Showing posts with label கவிதை. எண்ணம். Show all posts
Showing posts with label கவிதை. எண்ணம். Show all posts

17 Jun 2017

செலவு வரவு,,,,



நான் கடைக்குள் சென்றபோது
பெண்கள் இருவர் மட்டுமே இருந்தனர்,
அவர்களின் வயதிற்கு பெண் பிள்ளை ஒன்றும்
ஆண் பிள்ளை ஒன்றும்,
அல்லது பெண் பிள்ளை இரண்டும்
ஆண் பிள்ளை இரண்டுமாக இருக்க வேண்டும்.
அவர்களின் படிப்பு கல்லூரி இளங்கலை வகுப்பையோ
அல்லது பள்ளியின் இறுதி வகுப்பையோ
எட்டியிருக்க வேண்டும்.
கடையின் ஓனர் ஊருக்குப்போயிருப்பதாகவும்
அவர் வர இரண்டு நாட்கள் ஆகும்
எனவுமாய் சொன்னார்கள்,
தவணைப்பணம் கொஞ்சம் கட்டவேண்டும்
அதுதான் வந்தேன் எனச்சொன்ன போது
கொடுங்கள் பணத்தை எங்களிடம் நம்பி,
இவ்வளவு பொருட்கள் அடங்கிய கடையை
நம்பி எங்களிடம் ஒப்படைத்து விட்டுப்போயிருக்கும்பொழுது
ஆயிரத்துக்குள் தரப்போகிற உங்களது பணத்தை
பத்திரமாக வைத்திருந்து
எந்த வித சேதாரமும் இல்லாமல்
ஒப்படைத்து விடுவோம் அவரிடம்
எனச்சொன்ன அவர்கள் இருவருமாய்
சேர்ந்து சொன்ன சொல்
இன்னும் மனம் நிறைப்பதாக,
எப்பொழுதும் மனைவியைக்
கூட்டிக்கொண்டுதானே வருவீர்கள்,
இன்று மட்டும் தனியாக வந்திருக்கிறீர்களே,
அவர்களது நிறத்திற்கு ஏற்ற சேலையை
எடுத்து வைத்திருக்கிறோம்,
அவர்களது டேஸ்டும் நிறத்தேடுதலும்
எங்களுக்குத்தெரியும் ஓரளவிற்கு,
ஆகவே எடுத்து வைத்திருக்கிற
புடவையை கொண்டு போய்
அவர்களிடம் கொடுங்கள் எந்த வித மன மறுப்புமற்று,
பின் என்ன சொல்கிறார்கள் எனக்கேட்டு
வந்து சொல்லுங்கள் அல்லது
அவர்களை வந்து சொல்லச்சொல்லுங்கள்,
என பையில் போட்டு தயாராக வைத்திருந்த
புடவையை எடுத்து இவனது
கையில் திணிக்கிறார்கள் வலுக்கட்டாயமாக/
பணத்தைக்கொடுப்பவர்களின் திருப்பியே எங்களது திருப்தி/

                   ++++++++++++++++++++++++++ 

எடுத்த ஜவுளியின் விலை குறித்த பில்
கைக்கு வந்த போது
பையில்  இருந்த பணம் கரைந்து போகிறது
எந்தத்தடயமும் அற்று/
அது வரை இல்லாத சந்தோஷம்
ஓடோடி வந்து ஒட்டிக்கொள்கிறது சடுதியில்
பிள்ளைகளின் முகத்தில்/

19 Feb 2016

பூப்பூக்கும் ஓசை,,,,

எட்ட நின்ற குழந்தையை கை நீட்டி
அழைத்தபோதும் பக்கம் வர மறுக்கிறது.
அருகில் செல்கிறேன்,விலகிப்போகிறது.
பிஸ்கட் தருகிறேன் வாங்க மறுக்கிறது.
சாக்லேட்,இனிப்பு, இன்னமும் இன்னமுமாய்
பிற என நான் தந்த தின் பண்டங்களை
வாங்க மறுத்த குழைந்தையின் அருகில்
சென்று விளையாட்டுக்காண்பிக்கிறேன்.
அட அதிசயம்,என் முதுகில் ஏறி
சவாரிக்கு தயாராகிறது குழந்தை. தூரத்தில் எங்கோ பூப்பூக்கும் ஓசை/

7 Mar 2015

நானும் மற்றவர்களும்,,,,,

எங்களது அலுவலகத்தின்
எதிரே ஒரு டீக்கடை இருந்தது.
டீ 5ரூபாய், காபி7ரூபாய்,
பால்......ஹார்லிக்ஸ்.....
பூஸ்ட்......என தனித்தனியாக
விலைப்பட்டியலை
அறிவித்த கடையில்
பச்சைபனியனும்,
அடர் வண்ணத்தில் லுங்கியும்
கட்டிய ஒருவரும்,
ரோஸ் வண்ண சட்டையும்,
கருப்புக்கலர் பேண்ட்டும்
அணிந்த இளைஞரும் டீமாஸ்டர்களாய்/
இது தவிர வடை போட ஒருவரும்,
கல்லாவை கவனிக்க இருவரும்
கடையை மேற்பார்க்க ஒருவருமாய்
மாற்றி,மாற்றி இருந்தார்கள்.
சகல வசதிகளும் நிறைந்த கடை
என இல்லாவிட்டாலும்,
எந்த வசதியும்
அற்ற கடையாகவும் இல்லை.
கடையின் உள்ளே
செவ்வக சைஸில் ஒரு
முகம் பார்க்கும்கண்ணாடி இருந்தது.
கடைக்கு வருபவர்களில்பாதிபேர்
அதில் முகம் பார்த்துக் கொண்டார்கள்.
கொஞ்சம் பேர்
அதைபார்த்துக் கொண்டே
டீசாப்பிட்டார்கள்.
அருகிலிருந்த
வண்ண மீன் தொட்டியில்
நீந்திய நான்கு மீன்களில்
இரண்டு பெரியதாயும்,
இரண்டு சிறியதாயும்/
தொட்டியின் நடுவில்
நின்று கொண்டிருந்த
சிறுவன் ஒண்ணுக்கு
இருந்து கொண்டிருந்தான்.
அவன் இருந்த நீர்
முட்டை,முட்டையாக
மேல்நோக்கி வருகிறது.
தொட்டியின் அடிப்பரப்பெங்கும்
பரப்பப்பட்டிருந்த ஊதாநிற
கண்ணாடிகற்களில்
நீர் முட்டைகளின் ஒலி பிரதிபலித்தது.
அருகிலிருந்த நீர் குழாய்
கடையின் தேவையை
பூர்த்திசெய்து கொண்டிருந்தது.
கடையின் இடது ஓர மூலையில்
உயரத்தில் இருந்த
வண்ணத்தொலைகாட்சி
பெட்டியில் ஏதாவது நிகழ்ச்சி
ஒடிக்கொண்டிருந்தது.
பிங்க் கலரில் இருந்த
வர்ணப்பூச்சு கண்ணுக்கு இதமாய் இருந்தது.
டீ அருந்த, பேப்பர் படிக்க,
விஷயம் பேச,தொலைகாட்சி பார்க்க,
அசைபோட.......,,
என எந்நேரமும்பிஸியாகவே
இருக்கிற கடையில்
எனது அன்றாடம்
இன்னும் கொஞ்சம் விரிகிறதாய் நினைக்கிறேன்.
நானும்,என்னைப்போன்றவர்களுமாய்/

22 Jan 2015

கண்ணாமூச்சி,,,,,,,


 தரையை கூட்டும் போது
முன்னால் வந்து நின்று
கொண்டிருந்த
நாயைவிரட்டுகிறேன்.
போக மறுத்து என்னையே
உற்றுப் பார்த்தவாறு சுற்றி வருகிறது.
வலப்பக்கம் திரும்பினால்
இடப்பக்கம் போகிறது.
இடப்பக்கம் திரும்பினால்
வலப்பக்கம் வந்து நிற்கிறது.
முன்னங்கால்கள் இரண்டையும்
நீட்டிப்படுத்து விறைப்பாய்
உடல் நெளிக்கிறது.
கல் எடுத்தால் போக்குக்காட்டுகிறது.
கைதட்டி விரட்டினால் பம்முகிறது.
சப்தமிட்டு அதட்டினால்
அருகில் வந்து குழைகிறது.
இடுப்பில் கைவைத்து முறைத்தால்
அப்பாவியாய் விழிமூடி
அண்ணாந்து பார்க்கிறது.
கோபமாக்க இருப்பவரின்
முன்னால் மலர்ந்து சிரிக்கிற
குழந்தையின் வெள்ளைச்சிரிப்பாய்
அதன் செய்கைகள்.
திரண்டு நின்ற தூசியையும்,
இதுவரை கூட்டிய மரத்திலைகளையும்,
கையில் வைத்திருந்த விளக்குமாறையும்
கீழே போட்டு விட்டு
தலையில்தட்டிஅதனுடன்விளையாட ஆரம்பிக்கிறேன்.

22 Sept 2014

கலர்ச்சுமை,,,,,,,



      

நின்றிருந்த சைக்கிள்
கறுப்புக்கலராயும்,

அது நிறுத்தப்பட்டிருந்த தரை

வெண்மை சுமந்துமாய்/

மார்பிள் பதித்திருந்த தரை அது.

கட்டியிருந்த வீடு முழுவதுமாய்

விரிந்து காட்சியளித்த மார்பிளின்

கலர்கள் ரூம்,வராண்டா,சமையலறை

என வேறு பட்டு காட்சியளித்ததாக/

அது போலவே வீட்டின் சுவர்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வொறு கலர்

பூசித்தெரிந்ததாக/

வராண்டாவின் வலது ஓரமாய்

ஒதுங்கி அமர்ந்திருந்த சிலிண்டர்

சிவப்புக்கலர் பூசி

எழுத்துக்கள் பொரித்துத்தெரிந்ததாய்/

சைக்கிள் மீது கட்டப்பட்டிருந்த கொடியில்

துணிகள் தொங்கி ஆடியவாறு/

ஆடிய துணியின் நுனி

ஒன்று சேலையாயும்,

இன்னொன்று நைட்டியாயும்

இன்னொன்று துண்டாகவும் நூல்
பிரிந்து/

கருப்பு,சிவப்பு,வெள்ளை என

கலர் கலந்து காட்சிப்பட்ட

வீட்டின் வராண்டா

அவ்வீட்டில் வசிப்பவர்களது
எண்ணங்களை

பிரதிபலிப்பதாகவும்,வெளிப்படுத்துவதாகவும்/