20 Sept 2014

கைக்கிட்டி,,,,,




நான் வந்த நேரம் தூங்கிக்கொண்டிருந்தீர்கள் நீங்கள்.அப்படியொரு தூக்கத்திற்க்கான தேவை அந்நேரம் ஏன் எழுந்தது எனத்தெரியவில்லை.

ஒரு வேளை இரவில் கண் விழித்திருக்கலாம்.அல்லது அரை மணிக்கு ஒருதரமும்,ஒரு மணிக்கு ஒரு முறையுமாய் தயவுதாட்சண்யமின்றிதன்கண்களைஇறுகமூடிக் கொள்கிற  மின்வெட்டின் பொழுது விட்டுப்போன தூக்கத்தை இங்கு வந்து தொடரலாம்,இல்லை உடல் ஏதும் நலமில்லாமல் இருக்கலாம்.

வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே வந்து விட்ட மாலை நேர 6.00 மணி பொழுதுக்கு தங்களைப்பார்க்க வேண்டும் என ஆவல் கொள்கிறது மனது.மறுநாள் எடுக்கவிருந்த விடுப் பிற்கான முகாந்திரத்தையும் ,பொறுப்பையும் உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு வருகையில் எதிர்ப்பட்டது பாய் டீக்கடையாக இருக்கிறது.

ஒரு டீ ஒரு வடை,,,,, என்கிற அடைப்படையில் முடித்துக்கொண்டு உங்களைப்பார்க்க வருகிறேன்.பார்த்தும்,பழகியும்,பேசியும்,விஷயங்களை பரிமாறிக்கொண்டும் மிகவும் நாட்க ளாகிப் போனது.

T K R சாலையது.இதுவரை பூத்து நின்ற வேனல்தன்வேகம்குறைத்திருந்த பொழுது. சாலையில் சென்ற பாதசாரிகளையும் இரு சக்கரவாகனர்களையும்தவிர்த்து டீக்கடைகள், பெட்டிக்கடைகள்மற்றும்சைக்கிள் கடை,டாஸ்மாக்முன்புமனிதர்கள்தஞ்சம் கொண்டிருந்த வேளை.

எங்கும் எப்பொழுதும் தன் பிரியக்கரம் விரித்து மனிதர்களை தன்னுள் தக்க வைத்துக் கொள்கிற டீக்கடைகளில் நடமாடுகிற உலவுகிற அல்லது பரிமாறிக்கொள்கிற பேச்சைப் போலமற்றஇடங்களில்இருக்குமாஎனத்தெரியவில்லை.இருக்கலாம்அல்லது இல்லாமலும் போகலாம்.

எனக்குத்தெரிந்துசினிமாத்தியேட்டர்களில்அந்தவேலை நடைபெற்றிருக்கிறது. ஒரு வேளை திரையில்வருகிறகாட்சிபிம்பங்களிலும்அதனுடாகபின்னப்படுகிற கதைகளிலு மாய் தன்னை இடை நிறுத்திப்பார்க்கிற மனோநிலையாக இருக்கலாமோ? இருக்கலாம் எதிர்ப்படுகிற சொல்லையும் காட்சிபிம்பங்களையும் தன் வசத்திற்கும் இசைவுக்குமாய் வளைத்துப் பார்க் கிற தனம் கூடிப்போன நிலை இங்கு இருக்கிறது என நினைக்கிறேன். அதுவும் மத்திய தரவர்க்கத்தில் அந்த நோய்மிகவும்பரவலாகஉள்ளதாகவே அறிகிறேன்.இருக்கட்டும்,இருந்து விட்டுப்போகட்டும் ,என்னகுறைந்துவிடப்போகிறது இப்பொழுது எனசொல்லத் தோணவில் லை.ஆனாலும் ,,,,,,,,,,,சொல்லியும் விடுகிறேன் எப்போதாவது.

ஒரு தியேட்டர் மேனேஜரிடம் டொனேஷன் வாங்கச்சென்றிருந்த பொழுது அவர் மேனேஜ ராக இருந்ததியேட்டரில்ஓடிக்கொண்டிருந்தபடத்தைப்பற்றிஇப்படிச் சொல்கி றார்,  என்ன இருக்கிறது இந்தப் படத்தில் எனத்தெரியவில்லை.இவ்வளவு நாள் ஓடுகிற தெனவும், நல்ல வசூல்எனவுமாய்சொன்னார்.அவரேதான்வருத்தமும்பட்டுக் கொண்டார். ஜனங்க ரசனையும் அதை ஒட்டுன மனோநிலையும் அப்பிடியிருக்கு என்றார்.அவர் சொன்னது வாஸ்தவம்தான் போலும் எனத்தெரிந்தது.

அந்த தியேட்டரில் வேலை பார்க்கிற கணேசன்.பார்த்த நாட்களில்பழக்கமாகிப் போன மனிதர்.பழக்கங்களின்விரிவில்தெரிகிறஈரம்அவரில்எந்நேரமும் ஒட்டிக்கிடந்ததாகவேபட்டது எனக்கு.நாங்கள்பழகிக்கொண்டஇந்தநான்குவருடங்களில்எங்குபார்த்தாலும்எப்போதுபார்த்தாலும் வாங்க டீசாப்புடலாம் என சொல்லத்தவறுவதில்லை.அவருடன் வருகிற இன்னொருவர் சுந்தரவதனம்.ஏறக்குறையஒருவரும்ஒரேவயதுடையவர்களாய்த்தெரிந்தார்கள்.

தியேட்டருக்குள்ளும்,தியேட்டருக்குவெளியேயும்அவர்களிருவரையும்ஒன்றாகப் பார்க்கலாம், அவர்கள் ஒன்றாக என் கண்ணுக்குப்படுகிற தினங்களில் மிகவும் அன்னோன்யம் தென்படும் அவர்கள் நடவடிக்கையில்/

அவர்கள் இருவருக்குமாய் பழக்கமான சைக்கிள் கடை ஓன்றில்தான் நான் ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிளுக்குச் சொல்லியிருந்தேன்.ஒருவாரம் கழித்துவரச்சொன்ன அவர்கள் நான் போன நாளில் ஒரு சைக்கிளைக்காட்டினார்கள்,பழைய இரும்பை பொறுக்கி ஒன்று சேர்த்துசூ மந்தரகாளிசொல்லி செய்தது போல இருந்தது. தொட்டாலே துரு உடம்போடு ஒட்டிகொள்ளும் அளவுக்கு/

கடைக்காரரைப்பார்த்தேன்,அவரும் சிரித்தபடி ஓட்ட,ஓட்ட ஒரு வழியாய் சரியாகிப் போகும்  என்றார்.சரியாகிப்போகுமா,ஒருவழியாகிப்போகுமா  என கேட்க மறந்து போனேன்.

இப்படி மறந்து போன நினைவுகள் பலவற்றைத் தேக்கியும்அணைகட்டியுமாய் திரிந்த நாட் களின் நகர்வன்றின் பலபொழுதுகளில் மேலெழுந்து வந்து நின்ற தங்களது நினைவை மனதில் தேக்கி இன்று தங்ளைப்பார்க்கவந்தபோதுதூங்கிக் கொண்டிருந்தீர்கள். எழுப்ப மனம் இல்லை,வந்து விட்டேன் அப்படியே பின்னகர்ந்து.இப்பொழுது என்ன கெட்டு விட்டது, நாட்களும் பொழுதும் நமக்கானவையே/

நாட்களின் நகர்வில் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் தோழர்.

No comments: