தபள்ளிபற்றி எழுதிய
கவிதையில்
என் நீள் வாழ்க்கை முழுவதும்
நினைவுக்குள் நிற்கும் நிகழிடம்,,,,,,,
மாணவமாணவிகளுக்கு மட்டுமல்ல
மகிழ்ச்சிக்கும் திறந்தே இருக்கும்
அந்த நுழை வாயிலுக்குள் திரும்பத்துடிக்குது மனது,
திரும்ப அழைக்குது வயசு,,,,,,,
என முற்றுப்புள்ளியிட்டு முடிக்கிறார்,இக்கவிதைத்தொகுப்பை/
இதுதவிரஇந்தஇடத்தில் சொல்லப்படாததும் இன்னும் இன்னுமாய் அடர்த்தி
தாங்கியும் பய ணிக்கிற, நிறைய பேசியும், சொல்லியும் செல்கிற இவரதுகவிதைகள்வேறுஎங்கோஅமானு சியத்தில்இருந்துஊருவி எடுக்கப்பட்டவைகளாய் இல்லா மல்தன்னைச்சுற்றி நடக்கிற வகை ளையும்,தனக்குநேர்ந்தவைகளைப்பற்றியும்எழுதியிருப்பது இன்னும் அழகாகயிருக்கிறது,
ஆம் அதற்கு ஒரு தனி தைரியம் தேவைப்படுகிறது இன்றைய கவிதை
சார் உலகில், நான் இப்படித்தான் இதுதான் என் எழுத்து,நான் சார்ந்தும் வாழ்ந்துமாய் நிற்கிற இச்சமூகத்திற்கா யும்அதில்இருக்கிறவைகளையும்எழுதாமல்வேறெதைஎழுதஎனக்கேட்டு தன்கவிதை தொகுப் பான நீ வைத்த மருதாணி யில் சுழியிட்டிருக்கிற
அவரது எழுத்து (கவிதைதொகுப்பு)
அனைவராலும் படிக்கவும் பாதுகாக்கப்படவும் வேண்டிய ஒன்று மிகவும் தைரியமாய் சொல்ல முடிகிறது,
வாழ்த்துக்கள் கருணாகரசு சார்,எழுதுங்கள் தொடந்து உங்களது எழுத் துக்களை படிக்கவும்ஆதரிக்கவும்
என் போன்ற நாங்கள் இருக்கிறோம், எழுத்துதொடர/
தொடர்பிற்கு”
சி கருணாகரசு,
தமிழ் பதிப்பகம்
உ,நா குடிக்காடு,
மணப்புத்தூர் அஞ்சல்
செந்துரை வட்டம்,
அரியலூர் மாவட்டம்-621709
மின்னஞ்சல் karunakarasu@gmail.com
10 comments:
திரு .சி. கருணாகரசு அவர்களின் கவிதை புத்தகம் விமர்சனம் மிக அருமை.
வாழ்த்துக்கள் கருணாகரசு அவர்களுக்கு.
”நீ இட்ட மருதாணி ”தலைப்பு மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் கோமதி அரசு சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்,
வாழ்த்திற்குமாய்/
///இடம் மாறுகிறது என் கோபம்
பூசாரியின் மீதிருந்து கடவுளுக்கு,,,,,,,,////
இந்த இரு வரிகளே புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகின்றன
நன்றி நண்பரே
tha.ma.1
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் சார்...
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமையான ஹைக்கூ !
வாழ்த்துக்கள் இருவருக்கும்!
வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment