8 Jan 2015

சுடுமண்,,,,,


வீட்டு வாசலை விட்டு இறங்கப்போன கீணா,,,,,,,என்கிற கிருஷ்ணமூர்த்தி 1968 ல் பிறந்து அப்புறமான நாட்களில்படித்து வளர்ந்து பட்டம் பெற்றான்என சொல் லிச் செல்கிறது அவனது வரலாறு.

சவேரியம்மாள் டீச்சர்தான் இவனது ஐந்தாம் வகுப்பு டீச்சர்.அவரை இவனுக்கு ரொம்பப்பிடிக்கும் அல்லது பிடிக்காது என்கிற நிலையறுத்து நடுநிலையில் இருந்தான்.

இவன்படித்தகிறிஸ்டியன்பள்ளியில் அவர் ஐந்தாம் வகுப்புப்பாடங்களை மட்டு ம் நடத்தவில்லை.

இரண்டு செக்க்ஷன்.அந்த ஆரம்பப்பள்ளியில் ஆச்சரியம்,இரண்டிலுமாய் சேர்த் து 80ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்தார்கள்.இட வசதியும் கட்டிடமும் இல் லை.இல்லையென்றால் மூன்று பிரிவுகள் வந்திருக்கும் இந்நேரம். அதனால் அதைசமாளிக்கவேசவேரியம்மாள்டீச்சர்ரெக்கைகட்டிக்கொண்டார்.இவன்கூட  நினைப்பதுண்டு.

வகுப்புகள்சுற்றியிருக்கநடுவில்இருக்கும்சர்ச்சும்மாதானே இருக்கிறது. ஞாயி ற்று கிழமை பிரேயர்கூட்டங்களும்,அவ்வப்பொழுதுநடக்கும்திருமணங்களை தவிர வேறொன்றுமில்லை பெரிதாக/

உள்ளே சுவர்களும் கட்டிடங்களும் தாங்கியிருந்த சிலுவைகளும்,யேசுவின் உருவச்சிலையும் காட்சிப்பட்டு தெரிந்தது.

ஒரே நேரத்தில் நூறு பேருக்கு மேல் உள்ளே இருக்கலாம் என்கிற அளவிற்கு இட வசதியுள்ள கட்டிடம். யாராவது இறந்து விட்டால் இங்கு வைத்து ஜெபம் செய்தும்,ஜெபித்த பின்பும்தான் இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள்.

பள்ளி நாட்களின் நகர்வில் ஒரு நல்ல புதன்கிழமை மதியம் கண்டான் இது மாதிரி காட்சிகளை,அவ்வளவுதான் எங்கு பாடம் படிக்க?வேறு பக்கம் கவனம் திசை திரும்பிவிட அன்று மதியத்திற்கு மேல் பாடம் படிக்கவில்லை.வீட்டுப் பாடம் எழுதவில்லை.மறுநாள் சவேரியம்மாள் டீச்சரிடம் அடி வாங்கியது தான் மிச்சம்.

இரண்டு கையிலும் உள்ளங்கை கண்ணிப்போனது.அன்று மாலை P.T பீரியடில் ஜின்னாவுக்கு அடிபட்டது.விளையாட வந்தவன் சும்மா விளையாடி விட்டு போக வேண்டியதுதானே?

அது அல்லாமல் சர்ச்சின் பின்புறமாய் ஊன்றப்பட்டிருந்த கம்பில் ஏறியிரு க்கிறான். சேட்டை பிடித்தவன் கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும் மா இருக்க இருக்கமாட்டான்.

ஏறும்போது ஏறி விட்டான்.அது இருக்கும் பத்தடி உயரத்திற்கு.இறங்கும் போது கம்பின் ஒரு ஓரமாக மடக்கி விடப்பட்டிருந்த ஆணி அவனது முன்பக்கமாய் இழுத்துவிட்டு விட பாதிக்கக்கம்பத்திலிருந்து அப்படியே இறங்கியவனாய் தரையில் அமர்ந்து விட்டான் வலிதாங்காமல்/

அவன் அப்படி சோர்ந்தமர்ந்து இவன் பார்த்தில்லை.கைதாங்கலாக காலைக் காலை இழுத்தவாறு வந்த ஜின்னாவை பாத்ரூமிற்குள் கொண்டு போய் பார்த்தால் ஒண்ணுக்கிறுக்கிற இடத்தில் ஆணி கீறி ரத்தம் வந்து கொண்டி ருந்தது.

ப்யூன்சத்தம் போட்டார்.வாத்தியார்களை அழைத்து வருவதாகப்போனவர் யாருமில்லை என சவேரியம்மாள் டீச்சரை அழைத்து வந்தார்.வெக்கப்பட்ட ஜின்னாவை “அடக்கிறுக்கா நான் ஒங்க அம்மா மாதிரிடா” என ஒரு கிளாஸ் ரூமிற்குள் அழைத்துப்போய் டவுசர் கழட்டிப்பார்த்து ரிக்க்ஷாவை வரச்சொல் லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போயிருக்கிறார்.

சவேரியம்மாளுக்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தினாலேயோ என்னவோ பிள்ளைகளிடம் பிரியமாக இருப்பார்.இதில்தன்னிடம்படிக்கிறபிள்ளைகளிடம் தனி அக்கறை.

டீச்சரின் கணவன் டீச்சரை விட்டுபோய் இரண்டு வருடங்கள் இருக்கும் என் றார்கள்.டீச்சருக்கும் அவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக் கும்.அவர் மலையென்றால் டீச்சர் மடு.டீச்சர் மலையென்றால் அவர் மடுவாக பலசமயங்களில்.

டீச்சர் ரொம்பவே சிம்பிளாக பெஸ்டாக தெரிவார்.அவர் பெஸ்ட் என நினைத் துக் கொண்டு படோடோபமாக காட்சிப்பட்டுக்கொண்டு.

ஒரு காட்டன் சேலை,தளையக்கட்டிய முடி.முகத்தில் லேசாக பவுடர் தீற்றல், இதுவேடீச்சரின்வெளிப்பாடாகஇருக்கும்.அவரது கணவர் லாண்டிரி வெள்ளை யிலிருந்து செண்ட்வரை எப்போதும் படோடோபமாகவே/

பிள்ளைகள் இல்லை என்கிற காரணமே அவரது கணவர் டீச்சரை விட்டு பிரிந் து போக காரணமாய் இருந்து இருக்கிறது.சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் எங்கோ கண் காணாமல் போய் விட்டார் என்றார்கள்.

இரண்டுவருடங்கள்ஆகிறதுஅவர் போய் எங்கிருக்கிறார் என இதுவரை தெரிய வில்லை எனவும்,அங்கிருக்கிறார்,இங்கிருக்கிறார் எனவுமாய் அரசல் புரசலா க பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும் டீச்சர் முன்பைவிட கூடுதல் தைரியமாகவே இருந் தார்.டீச்சரின் வீடு பள்ளியிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே இருந்தது.

இவன்டீயூசன்படிக்கப்போயிருந்த இரண்டாவது நாள் டீச்சருக்கு தேள் கொட்டி விட்டது.

ஆஸ்பத்திரிக்கு போயிருப்பதாக சொன்னாள் டீச்சரின் பக்கத்து வீட்டுக்காரி. அந்த வீட்டிலேயே வளர்ந்து தெரிந்த மனோநிலை சரியில்லாத ஒரு பெண் பிள்ளை இருந்தாள்.

அவள் மீது டீச்சருக்கு தனிப்பிரியம் உண்டு. அவளை கவனிப்பதிலே தனது பெரும்பாலனநேரங்களைசெலவழித்திருக்கிறார்டீச்சர்.அவளைஆஸ்பத்திரிக் குகூட்டிச்செல்ல,சர்ச்சுக்குகூட்டிச்செல்ல,சொந்தக்காரர்களதுவீடுகளுக்குகூட்டி
ச் செல்ல,சினிமாவுக்கு ,,,,,,,, என இருப்பாள்.

தன்னால் முடிந்த அளவு அவளை ஒரு படியாவது குணப்படுத்தி விட முடியுமா என்பதில்முனைப்பாகஇருந்தார்.அதற்குஅந்தபெண்ணும்ஒத்துழைத்தாள். ட்யூசனுக்குப்போகும் போது சிரிப்பாள்.ட்யூசன் முடிந்து போகும்போது பீட்டாப் பா,,,,,,,,,,(போய்ட்டுவாப்பா,,,,,,,,)என்பாள்.

அப்படியான பீட்டாப்பாக்களும்,சிரிப்பும் டீச்சர் நடத்தும் பாடத்தை தாண்டி இடைஞ்சல் செய்த நாட்கள் பல உண்டு.

அந்தமாதிரியானநாட்களைதாண்டிஉந்திஉதறி வேறோன்றில்,வேறொன்றில் எனஅடியெடுத்து வைத்து வந்து விட்ட பின்பும் கூட பீட்டாப்பா சொன்ன வளை யும்,டீச்சரையும் மறக்க முடியவில்லை.

சாம்பல்கலர்பேண்டும்,மெரூன் கலர் சட்டையும் அணிந்திருந்தான்.இப்போது மாதிரி உடம்பை பிடித்த மாதிரி இருக்கமாக இல்லாமல் நல்ல லூசாக இருந் தது.அவனது உடலுக்கு ஏற்ற மாதிரியாகவே/

கறுப்புக்கலர் பேண்ட்,வெள்ளைக்கலர் சட்டை,வெள்ளைக்கலர் பேண்ட் என் றால் அடர்கலரில் சட்டை இதுதான் அவனது ஆடையில் வாடிக்கை.

இதுதவிர அவன் வைத்துள்ள டீசர்ட் மூன்றை அணிகிறபோதும் இதைதான் கடைபிடிக்கிறான்.

மனைவியிடம் சொல்லிவிட்டு வாசல் படியில் இறங்குகிறான்.ஒன்று இரண்டு மூன்று என வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கபட்டிருந்த வாசல் படியின் மடிப்பு முனைகளிலிருந்த இரண்டு கோடுகளில் தங்கியிருந்த ஈரமும் சேர்ந்திருந்த அழுக்கும் அவனது கவனம் ஈர்த்ததாகவே/

இரண்டாவது படியின் நடுவில் ஊர்ந்து சென்ற எறும்பு தன் உடலை இழுத்து கோடு கிழித்துக்கொண்டு சென்றது.எறும்பே ,எறும்பே எங்கு போகிறாய் நீ? யா ரை சந்திக்க இவ்வளவு அவசரம் ஏன்?என அவன் மனதில் நினைத்த வேகத்தில் பதில் வருகிறது.எறும்பிடமிருந்து/

“அட சும்மாயிருங்க சார்.நானே உணவு சேகரிக்க முடியலைன்னு வருத்தமா இருக்கேன்.அடிச்சு பெய்த மழையில கட்டி வச்சிருந்த இத்துணூண்டு புத்தும் நனைஞ்சு கரைஞ்சு எங்கள சேந்தவுங்களும்,நாங்க சேமிச்சு வச்சதும் ஜல சமா தி ஆயிப்போச்சு.எப்பிடியோஉயிர் தப்பி ஒத்தை ஆளா இப்ப வந்து க்கிட் டிருக் கேன்,என்ன செய்யட்டும் நான்.எங்களுக்குன்னு ஒரு பாதுகாப்பு,உயிர் காக்கும் திட்டம் அது இதுன்னு ஏதாவது இருக்கான்னா எதுவும் கெடையாது.அப்புறம் இப்படித்தான் நாதியத்து தெருவுல திரியவேண்டியிருக்கு.”

“மனுசங்கள்லயும் இப்படித்தான் போலிருக்கு நெலம.இல்லாதவுக.எப்பவுமே பொல்லதவுகளாதான் இந்த மனுசக்கூட்டத்துல பட்டுதெரியிவாங்க போல இருக்கு.

இதுல நீங்க என்னைய கேள்வி கேட்டுடீங்க சரி பரவாயில்ல,வுடுங்க,நீங்க ஒங்க வேலைய பாக்க கெளம்புங்க,நான் ஏங் வேலய பாக்க கெளம்புறேன்.என சொல்லி விட்டு நகன்ற எறும்பை பார்த்தவாறே படியிறங்கிய கீணா,,,,,,,/ ஈரம் பூத்து சகதியாய் இருந்த தெரு தன் அடையாளம் காட்டியும் வாசனை விரித் துமாய்/

“இந்த ஈரத்திற்கும்,சகதிக்கும் இந்த உடை ஏற்றதல்ல” “சும்மா பஜாருக்கு போகத்தான?,முந்தாநாள் போட்ட பேண்டையும் ஏதாவது ஒண்ணரையணா டீசர்ட்டையும் போட்டுகொண்டு போங்க/”

நேற்றைக்கு முன் தினம் மனைவிசொன்னது ஞாபகம் வந்தது.அது சொன்னதா அல்லது வைததா தெரியவில்லை.சொல்கிற சாக்கில் வையவும்,வைகிற சாக்கில் சொல்லவுமாய் இருக்கிற கலை அவர்களுக்கு திருமணமான சிறிது நாட்களிலேயே வாய்க்கப்பெற்று விடுகிறது.

இளஞ்சிவப்பு நிற சேலையும் அதற்கேற்ற கலரில் சட்டையும் அணிந்திருந்த அவள்தலையில் பூவைத்தும்,நெற்றிக்கு பொட்டிட்டும் இறுக்கமாய் படிய வாரி யுமாய் பிண்ணியிருந்தாள்.

டவுனுக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் கூட எண்ணை நிறைந்து படிய வாரிய தலை,கீழிழுத்து தொங்குகிற ஒற்றை ஜடை உச்சியில் ஏற்றி சொருகியிருக்கிறமல்லிகைப்பூ,எந்நேரம்கழண்டு ஓடிவிடுமோ என்கிற ஜாக் கிரதையுடன் இறுகச் சுற்றியிருக்கிற புடவை எனஇன்னும் கிராமத்தின் பால்ய நாட்கள் அவளிடமிருந்து நகர மறுத்து அவளை அடையாளம் காட்டிச் சென்றபடி/

“இப்பிடி ஓயாம தொவச்சத தூக்கி மாட்டிக்கிட்டுப்போயிட்டிங்கின்னா எத்தன தடவைதான் தொவைக்கிறது,எத்தன தடவதான் தேய்க்கிறது?இங்க என்ன வாசிங்மிசினா இருக்கு?புள்ளைங்க துணிகள வுட ஒங்க துணிகதான் அதிகமா அழுக்கு விழுகுது.ஆமாம்/”

வாசிங்கமிசின்ஒன்றுவேண்டும்என்கிறஅவளதுவருத்தமும்ஞாயமானதுதான்.
வேலைக்கு சென்று20வருடங்கள் கழித்துதான் ஒரு X L சூப்பர் சாத்தியப் பட் டது.

21ம் வருடத்தின் முடிவில் ஒரு சாம்சங் கலர் டீவி வீட்டின் மைய ஹாலை அலங்கரித்தது.28ம் வருடத்தில் வீட்டின் உள்ளறையில் நின்ற குளிர் சாதனப்
பெட்டியின்தவணை இன்னும் பாக்கியிருக்கிறது.

இப்படி கைக்கும் வாய்க்குமாய் இடிக்கிற வாழ்க்கையில் வாஷிங் மிஷின் நீண்ட நாள் கனவாகவே.பார்க்கலாம் அந்த கனவும் சீக்கிரம் ஒரு நாள் கை கூடி வந்து விடலாம்.பை சீ யூ/

மனைவியிடம் சொல்லி விட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து கிளம்புகை யில் எதிர்பட்ட கடைசி வீட்டுப்பாட்டிசொல்கிறாள்.

“செத்த நேரம் படியில ஒக்காந்துட்டு போயிக்கிறேன்.கடைக்கு நடந்து போயி ட்டுவந்ததுஒருவடியாவருது.அதான்இப்படியேசெத்தவோடம்ஒக்காந்துபோயி க்கிறேன்” என்கிறாள்.

வீட்டினுள் இருந்தசின்னமகளை அழைத்துபாட்டிக்குகுடிக்கதண்ணீர்தருமாறு கூறி விட்டு கிளம்புகிறான்.

தெருவின் இரண்டு பக்கமும் நட்டு வைக்கப்பட்டிருந்த சிறியதும் ,பெரியது மான வீடுகளில் தெரு முனை திருப்பத்திலிருந்த வலது புற கடைசி வீடுதான் பாட்டியின் வீடு.

கீழே உரிமையாளரின் வீடு.மேலே அவர்களது வீடு.தடுக்கப்பட்டிருந்த காம்ப வுண்டு சுவரில் வலதுபுறம் படியேறிச்சென்றால் பாட்டி குடியிருக்கிற வீடு.800 ரூபாய் வாடகை.

மேலேயிருப்பதனால்கொஞ்சம்கம்மி.தண்ணீபுழக்கம்தாராளம்எனலாம்.தாயும், மகளும்,மகனுமாய் அடங்கிய குடும்பத்திற்கு அது போதுமானதாய் இருந்தது.

போனவாரம்தான் அவளது பெண்ணுக்கு பூ வைத்து போனதாய் சொன்னார்கள் இரண்டுமாதம்கழித்துதிருமணம் வைத்திருப்பதாகச்
சொன்னாள் பாட்டி.

சிறிய அளவில் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் சொல்லி வைத்து நடந்த நிச்சயம்.மாப்பிள்ளை ஏதோ ஒர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கை நிறைய இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்துகிற அளவிற்கு போதுமான வருமானத்தில் வேலை செய்கிறார்.நிச்சயம் பண்ணிவிட்டார்கள்.அன்று ஒரு நாள் மட்டும்தான் கொண்டாட்ட மனோநிலையில்பார்த்திருக்கிறான்அந்த வீட் டை/

தெருமுனை திரும்பி,வலதுபுறம் வளைந்து முத்தால்நகரில் விழுந்து மெயின் ரோட்டை அடைந்து போஸ்ட் ஆபீஸ்,கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி வழியே பஜாருக்கு சென்றான் கீணா என்கிற கிருஷ்ணமூர்த்தி.

தோழர் முத்துக்குமார் பார்க்க வேண்டும் என்றார்.அவரைப்போய் பார்த்து விட் டு வருகிற வழியில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு தம்பியையும் பார்க் க போக வேண்டும்.

இவர்கள் எல்லோரயும் பறந்து,பறந்து பார்க்கப்போகிற மனதுக்கு இங்கிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிற தாயைப் பார்க்கிற மனோநிலைவர மாட்டேன்என்கிறதேஎன்கிறமனோநிலையுடன்பயணித்துக்கொண்டிருந்தான்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த மனோநிலை முதலில் வர வேண்டும்....

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

எதார்த்தமாய் செல்லும் கதையின் முடிவில் வராத மனநிலை நமக்குள் கண்டிப்பாய் வரவேண்டும் அண்ணா....

vimalanperali said...

வணக்கம் சே குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/