25 Oct 2014

முள்முனைபட்டு,,,,



 நிற்கக்கூடாது பேசக்கூடாது என்றெல்லாம்  ஒன்றும் இல்லை.அவன் போகிற வேளை யில்தான் தாத்தாவும்,பாட்டியுமாய் அமர்ந்து முள்ளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். 

தாத்தா சுந்தரம் .பாட்டி கொண்டம்மாள்.75 லிலும் 65 லிலுமாய் உருக்காட்டி காட்சிப் படுகிற அவர்கள் அந்த வீதிக்கே தாத்தாப்பாட்டிதான்.

பஞ்சாயத்து போர்டு வரி வசூலிக்கும் வீதிகளில் அதுவும் ஒன்றாய்.அங்கொன்றும், இங்கொன் றுமாக நட்டு வைக்கப் பட்டிருந்த வீடுகளை படம் பிடித்துக் காண்பித்தத் தெருவாய் அது. தெருமுனையிலிருந்த  வீடாய் காட்சிப்பட்ட அது மூன்று அடுக்குக ளை யும்  அதன் பின்பான கொல்லை வெளியையும் கொண்டதாக/

பச்சை,மெரூன்அப்புறமாய்இன்னுமொரு கலர்என அடிக்காமல் வராண்டாவில் காணப் பட்ட மெரூனே ஹால்,அடுப்படி மற்றும் வீடெங்குமாய்/

படியேறி முதலில் காலடி எடுத்து வைத்ததும் விரிகிற வராண்டா கொஞ்சம் பெரியதாக/ ஆத்திர அவசரத்திற்கு ஐந்து பேர்வரை படுத்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் மனது வைத்தால் கூட இரண்டு பேர் படுத்துக்கொள்ல வாய்ப்பிருக்கிறது.

மனமிருந்தால் வெத்திலையில் கூடஇரண்டு பேர் படுத்துக் கொள்ளலாம்என்கிறபேச்சு இன் னும் வழக்கில் உண்டுதானே?அதற்காக ஆளுக்கொரு வெத்திலை என ரேஷன் கடைகளில் விநியோகிக்கஆரம்பித்துவிட்டால்எப்படி நம் பாடு திண்டாட்டம் ஆகிப் போகாதா? அதனால் தான் வேண்டாம் எனச்சொல்லி விட்டார்கள் போலும். 

ஒரு நாளின்மாலைவேளையாய் அவனும்,அவனது மனைவியுமாய் தாத்தாப்பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார்கள்.தாத்தாவுக்கு உடல் நலம் சரியில் லை எனக்கேள்விப் பட்டு.இருமல் சத்தத்தில்வீடேஅதிர்ந்ததாய்.கட்டிலில்படுத்திருந்தார்.கயிற்றுக்கட்டிலில்தான்அது.எப்போதை யது எனத்தெரியவில்லை.பார்க்க இன்னும் பரவாயில்லாமல்/ அவரது உடலின் அடியில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளம் சிவப்புக் கலரிலும், கருப்புக்கலரிலும்,மஞ்சளிலும் மாறி,மாறி கலர் காண்பித்ததாய்/ மேலே போர்த்தப் பட்டிருந்த  போர்வை மிகவும் பழையதாயும்,நைந்து நூல் பிரிந்து தொங்கியதாயுமாய்/ வீடு சுத்தமாகக்கூட்டப்பட்டு பளிச்சென/

லேசாக சப்தமில்லாமல் அவருக்கே அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினார் தாத்தா. சமையலறையை கூட்டிக் கொண்டு போய் காண்பித்த பாட்டி இங்க பாருங்க, இவருக்குக்காக காய்ச்சி வச்ச கஞ்சிஅப்பிடியேஇருக்கு,குடிப்பேனாங்குறாரு.தண்ணிய மட்டுமே ஓயாம கேட்டு வாங்கிக் குடிக்கிறாரு.அதிகமா தண்ணி குடிக்க வேணாம் ஒண்ணுக்கு வரும் அடிக்கடி, பாத்ரூமுக்கு எந்திரிச்சிப்போறதுக்கு செரமப்படுவீங்க ன்னு சொன்னாலும் கேக்க மாட்டெங் குறாரு. என்னத்தையோபோ, அவருசாப்புடாத துனால நானும் சாப்புடல.எனக்கு சாப்புடப் பிடிக்கல.அப்பிடியே பசிச்சாலும் அவரு க்காக காய்ச்சின  கஞ்சிய அப்பப்ப குடிச்சி வயித்த நெரப்பிக்கிருவேன்.

இந்த நெலையிலயும் கடையில போயி ஷேவிங் பண்ணனுங்குறாருப்பா என்றாள் பாட்டி.அது அப்படித்தான்,பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவர்களுக்குள்ளாய் வருகிற தலையாய பிரச்சனையாய்/என்ன பண்ணச் சொல்றீங்க தம்பி,கடைக்காரங்க ஒருத்தங்க கூட வீட்டுக்கு  வரமாட்டேங்குறாங்க/ வேற என்ன செய்யச்சொல்லு, அவர க்கூட்டுக்கிட்டு  கடைகடையா அலைய வேண்டியிருக்கு. நடக்கவும் முடியல அவரால, யெளைக்குது.எங்காவது ரெண்டு யெடத்துல  ஒக்காத்து எந்திரிச்சிதான் போக வேண்டி யிருக்கு.நடக்கவும் முன்னாடி பார்வ தெளிவா இருந்தப்ப அவரா பண்ணிக்கிட்டு இருந்தாரு.இப்பமுடியலபாவம்.நாந்தான் அவரக் கூட்டிக் கிட்டுஅலைய வேண்டி யிருக்கு.என்னசெய்யபின்ன? என்கிறார். கையைகூட்டி விரித்து/ 

போயிறலாந்தான் தம்பி  ஏதாவது அனாத ஆசிரமம்,சொந்தக்காரவுங்க வீடுன்னு ஆனா நம்ம வீட்ல இருந்த மாதிரி இருக்குமா தம்பி நீயே சொல்லுஎன்பார்சமயங்களில் தாத்தா அமர்ந்து முள்ளை  வெட்டிக்கொண்டிருந்தார் தொரட்டியால்/ பாட்டி அதை தாங்கிப் பிடித்தவராயும் அவரின் மீது முள்ச்செடி பட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையுடனுமாய் அவரருகில் நின்று கொண்டிருந்தார்.

காலை வேலை அலுவலகத்திற்கு கிளம்பப்போகிற அவசரம்.இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தான். வீடு, வீட்டின் வாசலிலிருந்து அவன் இரு சக்கரவாகனத் தை கிளப்பும் போதே தெரிந்தது. தாத்தாவும் ,பாட்டியும் முள்முளைத்துக்கிடந்த இடத்தின் அருகில் அமர்த்தி ரு க்கிறார்கள் என/

அவர்களைகடக்கும்போதுதான்பாட்டி கைகாட்டி ஏதோ பேசினார்.அவர் பேசியது என்னவாக இருக்கும்எனத்தெரியவில்லை.ஆனால்அவன்தான்சொல்லிவிட்டுவந்தான்,கவனமாகஇருங்கள். முள்ளு,கிள்ளு மேல பட்டுறாம என்கிற பேச்சுடன் பிள்ளைகளற்ற அந்த முதிய தம்பதியை கடந்து செல்கிறான்.

2 comments:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/