2 Nov 2014

பூந்தூவலாய்,,,,,


 

விமலன்எழுதிய"பந்தக்கால்"சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண் டு இருக்கிறேன்..

மூன்றுவேலைசாப்பாடும்,(சாப்பாடு என்ன..கம்மங்கஞ்சி,துவையல், கேப்பைக் கூழ்,பச்சை வெங்காயம் தான்..)வருசக் கடைசியில் சொற்பமாய் கொடுக்கும் ஒரு தொகை,பண்டிகை காலங்களில் ஒரு கைலி,துண்டு இவற்றிக்காக தோட்ட வேலைகளை செய்து வந்த சுப்‌பு மாமா பற்றிய கதை மனதை நெகிழச் செய்கிறது..காலம் போன பிறகு, கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளை குட்டிகள் ஆனபிறகு, கட்டுப்படியாகாமல்,ஒரு மில் வாட்ச்மேன் வேலை பார்க்கத் தொட ங்கி இருக்கும் சுப்‌பு மாமா தன்னை சந்திக்கும் ஊர் பையனிடம் "முன்னைக்கு இப்ப நல்லாயிருக்கேன் மாப்ள.." என்றும் சொல்லும் போது, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி எல்லாம் இருக்கிறது என வியப்படைய வைக்கிறது..

கணவனால் கைவிடப் பட்ட ஆண்டாளுக்கு, பட்ட மரமாய் தனித்து நின்றஅவளுக்கு,ஒரு குழந்தையின் வடிவில் இளைப்பாருதல் கிடை க் கிறது. குழந்தையும்,அதன் அப்பாவும் அவளுக்கு ஆதரவாய் வரும் வேளையில், ஊர்காரர்களின் எதிர்ப்பால், பிரிய நேரிட்டு, பைத்திய மாக அலைகிறாள் ஆண்டாள்..

தனியார் பள்ளி அட்மிசனுக்காக தவம் கிடக்கும் தகப்பனின் கதை "அட்மிஷன்"..அரசு பள்ளியில் படிக்கும் மகனை, ஐந்தாம் வகுப்பில் இருந்து மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்க படும் அவஸ்தைகளை நன்றாகவே சித்தரித்து இருக்கிறார்..

தொகுப்பை இன்னும் முடிக்கவில்லை..மண் சார்ந்த உணர்வுகள் ஊடு சரடாய் செல்கிறது இவரது எல்லா கதைகளிலும்..இது இவரின் ஐந்தாவது தொகுப்பு என நினைக்கிறேன்..பாண்டியன் கிராம வங்கி யில் பணி புரியும் விமலன், நுட்பமான உணர்வுகளுக்கு சொந்தக் காரர்.கவிதை வரிகளாய் பல இடங்களில்..

கரிசல் மண் வாசம் அடிக்கிறது பல கதைகளில்.

தொடர்ந்து எழுதுங்கள் விமலன்...வாழ்த்துக்கள்..இவர் முகநூலிலும் இருக்கிறார்..

8 comments:

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்க்ம்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விமர்சனம் நண்பரே
நானும் விரைவில் எழுதுவேன்
நன்றி நண்பரே

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தங்களது விமர்சனத்தை விரைவில்
எதிர் நோக்குகிறேன்/

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...
வாழ்த்துக்கள் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
வாழ்த்துக்களை தலைதாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்/