25 Jan 2015

வேற்றுச்சொல்,,,(பாகம்2)

மணிகள் நிமிடங்களாகவும்,நிமிடங்கள் விநாடிகளாகவும்,விநாடிகள் சட்டென சூல்தரித்துமாய் விடுகிற நிமிடங்களில் எடுத்த முடிவே இன்று காலை கறி எடுப்பது என்கிற முடிவு.

பொங்கலுக்கு முதல் நாள் மாலை,மாலைஇல்லைஅதுஇரவென்றே கணக்கில் வரவுவைக்கப்படுகிறது.அலுவலகம்முடிந்துசீக்கிரம்வந்துநாளைவரப்போகும் பொங்கல்திருநாளைவரவேற்கஆயத்தமாகவும்,வீட்டையும்வீட்டின்சுற்றுப்புற
த்தையும் சுத்தம்செய்து வைத்து விடலாம் என எடுத்த முடிவு.

மேடும் பள்ளமுமாய் நிறைந்திருக்கிற பொழுதுகள் நம்மில் ஏராளமாய் முளை விட்டுத்தெரிகிறபோதும்கூடநல்லதாய்அல்லாமல்நிறைந்துகிடக்கிறவெளியைப் பார்க்கிறபொழுதுகளிலெல்லாம்மனதுசங்கடத்தால்சற்றேகுற்றஉணர்ச்சியுற்றுக் காணப்படாமல் இல்லை.

முன்பெல்லாம் இப்படி இல்லை.வீட்டின் முன்பாக உள்ள வெற்று வெளியில் முளைத்துக்கிடக்கிறசெடிகளையும்,சீமைக்கருவேலைமுட்களையும்,அதன்மீதாய் படர்ந்து தெரிகிற கொடிகளையும் பார்க்க நன்றாகவும் அது அற்றுமாய் இருந்தாலும் வீட்டின்முன் காண்கிற வெளி சுத்தமில்லாமல் இருப்பது குறித் தான பார்வை இவனில் எப்பொழுதும்ஆழமாகவேகாட்சிப்பட்டுஇருந்ததுண்டு, அதிலும்நிலத்தடிநீரைஆழமாய்உறிஞ்சிவிடுகிறசீமைக்கருவேலைமுட்செடிக ளைப்பார்க்கும்போதுஏற்படுகிற அருவருப்பும் அசூசையும் சொல்லி மாளாத தாய்/அப்படியாயானவைகளைப்பார்க்கும்போது மனதினுள்ளாய்நாள் குறித்து வைத்துக்கொண்டும்,அரிவாள் மண்வெட்டி சகிதம் குறித்து வைத்துக்கொண்ட லீவுநாளன்றின்அதிகாலைஅல்லதுமாலைவேலையாய்சுத்தப்படுத்தக்கிளம்பி விடுவான்.செய்தும்முடித்து விடுவான்,முடிவெட்டிவிட்டி ஷேவிங்க் செய்யப் பட்டு விட்ட வயதான முதியவரின் அழகான முகம் போல மாறிப்பொகும் சுத்தம் செய்யப்பட்டஇடம் இவனை எப்பொழுதும் கவர்ந்ததுண்டுதான்,

அதுபோலாய்இப்பொழுதும் செய்து விட ஆசை,சிறிது நாட்களாய்க்கூட அல்ல, வருடக் கணக்காய் ஆகிவிட்டதுதான்.இப்படியாய் வேலைகள்செய்து,.

உடம்பும்கூடிப்போனது,எப்படியும்80ஐநெருக்கிஇருக்கலாம்எடை.குறைக்கத்தான் வேண்டும்எப்படியாவது.சைக்கிளிங்க்,ஓட்டம்,நடை,யோகா,உடற்பயிற்சி,,,,என

எக்ஸட்ரா, எக்ஸட்ராவாய் கணக்கில் வைத்துக் கொண்டுதான் வருகிறான், கணக்குஎதுவும்நிறைவேறாஒன்றாய்ஆகிப்போனது,கணக்கு,பிணக்கு,ஆமண
க்கு,,,, என்கிற கதையாய்/

உண்மைதான்இவனுக்கு அப்படி ஆகிப்போனதுகொஞ்சம்கூடபிடிக்கவில்லை.
அதனால் தான் உழைப்பை நம்பி இறங்கலாம் மண்ணில் என எடுத்த முடிவுப் படி இன்றுமாலைவந்து வீட்டின் முன் இருக்கிற வெற்றுவெளியை சுத்தம் செய்து விட்டு கோலம் போடுகிற இடத்தில் கொஞ்சம் சிமிண்ட் வைத்து பூச வேண்டும்எனச்செய்திருந்தமுடிவை அமல்படுத்த முடியாமல் போனது சட்டப் படி குற்றமேஆகிப்போகிறது,

ஏன்அப்படிஎதற்காய்யார்இட்டஆணைஎன்பதைநுகர்ந்து பார்க்காமல்சரி என விட்டு விடுகிறான்.

முன்பெல்லாம்இப்படிஇல்லை.வீடுகட்டிஇங்குகுடிவந்திதிருந்தபுதுப்பொழுதது. எலும்புக்கும்வேர்க்கிறவேனர்க்காலப்பொழுதின்அதிகாலைவேளையாய் சொந்த வீட்டிற்குள்அடிஎடுத்து வைத்த மகிழ்ச்சியோடு இவன் இருந்த நாட்க ளின் நகர் பொழுதில் வீட்டின் முன்னாய் மண்ணாயும்,குட்டைப்புழுதியாயும் கிடந்ததுதெரு,இப்பொழுது போல் அப்பொழுதுதார் ரோடாய் போடப்பட்டிருக்க வில்லை. தெருவடைத்து/

ஆனாலும்என்னதினசரிகளின்தெருக்கூட்டலிலும்கோலமிடலிலுமாய்இன்னும் இன்னுமானஇவனதுமனைவியின்உழைப்பினாலும்தெருவாய்விரிந்துவீட்டின் முன் கிடந்தவெளிநன்றாக உருமாறியிருந்தது.இருந்தாலும்அவளுக்கு ஒரு தீராக்குறை,வீட்டின் முன்பாய் கோலமிடுகையில்,கோலமாவுடன் கைகோர் த்து எழுந்து வருகிற மண்ணை அழுத்தி அமுக்க வேண்டும்,அதற்காய் கோலம் போடுகிறவெளியில்மட்டும்கொஞ்சம்சிமெண்ட்வைத்துபூசிவிடுங்கள்நன்றாகி
ப் போகும்தளம்போல்.ஆகவேவாருங்கள்கைகோர்த்துச்செய்வோம், என கிலோ க்களில்கொஞ்சம்குறைவாய்சிமெண்ட்வாங்கிஅதைதண்ணீராயும்அல்லாமல் கொல,கொலப்பாயும் அற்று கரைத்து கோலம் போடுகிற வெளி மட்டும் ஊற்றி பரப்பிவிட்டு விடுங்கள் ,காய்ந்து இறுகிவிட்டால் நன்றாகி விடும் சிமெண்ட் தளம் போல,எனஅவள்அன்று சொன்னது இன்றும் நினைவுக்கு வருவதாக, அவள் அப்படிச்சொன்ன நாளன்றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து எங்கிருந் தோ கிடைத்த கட்டிடம் இடித்தமண்ணை அள்ளிக்கொண்டு வந்து இங்கு கொட்டி திம்ஸ் கட்டை வைத்து இறுக்கியதில்சிமெண்ட் தளம்போல் ஆகிப் போனது கோலம் போடுகிற இடம்.அதன் மீது சிமெண்ட் வைத்து மொழுகவும் பளபளப்பாகிப்போகிறது இடம்.

ஆ சூப்பர்,,,,என அன்று கைதட்டி சொட்டு வைத்த இடத்தை இப்பொழுது திரும்பவுமாய் சிமெண்ட்வைத்து மொழுகவேண்டியும்,வீட்டின்முன்னிருக்கிற வெளியை சுத்தம் செய்ய வேண்டியுமாய் பொங்கலுக்கு முன் தினம் மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துவிட வேண்டும்எனஎடுத்த முடிவு அமல் படுத்தமுடியாமல்போய் வீட்டிற்கு தாமதமாய் வந்தது மட்டுமே நடப்பு யதார் த்தமாய்ஆகிப்போனது.

ஆனால்ஆச்சரியம் இவன் மனதுள்ளாய் நினைத்து வைத்திருந்த வேலை இவன் மனைவியின் மூலமாகவும் இரண்டு மகள்களின் மூலமாகவும் நடந்து முடிந்து விட்டதில் ஏற்பட்டமகிழ்ச்சிமட்டற்றதாய் ஆகிப்போகிறது.

மகள்கள் இருவர் குறித்து இவனுக்குமிகவும்பெருமையாய் இருந்ததுண்டு சமயத்தில்கொஞ்சம்எசகுபிசகாகிப்போகிறபெருமைகோபமாய்உருக்கொள்கிற சமயத்தில் மகள்கள் இருவரும் அவர்களதுஅத்தையிடம் போய் முறையிட்டு நிற்பதுண்டு,வேறெதுவானபோதும் பொறுத்து கொள்வார்கள் போலும் அவர்க ளது அத்தை, மகள்களை ஏதும் சொன்னால் மட்டும் தாங்காது அவர்களுக்கு சண்டைக்கு வந்து விடுகிறார்களே வரிந்து கட்டிக் கொண்டு என்பாள் பொய்க் கோபத்துடன் இவனது மனைவி.

வாஸ்தவம்தான்.இவனதுஅக்காவிற்குஇரண்டுமகள்களின்மீதும்தனிப்பிரியம்

இருந்ததுண்டுஎப்பொழுதும்.டேய்ச்சும்மாஇருடா,பேசாம பொம்பளப்புள்ளைங் கள ரொம்பவும் தான போட்டுபாடாப்படுத்தாத,மனசுக்கருகிப்போகுங்க,நீயும் ஓங் வயசும்வேற,அவுங்களும்அவுங்கவயசும்மனசும்வேறகிறுக்கா,,,,,எனகை ஓங்கிக் கொண்டு வருவாள், சிரித்துக்கொள்வான்இவனும்.,

இந்தஐம்பதில்இப்படியாய் அடிவாங்க தலைகுனிகிற தம்பியும்,இந்த ஐம்பத்தி ஐந்தில் அடிக்கொடுக்க கைஓங்குகிற அக்காவும் வாய்க்கப்பெற்றது இவனது பெரும்பாக்கியமே/அந்தபாக்கியம்இப்பொழுதுபோல்எப்பொழுதும்நிலைத்திருக்
க வேண்டும் என எல்லா நேரங்களிலும் நினைப்பதுண்டு.நிலைத்தும் இருக்கி றது இதுநாள்வரை.

பெரியவளைவிடசின்னவளைமிகவும் பிடிக்கும்.அக்காவிற்கு.காரணம் இல்லா மல்இல்லைஅந்தப்பிடித்தலுக்கு.பள்ளிவிட்டுவருகையில்தெருவில்ஒருபைய ன் கேலி பண்ணினான் என்பதற்காய் செருப்பைத்தூக்கிக் காட்டியவளின் தைரி யத்தை இன்றளவுமாய்சொல்லிக்கொண்டிருப்பார்கள்.தவிரஅவர்களின் புத்தக வாசிப்புச் சித்தாந்ததிற்குமிகவும் ஒத்துப்போகிறவளாயும் அதே சித்தாந்தத்தை நெருங்கி கைக்கொண்டிருப்பளாகவும் இருப்பாள்.

அதெல்லாம்பெரியவளிடம்இருக்காது.அவளதுஉலகம்வேறு,ஆனால்இருவரும் வீட்டில்இவனையும்,மனைவியையும்கேலிபண்ணுவதில்கைகோர்த்துக்கொள்
வார்கள்.

வீட்டைஅலசிசுத்தம்செய்வதிலிருந்துதுணிகளைஅதன்அழகுகுலையாமலும்,
வரிசை தப்பாமலுமாய் அடுக்கிவைக்கவேண்டியதுஎங்களதுபொறுப்பு ,நீங்கள் பொறுப்பெடுத்துச்செய்கிறஇந்தவேலைகள்எங்களுக்குப்பிடிப்பதில்லை,விட்டு விடுங்கள் எங்களிடம் முடிந்தால் வீட்டு நிர்வாகத்தைக்கூட என்பார்கள் இருவ ருமாய்.

இதென்னஇதுஒருவரிசை துணிகள் மீது இன்னொரு வரிசைதுணிகளை தொட விடுவது?மூச்இனிமேல்இப்படியெல்லாம்செய்யக்கூடாதுஎனஇவனதுமனைவி யிடம் சப்தம்போடும்மகள்கள் இருவரும் இவனைப்பார்த்து தலை கலைத்து விட்டும் தலையில் குட்டிவிட்டுமாய் கேலிசெய்வார்கள்.

உங்களின்அந்நியோன்யம்தான்ஊர்உலகம்அறிந்ததே,அப்புறம்ஏன் துணிகளை க் கூட அருகருகே அடுக்கி வைத்துக்கொண்டு,,,? பிள்ளைகளில் லாத வீடல்ல இது.நாங்கள் இருக்கிறோம் அக்கா தங்கைகள் இருவருமாய்.பள்ளி வகுப்பை முடிக்கும் பருவத்தில் ஒருத்தியும் கல்லூரியின் இளங்களை முதல் வருடத் தில் எட்டெடுத்து வைக்க காத்திருப்பளாய் இன்னொருத்தியுமாய் ரெடியாக உள்ளோம்.ஆகவே தலை முடி நரைத்த பெற்றோர்களே,இது இளநரைகள் இரண்டின் விளையாட்டு எனச்சொல்லாதீர்கள்.ஒழுக்கமாக இருங்கள் துள்ளி விளையாடாதீர்கள்.எனஅவர்கள்விடுகிற ஒழுக்கத்திற்கான எச்சரிக்கை வலப் பக்கம்ஒருத்தியையும்இடப்பக்கம்இன்னொருத்தியையும்தோள்களில்சாய்த்துக் கொண்டே காட்சிப்படும்.

அதனால்இனிமைக்குஏதுதடைக்கதவு.பூக்கள்இரண்டுதங்களின்வெடிசிரிப்புடனும் மிருதுத்தன்மையுடனும்இவனைஆட்க்கொண்டுஆராதிப்பது நன்றாகத்தான் இருக்கிறது என நினைத்த மறுகணம் ”அவ எவடி அவ,எங் புருசன் மேல சாங்சிக்கிட்டு கோளாறு சொல்றவ,கலைச்ச அவரோட தலைய ஒழுக்கமா வாரிவிடுங்க,இல்லஆமா,,,,கல்யாணத்தன்னைக்கி அவரோட தலை முடிக்கு ள்ள விழுந்தவதான் இன்னும் எந்திரிக்க முடியாம இருக்கேன் அதுல போயா கை வைக்கிறீங்க, என இவன் மனைவி விடும் எச்சரிக் கைகளும் எல்லை மீறா செல்லப்பேச்சுக்களும்மகள்கள் இருவரின் பேச்சைகூட்டிவிட்டு விடும் இன்னு ம் கொஞ்சம் கூடுதலாக/

அடப் பார்ரா,,,,, வயசான காதல் ஜோடிக ரெண்டும் பீபியும் சுகருமா வெக்கப் படுது என்பார்கள்.நிற்காது இதோடு அவர்களது விளையாட்டு,படிப்பு,பாடம் இம்போஷிஷன்எனநீள்கிறஅவர்களது பள்ளி கல்லூரிப்பாடங்கள் முடிந்ததும் அப்பா அம்மா வாங்க இங்க ஜாலியா உக்காருங்க,பேசுவோம் என ஆரம்பிக் கிற அவர்களின் பேச்சின்நுனி உங்களது வாழ்க்கையில்காதல்என்கிற இளந் தென்றல்எப்பொழுது வீசியது.எப்படிவீசியது, முதலில் உங்களைக்கவர்ந்தது அம்மாவா,அம்மாவைக்கவர்ந்ததுநீங்களாஎனஒப்புவியுங்கள்தப்பில்லாமலும் மறக்காமலும்என 101தடவைக்கும்மேலாய் கேட்கிற இன்பம் கொண்டவர்களா கிப் போன பின்பும் இவன் சொல்லத்தவறுவதில்லை.

தொடரும்,,,,,,,

6 comments:

Yarlpavanan said...

எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

பீபியும் சுகருமா...? இன்றைய நிலையில் உண்மை தான்...

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் காசி ராஜ்லிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,
இனிய குடியரசுதின நல் வாழ்த்திற்குமாய்/