22 Sept 2014

கலர்ச்சுமை,,,,,,,



      

நின்றிருந்த சைக்கிள்
கறுப்புக்கலராயும்,

அது நிறுத்தப்பட்டிருந்த தரை

வெண்மை சுமந்துமாய்/

மார்பிள் பதித்திருந்த தரை அது.

கட்டியிருந்த வீடு முழுவதுமாய்

விரிந்து காட்சியளித்த மார்பிளின்

கலர்கள் ரூம்,வராண்டா,சமையலறை

என வேறு பட்டு காட்சியளித்ததாக/

அது போலவே வீட்டின் சுவர்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வொறு கலர்

பூசித்தெரிந்ததாக/

வராண்டாவின் வலது ஓரமாய்

ஒதுங்கி அமர்ந்திருந்த சிலிண்டர்

சிவப்புக்கலர் பூசி

எழுத்துக்கள் பொரித்துத்தெரிந்ததாய்/

சைக்கிள் மீது கட்டப்பட்டிருந்த கொடியில்

துணிகள் தொங்கி ஆடியவாறு/

ஆடிய துணியின் நுனி

ஒன்று சேலையாயும்,

இன்னொன்று நைட்டியாயும்

இன்னொன்று துண்டாகவும் நூல்
பிரிந்து/

கருப்பு,சிவப்பு,வெள்ளை என

கலர் கலந்து காட்சிப்பட்ட

வீட்டின் வராண்டா

அவ்வீட்டில் வசிப்பவர்களது
எண்ணங்களை

பிரதிபலிப்பதாகவும்,வெளிப்படுத்துவதாகவும்/

6 comments:

சசிகலா said...

வணக்கம். தங்களுக்கு எனதன்பின் பகிர்தல்.
http://veesuthendral.blogspot.in/2014/09/blog-post_23.html

J.Jeyaseelan said...

ஒரே கவிதையில் அமைப்பை முழுதும் காட்டிவிட்டீர்கள் சார், பகிர்வுக்கு நன்றி..

vimalanperali said...

வணக்கம் மேடம்
நன்றி வருகைக்கும்,பகிர்தலுக்குமாய்/

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

unmaiyanavan said...

இப்பொழுதெல்லாம் சேலையை பார்ப்பதே அரிதாகி விட்டது.

அருமை. வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் சொக்கன் சுப்ரமணியன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/