20 Sept 2014

கைகாட்டி,,,



            
ரயில்வே கேட்டின் அடைப்புக்காய் நின்றிருந்த வேளை உடன் வந்து நின்ற இருசக்கரவாகன ங்களும்,பஸ்களும்,லாரிகளும்,ஆட்டோக்களும்,மற்றும்பிறவாகனங்களுமாய் சாலையில் வால் பிடித்து நின்று நீண்டதாய்/

நான் வந்த பின்பாய் அந்த வாகனங்கள் வந்ததாஅல்லது வாகனங்கள் வந்த பின்பாய் நான் வந்தேனாஎன்பது தெரிந்திருக்கவில்லை.

மனிதர்கள்,மனிதர்கள்,மனிதர்கள்,,,,,,,,,,,ஆண்களாய்,பெண்களாய்,குழந்தைகளாய்மற்றும்பெரியவர் களாய் வெளிப்பட்டுத் தெரிந்தார்கள்.

வெள்லைக்கலர்பேண்ட்,மெரூன்கலர்சட்டை,எனஎனதருகாமையாகஸ்டாண்டபோடாமல் நிறுத்தியிறுந்த இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட்டைக் கழட்டாமல்ஸ்டைலாக(?/) அமர்ந்து கொண்டிருக்கிறவரின் அருகிலேயே வண்டியை நிறுத்தி விட்டு கைகட்டி நின்றிருந்தவரையும் பார்க்க முடிந்தது.

சைக்கிள் பெடலில் இடது காலை வைத்தவராய் நின்றிருந்தவரின் பார்வை அவசரமாய் அலை பாய்வதாக/

கைலியைடப்பாக்கட்டுகட்டிக்கொண்டுதள்ளுவண்டியில்மூட்டைகளைஅடுக்கியிருந்தவர்வண்டி  நகர்ந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுடன்/

கலர் விளக்கு சுழன்று கொண்டிருக்க சைரன் ஒலியை தவிர்த்த ஆம்புலன்ஸினுள் கிடத்தப் பட்டிருந்தஒருஉயிர்குளுக்கோஸ்பாட்டில் ஏற்றப்பட்டுக்கொண்டு/

மூடப்பட்டிருக்கிறகேட்எந்நேரம்திறக்குமோஎன்கிறகேள்விக்குறியுடனும்,பேச்சுடனுமாய்உடன் வந்தவளுடன் கேட்டின்ஓரத்து வழியாய் கடக்கிற கர்ப்பிணித்தாய்.

வெப்பமும்கசகசப்பும்தாளாமல்வாயால்காற்றைஊதிக்கொண்டுஉடலை ஆற்றுப்படுத்துகிறவர் கள்என நிறைந்தவர்களை பார்த்தவாறு பின்னால் திரும்பிப்பார்க்கிறேன்.

கிட்டத்தட்ட ஐம்பதடி தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்று கொண்டிருந்தது.அது சுமந்தி ருந்தவர்களையும்,அதுதாங்கி நின்றவர்களையும் காட்டி/

ஐந்து,பத்து,பதினைந்து என கடந்த நிமிடங்கள் கரைந்து காற்றில் கலந்ததே தவிர அடைக்கப்பட் டிருகிற கேட் திறக்கிற வழியைக் காணோம்.ரயிலையும் காணோம்.

ரயில்வருவதெப்போ,கேட்திறப்பதெப்போ?,,,,,,என்கிறஎண்னமும்அவசரமும்மனதைஅழுத்தநின்று கொண்டிருந்தவர்களுக்கும்,வாகனங்களுக்கும் வேர்விட்டு போகுமோ,இந்த அழுக்கும் தூசியும், மண்ணும் படர்ந்த மேடும் பள்ளமுமான சாலையில்?என்கிற நினைப்புமனம்படர நின்றிருந்த வேளையில்சரக்குரயில்ஒன்றுகடந்து போகிறது.

ஹீம்,,,சரக்குரயிலா,,,?”என்கிறசலிப்புமேலிடுகிறதுகாத்திருந்தவர்களின் முகங்களில்/

அதென்னவோ தெரியவில்லை,பயணிகள் ரயில் வர காத்திருப்பவர்கள்,சரக்கு ரயிலைக் கண்ட தும் சலிப்புருவது ஒரு முரணாகவே/

இப்படியானமுரண்களுடன் நகன்று கொண்டிருக்கிற வாழ்க்கையில் மனிதர்களும்,வாகனங் களும், அடைபட்டுக்கொண்டிருக்கிற ரயில்வே கேட் திறந்ததும் பாதையை கடக்கிறவர்களாய்.

அடைபட்டுகிடக்கிறசாலைகள்திறக்கட்டும் தாராளமாய்என்கிறநினைப்புடன்நானும்அவர்களு டன் சேர்ந்து கிளம்புகிறவனாய்/

No comments: