கரண்ட் போய் விட்டதே என கையைக்கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த இரவு 12 மணி
நிசப்தத்தில் வந்த கைபேசி அழைப்பு அவள் பஸ் ஏறி விட்டதை
உறுதிப் படுத்துகிறது.
பஸ்ஸினுள்ளே ஏறி அமர்ந்து விட்டோம் இன்னும் ஒரு பஸ்ஸிற்கு ஆட்கள் காத்துக்
கொண்டு நிற்கிறார்கள்,அந்த இன்னொன்று வரவும் இரண்டு சேர்ந்து செல்வதாக
ஏற்பாடு.
இன்னமும்ஒருகால்அல்லதுஅரைமணிப்பொழுதுதாமதமாகலாம்பஸ்கிளம்ப,
கிளம்பியஉடன்திரும்பவுமாய்போன்பண்ணுகிறேன்அல்லதுநீங்களேபண்ணுங்
கள்,அடுத்தவரிடம் போனை
வாங்கி அடிக்கடி பேசுவது அழகுமல்ல.”
“வீட்டில்இருந்தஇரண்டில் ஒன்றை உங்களுக்கும்,மற்றொன்றை வெளியூரில்
விடுதியில்தங்கிப்படிக்கும்மூத்தமகளுக்குமாய்பிரித்துஎடுத்துக்
கொண்டீர்கள்.
ஆகவே நான் எடுத்துச் செல்ல போன் இல்லாமல் போனது.இனி ஒவ்வொரு வீட்டிலுமாய்எத்தனை பேர்இருக்கிறார்களோஅத்தனைசெல்போன்களும்,
அத்தனை இரு சக்கர வாகனங்களும் வாங்க வேண்டும் போல் இருக்கிறது”
“பெரும்பாலானோர்இரவுஉணவுஇல்லாமல்படுக்கைக்குசெல்கிறதேசத்தில்இம்
மாதிரியான
ஆடம்பரங்களும் அத்தியாவசிய தேவைகளாய் கடை விரித்துக் காண்பிக்கப் பட்டு மனித
மனதில் விதையூன்றி வைக்கப்படுகிறது யாருக்கும் தெரியாமலு ம்,
மிகவும்ரகசியமாகவும்/என சொல்கிற அவள்இந்த ஆடம்பரம் நாமாக விரும் பி ஏற்றுக்
கொண்டதா அல்லது நம் மீது வலிய திணிக்கப் பட்ட தா தெரியவில்லை” என்கிறாள்,
“ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லாத பழக்கம் இத்தனை வருடங் களில்? வ்வளவுசீக்கிரமாகவும்,பூதாகரமாகவும்எப்படிவளர்ந்துதன்பூதஉருவம் காட்டிநிற்கிறது?என்கிற அவளது கேள்விக்கு பதிலில்லை அவனிடம்.
“கருப்பட்டிப்பானையை கொண்டு வந்து மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்து
அதன் வாசனை சொல்லுங்கள் என்றால் யார்தான் பானைக்குள் கைவிடாமல்
இருப்பார்கள்?
காண்பிக்கப்பட்டகருப்பட்டிப்பானையைப்போலநிறையவைத்துகடையைவிரிக்கிறார்கள்தான்.கடையையும்,கடைசரக்கையும்பார்த்தவுடன்இயல்பாகஎழுகிற
ஆசையாகவும்,தூண்டிவிடப்பட்டஒன்றாகவும்தானேஇருக்கிறது.அப்படிதூண் டிபவர்கள்கெட்டிக்காரர்களாகவும்தூண்டப்பெற்றநாம்இப்படிசீரழிந்துமாய் காணப்
படுகிறோம்”எனச்
சொன்னவள் அவர்கள் வீடிருக்கிற வீதி பக்கத்து வீதிஎன பத்துப்பேருடன்
சேர்ந்து டூர் செல்கிறாள்.
“திருச்செந்தூர்மற்றும்,மற்றும்எனஐந்தாறுஊர்களின்பெயர்களைசேர்த்துச்அச்ச டிக்கப்பட்டிருந்த நோட்டீஸைகாண்பித்துபக்கத்துதெரு ஸ்டேட் பேங்க் அக்கா சொன்னார்கள்,
“ஆளுக்கு இவ்வளவு,சாப்பாடு நம்ம பொறுப்பு என அவள் சொன்ன கணங் களில் அவன்
மனைவி,இளைய மகன் மூவருமாய் சேர்ந்து சொல்வதாக ஏற்பா டாகி அட்வான்ஸீம்
கொடுத்தாகி விட்டது.
அந்த ஏற்பாட்டின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீராய் அவனுக்கு அலுவலகத்தில்
லீவுகிடைக்காமல்போனதும்,சின்னவன்“மேட்ச்இருக்கிறது,நான்வரஇயலாது”
எனச் சொன்ன சொல்லும் பதிவான தினத்தன்றிலிருந்து அவள் மட்டுமே போவதென எடுத்த முடிவை இன்று கையில் தூக்கி சுமந்து கொண்டு செல்கி றாள்.
நல்ல மனுசி.அவனை நம்பி அவனை கரம் பிடித்து வந்த நாளிலிருந்து அவளு க்கென
தனித்த ஆசைகள்,விருப்பு,வெறுப்பு,ஏதுமற்று வாழஆரம்பித்தஅவளது மனவெளி
மிகவும் பெரியது.உடல்,பொருள் ஆவி அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு
எங்க வீட்டுக்காரரு,எங்கவீட்டுக்காரரு,,,,,,,,,என இருந்த அவள் இப்போது
பிள்ளைகள் என்கிற வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்கி றாள்.அதெல்லாம் சேர்க்க வேண்டியதுதான்,இருக்க வேண்டியதுதான். அதற் காக தன் சுயம் மறைகிற அளவிற்கா?
அவளைக் கேட்டால் என்ன இப்போ கெட்டு விட்டது அதனால் என்பாள்.அந்த
அதனாலில்அடங்கிப்போயிருக்கிறஅவளதுஇயந்திரத்தனமானஅன்றாடங்களின் மத்தியில்
இன்று டூர் செல்கிறாள் அவள்.
“தேவையானதை எடுத்து வச்சிக்க,காலையிலைக்கு இட்லி எடுத்துக்க,மதியம்
இரவும்எனஇருபொழுதுகளுக்குஎங்காவதுகடைகளில்சாப்பிட்டுக் கொள்ளுங் கள்.எங்குபோனாலும்மொத்தமாகவேஆட்களுடன்போய்வா,தனியாகசெல்லா தேஎங்கும்,பணத்தைஎடுத்துக்கொள்தேவையானஅளவிற்கும்சற்றுஅதிகமாகவே, துணிமணிகளின்விசயத்திலும்அப்படியேசெய்துகொள்”என்கிறசொற்கட்டையும், இன்னும்சிலவற்றையுமாக சேர்த்துக்கட்டி அவளிடம் தந்து வழியனுப்பி விட்டுகரண்ட்போனஇரவின்அமைதியில்இருந்துஎழுந்திரிக்க மனமில்லாமல் அமர்ந்திருந்த பொழுது அவளிடமிருந்து கை பேசி அழைப்பு வருகிறது மறுபடி யுமாய்.
அழைப்பிற்கிணங்கிபோனைஎடுத்து ஹலோ சொன்ன வேளையும் அணைந்து
இருந்த கரண்ட் திரும்பவுமாய் வந்த வேளையும் ஒன்றாக இருந்தது.
ட்யூப்லைட்எரிந்தது, பேன்சுழன்றது. வீடுவெளிச்சம்பெற்றது. கூடவேஅவளது
நினைவுகளும்/
7 comments:
மறுபடியும் ரசித்தேன்...
குண்டு பல்பு என்றுதான் சொல்வார்கள் .உருண்டை பல்பு டக்கென்று எரிய மறுக்கிறது :)
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் பகவான் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ரசிக்க வைத்தது...
அருமையான கதை அண்ணா...
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
நல்ல ரசனை நண்பரே...
Post a Comment