14 Dec 2014

காக்காச்சோறு,,,,,


அந்த காக்கைகளுக்குத்தெரியுமா,இழவுவீட்டின்மேல்சோற்றுக்காக உட்காரக் கூடாது என.?
இளம் மனைவி.இரண்டு பிள்ளைகளை விட்டு இறந்து போன அவனு க்கு 35வயதுஇருக்கும் ஆண்பிள்ளைக்குஐந்துவயது இருக்கும் படிக்கி றாள்.பெண்பிள்ளை கைக்குழந்தை. 
அன்பும் காதலும் நிறைந்த,மனைவியையும்,பிள்ளைகளையும் அனா தரவாய் விட்டு இறந்து போகிறான்.ஒரு வாரம் முன்பு நடந்த பஸ் விபத்தில் ஆறு நாட்கள் ஆஸ்பத்திரியில் துடித்து விட்டு, ஏழாவது நாள் இறந்து போகிறான். 
நல்லமனைவி.நல்லகுழந்தைகள்வாய்த்த அவனுக்கு ஆயுசு நிலைக் கவில்லை.என ஊரில் பேசிக் கொண்டார்கள் 
அந்த வீட்டை நிறைத்த சோகம் ஊரையும் பற்றிக் கொண்டது.அந்த வீட்டிற்கு துக்கம் கேட்டு வராதவர்கள் இல்லை ஊருக்குள்.அப்படி வருகிற எல்லோரிலும் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு 
பெண் இழவு வீட்டிற்குள்ளேயே அமர்ந்து விடுகிறாள். வயதானவ ளானால் ஒப்பாரியில் சேர்ந்து கொள்கிறாள். இளம் பெண்ணானால் சோகமாய்அமர்ந்துவிடுகிறாள்ஆண்வீட்டிற்குள்போகிறான். வெளி யில்  வருகிறான். 
வீட்டின் நான்கு முனைகளிலும் இழுத்துக் கட்டப்பட்ட தார்பாய். அதன் கீழ் நின்று மேளம் அடிப்பவர்களின் மேல ஓசை.தெருவின் இரண்டு ஓரங்களிலும் போடப்பட்டிருந்த மரபெஞ்சுகள், சேர்கள்,அவ ற்றில்நிறைந்துதெரியும் மனிதர்கள் 
சாவு வீட்டை விட்டு சற்றுத் தள்ளி கட்டப்படும் தேர்,கொள்ளிச்சட்டி எல்லாவற்றையும்பார்க்கிறான்.கூடவேஅந்தகாகங்களையும் பார்க்கிறான். 
கழுத்தில் வெள்ளை விழுந்த காகம் ஒன்று,உடல் முழுவதும் கருப் பாய் ஒன்று.தலையை,அங்கிட்டும்,இங்கிட்டுமாய் சாய்த்தவாறு பொ சுக்,பொசுக்கென விழித்துக் கொண்டு நிற்கிறது இரண்டும். அதை விரட்டவில்லை யாரும்.அதை ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை எவரும். 
அவரவர்காரியம்அவரவருக்கு.வந்தார்கள்,காரணகாரியம்கேட்டார்கள்.
 சோகப்பட்டார்கள்.அனுதாபத்தைபகிர்ந்துகொண்டார்கள்.போய்விட்டா ர்கள்.  
ஆனால்யாருமேகாகங்களைகண்டுகொண்டதாகத் தெரியவில்லை..  .
அப்படியே கண்டுகொண்டாலும்,அவைகளின் பக்கம் கவனம் செலுத் துவது அநாகரீகம் என நினைத்துக் கொண்டார்கள். 
கறுப்பாய் சாம்பல் நிறகழுத்துடன் ஒண்ணரை அல்லது இரண்டு சாண் நீளமும்,ஒரு சாண் உயரமும்,குச்சிக் குச்சியான கால்களும், சின்ன உருண்டை கண்களும்,ஒண்ணரை இஞ்சிவாயும் கொண்டு நம்மைசினேகமாயும்,அப்பாவித்தனமாயும்,மிகுந்தஜாக்கிரதைஉணர் வுடன் பார்க்கும்,நடமாடும் அந்த சின்ன ஜீவன்களுக்கு ஒரு கவளம் சோறே உயிகாக்கும் உணவு. 
அதைத் தேடித் தானே அவைகள் அங்கே.அவைகளுக்குத் தெரியுமா? உணவு தேடி ஊருக்குள் வரும்பொழுது அந்த இழவு வீட்டின் கூரை யில் உட்காரக் கூடாது என.கத்தக் கூடாது என. 
முன்பெல்லாம் ஏதாவது விசேஷ நாட்களில் காக்காய்க்கு சோறு வைப்ப தென்றால் சோற்றை கையில் வைத்துக் கொண்டு காக்காய் வாராதா,வராதா என காத்திருப்பார்கள் மனிதர்கள். 
சில சமயங்களில் காக்காய் வராமல் சோறு காய்ந்து போகும். இப் பொழுது காக்கைகள் சோற்றுக்காகவும் சோறு வைக்கும் மனிதர் க ளுக்காகவும் காத்திருக்கின்றன. 
முன்பெல்லாம் தோட்டங்காடுகளில்,வயல்களில் தானியம்,தவசிக ள் விளைந்து கிடக்கும்,அவைகளே அந்த காகங்க்களுக்கு போதுமான தாய் இருந்தன. 
இப்போதுஅந்ததானியம்,தவசிகள்,காடுகரைகளில்  இல்லை. விளை ச்சளில்லை. 
ஏன் அப்படி பருவ மழை முறையாக பெய்யவில்லை.அதானால்தான் என்கிறார்கள்.அப்படிப் பார்த்தால் “நன்செய்”பாசன விவசாயமும் கிட்டத்தட்ட “குளுக்கோஸ்” ஏற்றப்பட வேண்டிய நிலையில்தானே உள்ளது? 
விவசாய விளை பொருளுக்கு கட்டுபடியாகாத விலை,ஏறிப் போன கூலி,மற்றும் நிலங்களை கட்டுப்படுத்தும் ரசாயன உரங்களும், அத் தோடு சேர்த்து பருவமழையும் என்கிறார்கள் விவசாயிகள். 
இவைகள்தான்விவசாயம்வாழவும்,தாழவும்காரணமாக இருக்கிறது
என்கிறார்கள் சாதாரண கிராமத்து விவசாயிகள். அப்படியான அவர்க ளது கூற்றும்,நிஜமுமாக சேர்ந்து கைகோர்த்து இனி விவசாயம் செய்து  பிழைக்க முடியாது என நம்ப வைக்கிறது அவர்களை. 
அந்த நம்பகத்தன்மையின் வெளிப் பாடுதான் இன்று வீட்டுமனை களாக உருவெடுத்து விட்ட விளை நிலங்கள். 
அப்படியான விளைநிலங்களில் பறந்து திரிந்து தானியம்,தவசிகள் ஒன்றுமற்று ஏமாந்து போய் ஊருக்குள் வருகிற காகங்களின் எண் ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறதுதான். 
அப்படி வருகிற காகங்களுக்கு சில சமயம் ஒரு கவளம் சோறும்,பல சமயங்களில் அதுவும் கிடைக்காமல் போகிற அவலமும் ,சோகமும் ,நிகழ்ந்து விடுகிறதுண்டு. 
இன்று காகங்களுக்கு ஏற்பட்டசோகம் நாளை நமக்கும் ஏற்பட்டு விடு மோ என்கிறஅச்சம்சின்னதாக வேனும்ஏற்படுகிறதுதான்
நண்பரே நம் மனதினுள்ளாக. 
         அந்த அச்சம் நியாமாகிப் போகிற பட்சத்தில் நாளை காக்கைகள் இருந்த  
         இடத்தில் நாம் இருப்போமோ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அச்சம் என்பது வேண்டாம்... நடக்கப் போகிறது என்று தெளிவாக தெரிகிறது இன்றைய நிலைகள்...

”தளிர் சுரேஷ்” said...

விளைநிலங்கள் மறைந்து போவது போல பறவைகளும் அழிந்து வருகின்றன! இழவு வீட்டை காட்சிப்படுத்தியது சிறப்பு!

விச்சு said...

பசி வந்தவர்களுக்கு எந்த வீடாய் இருந்தால் என்ன..!!

கரந்தை ஜெயக்குமார் said...

காக்கைகளின் நிலைதான் நமக்கும்
விரைவில்
வெகு விரையில்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

vimalanperali said...

வனக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல நிகழ்வுகளில் காக்கைகளை பலர் எதிர்பார்த்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன். நியாயமான ஆதங்கம்.

கோவி said...

த ம 4

UmayalGayathri said...

தம 5

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி கோவி சார்,வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

நன்றி உமையாள் காயத்திரி அவர்களே
வாக்களிப்பிற்கு/

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பதிவு. நாங்களும் காக்கைகள் குறித்து ஒரு பதிவு இட்டிருந்தோம். இப்போதெல்லாம் காக்கைகளின் நடுவில் மனிதன் இருந்த காலம் போய் மனிதர் நடுவில் காக்கைகள் என்றாகிப் போனதால் காக்கைகளுக்கும் மனிதனின் இயல்புகள் வரத் தொடங்கிவிட்டதோ காலத்திற்கேற்ப அவை உணவு முறையும் கூட மாறிப் போயிருக்கின்றது. நகரங்களில் காக்கைகள் சோறு உண்ணுவதில்லை. காங்க்ரீட் காடுகளாகிப் போனதால் ஜன்னலில் இருந்து கொத்திச் செல்ல லகுவாக இருக்க தோசை, ப்ரெட் வைத்தால்தான் எடுத்துக் கொள்கின்றன. சோறு வைத்தால் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. மனிதன் உணவிற்கு சண்டை போடுவது போல் காக்கைகளும் சண்டை போடத் தொடங்கிவிட்டன...ம்ம்ம் பாவம் காக்கைகள்...மனிதனின் சுயநலம் வின்ஞ்சி நிற்பதால்...

எங்கள் முகவரி தருகின்றோம். பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடுங்களேன். தயவு செய்து. அதைச் செலுத்திவிட்டு புத்தகத்தைப் பெறுகின்றோமே...அப்போதுதான் அது தான் தங்களின் எழுத்துகளுக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாய்.
பணம் தாருங்கள் பெற்றுக்கொள்கிறேன்,
எனது வங்கிக்கணக்கு எண்
ஐ எப் எஸ் கோட் எல்லாம் தருகிறேன்,
பணம் அனுப்ப/நன்றி வணக்கம்/
தங்களது தொடர்பு எண் இருப்பின் நலம்/

'பரிவை' சே.குமார் said...

காக்காச்சோறு அருமை...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/